தீராவெளி

Tuesday, October 29, 2019

சப்ரி - ஏறாவூர்



ஏறாவூர் வாசிப்பு வட்டம் 





                                                        Mohamed Sabry 
ஏறாவூர் வாசிப்பு வட்டத்தின் 28 வது அமர்வு கடந்த 18/10/2019 அன்று மாலை 6.30 மணிக்கு ஏறாவூர் வாவிக்கரைப்பூங்காவில் ஆற்றோரமாக இடம்பெற்றது. இவ்வமர்வில் இரண்டு சிறுகதைத்தொகுதிகள் மற்றும் இரண்டு நாவல்கள் உரையாடலுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
மூத்த எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இவ்வமர்வை நண்பர் றியாஸ் தாவூத் நெறிப்படுத்தினார்.
கோமகனின் "முரண்" சிறுகதைத் தொகுதி தொடர்பாக நண்பர் பர்ஸான் ஆழமான தனது பார்வையை தெளிவுபடுத்தினார். சிறுகதைகளில் நிகழும் வழமைகளை கொஞ்சம் மாற்றியதாக அமைந்துள்ள இக்கதைகளில் மூன்று கதைகள் கவனத்துக்குட்படுத்தும் வகையில் சிறப்பானதாக அமைந்துள்ளதாகவும் ஏனைய கதைகளில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் மாற்றுக்கருத்துக்களையும் நண்பர் பர்ஸான் முன்வைக்கத் தவறவில்லை.
சாத்திரியின் "ஆயுத எழுத்து" தொடர்பாக நண்பர் பிரசன்னா தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். ஈழத்துப் பரப்பில் ஆயுத எழுத்துக்கு பல எதிர்ப்புக்கள் வந்தபோதிலும் அதனை இன்று பேசுவதற்கான சூழல் உருவாகியிருப்பது பெரும் மகிழ்வென்றும், புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல விடயங்களை குறிப்பிட்டுக் கூறினார். தஙகள் கொள்கைகளை அடையும்பொருட்டு எந்த வக்கிரத்தனங்களையும் முன்னெடுக்கத் தயாராக இருக்கும் போராட்ட இயக்கங்கள் தொடர்பாக புத்தகத்தை முன்வைத்து பேசினார். சில இடங்களில் நாவலுக்கான அம்சங்கள் இல்லாதிருந்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத படைப்பு என்பதையும் குறிப்பிடத்தவறவில்லை. அதனைத் தொடர்ந்து வாசகர்களின் பெறுமதியான கருத்துக்களும் பகிரப்பட்டன. ஏறாவூர் வாசிப்பு வட்டத்தைச் சேர்ந்த பலர் ஆயுத எழுத்தை வாசித்திருந்ததனால் பல வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டது ஆரோக்கியமானதாக இருந்தது.
ஜிஃப்ரி ஹாசனின் "போர்க்குணம் கொண்ட ஆடுகள்" சிறுகதைத் தொகுப்பு தொடர்பாக நண்பர் திலிப்குமார் பேசியிருந்தார். ஜிஃப்ரி ஹாசன் தனது புத்தகம் தொடர்பாக இதுவரை வெளிவந்த எல்லா விமர்சனங்களையும் விட திலிப்குமாரின் பார்வை தன்னை வெகுவாகப் பாதித்திருந்தாக குறிப்பிட்டார். அன்றாட வாழ்வில் நடக்கும் சிக்கல்களையும் போராட்டங்களையும் அழகிய மொழிநடையிலும் இயற்கையுடனும் சேர்ந்து பயணிக்கும் வகையில் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ள கதைகளின் தன்மைகள் தொடர்பான ஆழமான பார்வையை திலிப்குமார் முன்வைத்திருந்தார்.
தீரன் ஆர்.எம்.நெளஸாத்தின் "கொல்வதெழுதுதல் 90" தொடர்பாக நண்பர் ரமீஸ் தனது கருத்துக்களை முன்வைத்தார். நெளஸாத் இங்கு நன்கு அறியப்பட்டவர். அவரது எல்லா படைப்புகளும் பெரும்பாலானவர்கள் வாசித்துள்ளார்கள். நாவல் தொடர்பான முக்கியமான சில கருத்துக்களை முன்வைத்ததுடன் நெளஸாத்தின் படைப்புகளை தனி அமர்வின் மூலம் உரையாடுவதே பொருத்தம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மிகச் சிறப்பான முறையில் இவ்வமர்வு நடந்தேறியது. தலைமை வகித்த எஸ்.எல்.எம்.ஹனீபா அமர்வை கலகலப்பாக வைத்திருந்தார். வாசிப்பு வட்டத்தின் சிறிய புத்தகக்கூடமும் அமைக்கப்பட்டிருந்தது. கலந்துகொண்டவர்களுக்கு சமுசாவும் இஞ்சி பிளேண்டியும் வழங்கியிருந்தோம். பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டிருந்ததும், கருத்துத் தெரிவித்ததும் மகிழ்வாக இருந்தது. கல்குடா காத்தான்குடியிலிருந்து வருகைதந்த அன்பர்களுக்கும் ஏனையவர்களுக்கும் மற்றும் இடத்தை வழங்கிய ஏறாவூர் நகரசபைக்கும் நன்றிகள்.
இவ்வமர்வை சாத்தியப்படுத்திய நண்பர்களான Mohamed Sarees Issadeen Ramees Abdul Salam Jemsith Raafi Akber Hassan என்றும் அன்புக்குரியவர்கள்.
ஸப்றி

