தீராவெளி

Tuesday, July 28, 2015

சுஜாதா நினைவுப் புனைவு 2009



எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளையும் ஆழி பப்ளிஷர்ஸும் இணைந்து நடத்தும்
அமரர் சுஜாதா நினைவுப்புனைவு 2009
அறிவியல் புனைகதைப் போட்டி

பரிசளிப்பு மற்றும் நூல் வெளியீட்டு விழா


இடம்: ஆஷா நிவாஸ், 9, ரட்லண்ட் கேட் 5 ஆவது தெரு
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து காதர் நவாஸ்கான் சாலை முடிவுக்கு சென்று முதலில் வலதுபக்கம் திரும்பி வலதுத் திரும்புக.
நுங்கம்பாக்கம், சென்னை 6

நாள்/நேரம்: காலை 10 மணி, மார்ச் 7, 2009 சனிக்கிழமை

வரவேற்புரை
திரு செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி பப்ளிஷர்ஸ்

அறிமுகவுரை
திரு. சந்திரன், எழுத்தாளர்/ஊடகவியலாளர்
கலைஞர் தொலைக்காட்சி

சிறப்புரை
பரிசுகள் வழங்கி, நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்


மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, தமிழக அரசு

வாழ்த்துரைகள்
திரு. கிரேஸி மோகன், இயக்குநர்/நடிகர்
திரு. வஸந்த், இயக்குநர்
திரு. ராஜீவ் மேனன், இயக்குநர்/ஒளிப்பதிவாளர்
திரு. இரா. முருகன், எழுத்தாளர்

ஏற்புரை
திருமதி. மாலதி ராகவன், எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை

நன்றியுரை
திரு. அய்யப்ப மாதவன், பதிப்பாசிரியர், ஆழி பப்ளிஷர்ஸ்

நன்றி, அனைவரும் வருக!

போட்டி முடிவுகள்

சென்னை, பிப்ரவரி 26, 2009
கடந்த ஆண்டு பி்ப்ரவரி 27 ஆம் தேதி மறைந்த, தமிழ் மக்கள் நன்கறிந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவாக, எழுத்தாளர் சுஜாதாவின் குடும்பத்தினரும் ஆழி பப்ளிஷர்ஸ் நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அமரர் சுஜாதா நினைவுப் புனைவு 2009 என்ற பெயரில் அறிவியல் புனைகதைப் போட்டியொன்றை நடத்தியது.
உலகம் முழுவதிலுமிருந்து, பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் பலர் இதில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பலர் புதியவர்கள்.
அறிவியல் புனைகதை எழுத்தாளர் திரு இரா. முருகன், ஊடகவியலாளர் திரு. சந்திரன், எழுத்தாளர் திரு. அய்யப்ப மாதவன், எழுத்தாளர் திரு. திவாகர் ஆகியோர் போட்டியில் கலந்துகொண்ட சுமார் 200 கதைகளை அலசி, இறுதி முடிவாக பின்வரும் கதைகளுக்கு பரிசுகளை அளிப்பதென்று முடிவுசெய்திருக்கிறார்கள்:

முதல் பரிசு (ரூ.20,000)
திரு. தமிழ்மகன், தமிழ்நாடு

இரண்டாம் பரிசு (ரூ. 10,000)
திரு. ;செய்யாறு தி. தா. நாராயணன்,தமிழ்நாடு

சிறப்பு ஆறுதல் பரிசுகள் (ரூ.5000 வீதம்)

இந்தியா
திரு. நளினி சாஸ்திரி, தமிழ்நாடு

இலங்கை
திரு. ஆர். எம். நௌஸாத், இலங்கை

வட அமெரிக்கா
திரு. வ. ந. கிரிதரன், கனடா

ஆசியா-பசிபிக்
திரு. கே. பாலமுருகன், மலேசியா

ஐரோப்பா மற்றும் பிற உலக நாடுகளுக்கான பிரிவில் போதுமான கதைகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவற்றை அடுத்த ஆண்டு போட்டியுடன் இணைத்துக்கொள்வது என்று முடிவுசெய்யப்பட்டிருக்கிறது

00
சுஜாதா நினைவுப் புனைவு 2009 எனது பார்வையில்

தேனம்மை லெக்ஷ்மணன்


அறிவியல் புனைகதைகள் என்றாலே மிக ஆழமாக நம்முள் பதிந்து போயிருக்கும் பெயர் சுஜாதா. அவரின் எழுத்தை மீறி நம்மால் எதையும் ரசிக்க முடியுமா என்ற சந்தேகத்தோடே இந்தப் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.

