தீராவெளி

Monday, December 20, 2021

மஸூரா ஏ மஜீத


மஸூரா ஏ மஜீதின் நதிகளின் தேசிய கீதம் நூலுக்கான முன்னுரை



 




Wednesday, October 13, 2021

அனிஷா மரைக்காயர்

 இலக்கிய வாசகர், காயல்பட்டினம் K.S. முஹம்மத் சுஐப் அவர்கள்  2021.10.11 ஆம் திகதி திடீர் மரணம் அடைந்த போது அவர் பற்றி அனிஷா மரைக்காயர் எழுதிய குறிப்பிலிருந்து......



Thursday, September 9, 2021

விமல் குழந்தைவேலு


விமல் குழந்தைவேலுவின் வெள்ளாவி நாவலுக்கு அளித்த முன்னுரை பற்றி அவர் தன் நன்றியுரையில்...



Sunday, June 6, 2021

அலெக்ஸ் பரந்தாமன்



படிப்பும் பாதிப்பும் - 17

கபடப்பறவைகள்
அலெக்ஸ் பரந்தாமன்


சமூகத்தில் கலையுணர்வோடு கூடிய குடும்ப உறுப்பினர்கள் வாழும் இடத்தில் ஒரு படைப்பாளி தானாக உருவாக்கம்பெறும்போது, அவனுக்கு அனுசரணைகள், ஊக்குவிப்புகள் கிடைக்கின்றன. நல்ல வழிகாட்டுதல்களும் ஏற்படுகின்றன.

இதன்நிமித்தம் அவன் விட்டுச்செல்லும் நினைவுகளும் படைப்புகளும் கலையை உணர்ந்தவர்களால் பாதுகாக்கப்படுகின்றன ; போற்றவும்படுகின்றன.

ஆனால், எந்தவொரு ஆதரவுமற்று ஊக்கப்படுத்தல்களுமற்று, தானே சுயமாக உருவாக்கம்பெறும் படைப்பாளன், இறுதியில் இங்கே விட்டுச் செல்வதென்ன? அதுவும், 'இலக்கிய வாசனை' அற்ற குடும்பதிலுள்ள ஒருவன், படைப்பாளியாகி... அவன் இறந்தபின் பேசப்படுகிறானா? அவனது படைப்புகள், பரிசுகள்... என்னவாகின்றன? என்பதை வெளிப்படுத்துகிறது ஆர். எம். நெளஸாத் அவர்கள் எழுதிய 'கபடப்பறவைகள்' எனும் சிறுகதை!

எழுத்து இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்... சகிதம் கொண்ட ஒரு படைப்பாளியானவன், இறந்து... நாற்பதாவதுநாள் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஆவியாக எழுந்து, எவர் கண்களுக்கும் புலப்படாமல் தனது வீட்டிற்குவருகிறான்.அதன்பின்பு - அந்தவீட்டில் நடக்கும் நிகழ்வுகளை நெள ஸாத் அவர்கள் தனக்கேயுரிய நகைச்சுவைப் பாங்கோடுநகர்த்திச் செல்கிறார்.

''மரணவீடுதான்... ஆனால், வீடு நல்ல கலகலப்பாகக் காணப்பட்டது...'' என அவர் எழுதிச் செல்கையில், இந்தச்சமூக அசிங்கத்தின் ஒருபகுதி அம்மணமாகத் தெரிகிறது.இறந்துபோன அந்த எழுத்தாளன் உயிரோடு இருக்கும் போது தேடிவைத்த 'பொக்கிஷங்களை' ( நூல்கள், விருதுகள், பாராட்டுப்பத்திரங்கள்) காசுபணமென நினைத்து அவனது உறவுகள் அலுமாரிகளைத் குடைந்து ஏமாற்றமடைவதும், அவனது பொக்கிஷங்கள் விற்பனைக்குச் செல்வ தும், அதிலும் படைப்பாளனின் சிறுவயதுப் பேரனொருவன்அங்கு எஞ்சியிருந்த ஒரு' கபடப்பறவை' நூலின்மேல் தனதுசலத்தை அடித்து மலமும் கழிப்பது கதைக்கான இறுதி உச்சம்.அங்கே ஆவியாக நிற்கும் படைப்பாளன், தனது படைப்பு களுக்கு ஏற்பட்ட அநீதி கண்டு சகிக்க முடியாமல், அவன் மீண்டும் தன்னைப் புதைக்கப்பட்ட இடத்துக்கே போய் சேருவதோடு... கதை முடிகிறது.

