முத்தமிழ் கலசம் - நேர்காணல்.
எஸ்.யூ. கமர்ஜான் பீவி
தீரன்.ஆர்.எம். நௌஸாத்
சுருக்க விபரங்கள்
குடும்ப விபரம்
எழுதும் பெயர்- ஆர்.எம். நௌஸாத்
புனை பெயர்- தீரன்.
00
பிறப்பு-- 05.09.1959
பெற்றோர்- ராசிக் காரியப்பர் & ஹாஜரா
மனைவி- றிபாயா
பிள்ளைகள்- ரப்சன்ஜானி (M) –பிரின்ஸ் (M) -தீப்ஸிகா (F)
00
கல்வி
ஆரம்பக் கல்வி- கமு/ அல்.கமறூன் வித்தியாலயம், சாய்ந்தமருது. உயர்கல்வி-கல்முனை சாஹிராக் கல்லூரி./ பேராதனை பல்கலைக்கழகம் – வெளிவாரி-G.A.Q. முதல் வருடத் தேர்ச்சி.
00
தொழில்
அஞ்சல் அதிபர். – நியமனம். 16.04.1984.- சேவை புரிந்த நிலையங்கள்.- மட்டக்களப்பு- காத்தான்குடி- கல்முனை- அம்பாறை- ஒலுவில்- அக்கரைப்பற்று- அட்டாளைச்சேனை- சாய்ந்தமருது.
இலக்கியப் பிரவேசம்
(படிகள்-சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலிலிருந்து.....)
‘’…………. என் இலக்கியப் பின்புலம் உருவான சூழலைக் கூறப்போனால், ஒரு குட்டி நூலகமாகவே இருந்த என் தாய்வீடுதான் என் எழுத்துத் துறைக்கு வித்திட்டதாக கூறமுடியும்..தந்தை தினகரன் நாளிதழுக்கு தவறாது சந்தா கட்டிவிடுவார். பேப்பர் வீட்டுக்கே வந்துவிடும். எங்கள் வீட்டில் அனைவருமே வாசிப்பார்கள்.. இன்னது என்றில்லை.. எதையும் எப்போதும் யாராவது வாசித்துக் கொண்டேயிருப்பார்கள்..
மேலும், பத்திரிகைகள் தினசரிகள் சஞ்சிகைகள் நூல்கள்..என்று குவிந்திருந்த என் தாய்மாமனின் அறையில், நான் திருட்டுத்தனமாக நுழைந்து, கையில் அகப்பட்டவற்றை திருடிக்கொண்டு வந்து, நெல் மூட்டைகளுக்குள் ஒழிந்திருந்து ஒரே மூச்சில் வாசித்து விடுவேன்.. நான் கூட வீட்டில், ‘’மின்னல்’’ என்ற ஒரு கையெழுத்துப் பத்திரிகை நடத்திக் கொண்டும் பாராட்டும்,,ஏச்சும் வாங்கிக் கொண்டுமிருந்தேன்.. இப்படித்தான் ஒரு சூழல் அமைந்தது. அதிலிருந்துதான் எனக்குள் தமிழிலக்கியம் மீதான ஆர்வம் உருவானதாக எண்ணுகிறேன்..
பின்னர், கல்முனை ஸாஹிறாவில், படித்துக்கொண்டிருந்த போது, 1975ல் பாடசாலை வெளியீடான அம்பு சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் ஸாஹிரா இலக்கியப் பண்ணையில் இணைந்தேன். அப்புறம், பரவலாக, சில பத்திரிகை, சஞ்சிகைகளில் துணுக்குகள், கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று பக்க வேர்கள் விட்டு நிலை கொண்டேன்..
முதல் சிறுகதை, தீண்டத்தகாத கரங்கள்..இது, 1982 இல், மித்திரன் வாரமலர் நடத்திய பாரதி நினைவுச் சிறுகதைப் போட்டியில், பிரசுரத்துக்கு தகுதி பெற்ற கதையாக தெரிவு செய்யப்பட்டு பிரசுரமானது……….’’
