நு ஸ்ரீ ஓம்!
நு ஸ்ரீ ஓம்!
கிருதகயுகம். எஐஉக வருடம்.! ப10மியின் ஓர் இருளடைந்த வனப் பகுதி. ஸ{வாஹிமாதா பத்மாசனமிட்டு உட்கார்ந்திருந்தாள். ஆனால்ää கரங்களிரண்டும்ää தலைக்கு மேலே உயர்த்தி வணக்கமிட்டிருந்தன. ஸ{வாஹிமாதாவைச் சுற்றிலும்ää கறையான் புற்றுக்கள். தலைமுழுக்க பட்சிகளின் கூடுகள். இரைச்சல்கள். ஸ{வாஹிமாதாவின் கால்களை புற்று முழுவதுமாக மூடியிருந்தது. இப்படியே ஸ{வாஹிமாதா ஏழு பஞ்சாங்க காலமாக இருந்து வருகிறாள். உடம்பில் ஒரு சிறு அசைவுமில்லை. ப10மியிலேயே முளைத்தெழுந்தது போல் அமர்ந்திருந்தாள். கண்கள் நிரந்தரமாக மூடியிருந்தன. தூரத்திலுன்ன ஆசிரம முனிபுங்குவர்களைத் தவிர எவருக்கும் மாதாவின் நிஷ்டை தெரியாது.
அந்த ஆசிரமத்திலிருந்துää குரு உபமந்யு வெளியே வந்தார். முனிபுங்குவர் எழுவர் அவரின் பின் வந்தனர். குருஉபமந்யு நேராக ஸ{வாஹிமாதாவின் இருப்புச் சமாதி நிலையருகே வந்துää சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். மாதாவின் உதடுகள் மட்டும் மெல்லியதாய் அசைவது இலேசாகத் தெரிந்தது. ஒலியில்லை. நிசப்த அசைவு. எனினும் அது ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியின் அலை வடிவம். அந்த அலை வரிசைகள் மாதாவுக்குள் பிரமாண்டமாய் ஒலிக்கும். இது குருவுக்குப் புரியும். அந்த முனிபுங்குவர் எழுவரும் முழந்தாளிட்டு வணங்கினர். குருவும் முழந்தாளிட்டார்.
- ஹோய்..! மஹா வலிமையே..! சக்தியைத் தேடிய பிராகுவியர்ääதோடர்களிடம் நுமது விலமையைக் காட்டி ஆட்கொண்டமை போல்ää ஸ{வாஹிமாதாவுக்கும் நுமது விஸ்வரூபம் காட்டியருள்வாய்.. ஓம்..!
ஆனால்ää மாhவுக்கு இது எதுவும் தெரியாது. குருஉபமந்யு மட்டும அறிவார். அவரது இடையறாப் பயிற்சியால்தான் மாதா இநத்தவத்தில் ஆழ்ந்தாள். அத்துவிதமுத்தி நிலையை நோக்கி மாதா விரைவாக முன்னேறிக் கொண்டிருநதாள். ஆனால்ää அதற்கொரு முடிவு கிடக்குமா..? காலவரையi இருக்காது. காலத்தையும் கடந்ததே சக்தி. ஆத்துவிதமுத்தியை அடையும் நீண்ட பயணத்தில்ää பல சிஷ்யர்களை குரு இழந்திருந்தார். எவரும் இரண்டு பஞ்சாங்க காலத்துக்குத் தாக்குப் பிடிக்க்க முடியவில்லை. ஸ{வாஹிமாதா ஏழாவது நபர். பலிபீடத்தில் ஒரு தாய் ஆடு. இதி;ல் குரு வெற்றி பெற்றுவிட்டால்ää சக்தியின் வடிவ இலக்கணம் தெரிந்து விடும். மனவலிமைக்குள் அது அடங்கிவிடும். அது தெரிந்த பின்..? ‘நானும் ஒரு கடவுள்.” குரு உபமந்யுவின் தாடியை கண்ணீர் நனைத்தது. முழந்தாளிட்டிருந்தவர் மெதுவாக உச்சரிக்க ஆரம்பித்தார்.
- சக்தி ஓ..ம்..!