அன்புடீன் பொன்விழா மலர்



அன்புடீன் பொன்விழா மலர் 









மானா மக்கீன் 


Thursday, July 4, 2019

செங்கதிரோன்


ஜீவநதி-128--வைகாசி 2௦19 இதழில் 
செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் எழுதிய
 ''குறும்பா'' என்ற கட்டுரையிலிருந்து 



Thursday, June 27, 2019

முஹமட் அஜாஸ்

மகிழ்ச்சியான காலைப் பொழுது..!
நீண்ட நாட்களுக்கு முன்னர் அடியேன், தோழர் R.M. Nowsaathஅவர்களிடம் வினயமாக விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப அவர்கள் அனுப்பிவைத்துள்ள நான்கு நூல்கள் இன்று காலை அடியேனுக்குக் கிடைத்தன.
நூல்களைக் கண்டதும் பேரானந்தத்தை உணர்ந்தேன் !
வாசித்து முடித்தபின் குறிப்புகள் தரவுள்ளேன் இன்ஷா அல்லாஹ் !
தோழர் நவ்ஷாத் அவர்களுக்கு அன்புடன் கோடி நன்றிகள் !

Thursday, May 9, 2019

Nadigamvila Ggs Ananda

நான் மொழிபெயர்த ஆர். எம். நெளஷாத் எழுத்தாளரின் 'மீள்தகவு ' சிறுகதை tomorrow லங்கா பத்திரிகையில் வெளியிடும்.
මා විසින් සිංහලට පරිවර්තනය කරන ලද අාර්. එම්. නෞෂාද් ලේඛකයාගේ மீள்தகவு කෙටිකතාව 'වන්දි මුදල් චක්‍රය' නමින් මෙවර (2019/05/05) Lanka Irida Sangrahayaපුවත්පතේ පළවෙයි.
Comments
  • R.M. Nowsaath மிக்க நன்றிகள் தோழர்
    1