00
இயங்கிய துறைகள்
00
கவிதை-சிறுகதை-நாவல்- பத்தி எழுத்து- நாடகம்- சஞ்சிகை வெளியீடு-
வெளியீடுகள்
கவிதை துறை
1- தூது
கையடக்கக் கவிதைச் சிற்றேடு. 16 இதழ்கள்.--- கல்முனை புகவம் வெளியீடு- 1983
2- அபாயா என் கறுப்பு வானம்
கவிதைகள் மின்னூல் .—தமிழ்நாடு பிரதிலிபி வெளியீடு – 2015
3- ஆழித்தாயே அழித்தாயே –
சுனாமி கடற்கோள் காவியம்--- அபாபீல்கள் வெளியீடு--2017
4- குறு நெல்
குறும்பாக்கள்--- பாவலர் பண்ணை வெளியீடு -2017
5- முத்திரையிடப்பட்ட மது
சாய்ந்தமருது அபாபீல்கள் வெளியீடு–2021
சிறுகதை தொகுப்புக்கள்
1. வல்லமை தாராயோ
சிறுகதை தொகுதி--- கல்முனை புகவம் வெளியீடு--2000
2. வெள்ளிவிரல்
சிறுகதை தொகுதி—தமிழ்நாடு காலச்சுவடு வெளியீடு-- 2011
2011க்கான அரச தேசிய சாகித்திய விருதும், கிழக்குமாகாண சாகித்திய விருதும் பெற்றது.
3. தீரதம்
சிறுகதை தொகுதி— ஜீவநதி வெளியீடு--- 2017
நாவல்கள்
1. நட்டுமை
கிழக்கிலங்கை விவசாயக் குடிமக்களின் வாழ்வியலில் ஒரு பகுதியை சித்தரித்துக் காட்டும் ஒரு சமூகவியல் புனைவு இது. நட்டுமை என்றால் வயல் நிலத்தின் ஒரு நிலத்தில் இருந்து பக்கத்து நிலத்துக்கு வரம்புகள் ஊடாக யாருக்கும் தெரியாமல் நீர் கசிந்து வடிந்து விடுவதைக் குறிக்கும். இந்த நிகழ்வை நட்டுமை எனக் கூறுவார். மேலும், சமுகத்தில் நிகழும் களவொழுக்கத்தைக் குறிக்கும் சிலேடைச் சொல்லாகவும் இதனைப் பாவிப்பதுண்டு. இதனை மையச் சரட்டாகக் கொண்டே இந்நாவலை உருவாக்கினேன். இது தமிழ்நாடு காலச்சுவடு சஞ்சிகை, நடத்திய சு.ரா. 75 நாவல் போட்டியில் முதற்
பரிசு பெற்று காலச்சுவடு வெளியீடாக -2009இல் வெளியானது.
2. கொல்வதெழுதுதல் 90
1 9 9 0 காலப் பகுதியில் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மூர்க்கமுற்றது. இந்நேரம் தமிழ் இயக்கங்கள், அரச படைகள், தமிழ் ஆயுதக் குழுக்கள், முஸ்லிம் ஊர்காவல் படைகள், சிங்கள உதிரி ஆயுதக் குழுக்கள் போன்ற ஆயுதம் தாங்கியவர்களால் அப்பாவிப் பொதுமக்கள் மீதான வன்முறைகள் அத்துமீறி நடந்து கொண்டிருந்தன... இச்சமயம் முஸ்லிம் மக்கள் மத்தியில் முஸ்லிம் கொங்க்ராஸ் என்ற ஒரு அரசியல் இயக்கம் வீறு கொண்டு எழுந்து வந்தது. அந்த அரசியல் இயக்கத்தில் ஒரு அடிமட்டத் தொண்டனாக இருந்த ஒரு அப்பாவிக் கிராமத்து இளைஞன் பின்னர் ஒரு பாராளுமன்ற இளைஞனாக ஆன சித்திரமும், அவனைச் சுற்றி நிகழ்ந்த காதல், கடத்தல், வறுமை, போன்ற அவலங்களை படம்பிடித்துக் காட்டும் ஒரு புனைவு இது. இந்நாவல், காலச்சுவடு வெளியீடாக - 2013இல் வெளியானது. 2013க்கான அரசசாகித்திய விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. அதே ஆண்டில், தமிழ்நாடு அரசின் 1000 பிரதிகளுக்கான நூலகஆணை போட்டியில் தெரிவாகி ஆயிரம் பிரதிகள் அச்சிடப் பெற்றது.
