தீராவெளி

Monday, October 31, 2022

அஸ் செய்த் இர்பான் மௌலானா



 

தாசிம் அஹமட்


 

அபூ நஜாத்(எம். பெளஸ்தீன்) சம்மாந்துறை



ஆர்.எம். நௌஸாத்-தீரன் 
மீதான எனது பார்வை:

அபூ நஜாத்(எம். பெளஸ்தீன்)
சம்மாந்துறை



தீரனின் கவிதைகள் திகட்டாத ஞானக் கருவூலம். 

ஞானச் சுவை என்பது நானிலம் சுற்றி, ஏழுவானம் கடந்து எம்மை ஏகனிடம் சமர்ப்பிக்கும் கலை.

இந்தக் கலையினை சின்னச்சின்ன வார்த்தைகளுக்குள் சிறப்பாக அடக்கி பென்னம்பெரிய ஞானக் கடலை தன் சிறு கவிதைகளுக்குள் தரும் பாணி தீரனின் பெரும் பணி. 

வெளிப்படையான நகைச் சுவைக்குள் பொருட்சுவை நிறைத்து அதனையும் பொரித்து சுவைகூட்டி எமக்கு உண்ணக் கொடுப்பவர் இந்த தீரன். 

ஆழிக்கடலைச் சுத்திகரித்து பானையில் சேர்த்து அதற்குப் பல்சுவையும், வாசனைகளும் சேர்த்து அதுவும் போதாதென்று வானவில்லின் வர்ணங்கள் சேர்த்து உயர் குடிபானமாக்கி போத்தலில் அடைத்து எமக்குப் பருகத் தருவார் இந்த சூரன். 

நாவுக்கு ருசி, மூக்கிற்கு வாசனை, கண்ணிற்கு காட்சி,  இவை அனைத்தும் எம் ஆன்மாவிற்கு விருந்து தருவதற்கான தீரனின் யுக்திகள். 

சமகால இலக்கிய ஆளுமைகளுக்குள் தீரன் ஒரு கவிஞன், சிறுகதையாளன், நாவலாசிரியர், பத்திரிகையாளன், கதை சொல்லி, விகடகவி, கட்டுரையாளன், ரசிகன்.... என்ற பல்பரிமாண-  பன்னூலாசிரியர். 

 கொக்கரிக்கும் கோழிகளிடையே ஆரவாரமற்ற ஆயிரம் முட்டை ஆமை. 

Friday, October 7, 2022

சேனன்


T.U. சேனன் உடனான கலந்துரையாடல்...

அக்கரைப்பற்று..செப்டம்பர் 2022




 

Thursday, October 6, 2022

ரியாஸ் குரானா

Riyas kurana

 

அக்கரைப்பற்று புத்தக காட்சியில் தோழர் ஆர்.எம்.நௌசாத் (தீரன்) அவர்களுடைய “வக்காத்துக் குளம்” மற்றும் “ முத்திரையிடப்பட்ட மது” போன்ற நுால்கள் கிடைக்கும். 

முத்திரையை உடைத்து மது அருந்துவோம். 

“ஊக்க மது கைவிடேல்”