சிரிக்கவும்... சிந்திக்கவும் வைக்கிறது 'கபடப்பறவைகள்'



- அலெக்ஸ்பரந்தாமன்,

புதுக்குடியிருப்பு.

Tuesday, May 25, 2021

ஏ.பீர்முகம்மது சேர்



நாவல் சிறப்பிதழ் ஜீவநதியின் 150 வது வெளியீடு


ஏ.பீர்முகம்மது சேர்

நாவல் விமர்சனச் சிறப்பிதழாகக் கோலம் புனைந்து நமது கரம் கிட்டியுள்ளது.

சஞ்சிகை ஆசிரியர் பரணீதரனின் ஆறு மாத காலப் போராட்ட உழைப்பின் விளைச்சல் இது.
சி.ரமேஸ் அவர்கள் அறுபத்தைந்து பக்கங்களில் நமது நாட்டுத் தமிழ் நாவல்கள் பற்றிய
அறிமுகக் குறிப்புகளை எழுதியுள்ளார்.

நாவல் வரலாற்றை வாசிக்க விரும்புவோருக்கு நல்லதொரு வாசல் இக்கட்டுரை .
நானூறுக்கு மேற்பட்ட நாவல்கள் பற்றி நூற்றி ஐந்து படைப்பாளிகள் பேசுகின்றனர்.
இருபத்தோராம் நூற்றாண்டின்முன்னிரு தசாப்த கால நாவல்களின்
படப்பிடிப்பு .

இறக்குமதி செய்யப்பட்ட இங்கிலீசுக் கோட்பாட்டினை 'ஈமான்' கொண்டுதான் பேசுவது என்னவென்று தனக்கே விளங்காமல் புதினங்களை அந்தக் கோட்பாட்டின் ஊடாக மட்டுமே பேசிய திறன் நோக்காளர்கள் தற்போது 'வீட்டுக்குக்குத் தூரமாகி' விட்டார்கள் என்பதை இவ்விதழில் வெளிவந்துள்ள பலவகைத்தான திறன் நோக்குக் கட்டுரைகளும் ஏனைய கட்டுரைகளும் எண்பிக்கின்றன

தீரன் ஆர் எம்.நெளசாத் கிராமங்களைத் தேடும் கதை சொல்லி என்ற எனது ஆக்கமும் இடம்பெற்றுள்ளது

* மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வெளியிட்ட அறபுத் தமிழ் நாவல்

* அறபுத் தமிழ் ஆக்கங்கள் தமிழ் ஆக்கங்களே என்ற பேரா. கா.சிவத்தம்பியின் கருத்து

* அறிஞர் சித்திலெப்பையின் பின் (அசன்பே சரித்திரம்) இரண்டாவது முஸ்லிம் நாவலாசிரியர் யார்?

* சித்திலெப்பையில் தொடங்கும் முஸ்லிம் நாவலாசிரியர் வரிசையில் தீரனின் இடம் எத்தனையாவது?

* தீரன் எழுதிய நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 ஆகிய இரண்டு நாவல்களினதும் காலவெளி, களவெளி. பாத்திரவெளி, உத்திமுறை,புனைவு மொழி , கலாசார பண்பாட்டுக் கூறுகள்
போன்ற விடயங்களைப் பற்றியதான வஸ்துகளோடு எனது வாக்குமூலம் கட்டுரையாக இம்மலரில் கனிகின்றது.

வணிக நோக்கத்திலும் வரலாற்றை ஆவணமாக்கும் தேவையே மேன்மையானது என்பதை ஒலிபரப்புச் செய்கிறது இந்தச் சிறப்பிதழ் .எனது கட்டுரையைப் பிரசுரித்தமைக்காக நன்றியும்
சிறப்பான முயற்சி என்ற வகையில் பாராட்டும்பரணிதரனுக்கு .

Wednesday, May 12, 2021

அஷ்ரபா நூர்டீன்

                                                                   அஷ்ரபா நூர்டீன்




Saturday, May 8, 2021

மஸூரா ஏ மஜீத்



 இன்றைய (08-05-2021) தினக்குரல் வாரவெளியீட்டில் கவிதாயினியும்,மொழித்துறை சிரேஷ்ட ஆசிரியையுமான சம்மாந்துறை மஷூறா 
அவர்கள் உடனான  நேர்காணலிலிருந்து.


Friday, April 23, 2021

முஹம்மத் ரமீஸ் SEUSL

இலங்கை  முஸ்லிம்களின் படைப்பிலக்கியம்