()
திரிலேனிய யுகம்.! கி.பி. 3006 ம் ஆண்டு.! எல்லையற்ற விண்வெளிப் பரப்பில்ää ஒரு மூலையில்ää ஒரு இடம். இதனை‘டெல்டாவெளி’ என்பர். அந்தர நிலையில்ää ஒரு விண்வெளி ஆய்வு கூடம். அதனுள் லாவண்யா உட்கார்ந்திருந்தாள். கரங்களிரண்டும்ää தலைக்கு மேல் இருந்த ‘பேசிமிலி’யின் மீது‘சீஆர்எஸ்.’ கதிர்களைப் பிரயோகித்துக் கொண்டிருந்தன. லாவண்யாவைச் சுற்றிலும் ஏழு ‘ரோபோ’க்கள் உட்கார்ந்திருந்தன. தலைக்கவசத்தில்ää பிரபஞ்ச ‘எம்ஜீ’ இணைப்பு அண்டெனா..! பிறை வடிவத்தில் சூடியிருந்தாள். அதில்ää கிரகத் தளங்களின் வரிசைகள்.. இப்படியே லாவண்யா ஏழு விண்வருடங்களாக இருந்து வருகிறாள்.
லாவண்யாவைத் தவிரää அந்த ஆய்வு கூட உப கிரகத்துள்ääதலைமை விஞ்ஞானியான உபேந்திரர்.. இன்னும் சில பயிலுனர்கள்.ää எல்லோரும்ää பிரபஞ்சவெளியியலில் ‘P3’ பட்டம் பெற்றவர்கள். விஞ்ஞானி உபேந்திரர்ää ‘டெலிமிஸி’யில்ääலாவண்யாவை அடைந்தார். அவள் ஒரே சீராக ‘சீஆர்எஸ்’கதிர்களைப் பிரயோகிப்பதை அவதானித்தார். திருப்தியாக இருந்தது. கடந்த மிலேனிய யுகம் வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நுஸ்ரீ ஆஊ2 (சக்தி சமன் திணிவு தர காலல் வேக வர்க்கம்.) என்ற விதி பிரபஞ்ச சக்தியின் அளவீட்டுக்குப் பொருந்தாது எனக் கைவிடப்பட்டு விட்டது. பிரபஞ்ச சக்தியை அணுக்களால் கணக்கீடு செய்வது பற்றிய ஆராய்ச்சியில்தான் லாவண்யா வெகு தூரம் முன்னேறியிருந்தாள். ஏழு விண்வெளிவருட காலத் தவம் இது.
இதில்ää விஞ்ஞானி உபேந்திரர் வெற்றி பெற்று விட்டால்..? ‘நானும் ஒரு பிரபஞ்சத்தின் கடவுள்..!” உபேந்திரரின் தாடியைக் கண்ணீர் நனைத்தது. இந்த முயற்சியில் வெற்றி பெற்று விட்டால்ää அவர் கண்டுபிடிக்க முயற்சித்துள்ள இந்த பிரபஞ்ச வாய்ப்பாடே இனி பிரபஞ்சத்தை ஆளும். அண்டத்தின்ää பதிநான்கு கிரகங்கள் இவரின் நேரடி ஆளுகைக்குள் வரும். லாவண்யாவுக்கு இதொன்றும் தெரியாது. அவளது தவம் இவ்வாராய்ச்சியின் வெற்றி ஒன்றுதான் பிரபஞ்ச சக்தியை அளவீடு செய்யும் ஆழ்ந்த இணையத்தவத்தில்ää அவள் ஆழ்ந்திருந்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி உபேந்திரர் திடுக்கிட்டார். கொஞ்சம் குழப்பமானார். ஏதோ பிழையாகி விட்டதோ என நினைத்தார். ;பேஸிலிமிலி’யை உற்று நோக்கினார். பதற்றமாகி வியர்த்தார். லாவண்யாவின் தலைமீதிருந்த பிறைசூடி இணைப்பு பச்சையாக ஒளிர்ந்தது. அதே நொடியில் கிரகத் தொடர்பாடல் தளம் அறுந்தது. அப்படியானால்ää.? விஞ்ஞானி உபேந்திரருக்கு இனம் புரியாத பயம் அப்பிக் கொண்டது. சட்டென ஒலிவிரிகனை ஏவினார். லாவண்யாவுக்குள் அவற்றை வலியுறுத்திப் பதித்தார். வேகவேகமாக இயக்கினார். ஆயினும் கூடää கீழேயிருந்துää சில ரோபோக்கள் புகைந்து கொண்டிருப்பது தெரிந்தது. என்ன நடந்திருக்கும் என உணரு முன்னரேää ஆய்வு கூடம் தனது கட்டுப்பாடுகளை ஒவ்வொன்றாக இழக்க ஆரம்பித்தது. அடுத்த நொடியில்..