உண்மையிலேயே மிக அருமையான கதைகளைப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்கி இருக்கிறது ஆழி பதிப்பகம். இதன் தொகுப்பாசிரியர் சந்திரன் இ இரா. முருகன் அவர்களின் துணையோடு தேர்வு செய்திருக்கிறார்.

பல்பரிமாணங்களிலும் அறிவியல் புனைகதைகளை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்ல தமிழ் மகன் தி.தா. நாராயணன் நளினி சாஸ்த்ரிகள் ஆர். எம். நௌஸாத் கே.பாலமுருகன்இ வ.ந. கிரிதரன் முயன்றிருக்கிறார்கள்.

கி.பி.2700 இல் முப்பரிமாண உருவத்திலுள்ள ஒருவனைஇ நாற்பரிமாணங்களைக் கொண்ட வெளிநேரப் பிரபஞ்சத்தில் கொண்டு சென்று 180 பாகை உருவ மாற்றத்தைக் கொண்டு வந்து அவனை மரண தண்டனையிலிருந்து மேல் முறையீடு செய்யச் சொல்லிச் செல்கிறது ஒரு அண்டவெளி உயிரினம். இது “ நான் அவனில்லை “ என்ற கிரிதரன் ( கனடா) அவர்களின் கதை.. கொஞ்சம் விலாவரியாக இருந்தாலும் வித்யாசமாக இருந்தது.

மனிதனுக்கு எல்லாமே இரண்டா தெரியலாம். ஆனா இரண்டாகி தான் அடுத்த பத்து வினாடிகளுக்குப் பின் செய்யப் போகும் செயல்கள் எல்லாம் இரண்டு இரண்டு பிம்பங்களாகத் தெரிந்தால் என்ன ஆகும். இது நியூட்டனின் முதல் விதியோடு சம்பந்தப்படுத்தி இருக்கு இந்தக் கதையில். திடீர்னு நம்ம ரூம்ல நாமே அணுக்களின் பிளவில் இரண்டாகி தள்ளி நின்னு பார்க்கிறார்போன்ற உணர்வை ஏற்படுத்திய கதை. கே. பாலமுருகனின் ( மலேசியா) மனித நகர்வும் இரண்டாவது பிளவும் கொஞ்சம் அச்சப்பட வைத்த கதை.

சுஜாதா நினைவுப் புனைகதை என்றால் காதல் கலக்காமல் இருக்குமா என்ன. ”சாகும் தலம்” அந்த வகை. புராணப் பாத்திரப் பேர் கொண்ட அறிவியல் கதை. மானுட உணர்வு இணைப்புக் கொடுக்கப்பட்ட சகுந்தலை துஷ்யந்தன் ரோபோக்கள் காதல் வயப்பட்டு மேலும் மனிதாபிமானமுற்று பூச்சிய வெளியில் பூமியின் 317 பகுதியைக் காப்பாற்றத் தற்கொலை செய்து கொள்ளும் இடம் நெகிழ வைத்தது. ஆர். எம். நௌஸாத் ( இலங்கை) அதிகபட்சமான சுஜாதா கதையோடு ஒத்துப் போவது போன்ற புனைவை எழுதி இருந்தார்.

மிக கஷ்டமான பணி இந்த மாதிரி சிறப்பான கதைகளைத் தேர்வு செய்வதுதான். சுஜாதா என்னும் நாற்றங்காலில் விளைந்தவர்கள் என்ற அறிமுகத்தோடு ஆழி பதிப்பகம் இதைத் தொகுத்து வெளியிட்டிருப்பது சிறப்பு.

நூல் :- சுஜாதா நினைவுப் புனைவு 2009 அறிவியல் புனைகதைத் தொகுப்பு.
தொகுப்பாசிரியர் :- சந்திரன்.
பதிப்பகம் :- ஆழி பப்ளிஷர்ஸ்.

நவாஸ் சௌபி - எதுவரை


நவாஸ் சௌபி
சாய்ந்தமருது  'எதுவரை'யில்


‘ ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ஆளுமையோடு நோக்குவது போல்

தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதைசெல்லும் நுட்ப ஆளுமையாகவும் மதிப்பிடுகிறேன்.

இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.