Monday, March 18, 2019

கலைஞர் அடையாள அட்டை




பிரதேச கலாசார அதிகார சபை வழங்கிய
கலைஞர் அடையாள அட்டை  



Saturday, February 16, 2019

நந்தினி சேவியர்

பிடித்த சிறுகதை - 267.
************************'
2011ஆம் ஆண்டு எனது 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்' தொகுதி கொடகே நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
கிழக்கு மாகாண சிறந்த நூல் தெரிவு செய்யும் குழுவில் நடுவராக நானும் இருந்தேன்.
அதன் காரணமாக கிழக்கு மாகாண
நூல் தெரிவுக்கு எனது நூலை நான் அனுப்பவில்லை.
வடக்கு மாகாணத்திற்கே அனுப்பினேன்.
அம்மாகாண பரிசை எனது நூல் பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் நான் தெரிவு செய்த
நூலாக இவரது நூலே இருந்தது.
அவரைப் பாராட்டிய நான் தேசிய சாகித்திய
விருதுக்கு உங்கள் நூலை அனுப்பினீர்களா என்று கேட்டேன்.
அவர் இல்லை என மறுதலித்தார்.
ஆனால் தேசிய சாகித்திய விருது எங்கள் இருவருக்குமே பகிர்ந்து வழங்கப்பட்டது.
நூலை தேர்வுக்கு அனுப்பவில்லை என்று
அவர் கூறிய பொய் எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.
இதை அவரிடம் கூறி அவரது நட்பிலிருந்து
நான் விலகிக் கொண்டேன்.
நண்பர்களிடம் ஒளிவுமறைவு இருக்கக் கூடாதுஎன்பது எனது கொள்கை.
பரிசு பெற்ற அவரது நூல் 'வெள்ளி விரல்'.
தீரன் ஆர். எம். நௌஸாத்.
***************************
பிறப்பு: செப்டம்பர் 5, 1960.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும், சிறுகதை, புதின எழுத்தாளரும் ஆவார்.
'தீரன்' என்ற புனைபெயரிலும் எழுதுபவர்.
ஆர்.எம்.நௌஸாத் சாய்ந்தமருது ஊரில் பிறந்தவர்.
அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
1978 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவர் 'தூது'என்ற பெயரில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவர் எழுதிய நூல்கள்:
*வல்லமை தாராயோ.. (சிறுகதைத் தொகுதி, 2000)
*வெள்ளிவிரல் (சிறுகதைத் தொகுதி, 2011)
*தீரதம் (சிறுகதைத் தொகுதி. 2017.)
*பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003)
*வானவில்லே ஒரு கவிதை கேளு (2005)
*நட்டுமை (புதினம், 2009)
(இரண்டு பதிப்பு)
*கொல்வதெழுதுதல் 90 (புதினம், 2013)
( மூன்று பதிப்பு )
*வக்காத்துக் குளம்(குறுநாவல், 2016.)
பெற்ற பரிசுகளும் விருதுகளும்:
* நட்டுமை நாவல் காலச்சுவடு சுந்தரராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.
*வக்காத்துக் குளம் நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு குறு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
* வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.
*' சாகும்தலம்' சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.
*'தாய்மொழி' சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
தேசிய பத்திரிகைகளில் எழுதுவதைவிட
ஞானம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளில் இவர் கூடுதலாக எழுதுகிறார்.
இவரது கதைகளில் எனக்கு பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று.
" ஒய்த்தா மாமா "
******************
ஞானம் ஓகஸ்ட் 2012. 147 வது இதழில்
பிரசுரமாகி. இவரது ' தீரதம் ' தொகுப்பில்
இடம்பெற்றுள்ள கதை.
இஸ்லாமிய மதச் சடங்கான
(சுன்னத் எனப்படும் விருத்தசேதனத்தை )
நிறைவேற்றி வைக்கும் ஒருவரைப் பற்றிய கதை.
*********
எனக்கு பத்து வயது இருக்கும் போது அது நடந்தது.
என ஆரம்பித்து.
அதன்பிறகு எனக்கு ஒய்த்தா மாமாக்களைக்
கண்டால் ஒரு பயமும் இல்லை.
*********
என்று முடியும் இக்கதையை இவரது
'தீரதம் ' தொகுப்பில் வாசிக்கமுடியும்.
இவரோடு தொடர்பு அறுந்த போதும்
இவர் படைப்புகளை இப்போதும் நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வாசகன் அப்பா நான்.!

Wednesday, February 6, 2019

பா.மோகன்தாஸ்


தினகரன் வாரமஞ்சரி- செந்தூரம் - 03.02.2019