()
அவாவும்ää புலணுணர்வும்ää மனவுணர்வும் ஏனைய உணர்வுகளும் கெட்டுää அடையும் நிர்வாணம் என்று சம்யுக்த நிகாயத்தில்ää கூறப்படுவதை மிலிந்த பங்கமோää விசுத்தி மார்க்கமோ பொய்யாக்கியதில்லை. அவ்வாறாயின்ääகேனோபநிடதத்தின் கூற்றும் பிழைத்து விடுமே..? குரு உபமந்யுவின் சிந்தனை நீண்டு கொண்டேயிருந்தது. அவரது முய்றசி மஹாசக்தியின் வலிமையை தனது மனவலிமையால் அளவிட்டு அடக்கியாள்வது என்பது. அவ்வாறு முயற்சி பலிதமாகும் போதுääகுருஉபமந்யு தானே ஒரு படைப்புலகம் ஸ்தாபித்து அதற்கு முழுமுதற் கடவுளாக இருக்க முடியும். ஸ{வாஹிமாதாவின் மூலமாக அடையும் இந்த மாதவத்தின் முடிவு..? கிடைக்குமா..?
குருஉபமந்யு சட்டென எழுந்தார். மாதாவை நோக்கி நடந்தார். ஸ{வாஹிமாதா அவ்வாறே சிலையாகியிருந்தாள். எதிரே பவ்வியமாக அமர்ந்தார். தொடர்ந்து அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தார்ää வெகு நேரமாக உடம்பில் ஒரு அசைவுமற்று அப்படியே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். படிப்படியாக குரு தனது உடலுணர்வை இழந்து கொண்டிருந்தார். எல்லா வலிமையைiயும் தனது மனதுக்குக் கொணர்ந்தார். உடன்ää சூட்சும நிலையிலானார். அச்சமயம்ää அவரது நெற்றிப் பொட்டிலிருந்து ஒரு ஊதா நிறக் கீற்று புறப்பட்டு ஸ{வாஹிமாதாவின் நெற்றிப் பொட்டை ஊடுருவியது. மாதாவின் மனத் தளத்தில்ää குருவின் உச்சாடனங்கள் பதிவாகிக் கொண்டிருந்தன.
- சக்தி..ஓம்..!’
கோடித்தடவைகள் உச்சரிக்கப்பட்டுää அலைவடிவமாக்கப்பட்ட மந்திரம். மாதாவுக்குள் தெளிவாகப் பதிவாயின. ஏழுகோடித் தடவைகள் உச்சாடனம் செய்யப்படல் வேண்டும். இது ஏழாவதும் இறுதியானதுமான உச்சாடனம். மிகத் தீவிரமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்த குருவுக்குள் அது நிகழ்ந்தது. சட்டென அவரது உடலுணர்வு நினைவில் வந்தது. ஊதாக் கீற்று உடன் மறைந்தது. இது பிழை. ஏதோ பிழையாகி விட்டது. எங்கோ பிழை.. ஆனால்ääஸ{வாஹிமாதாவுக்குள் குருவின் கட்டளை அவசரமாகத் தேவைப்பட்டது.. அவளது குண்டலினி சக்தி எழும்பத் தொடங்கிpருந்தது. அதே விநாடியில் தேவை.. உச்சாடனம்.. உச்சாடனம்.. உடனே தேவை.. இதோ சக்தியை என் மனவலிமை கொண்டு அடக்குகிறேன்.. இன்னும் ஏழே ஏழு தடவைகள்.. உச்சரியுங்கள் குருவே.. விரைவாக.. விரைவாக.. இதோ நீங்கள் கடவுள்.. நான் உங்கள் இடது பாகத்தில்.. ஓஹ்..! உச்சாடனம் செய்யுங்கள் குருவே.. குரு உபமந்யு தெளிவாக உச்சரித்தார்..
