தீராவெளி

Sunday, July 1, 2018

கண்ணன் சுந்தரம்

ஆர் எம் நவ்சாத்தின் கீழ்க்காணும் நேர்காணல் பற்றி இலங்கை வாழ் நண்பர் என்னிடம் தெரிவித்தார். அதில் காலச்சுவடு சார்ந்த பகுதியை அனுப்பி வைக்க கேட்டிருந்தேன். கீழே கொடுத்திருக்கிறேன்.
நவ்சாத்தின் படைப்பு காலச்சுவடில் வெளிவருவதை அடுத்து யாரும் கோள் செய்யவில்லை, யாரும் பறந்து வரவும் இல்லை. அத்தகைய செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்கும் அமைப்பு அல்ல காலச்சுவடு. பிரதி பற்றிய எங்கள் வாசிப்பும் கணிப்பும் மட்டுமே முக்கியமானது. இதன் அடிப்படையிலேயே அவரது மூன்று நூல்களை வெளியிட்டுள்ளோம். இத்தகைய கற்பனைகள் நம் சூழலை மாசுபடுத்துபவை, படைப்பாளிகளை உள்ளொடுங்கச் செய்பவை. அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை.

//கேள்வி : இலக்கியத்தின் பெயரால் ஏற்படும் குழப்பங்களையும் நெருக்கடிகளையும் எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?
பதில் : எந்தத் துறையையும் விட இலக்கியத் துறையில்தான் போட்டி ,பொறாமை ,குத்து வெட்டு ,காழ்ப்புணர்வு ,காவு கொடுத்தல் ,பழிக்குப் பழி ,கோஷ்டி மோதல் ,காலை வாருதல் ,தட்டிப் பறித்தல் ,வெட்டிக் கிழித்தல் ,கோள் காவுதல் ,நக்கல் ,நையாண்டிகள் ,முதுகில் குத்துதல் எல்லாமே மிக மிக அதிகம் .
மேலும் ,இலக்கியப் பட்டியல் வியாபாரிகள் சிலர் இருக்கிறார்கள் .பெத்தம்மா மொழியில் ஒரு சில படைப்பாளிகளையே பட்டியலிடுவார்கள் .மேடைகளில் முழங்குவார்கள் .இதற்கு சில காரணங்கள் உள்ளன .தான் சார்ந்த கோஷ்டியில் இருந்தால் தூக்கிப் பிடிப்பார்கள் .எதிர்க் கோஷ்டியில் இருந்தால் வெட்டி விடுவார்கள் .மற்றது புதிய எழுத்துகளை அவர்கள் படிப்பதில்லை .புதிதாக எழுதுவோரைத் தெரியாது .ஏதோ தான் ஒருவரைப் புகழந்தால்தான் அல்லது பட்டியலில் இட்டால்தான் அவனால் பிரபலமாக முடியும் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள் .
எங்கள் பிரதேச எழுத்தாளர் ஒருவர் என்னுடைய நட்டுமை எனும் நாவல் பற்றி ஒரு கோள் காவிக் கொண்டு தமிழ்நாடு -நாகர்கோவிலுக்கு விமானத்தில் பறந்து அந்தக் கோளை காலச்சுவடு ஆசிரியரிடம் மூட்டிக் கொடுத்து விட்டு நிம்மதி கண்டார்...//

No comments:

Post a Comment