தீராவெளி

Thursday, March 15, 2018

ஆதம் ஐயூப்கான்

Adam Iyoobkhan


அருமையான ,,..அற்புதமான ,,படைப்பாளி, ,,,இவரின் அழகிய மண் வாசனை கழந்த மொழி நடை , படிப்பவர்களை , திரும்பத் ....திரும்பத் ,,,படிக்கத் தூண்டும் ,,,,இவரைப் பற்றி நிறையவே சொல்லலாம் ,,,கவிஞர் ,மௌலவி பௌஸ் அவர்களின் ,,,இவரைப் பற்றிய பார்வை சொற்பமென்றே ,,,நான் நினைக்கிறேன் ,,,இவரை அறியத் தந்த கவிஞர் பௌஸ் அவர்களை ,,இதயபூர்வமாக வாழ்த்துகிறேன்,,,

உசனார் சலீம்

M.I. Usanar Saleem Saleem


நண்பர் ஆர்.எம்.நௌஸாத் அவர்கள் இலங்கை நாட்டின் சிறந்ததோர் எழுத்தாளர்.அவரைப்பற்றி மிகவும் அறிந்த வகையில் மிகவும் சிறந்த நற்பண்புகளுடனான உயர்ந்த மனிதரிவர்.நண்பரை வாழ்த்துவதில் பெரும் பேரின்பமும் மனமகிழ்ச்சியுமடைகின்றேன்.என் இனிய நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன் அல்லாஹ்வின் நல்லருளுடன் ஆமீன்!

திக்குவலை கமால்

Dickwellekamal Kamal

வெளிப்பாட்டுத் திறன் மிக்கவர்.கலைத்துவம் கொண்டவர்.கதைகளின் கலாசாரப் பின்புலத்தை நன்கு கொண்டுவருபவர்.' நட்டுமை' பற்றி சந்திக்கும்போது பேச உள்ளேன்.

டொக்டர் எ பரீத்

Ahamed Fareed

எனது பாடசாலைக்கால நண்பர்.மண்ணுக்கு பெருமை சேர்க்கும் மகத்தான படைப்பாளி.அவரது பேனா சமூக அவலங்களை தொட்டுக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அவற்றுக்கான தீர்வுகளுக்கும் வழி சொல்லும்.என் இனிய நண்பா நீ வாழ்க.

அப்துல்ரசாக்

Abdul Rasak Abdul Rasak


ஒரு விஞ்ஞான புனைகதை நூலுக்கு அணிந்துரை எழுதிக்கொண்டிருக்கிறேன். தீரனின் சாகும்தலம் பற்றிய குறிப்பெழுதும் நேரம் இப்பதிவை பார்க்கக் கிடைத்தது ஆச்சரியம். தீரன் வாழ்க.


பியாஸ் முகம்மது

Fiyas Mohamed

இவரின் எழுத்து ஒரு வித்தியாசமானவை யாரையும் குறை கூறி இருக்கமாட்டார் தனது பாணியிலே இன்னமும் எழுதுகிறார். நல்லா பழகக் கூடியவர் .இவரின் எழுத்துக்கு மூ. மேத்தாவே விமர்சனம் செய்யப்பட்டவர் வாழ்த்துக்கள் அருமை நண்பர் நௌசாத்.

ஆசுகவி அன்புடீன்


ஆசுகவி அன்புடீன்


....நானும் இவரும் ஒரே திணைக்களத்தில் கடமை புரிந்தவர்கள் எனக்கும் மேலதிகாரி அவர். கடமையில் கண்ணியமானவர். நட்பை பேணுவதில் நாணயமானவர்.புரிந்துணர்வுள்ளவர்.
ஒன்றாக கடமை புரிந்த காலத்தில் அவரது படைப்புக்களின் முதல் வாசகன் நான். என்னுடைய படைப்புக்களுக்கும் அவர் அப்படித்தான்.

என்னை விட ஒன்பது வருடங்கள் வயதில் இளையவர்.நான் அவரை விட வயதில் மாத்திரம்தான் மூப்பு. மற்ற எல்லாவற்றிலும் அவர் எனக்கு மூப்பு. அதனாற்தான் அவரது 'புகவம்' இலக்கிய வட்டத்தால் எனக்கு 'ஆசுகவி' பட்டம் தந்து என்னை பேசு(ம்) கவியாக்கிய பெருமை நமது தீரன் ஸாருக்கு உண்டு.

