தீரன்
நூரெனு மொளியை நாடி
நூறுபா யாக்கு மெங்கள்
தீரனார்க் கெம்து ஆக்கள்!
ஜும் ஆமுபா றக்குஞ்
சேர்த்து..!
காரணக் கலிமாக் கல்பால்
ஹக்கெனுஞ் சத்தி யத்தைப்
பூரண மாகத் தேடும்
புலவநும் புலமை வாழ்க!
தோரண வாழ்வுத் தோப்புத்
தொடர்வாசங் கரையும் மாயைக்
காரண மறிந்த ஞானக்
கவிதீரன் மேன்மை வாழ்க!
o
கிண்ணியா அமீர் அலி