- சக்தி..ஓம்..!’
ஒன்று.. இதோ பூத கணங்கள் விலகுகின்றன.. கடவுளின் கணங்கள்nருங்ககின்றன.. இதோ.. இரண்டு.. அலைவடிவ உச்சாடணம் இதோ கடவுளை அண்மிக்கிறது.. மூன்று.. இதோ.. நான்கு.. ‘சக்தி..ஓம்..!’ ஐந்துää ‘சக்தி..ஓம்..!’ää ஆறு.. ‘சக்தி..ஓம்..!’ இன்னும் ஒரேயொரு கணம்..! இதோ.. இதோ.. ஸ{வாஹிமாதாவின் குண்டலினி நீலச்சிவப்பில் உச்சிப் பிறையிலர் தெரிந்தது. இதோ.. ஏழு..? ‘சக்...?’ குருவால் உச்சரிக்க முடியவில்லை. ஏழாவதும்ääஇறுதியானதுமான உச்சாடனத்தை செய்ய முடியவில்லை.. எங்கே..? குருவே..! குருவே!!. ஆனால்..ää குருவால் உச்சரிக்க முடியாத அந்த ஒரு கணத்தில் அது நிகழ்ந்தது. எது..?
()
விஞ்ஞானி உபேந்திரர் நிதானப்பட்டார். பிழைதான்.. அவரது துரிதமான கட்டளைகளால்ää ‘ரோபோ’க்கள் உயிர் பெற்றன. தம்மைச் சீராக்கின.. பயிலுனர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். அனைத்தும் மீள் வடிவம் பெற்றன.. லாவண்யாயாவின்ää பிறைசூடி ‘அன்டெனா’இயங்கியது. அதில்ää மறுபடியும் கிரகத்தளங்கள் இணைந்தன.. ஆராய்ச்சி வெற்றியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை எல்லோரும் புரிந்து கொண்டனர். இன்னும் ஏழு நிமிடங்களில்ää 7ஓம் ‘அம்பியர்கள்’ கணக்கில் ஊடுருவிச் செலுத்தினால் சரி..! அவரது நெற்றியை வெற்றி முத்தமிடக் காத்திருக்கிறது. முழுப் பிரபஞ்சக் கடவுளாக அவரை அங்கீகரிக்கப் போகிறார்கள்.‘அனைவரும் என்னை வணங்குவீர்களாக.. இதுதான் எனது பிரபஞ்ச வாய்ப்பாடுää இதுதான்..! இனி இதுதான் இந்தப் பிரபஞ்சத்தை ஆளும்.. லாவண்யாவினதும்ää விஞ்ஞானி உபேந்திரரினதும் விழிகள் சந்தித்தன. பெருமிதத்தில் அவை நனைந்தன. ஏழு பிரபஞ்ச வருடங்களாகää ‘சீஆர்எஸ்’ கதிர்கள் ‘ஓம்’ வாய்ப்பாட்டுக் கணக்கில்ääஊடுருவியதில்ää விண்வெளியில் ஒரு புதிய உலகம் அந்தரத்தில் அமைந்து கொண்டிருந்தது. இன்னும் ஏழு நிமிடங்கள் ஏழு ‘ஓம்’கள் ஊடுருவினால் சரி..
இதோ அந்த வெற்றியின் நிமிடங்கள்.. ஒருää ‘ஓம்..’ இரண்டு. ‘ஓம்..’ இதோ புதிய பிரபஞ்சம் தயாராகிறது.. மூன்று..‘ஓம்..’ää ஆஹாää புதிய கிரகம்.. புதிய உலகம்..ää புதிய கடவுளின் அவதாரம்.. நான்.. இதோ.. நான்கு.. ‘ஓம்..’ ஐந்து.. ‘ஓம்.’ ஆ.. என்ன அழகான உலகம்.. ஆறு.. ‘ஓம்..’ ஏழ்..? ‘ஓ....’ என்ன இது..? ஒரு கணத்துக்கும் குறைந்த அந்த நேரத்தில் அது நிகழ்ந்தது.. எது..?