3. வக்காத்துக்குளம்
தன பால்யகாலக் கிராமத்தை விட்டும் வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த ஒரு மனிதன் தான் பிறந்த அக்கிராமத்துக்கு சுமார் முப்பது வருடங்களின் பின்னர் திருப்பி வந்த போது, அங்கே கிராமத்தைக் காணவில்லை. மாறாக ஒரு நவீன நகரம் காட்சியளித்தது. தான் வாழ்ந்து, விளையாடி, இரசித்த அந்தப் புழுதி மண்ணின் ஏக்கத்தில் ஆழ்ந்த அவனது எண்ண ஓட்டத்தை இக்குருநாவல் வழியாக பதிவு செய்தேன். இது, அக்கினிக்குஞ்சு சர்வதேச இணையம் நடத்திய அமரர் எஸ் .பொ . ஞாபகார்த்த குறு நாவல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது.
ஏறாவூர் கசல் பதிப்பக வெளியீடாக --2021 இல் வெளியானது.
4. வானவில்லே ஒரு கவிதை கேளு
கண்ணிவெடிகளின் காலம் என வர்ணிக்கப்படும் 1 9 ௮ 5 களில், தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சிநேகிதிகள் தொழில் வாய்ப்புக்காக சென்று வரும் வழியில் கண்ணிவெடிக்கு இரையான ஒரு சம்பவத்ஹை கொஞ்சம் வித்தியாசமாக கவிதை மொழிநடையில் எழுதினேன்.. இது, மட்டக்களப்பிலிருந்து வெளியான ஈழநாதம் வார இதழில் தொடராக வெளிவந்தது. சாய்ந்தமருது அபாபீல்கள் வெளியீடாக – 2005 இல் வெளியானது.
5- ஆமீன்
இதுவும் ஒரு நெடுங்கதை..... 1 9 9 3 இல் சாய்ந்தமருது பொதுச் சந்தையில் வெடித்து பல அப்பாவி உயிர்களைக் காவு கொண்ட ஒரு கோரச் சம்பவத்தை தனி உரையாடல் மொழியில் எழுதினேன். சாய்ந்தமருது அபாபீல்கள் வெளியீடாக . .—2023 இல் வெளியானது.
பத்தித் தொடர்கள்
1. ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..-
பாவலர் பஸில் காரியப்பரின் படைப்புலகில் சஞ்சரித்தல்
விடிவெள்ளி வார இதழில் தொடராக வெளியானது-- 2009
2. விழித்திரையில் விரியும் வெண்திரை
ஆங்கில திரைப்படங்கள் அறிமுகம்
நல்லுறவு மாசிகையில் தொடராக வெளி வந்தது—2009
வானொலி நாடகங்கள்.
காகித உறவுகள்.-- 1987-1989
இறுவட்டு --- இலங்கை வானொலி முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான 12 வானொலி நாடகங்களின் தொகுப்பு.
