தீராவெளி

Tuesday, July 28, 2015

சுஜாதா நினைவுப் புனைவு 2009



எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி

பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா


இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்பி வலதுத் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6

நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை

வரவேற்புரை
திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்

அறிமுகவுரை
திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி

சிறப்புரை
பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்


மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு

வாழ்த்துரைகள்
திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்

ஏற்புரை
திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை

நன்றியுரை
திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்

நன்றி, அனைவரும் வருக!

போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு

இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன்,தமிழ்நாடு

சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு

இலங்கை
திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை

வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா

ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா

ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

00
சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

தேனம்மை லெக்ஷ்மணன்


அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் இ இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார்.

பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன் தி.தா. நாராயணன் நளினி சாஸ்த்ரிகள் ஆர். எம். நௌஸாத் கே.பாலமுருகன்இ வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள்.

கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனைஇ நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.

மனிதனுக்கு எல்லாமே இரண்டா தெரியலாம். ஆனா இரண்டாகி தான் அடுத்த பத்து வினாடிகளுக்குப் பின் செய்யப் போகும் செயல்கள் எல்லாம் இரண்டு இரண்டு பிம்பங்களாகத் தெரிந்தால் என்ன ஆகும். இது நியூட்டனின் முதல் விதியோடு சம்பந்தப்படுத்தி இருக்கு இந்தக் கதையில். திடீர்னு நம்ம ரூம்ல நாமே அணுக்களின் பிளவில் இரண்டாகி தள்ளி நின்னு பார்க்கிறார்போன்ற உணர்வை ஏற்படுத்திய கதை. கே. பாலமுருகனின் ( மலேசியா) மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கொஞ்சம் அச்சப்பட வைத்த கதை.

சுஜாதா நினைவுப் புனைகதை என்றால் காதல் கலக்காமல் இருக்குமா என்ன. ”சாகும் தலம்” அந்த வகை. புராணப் பாத்திரப் பேர் கொண்ட அறிவியல் கதை. மானுட உணர்வு இணைப்புக் கொடுக்கப்பட்ட சகுந்தலை துஷ்யந்தன் ரோபோக்கள் காதல் வயப்பட்டு மேலும் மனிதாபிமானமுற்று பூச்சிய வெளியில் பூமியின் 317 பகுதியைக் காப்பாற்றத் தற்கொலை செய்து கொள்ளும் இடம் நெகிழ வைத்தது. ஆர். எம். நௌஸாத் ( இலங்கை) அதிகபட்சமான சுஜாதா கதையோடு ஒத்துப் போவது போன்ற புனைவை எழுதி இருந்தார்.

மிக கஷ்டமான பணி இந்த மாதிரி சிறப்பான கதைகளைத் தேர்வு செய்வதுதான். சுஜாதா என்னும் நாற்றங்காலில் விளைந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு ஆழி பதிப்பகம் இதைத் தொகுத்து வெளியிட்டிருப்பது சிறப்பு.

நூல் :- சுஜாதா நினைவுப் புனைவு 2009 அறிவியல் புனைகதைத் தொகுப்பு.
தொகுப்பாசிரியர் :- சந்திரன்.
பதிப்பகம் :- ஆழி பப்ளிஷர்ஸ்.

நவாஸ் சௌபி - எதுவரை


நவாஸ் சௌபி
சாய்ந்தமருது  'எதுவரை'யில்


‘ ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ஆளுமையோடு நோக்குவது போல்

தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதைசெல்லும் நுட்ப ஆளுமையாகவும் மதிப்பிடுகிறேன்.

இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.

Thursday, July 23, 2015

காலச்சுவடு

                                                                        
காலச்சுவடு பதிப்பக நூல்களுக்கு
இலங்கை அரசின் சாகித்திய விருது.-

2012ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த அக்டோபரில் கொழும்பில் நடைபெற்றது. இதில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எம் ரிசான் சரிப் மொழிபெயர்த்த சுனந்த தேசப்பிரியாவின் அம்மாவின் ரகசியம் நாவலுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது கஜந்தனின் நிலம் பிரிந்தவனின் கவிதை தொகுப்புக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது ஆர்.எம். நௌஸாத்தின் வெள்ளிவிரலுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இம்மூன்று நூல்களும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக கடந்த 2011 ஆம்’ஆண்டு வெளிவந்தவை. விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு காலச்சுவடு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

காலச்சுவடு. டிசம்பர் 2012. இதழ் 156- பக்கம் 79

Monday, July 20, 2015

வாப்பாவும் உம்மாவும்

வானமான  வாப்பாவுக்கும் 
பூமியான உம்மாவுக்கும் 
சமர்ப்பணம் 

           


 

அல்ஹாஜ். இசட் .கே. ராசிக் காரியப்பர்  
                                                       16 -12-1933 --------------   22-12-2013                                                   

எம்.எஸ். ஹாஜறா
16-11-1939 ----------16-09-2013 
                                                               


 என் பெற்றோர் ஒருவரை ஒருவர் பிரிந்திருக்க மனமின்றி ஒரே ஆண்டில் இரு மாத கால இடைவெளியில் காலம் சென்றனர். இந்தப் பிரிவு தந்த தாக்கத்திலிருந்து நான் விடுபட வெகு காலமாயிற்று. அவர்கள் உயிருடன் இருக்கும் போதே என் நட்டுமை நாவலை இருவருக்கும் மேற்கண்டவாறு சமர்ப்பணம் செய்திருந்தேன்.   இருவருமே தொடர்ச்சியான வாசிப்பாளர்களாக இருந்ததனால் எங்கள் வீடே ஒரு வாசகசாலையாக இருந்தது... அது ஒரு பொற்காலம்.