()
குருஉபமந்யுவால் உச்சாடனம் செய்யப்படாத அந்த ஒரு கணத்தில்ää ஒரு மஹாஆச்சரிய ஊதாநிற ஒளிவெள்ளம் ஆகாயத்தில் ஏகமாகப் பிரகாசித்தது. ஒரே நொடியில் அது மறைந்தது. அடுத்த கணத்தில்ää ப10மியிலிருந்தää குருஉபமந்யுääஸ{வாஹிமாதாää ஏழு முனிபுங்குவர்கள்ää ஆஸ்ரம சுற்று வட்டாரம் அனைத்தும்ää ஒரு புல் பூண்டு கூட மிச்சமில்லாமல்ääகருகிப் போயின. சக்தியின் கோர வலிமையை உணரவும் அங்கு எதுவுமில்லை. மௌனம் ஒன்றே சக்தியைப் புரிந்து கொண்டாற்போல மௌனமாக இருந்தது.
()
நீலத்திரையில் சக்தியின் புதிய வாய்பாடு பதிவாகவிருந்த அந்த ஒரு நொடியில்ää ஒரு மஹா ஆச்சரிய ஊதா நிற ஒளிவெள்ளம் ஆகாயத்தில் ஏகமாய்ப் பிரகாசித்தது. அடுத்த கணம்ääஅது மறைந்தது. விஞ்ஞானி உபேந்திரர்ää லாவண்யாää பயிலுனர்கள் ஆய்வுகூடச் சுற்று வட்டாரம்ää ‘டெல்டாவெளி’ அனைத்தும் மிச்சமில்லாமல் கருகிப் போயின. மௌனம் ஒன்றேää சக்தியை அளவிடும்ää புதிய வாய்ப்பாட்டை அறிந்துகொண்டாற் போல் மௌனமாக இருந்தது. சக்தி சமன் மௌனம்.
இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை.1997ஃ98தினக்குரல். 1998.
மே மாதம் முதற் ப10.
“அந்தா வாற கோச்சிக்கு முன்னால உன்னத் தள்ளி விட்டுக் கொலை செய்யனும் போலிருக்கு..”
எனது குரலிலிருந்த வெறுப்பைக் கவனிக்;காமல் பெரிதாகச் சிரித்தான் சிவகுமார். வெள்ளவத்தைக் கடற்கரையில் நாங்களிருவரும் அமர்ந்திருந்தோம். தண்டவாளம் தடதடக்க புகையிரதம் நீளமாய் எங்களைக் கடந்தது. சத்தம் ஓய மட்டும் புகையிரதத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிவகுமாரை நான் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென அவன் கேட்டான்.
“ஏய்.. அப்துல்லா.. நீ தொழப் போகல்லையா..?”
“நான் பள்ளிக்காவது போறன். நீ கொளும்புக்கு வந்த நாளிலிருந்து கோயில் குளம் பக்கம் எட்டியாவது பார்த்திருக்கிறாயா..?”
“பள்ளிவாசல்.ää கோயில் தேவாலயம் விகாரைகள் இதெல்லாம் எனது இராஜ்ஜியத்தில் இல்லை தோழரே..”
“தங்கள் இராஜ்ஜியம் எதுவோ..லெனின் அவர்களே. சோசலிஷ சோவியத் உருசியாவோ.. அல்லது புரட்சிச் செஞ்சீனாவோ.. ?”
“நல்ல கேள்வி. இராஜ்ஜியம் என்றால் நாடு இல்லை தோழரே..! உடோபியன் சோஸலிஸமே எமது இராஜ்ஜியமாகும்.”
“நீ பிதற்றுகிற மாதிரிச் சமுக அமைப்புக்கு ஒரு தெருவிலுள்ள ஜனங்களே தயாராகயில்லை அப்பனே.. அப்படியிருக்க நாட்டையே மாற்றப் போகிராறாமே..”
