தீராவெளி

Sunday, July 1, 2018

எம்.எம்.எம். நூறுல்ஹக்.---செந்தூரம்-

செந்தூரம்-(27.02.2011

போட்டிகளில் பரிசுபெறாது திரும்பிவந்த
எனது சிறுகதைகளை  
அதிகமாக நேசிக்கின்றேன்.

நேர்காணல்.- பன்னூலாசிரியர். எம்.எம்.எம். நூறுல்ஹக்.



சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  தீரன்.ஆர்.எம். நௌஸாத் ஆளுமைமிக்க ஒரு புனைவாளர் ஆவார். தபால் அதிபராகத் தொழில்புரியும் இவர் சுமார் முப்பது வருட எழுத்துலக வாழ்வில் இருப்புக் கொண்டவர்.  ~வல்லமை தாராயோ..| (2000) சிறுகதைத் தொகுதிää ~நட்டுமை| (2009) நாவல்ää  ஆகிய இரு நூல்களை தனது அடையாளமாகத் தந்திருக்கும் இவர்  கவிதைகளுக்காள தனிச் சிற்றிதழாக  தூது என்ற சஞ்சிகையின்  16 இதழ்களை வெளியிட்டதோடு தனது பிரதேசத்திலிருந்து  இதுவரை வெளிவந்த சிற்றிதழ்கள் எதுவும்  இவ்வெளியீட்டுச் சாதனையை முறியடிக்கவில்லை. 

நமது இலங்கையின்   தமிழ்மொழிப் படைப்பாளிகளுள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை போன்ற  பன்முக ஆளுமை கொண்டு தடம் பதித்த எழுத்தாளர்கள் மிகக்குறைவு.  ஆந்த வரிசையில் தீரன்.ஆர்.எம். நௌஸாத் தன்னை இடம்பிடிக்கச் செய்தவர். 

மட்டுமன்றி தனது சந்தக் கவிதைகளில்  ரசிகர்களைக் கட்டி வைத்து  கவிதை பாடிய ஒரு கவிஞருமாவார். மற்றும் வீரியமிக்க புனைவு இலக்கியத்தின் ஊடாக  தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வல்லவர். அவருடனான நேர்காணல் இது-


தீரன்.ஆர்.எம். நௌஸாத்





படைப்பு பற்றிய உங்கள் பார்வை…?

அது எவ்வகையான படைப்பாக இருந்தாலும் ஒருமின்னலைப் போல பளிச்சிட்டு  அது மனதில் கருக்கொள்கிறது. இனிஅதில் செய்ய வேண்டியதெல்லாம் செதுக்கல்களே..  இதற்கு வலிமையான ஒரு கருமென்பொருளும்  அதற்கேற்ற தனமமைப்பு நோக்குநிலை- வார்ப்புக்கள்-  போன்ற வன்பொருட்களும் தேவையாகின்றன.  ஏல்லாம் இயைந்து வருகின்றபோது  அது வெற்றிபெற்ற  படைப்பாகின்றது. 

உங்கள் சிறுகதைகள் கொண்டிருக்கும்  வித்தியாசமான கருப்பொருட்கள் தொடர்பில்…?

ஒரு சிறுகதையில் கையாண்ட உத்திகள் எவற்றையும் அடுத்த கதையில் நான் கையாள்வதில்லை. எழுதிய ஒரு சிறுகதையின்  கருவை விட்டும் முழுமையாக வெளிப்பட்டு இன்னொரு எழுதப்படாத கதையின் தளத்துக்குள் வருகின்றேன். தளமாறுபாடுகளும் வித்தியாசமான வார்ப்பு முறைகளும் பலவீனமான கருக்களைக் கூட  வன்மையடன் கட்டமைக்கின்றன. 
தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய  செய்தி என்னவாக இருப்பினும்  வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால் திருடப்படும் போது  நமது செய்தியை அவனது உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது..  இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே வேறுபாடுகள் உண்டு.. 

ஒரு படைப்பாளியின் இறதி எல்லை எதுவெனக் கருதுகிறீர்கள்..?

ஒரு மனிதனின் வரலாற்று எச்சம் அவனது மரணத்தின் பின் பெறப்படுகின்றது..  அதேபோல் ஒரு படைப்பாளியின் எச்சம்  அவன் எதைப்படைத்துவிட்டுச் செல்கின்றான் என்பதைப் பொறுத்தது..  காலஓட்டத்தில் அவன் விட்டுச்சென்ற படைப்புக்களின் ஊடாகNவு  அவன் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றான்..  படைப்பாளிக்கு ஒருபோதும் மரணமில்லை..  அவன்தன்படைப்புக்கள் ஊடே வாழ்கிறான்..  பல தலைமுறை இடைவெளிகளிலும் சஞ்சரிக்கின்றான்.. அவை வாசிக்கப்படும் போதெல்லாம் வாழ்கிறான்.

உங்கள் நாவல்துறை முயற்சிகள்…?

முஸ்லிம் குரலில் வெளியான  ~பள்ளிமுனைக்கிராமத்தின்கதை|  நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது..  பரிசுபெற்ற ~நட்டுமை| நாவலின் கரு  சம்மாந்துறையின் வயல்வெளிகளிலிருந்து கிடைத்தது..  ஈழநாதம் இதழில் வெளியான  ~வானவில்லே ஒரு கவிதை கேளு| குறுநாவலின் வார்ப்பு  கல்லடிப் பாலத்தில் உருவானது..  ~சாந்தமாமா| குறுநாவல்  தீகவாபி விகாரையில்  கருக்கொண்டது..  இப்படிப் பல கருக்கள்…பல தளங்கள்..  எனினும் இவை  வடிவத்தாலும் செதுக்குதல்களாலும்  ஒருபோதும் முழுமையுறுவதாயில்லை.. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயுமில்லை…

சிற்;றிதழ் துறையில் உங்கள்  பங்களிப்பு எப்படி..? 

அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.. 1985களின் போர்க்காலச்சூழலில்
உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் ~அன்படன்ää| ~இன்னாலில்லாஹி|..ää~தீ.வை.|ää என்றெல்லாம் தூள்கிளப்பிக் கொண்டிருந்தாலும்  தூது என்ற பெயரில்  16 இதழ்களை அச்சில் கொண்டு வந்தேன்.. இது ஒரு கவிதைச் சிற்றிதழ்.  தூதில் ஆசிரியர் தலையங்கங்களை  குறும்பாää வெண்பா வடிவங்களில்  எழுதிப் பரிசோதித்தேன்..  மரபோ புதிதோ  ~கவிதை நமக்குத் தொழில்..| என்றாகி விட்டிருந்தது. 

புpன்னர் ஹைக்கூ கவிதைகளுக்காகவே  ~புள்ளி| என்ற இலங்கையின்  முதல் ஹைக்கூ கவியேட்டை  றாபிக்குடன் இணைந்து கொணர்ந்Nதூம்..  அதன் பின்னர் ~இரண்டாவது பக்கம்.|.. இதில் ஐhபிர்ääநகீபு நான்.. மிக வித்தியாசமான புதக்கவிதைகள் விதைத்தோம்..  இப்படிச் சில முயற்சிகள்.. 

உங்கள் வானொலி நாடகப் பங்களிப்பின் வகிபாகம் என்ன..? 

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின்  வானொலி நாடகங்களுக்காக  மக்கள் காத்துக் கிடந்த காலமொன்று இருந்தது..  1982 தொடக்கம் ஏறக்குறைய 14 நாடகங்கள்தான்  எழுதியிருக்கிறேன்.. அவற்றில் ~ஒருகிராமத்தின் கவிதை..| நாடகம்ää  இன்றுவரை இடையிடையே மறுஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது.  ~காகிதஉறவுகள்| நாடகம்  2002 ல்.. பிரான்ஸ் தமிழ்வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய  உலக  வானொலிநாடகப் போட்டியில்  மூன்றாம் பரிசு பெற்றது.. 

பத்தி எழுத்துத் துறையோடு உங்களை பிணைப்பு  எவ்வாறு..?

விடிவெள்ளி வாரஇதழில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..| என்ற தலைப்பில்  பாவலரின் படைப்புலகில் சஞ்சரித்தல் என்ற தொடரையும்  நல்லுறவு இதழில் ~விழித்திரையில் விரியும் வெண்திரை| என்ற தலைப்பில்  பிறமொழிச் சினமாக்களின்  அறிமுகத் தொடரையும் யாத்ரா சஞ்சிகையில் ~கொல்வதெழுதுதல|; என்ற சமுக விவரணப் பகுதியையும் சிலகாலம் எழுதிவந்தேன்..

உங்கள் புனைவுகள் பரிசுகளைச் சந்தித்த அனுபவம்..?

மலேசிய நண்பன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிää  தமிழ்நாடு சென்னை சுஐhதா அறக்கட்டளைääநடத்திய அறிவியல் விஞ்ஞானப் புனைவுபோட்டி நாகர்கோயில் காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 நாவல் போட்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கீதம் இலக்கியப் போட்டிää  அரச ஊழியருக்கான ஆக்கற்திறன் போட்டிää  ஞானம்ää அமுது சஞ்சிகைகள் நடத்திய  சிறுகதைப் போட்டிகள்  போன்ற சுமார் 19 இலக்கியப் போட்டிகளில் பற்பல பரிசுகள் பெற்றிருப்பினும்  சில போட்டிகளில்  பரிசு பெறாது திரும்பிவந்த  எனது சிறுகதைகளை அதிகமாக நேசிக்கின்றேன்.. 


காரியப்பர்கள் வரலாறு எழுதுவதாக அறிகின்றோம்.. அதன் பின்னணி என்ன..? 

இது ஒரு தற்செயல் விபத்துத்தான்..  என் தொழில்நிமித்தம் நான் சந்தித்த  சிறிமைத்திதிரிபோதி நாயக்கரான  போகொல்லாநந்த தேரர் அவர்கள் இப்பகுதியிலுள்ள  காரியப்பர்கள் பலரை  என்னிடம் விசாரித்த போது  அவர்களில் பலரை எனக்குத் தெரிந்திரு;க்கவில்லை..  காரியப்பர்கள் பற்றி  அவர் பல வரலாற்றுத் தொடர்புகளைக் கூறியபோது  எனது அறியாமையின் மீது கோபமாக இருந்தது..  அக்கணமே இதனை அறியத் தீர்மானித்தேன்.. 

ஐந்துவருடகால சிரமமிக்க  தேடலகளின் முடிவில்  இலங்கை  முஸ்லிம்களுள்  காரியப்பர்கள் என்ற பெயருடன் விளங்கும் என் இரத்த உறவினர்ப் பரம்பரையை அறியமுடிந்தது..  கி;பி; 1400களில் ஆரம்பமாகும் இக்காரியப்பர்  பரம்பரை  புராதன காலத்து  சிங்கள மன்னர்  காலம் தொடக்கம்  இன்றுவரை  இலங்கை அரசியல் மற்றம்  சமுகவியலில்  அவர்களின் வகிபாகம் பற்றிய  விவரணமே  காரியப்பர்கள் வரலாற என்னும் எனது ஆய்வு நூல் ஆகும். இது தற்போது அச்சில் இருக்கிறது…



No comments:

Post a Comment