அறிவியல் நகைச்சுவை மிக்க வாப்பா ..எந்நேரமும் வாயில் புகையிலையும் புத்தகமுமாக உம்மா ...அவர்களுக்குள் ஒரு சின்ன சண்டை மனவருத்தம் ஏற்பட்டு நாங்கள் கண்டதில்லை.. தம் நான்கு பிள்ளைகளையும் கண்ணுக்குள் வைத்துக் காப்பாற்றி வளர்த்த அந்தக் கருணைக்கு எப்படி நன்றி செலுத்த...?

வானமாக இருந்து - எம்மை வார்த்தெடுத்தீர்- வாப்பா ..நீங்கள் எங்கள் வம்சத்தின் விடிவிளக்கு .....
என்றும்

காலடியில் ஒரு சொர்க்கத்தை வைத்துக் கொண்டு இன்னுமோர் சொர்க்கம் தேடி ஏன் போனாய் உம்மா ...?  என்றும்

நாம்  நால்வர் இருக்கு மட்டும்  ம்மா.. வாப்பா  உங்களிருவரின்  நினைவிடை தோய்வோம்- விழி நீரினால் நினைப்போம்.. 

என்றும்  ஆறுதல் பெற்று அவர்தம் ஆத்மாக்களை அல்லாஹ்விடம் ஒப்புக் கொடுத்தோம். நல்லருள் பாலிக்க...


சாய்ந்தமருது அக்பர் பள்ளி மையவாடியில் 
 இருவரினதும் அடக்கஸ்தலங்கள் அருகருகே. --
(ஆடியிருந்ததும் அருகருகே அடங்கி முடிந்ததும் அருகருகே.)
                                                    000
        


தந்தையாரைப் பற்றி நவமணி பேப்பரில் வெளியான கட்டுரை.


மர்ஹ_ம் அல்ஹாஜ் 
இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. 
சடுதி மரண விசாரணை அதிகாரி-
 பிறப்பு இறப்பு பதிவாளர்.



கலாபூஷணம். எம்.எம். ஆதம்பாவா.
சாய்ந்தமருது.8



அறிவொளி வீசும் மலர்ந்த முகம் அனைவரையும் அரவணைக்கவல்ல குளிர்ந்த பார்வை  அர்ப்பணிப்புடன் காரியமாற்றல் சமுக சேவை மனப்பாங்கு  தாராள குணம் விடாமுயற்சி கூர்மையான கவனம் அறிவாற்றல்  ஆகிய அருங்குணங்களும் பண்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற  ஓய்வுபெற்ற சடுதி மரணவிசாரணை அதிகாரியும் முன்னைநாள் சாய்ந்தமருது பிறப்பு இறப்பு பதிவாளருமான அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. தனது 83வது வயதில்  22.12.2013ல் காலமானார்கள். இன்னாஇலைஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

மர்ஹ_ம் அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. அவர்கள் முன்னாள் தகவல் ஒலிபரப்பு அமைச்சரும் கல்முனைத் தொகுதியின் முதல் பாராளுமன்ற உறுப்பினருமான புகழ்பெற்ற கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின்  மூத்த சகோதரரான கிழக்கின் முதல் முஸ்லிம் புரக்டர் செயின் காரியப்பரினதும்   நிந்தவூர் நிலச் சுவாந்தர் செல்லப்பிள்ளை உடையாரின் புத்திரி லைலத்துல் கத்ரிய்யாவினதும் ஏக புதல்வராக நிந்தவூரில் 16.12.1933ல் பிறந்தார். 

தனது ஆரம்பக் கல்வியை  மட்- சிவானந்தாக் கல்லூரியிலும்.ää இடைநிலைக் கல்வியை கொழும்பு ஆனந்தாக் கல்லூரியிலும் ஆங்கில மொழி மூலம் கற்றுத் தேறினார்.

சாய்ந்தமருதின் பிரபல வர்த்தகரான முகம்மது சதக்கு ஸபிய்யா உம்மா தம்பதிகளின் புத்திரியான  ஹாஜியானி ஹாஜரா உம்மாவை 1955 ல் திருமணம் செய்தார்.  

பாரம்பரிய விவசாயப் போடியார்ப் பரம்பரையினராதலினால் 1962 களில் சாய்ந்தமருது நெற்சந்தைப்படுத்தும் களஞ்சியத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு மிகச் சிறப்பாகக் கடமை செய்தார். 1968களில் சாய்ந்தமருது அல் கமறுன் வித்தியாலயத்தின் பெற்றார் ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டு இப்பாடசாலைகளின் வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றினார். 

