தீராவெளி

Tuesday, May 25, 2021

ஏ.பீர்முகம்மது சேர்



நாவல் சிறப்பிதழ் ஜீவநதியின் 150 வது வெளியீடு


ஏ.பீர்முகம்மது சேர்

நாவல் விமர்சனச் சிறப்பிதழாகக் கோலம் புனைந்து நமது கரம் கிட்டியுள்ளது.

சஞ்சிகை ஆசிரியர் பரணீதரனின் ஆறு மாத காலப் போராட்ட உழைப்பின் விளைச்சல் இது.
சி.ரமேஸ் அவர்கள் அறுபத்தைந்து பக்கங்களில் நமது நாட்டுத் தமிழ் நாவல்கள் பற்றிய
அறிமுகக் குறிப்புகளை எழுதியுள்ளார்.

நாவல் வரலாற்றை வாசிக்க விரும்புவோருக்கு நல்லதொரு வாசல் இக்கட்டுரை .
நானூறுக்கு மேற்பட்ட நாவல்கள் பற்றி நூற்றி ஐந்து படைப்பாளிகள் பேசுகின்றனர்.
இருபத்தோராம் நூற்றாண்டின்முன்னிரு தசாப்த கால நாவல்களின்
படப்பிடிப்பு .

இறக்குமதி செய்யப்பட்ட இங்கிலீசுக் கோட்பாட்டினை 'ஈமான்' கொண்டுதான் பேசுவது என்னவென்று தனக்கே விளங்காமல் புதினங்களை அந்தக் கோட்பாட்டின் ஊடாக மட்டுமே பேசிய திறன் நோக்காளர்கள் தற்போது 'வீட்டுக்குக்குத் தூரமாகி' விட்டார்கள் என்பதை இவ்விதழில் வெளிவந்துள்ள பலவகைத்தான திறன் நோக்குக் கட்டுரைகளும் ஏனைய கட்டுரைகளும் எண்பிக்கின்றன

தீரன் ஆர் எம்.நெளசாத் கிராமங்களைத் தேடும் கதை சொல்லி என்ற எனது ஆக்கமும் இடம்பெற்றுள்ளது

* மாப்பிள்ளை லெப்பை ஆலிம் வெளியிட்ட அறபுத் தமிழ் நாவல்

* அறபுத் தமிழ் ஆக்கங்கள் தமிழ் ஆக்கங்களே என்ற பேரா. கா.சிவத்தம்பியின் கருத்து

* அறிஞர் சித்திலெப்பையின் பின் (அசன்பே சரித்திரம்) இரண்டாவது முஸ்லிம் நாவலாசிரியர் யார்?

* சித்திலெப்பையில் தொடங்கும் முஸ்லிம் நாவலாசிரியர் வரிசையில் தீரனின் இடம் எத்தனையாவது?

* தீரன் எழுதிய நட்டுமை, கொல்வதெழுதுதல் 90 ஆகிய இரண்டு நாவல்களினதும் காலவெளி, களவெளி. பாத்திரவெளி, உத்திமுறை,புனைவு மொழி , கலாசார பண்பாட்டுக் கூறுகள்
போன்ற விடயங்களைப் பற்றியதான வஸ்துகளோடு எனது வாக்குமூலம் கட்டுரையாக இம்மலரில் கனிகின்றது.

வணிக நோக்கத்திலும் வரலாற்றை ஆவணமாக்கும் தேவையே மேன்மையானது என்பதை ஒலிபரப்புச் செய்கிறது இந்தச் சிறப்பிதழ் .எனது கட்டுரையைப் பிரசுரித்தமைக்காக நன்றியும்
சிறப்பான முயற்சி என்ற வகையில் பாராட்டும்பரணிதரனுக்கு .

No comments:

Post a Comment