தீராவெளி

Wednesday, April 18, 2018

உக்குவளை அக்ரம்

Ukuwelai Akram

ஆர்.எம்.நெளஷாட்டின் கதைகளும் கதைபேசும் மொழியும்,கதை சொல்லும் முறையும் காலத்தை வென்று நிற்பவை.Slm Hanifa,ஒட்டமாவடி அறபாத்தின் கதைத் தொகுதிகளோடு,தீரனின் தொகுதிகளும் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்களே.

Ukuwelai Akram

ஆளுமைமிக்க எழுத்தோவியன்.படைப்பினுடே அங்கதச் சுவையை கடத்துவதில் வல்லவர்.ஒவ்வொரு கதைகளும் தனிரகம் அதுவே அவரின் ஆளுமை முத்திரை.ஒவ்வொரு கதையும் நம்முள்ளே போர் நடத்தும் ராஜதந்திரம் மிக்கது.நாம் வாழும் காலத்தில் சடர்விடும் ஜோதி.அதன் சுடரொளியை நாம் சரியாக மதிப்பீடு செய்து,கெளரவிக்கவில்லையென்றே தோன்றுகிறது.

தீரன் ஆர்.எம்.நவ்சாத்

படைப்புலகில் புகுந்த நேரம் அறியாத பெயர்.பண்ணாமத்துக்கவிராயருடன் கலந்துரையாடும்போது, அடிக்கடி உச்சரிப்பார் என்னமா எழுதறார், வட்டார பேச்சுவழக்கில் ஒவ்வொரு கதையும் புது அனுபவம்.இப்படித்தான் தீரனின் பெயரை உச்சரிப்பார்.
இலக்கிய ஆளுமைகளுடனான குறைவான சகவாசம், சந்திப்புகள் அற்று ஒதுங்கியிருந்தபோது.அவரின் புத்தகத்தை பல புத்தகசாலைகளில் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.பெயர் மாத்்திரம் ஜெபிக்கப்படும மந்திரம் போல் மனதில் சுழன்றே வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மிரரில் தீரனின் கதையை கண்டு வாசித்து இன்புற்ற திளைப்பால் சிறு குறிப்பிட்டேன்.அதற் பிற்பாடே அவருடன் முகநூலில் நட்பாகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதன் பிறகு அவரின் ஹாஸ்யம் கலந்த பதிவுகளையும், தனித்துவமாக அவரிடும் புகைப்படங்களையும் உவப்புடன் உள்வாங்கியே நகர்ந்திருக்கிறேன்.
இன்று தமிழ் மிரரில் அவருடைய நேர்காணலை, பக்கத்திலிருந்து உரையாடுவதைப்போன்ற இயல்பு தன்மையோடு, மனதோடு ஒண்றித்துப்போன வார்த்தைகளுடன் அவர் வெளியில் உலாவினேன்.அவரின் மன உணர்வுகள் போன்றே.என் இலக்கியப்பாதையை அடியொட்டி நகர்ந்திருக்கிறேன்.திறமை பல கண்டிருந்தும் இயல்பாக தன் எளிய வாழ்வை எளிமையாக கடந்துபோகும் மனமும் பங்குவமும்.
அவருக்கு நிகர் அவரே.
நேர்காணலை தந்த முஸ்டினின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.்


தீரன். ஆர்.எம் நௌஷாத்

மிக்க நன்றி அக்ரம்- பக்கீர்தனம் (எளிமை) என் பெருமை என்றனர் கண்மணி நபிகள்...பெரர்ர்ர்ரீய எழுத்தாளன் என்று சொல்லிக் கொண்டு கழற்றாத கோட்டும் டையுமாக விரைப்பான போட்டோக்களை கண்டால் குபீர் எனச் சிரித்து விடுகிறேன்.....

uwelai Akram 
காத்திரமான யதார்த்தமான கதைகளின் நெகிழ்ச்சியான கதைகளம் தீரனினது.பக்கங்களை புரட்டத்தொடங்கினால், புத்தகம் முடியும் வரை வாசித்து கிரகித்து இன்புற்று படிமங்களாக மனமெங்கும் நீளும் கதை மாந்தர்களின் உணர்வுப் பூர்வமான தொகுப்புகள் தோழர்.

முகமத் சப்ரி -ஏறாவூர்

Mohamed Sabry 

உண்மையிலேயே அற்புதமான எழுத்தாளர். நான் நேசிக்கும் எழுத்தாளர், காலச்சுவடு பதிப்பித்த அவரது வெள்ளிவிரல், நட்டுமை, கொல்வதெழுதுதல் 90,, கிடைத்தால் வாசியுங்கள் அற்புதமாக இருக்கும், இவரது கொல்வதெழுதுதல் 90 மூன்றாவது பதிப்பாக அண்மையில் வெளிவந்திருந்தது.

 எனது நேசத்துக்குரிய அன்பர். தொடர்ந்து எழுத வேண்டும் தீரன்.