வபா பாறூக்

Waffa Farook

மருதூரின் மனிதம் மிக்க கலைமுகம்
சர்வதேச தமிழ் அடையாளங்களில் ஒன்று
எனது பாடசாலைக்கால நண்பன் வாழ்த்துக்கள்

பாவேந்தல் பாலமுனை பாறூக்

பாவேந்தல் பாலமுனை பாறூக்

மண் மணக்கும் நாவல்களின் ஆசிரியர்.புகவம் அமைப்பின் மூலம் இலக்கியப் பணி புரிந்தவர். காத்திரமான சிறுகதைகளால் மக்கள் மனங்களை வென்ற சிறுகதையாளன்.குறும்பாக்காரர்.புகவத்தினால் பட்டம் தந்து என்னையும் கௌரவித்தவர்.நல்லமனம் வாழ்க!

தங்குதடை யின்றித் தனது படைப்புகளில் அங்கதத்தைக் கொண்டுவரும் ஆற்றலது-இங்கிந்தத்
தீரன் நவுசாத்தை மேலும் சிறப்பிக்கும் பேரெடுப்பார் இன்னும் அவர்!்

எஸ். முத்துமீரான்




 நல்ல நாவலாசிரியர்.சிறுகதைப்படைப்பாளி.வாழ்த்துக்கள்.

அபூ நஜாத்

Abu Najath

இவன் கவிதையில் தீரன் . சிறுகதையில் சூரன். நாவலில் வீரன். நகைச்சுவையில் அவனுடைய மூத்தாப்பாவின் பேரன். அவனுடன் பேசிப் பாரன். அடி வயிறு பிஞ்சே போறன்....

எ எம் எம் அலி

Mohamed Ali Abdul Majeed

முகநூல் எனக்களித்த நல்ல நண்பர்.
அகந் திறந்து பேசி
அன்பைப் பரிமாறி உள்ளோம் !
தீரன் நௌஷாத்
எழுத்துக் களத்தில் பேனாவேந்திய பெரும்
வீரன் !

தமிழுலகு நன்கறிந்த
தரமான எழுத்தாளன் , கவிஞன் !
விகடமாய்ப் பின்னூட்டம்
விடுப்பவன் !
நௌஷாத் தெனதன்பு
நட்புக்கு என்று முரியவனே


ஆர்எம்? நௌஷாத்? என்று வினவினால் ; அவர்தாம் எழுத்தாளர் தீரன்.R.M. நௌஷாத் எண்திக்கையும் தனதெழுத்தால் ஈர்த்தெடுத்துவெற்றி கொண்ட எனது எழுத்துலகத் தோழன் !


1

எழுகவி ஜலீல்

எழுகவி ஜெலில்


பன்முகப் பார்வை மிகுந்த ஜனரஞ்சக எழுத்தாளர். மாயங்களில்லாத மனசுக்காரர் நட்புக்கு உகந்தவர் நமது தீரன் அவர்கள். வாழ்த்துக்கள்.

அஷ்டா மக்கீன்

Ashta Mackeen

Mr.Theeran...not met yet.But he is a very good analysisr about literary and social.i have red his books,my husband knows him.. inshalla wl meet him.Duas.

மும்தாஸ் ஹபீல்

Mumthas Hafeel 

மறக்க முடியாத எழுத்துலகநண்பன்.

லத்தீபா காரியப்பர்

Latiffa Kariyapper 

மண்ணின் வாசனையோடு நகைச்சுவை கலந்த ஆக்கங்களை எழுதும் அற்புதமான எழுத்தாளர் வாழ்த்துகள்


உவைஸ் முஹம்மத்

உவைஸ் முஹம்மத்


தீரன் மிகவும் எளிமையாகவும் இனிமையாகவும் பேசக்கூடிய நல்ல மனிதர் மண்ணின் வாசனையோடு நகைச்சுவை கலந்த எழுத்துக்கள் எத்தனை முறை வாசித்தாலும் புதிதாக வாசிப்பது போல் ஒர் அற்புதமான உணர்வை ஏர்படுத்தக்குடிய ஒரு எழுத்தாளர்

எம் எச் எ கரீம்

Mha. Kareem

நல்ல எழுத்தாளர்
நல்ல ஆய்வாளர்
நல்ல விமர்சகர்
நல்ல வாசகர்
இவைகளை விடவும்

நல்ல மனிதர்

மஹதி ஹசன் இப்ராஹீம்


Mahdy Hassan Ibrahim

அற்புதமான எழுத்தாளர்! நகைச்சுவை உணர்வு மிக்கவர்!இவரை நேரில் சந்திக்காதபோதும் நண்பராய் அடைந்தது என் பாக்கியம்!