தீராவெளி

Thursday, August 10, 2017

காத்தான்குடி பௌஸ்

Kattankudy Fouz

தீரன் நௌஸாத் இலக்கிய
உலகில் பேசப் பட வேண்டிய ஒருவர். காரணம் அவரின் கற்பனை வளம்! தமாஸ்...சீராக சிந்திக்கின்ற மனோ பாவம்! பழைமையை ஓரம்
கட்டாது நயங்களை நன்று
யோசிப்பவர். சமயப் பெரியார்களை கௌரவித்தல் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்.

ஆதம் அய்யூப்

Adam Iyoobkhan

அருமை,,,,தீரனின் முகத்தில் மோனாலிஸா ஓவியத்தைப் போல் எப்பொழுதும் ஒரு ஹாஸ்யப் புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் ,,,.,



எஸ்.எல்;.எம். ஹனிபா

Slm Hanifa

தீரன் நெளசாத் நமது சிறுகதையை உயிர்ப்பான திசைக்கு மாற்றிய வல்லவர் அவரை வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன் காலச்சுவடு மூலம் தமிழக வாசகர் மத்தியில் பரவலாக அறியப்பட்ட ஒரே படைப்பாளி அவரே!




நாச்சியாதீவு பர்வீன்

Abdul Raheem Mohammdu Farveen

தீரன் நௌசாத் நாடறிந்த பிரபல்யமான எழுத்தாளர். சுமார் 7 நூல்களை இலக்கிய உலகிற்கு தந்துவிட்டு ஒன்றும் தெரியாத அப்புராணி போலவே தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர். அவரது கொல்வதெழுதல்-90 மற்றும் வெள்ளிவிரல் என்பன வாசகர்கள் மத்தியில் பலத்த சலசலப்பையும் அவர்மீதான அபிமானத்தையும் விதைத்தது எனலாம்.