பிரான்ஸ் தமிழ் ஒலிபரப்பு நிறுவனமும், தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய அகில உலக வானொலி நாடகப் போட்டியில் 3ஆவது பரிசுபெற்ற காகித உறவுகள் என்னும் நாடகமும் முஸ்லீம் சேவையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட தடவைகள் ஒலிபரப்பப்படட ஒரு கிராமத்தின் கவிதை என்ற நாடகமும் உள்ளடங்கியது.
எழுதி ஒலிபரப்பான வானொலி நாடகங்கள்.
25.05.1988. நினைப்பது ஒன்று!
23.06.1988. வாக்கு.
30.08.1988. ஒரு கிராமத்தின் கவிதை.
(இது 20 க்கும் மேற்பட்ட தடவைகள் மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.)
….01.1989. இங்கும் ஒரு தாஜ்மஹால்.
13.08.1989. காகித உறவுகள்.
1998ம் ஆண்டில் பிரான்ஸ் தமிழ்ஒலி நிறுவனம் இலங்கை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்தமாக நடத்திய வானொலி நாடகப்போட்டியில் மூன்றாம் பரிசாக ரூபா. 25000 மற்றும் சான்றிpதழ் பெற்றது.
08.05.1990. சீட்டுக்காசு.
23.08.1990. துயரங்களும் ஓய்வதில்லை.
23.10.1990. களவெட்டி.
1991ல் நிகழ்ந்த கல்முனைத் தமிழ்மொழித்திறன் விழாவில் இந்நாடகத்தைப் பின்னணி ஒலிபரப்பாகக் கொண்டு மேடையேற்றப்பட்டு கல்முனை மஹ்முத்மகளிர் கல்லூரி மாணவிகளால் நடிக்கப்பட்டு முதற்பரிசு பெற்றது.
16.02.1993. உறுதி.
04.10.1999 ஆரத்திக் கல்யாணம்.
….07.1999. ஓட்டம்.
சஞ்சிகை வெளியீடுகள்.
தூது.
கவிதைச் சிற்றிதழ்--- 1983 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் 16 இதழ்கள் வெளியிடப்பட்டது. (பிரதம ஆசிரியர்)
பாதா
றோணியோ சஞ்சிகை. 1985- (ஆசிரியர்)
இன்னாலில்லாஹி..
தமிழ்/முஸ்லிம் இனக்கலவரத்தில் கொல்லப்பட்டோருக்கான அஞ்சலிக் கவிதைகளின் தொகுப்பு. றோணியோ அச்சு—1989—(தொகுப்பாசிரியர்)
வாஷிங்டன் கனவு
பாலஸ்தீன்-இஸ்ரேல் சமாதான ஒப்பந்தம் மீதான கண்டனக் கவிதைகளின் தொகுப்பு- 1993—(தொகுப்பாசிரியர்)
புள்ளி
ஈழத்தின் முதல் ஹைக்கூ கவிதைச் சஞ்சிகை. –1993-- (நிர்வாக ஆசிரியர்)
இரண்டாவது பக்கம்
நவீன கவிதைகளின் சஞ்சிகை- 2002 – உதவி ஆசிரியர்.
00
விருதுகள்
2004 ஜூன் 06. சிறந்த கவிஞருக்கான விருது.
தினச்சுடர் பத்திரிகையின் மாபெரும் அறிமுக விழாவும் தேசிய விருது வழங்கும் வைபவமும். கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் நிகழ்ந்த போது..
2007 - சிறந்த எழுத்தாளருக்கான விருது.
சாய்ந்தமருது ~பிளைங்ஹோர்ஸ்| விளையாட்டுக்கழகம் அதன் வெள்ளிவிழாவை ஒட்டி 2007.06.30.ல் நடத்திய 25வது ஆண்டு விழா.
2011ன் அரச தேசிய சாஹித்திய விருது
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 10.09.2012 வியங்கொட தேசிய கல்வியியல் கல்லூரி
2012 கிழக்கு மாகாண சாகித்திய விருது.
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி- 2012.10.18 திருகோணமலை விவேகானந்தா வித்தியாலயம்.