தீரன் ஆர். எம். நௌஷாத் மருதூரின் இலக்கிய முத்துகளில் ஒன்று! ஏன்?
01) தமிழ்நாடு ”காலச்சுவர்“ இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவளவிழா இலக்கியப்போட்டியில் இவரது “நட்டுமை“ நாவல் முதற் பரிசு பெற்றது.
02) இவரது “வெள்ளிவிரல்“ சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டது.
03) ”கொல்வதெழுதுதல் 90“ எனும் முஸ்லிம் அரசியலைப் பேசும் இவரது புதுமையான நாவல் காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு அத தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்று உலக நாடுகளின் நூலுகங்களில் இடம்பெற்றது.
04) 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ். பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் “வக்காத்துக்குளம்“ என்ற நாவல் பிரதி மூன்றாம் இடத்தைப் பெற்றது.
05) “தினக்குரல்“ நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையுரு் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ”காகித உறவுகள்“ என்ற வானொலி நாடகம் 3ம் பரிசு பெற்றது.
06) ”நல்லதொரு துரோகம்“ என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்து கௌரவித்தது.
07) இவரது “சாகும்-தலம்“ என்ற சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
08) “ஞானம்“ சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது “தாய் மொழி“ சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
இவரது எட்டாவது படைப்பான “தீரதம்“ இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
இப்போது சொல்லுங்கள்!
இவர் மருதூரின் இலக்கிய முத்துத்தானே???
No comments:
Post a Comment