தீராவெளி

Sunday, July 1, 2018

பீர்முகம்மத் சேர்

Peer Mohamed 

ஒரு சிலரை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் பல்கலை லட்டு வாதம் கைலாசத்தம்பிகளின் காலத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.
இதனை அப்போது எம்.ஏ.நுஃமான் போன்றவர்கள் எதிர்த்தார்கள். நுஃமான் போன்றவர்கள் பிற்காலத்தில் அரியாசனத்திற்கு வந்தபோது அவர்களும் ஒரு சிலரை மட்டும் தூக்கிப்பிடித்து குஞ்சம் கட்டி மகிழ்ந்தார்கள்
தற்போதுள்ள கிழக்கிலங்கை பேராசிரியர்கள் சிலரும்கூட அதே பாணியில் 'சாப்பாட்டுக்குப் பிறகு மூன்று தியாலம்' ஒரு சிலருக்கு எவ்வாறு தீந்தை பூசலாம் என்றே சிந்திக்கின்றதாகத் தெரிகின்றது.

இந்த நெருக்குவாரந்தான் தீரன் நெளசாத்தின் எழுத்து மேற்கிளம்பலை பலி எடுக்கின்றது. ஏதோ சாட்டுக்கு தீரன் நெளசாத் என்று தொடங்கி முடித்து விடுவார்கள்.

"நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த பத்து நாவல்களில் ஆர்.எம். நெளசாத்தின் நட்டுமை நாவலும் ஒன்று " எனச் சொல்லும் தைரியம் ஷோபா சக்திக்கு இருக்குமானால் நமது பேராசிரியர்களுக்கு அது இல்லாமல் போனது ஏன் ?

எஸ்.பொன்னுத்துரை இறுதியில் வெற்றி பெற்றதைப்போல் தீரன் நெளசாத்தின் எழுத்து வல்லமையும் அதன் இலக்கை அடையும்.
பரீட்சனுக்கு என் பாராட்டுக்கள்.
2 Manage










No comments:

Post a Comment