தீராவெளி

Saturday, January 20, 2018

கல்முனை கலீல்

Kalmunai Kaleel

நௌஷாட்,,ஒரு தீரன் மட்டுமல்ல வீரனும். பழகும் காலத்தில் மனதை வென்ற ஓர் சகோதரன்.அவர்,கலியுகத்தின் காவியனும் கூட...!

ஓட்டமாவடி அரபாத்

Arafath Sahwi

அற்புதமான கதை சொல்லி தீரன்.ஜிப்ரி சொல்வதைப் போல் அவர் கதைகளும் நாவல்களும் ஆராயப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

சியான்ஸ் மடவளை

சியான்ஸ் மடவளை 

அவரின் எழுத்துகள் போற்றப்படவேண்டிய தரமான திறமையான எழுத்தர்.அதிகம் அறிமுகமற்று அவரும் அவருடைய நூல்களும்

வடகோவை வரதராஜன்

Vadakovy Varatha Rajan

அவருடைய தீரதம் சிறுகதை தொகுப்பு அண்மையில் படித்தேன் .அற்புதமான கதைகள் ,'ஆத்து மீன் ஆசை ' அற்புதமான வார்ப்பு

ஜிப்ரி ஹாசன்


Jiffry Hassan 

 தமிழ் இலக்கியவெளியில் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வியலை ஆழ்ந்த புனைவுத் தன்மையுடன் வெளிப்படுத்தும் ஈழத்தின் ஒரே கதைசொல்லி தீரன். ஆர்.எம். நௌஷாத். தோப்பில் முகம்மது மீரான், கீரனூர் ராகிர்ராஜா போன்ற படைப்பாளிகளின் வரிசையில் இடம்பெறக்கூடியவர். தமிழின் பல விருதுகளும், பரிசுகளும் இவருக்கு கிடைத்துள்ளன.

தீரனின் ஒட்டுமொத்தப் படைப்புகள் மீதும் விரிந்த பார்வையை முன்வைக்க வேண்டும். அதற்கான முயற்சியில் நானும் இருக்கிறேன். தமிழகத்திலுள்ள பல படைப்பாளிகளை விஞ்சி நிற்பவர். இலங்கை என்பதற்காக எத்தனை மூடி மறைப்புகள்.








Monday, January 1, 2018

மிராஸ் அஹ்மத்

மிராஸ் அஹமத்

உங்கள் வெள்ளிவிரலை அலுவலகத்துக்கு செல்லும் வழியில் மெட்ரோ ரயிலிலேய படித்து முடித்தேன். உங்கள் எழுத்தில் அதிகம் ரசிப்பது எவ்வளவு சீரியஸான கதை என்றாலும் அதில் பரவி இருக்கும் மெல்லிய நக்கல் கலந்த நகைச்சுவையே

களவெட்டி