அன்னாரது ஆங்கிலப் புலமை காரணமாக 1970 .லிருந்து கரைவாகுப் பற்று தெற்கு பதில்  பிறப்பு இறப்பு பதிவாளராக தெரிவு செய்யப்பட்டு சிறப்பாகப் பணியாற்றினார். 

இக்காலத்தில் தம்மிடம் குழந்தையின் பிறப்பு பதிவு செய்ய வரும் பாமர மக்களின் குழந்தைகளுக்கு அழகான இஸ்லாமிய அர்த்தம் பொதிந்த பெயர்களைச் சூட்டி அவர்களை மகிழ்வி;பபார். 

சாய்ந்தமருதில் 1972 இலிருந்து மிக நீண்ட  41 வருட காலம் அகில இலங்கை சமாதான நீதவானாக ஊருக்கு அரும்பணி ஆற்றிய பெருமையும் இவரையே சாரும்.. ஜே.பி என்றாலே இவர்தான் என்று அனைவருக்கும் தெரியும். 

கண்டிய அரசின் வெல்லஸ்ஸ கொட்டபோவே காரியப்பர் பரம்பரையின் வழியான அகமதுலெவ்வைக் காரியப்பரின் நேரடி வாரிசான இவர் மும்மொழி ஆற்றல் உடையவர். சரித்திரப் பிரசித்த இடங்களைப் புகைப்படம் பிடித்துச் சேகரிப்பதில் ஆர்வலராக் இருந்தார். இவரிடமிருந்த ஆயிரக்கணக்கான  கறுப்புவெள்ளைப் புகைப்படங்களும் தகவல் நறுக்குகளும் 1978ன் சூறாவளி அனர்த்தத்தில் தொலைந்து போயின. எனினும் எஞ்சியவற்றை பாதுகாத்து வைத்துள்ளார். 

மனிதர்களை அரவணைத்து அனைவருடனும் அன்புடன் பழகுதலையும்ää; தன்னலம் கருதா ஊர்ப் பொதுச் சேவையையும் கௌரவித்து 1979ல் சாய்ந்தமருது முதலாம் பிரிவு  முன்னேற்றச் சங்கம் அன்னாருக்கு ~~மனித நேய மாமணி| என்னும் பட்டயமளித்துப் பாராட்டப்பட்டார். கல்முனை அரசியற் களத்தில்;ää கேற்முதலியார் காரியப்பரினதும்ää ஏ.எம். சம்சுதீன் பா.உ. அவர்களினதும் அரசியல் வெற்றிகளின் பின்புலச் செயற்பாட்டாளராக விளங்கினார். 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி ஸஹிலா டொக்டர்ää முகம்மது நௌஸாத் (அஞ்சல் அதிபர்.)ää முகம்மது அஸ்மி (எம்.ஏ) அகமது றிபாய் காரியப்பர் (விரிவுரையாளர்.) ஆகியோரின் அருமைத் தந்தையாரான  அல்ஹாஜ் இசட்.கே. றாசிக் காரியப்பர் ஜே.பி. ஆவர்களின்  அரிய சேவைகளை பொருந்தி வல்ல நாயன்  அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸாகிய சொர்க்கத்தை வழங்குவானாக... ஆமீன்.! 00  

Saturday, May 30, 2015

விபத்து 2015.05.24

எருமை மாட்டில்  மாட்டிவிட்ட மாடு வெட்டி


கடந்த வாரம் ஒரு நாள் 2015.05.24ஆம் திகதி கொழும்பு செல்ல சம்மாந்துறை ரவ்சூன் ரவல்ஸ் பஸ்ஸில் ஏறினேன். விதி அறியாமல் ஏறினேன்..
ஒழுங்காகத்தான் போய்க் கொண்டிருந்தது..

இரவு 11.15 மானிய;ளவில் அம்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள புலுக்குனாவ என்ற காடுப் பகுதியில் வைத்து அந்த பாரிய விபத்து நடந்தது.
காட்டுக்குள்ளிருந்து சடுதியாக பாய்ந்து வந்த ஒரு எருமைக்கிடா எமது பஸ்ஸை மோத பஸ் பாரிய சத்தத்துடன் எருமையை மோதி ... அல்லோல கல்லோலப்பட்டு பஸ் எருமை மீது ஏறி குடை சாய்ந்து 12 அடி பள்ளத்தில் விழுந்தது. பஸ் உள்ளிருந்த அனைவருக்கும் பலத்த காயம் ....

என் தலையில் இரத்தம் விளாரிட ---
ஆத்திரமாக பஸ் சாரதியை தேடினேன்..
அடே மட்டுப் பண்டி ... இப்படியாடா பஸ் ஓடுவாய்.. எருமையில் மோதினாயடா.... மாடா... நீ யாருடா.. பேர் என்னடா என்று உலுக்கினேன்

அருகில் காயப்பட்டுக் கிடந்த ஒருவர் சொன்னார்,


தம்பி இவன் ரைவர் நம்மட ஊர்தான்.. நம்மட ~``கிடா மாடு வெட்டி``ர மகன்... இவன்ட பேரு நாம்பங்கண்டு