“மாற்ற முடியாது என்றில்லை. நீ சொன்ன நாடுகளிலும் தெருவுக்குத் தெரு ஆரம்பித்து மாறியதுதான் சோஸலிஸம். முன்னர் இருந்த அடிமைத்துவம் மாறவில்லையா.? மாறி முன்னேற்றமான பிரபுத்துவம் வந்தது. அதுவும் மாறி அதனிலும் சற்று முன்னேற்றமான முதலாளித்துவம் வரவில்லையா.. பின் அதுவும் மாறி உயர்வான சோசலிஸம் வரக் கூடாதா.. இதோ வந்து கொண்டேயிருக்கிறதே......”
“வந்து கொண்டிருப்பது கண்டி ‘நைற் ரெயில்’தான். அம் மாற்றம் அதுவரைக்கும் நீ இருப்பாயா கார்ல்மார்க்ஸ் அவர்களே..?”
“போராட்டங்களின் பெறுபேறுகள் உடன் அனுபவிப்பதற்காகவல்ல.. சந்ததிகளுக்காக.. இதைப் புரிந்து கொள் தோழரே..”
பேசிக்கொண்டே வந்ததில்ää அதி சங்கைக்குரிய பஞ்ஞாஸீஹ மடிகே விபுலானந்த தேரோ மாவத்தையிலிருந்த எங்கள் வாடகை வீடு வந்து விட்டது.
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மறிக்கிடா.
~அகிலேஸ்வரி என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம்
பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம்
கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில் கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள்.
அகிலமக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை. சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல
முகவெட்டும்... சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்... முந்தானையை
மீறத் துடிக்கும் மார்புகளும்..... கணவர் சின்னப்புவுக்கு தனது 68 வயதில் அவளுக்கு
தன்னால் டீடு கொடுக்க முடியாதென்பதை தாம்பத்திய
இரவுகளில் சந்தேதகமறத் தெரிந்து கொண்டிருந்தார். பிள்ளை குட்டிகளும் இல்லை. என்றாலும்
பெயருக்கு கணவர் என்ற லேபலோடு ஏதோ அவள் சொல்வதையெல்லாம் செய்து கொண்டு காலம் தள்ளிக் கொண்டிருந்தார்.
அகிலமக்காவின் ஆட்டுப்பட்டியில் இப்போது எல்லாமே பெட்டைகளாகவே இருந்தன. மறிக்கு
ஒரு கிடாய் இல்லை. அப்படியானால் பட்டி பெருகுவது எப்படி... மறிப்படுவதற்கு பெட்டைகள்
தயாராக இருந்தன.. அவற்றின் யோனி நீர் வழிந்து தொழுவம் முழுவதும் மணத்தது.. இந்த நேரத்தில் சரியான ஒரு கிடாய் அகப்பட்டால் தப்பாமல் இரண்டிரண்டு குட்டிகளாவது கிடைக்கும்..
அகிலமக்கா சி;ன்னப்புவிடம் சொன்னாள்.
~~ஞ்சப்பாருங்கோ... பெட்டைகளுக்கு மறிக்கு விட நல்ல கிடாய் ஒண்டைப் பாருங்களன்.. சொல்லி எத்தினை
நாளாயிற்று... ஒரு வேலைக்கும் உதவாது நீங்க...|| என்று குத்தி விட்டாள்.
~~பாத்துட்டுதானே இரிக்கிறன்.. ந்தப்பக்கத்து மாப்புள்ளக் கிடாவெல்லாம் சரிப்பட்டு
வரா... சீலைப்பள்ளியில மய்யதீன்காக்காட பட்டியில
நெல்ல தெரமான ஒரு கிடா இருக்கிதாம்.. எப்படியும் இண்டைக்கிப் போய்ப் பார்த்துட்டு வாரன்
புள்ளேய்...|| என்று சொன்ன கையோடு
புறப்பட்டும் விட்டார்.
எட்டுமைல்தூரம் நடந்து போய் மய்தீன் காக்காவின் ஆட்டுப்பட்டியை அடைந்தார். மய்யதீன்
காக்காவின் பட்டியைப் பார்த்த போது உண்மையில் அதிசயப்பட்டார். இருபது பெட்டை ஆடுகளும்..
ஒரு மாப்பிள்ளைக் கிடாவும் நின்றன.. மய்யதின் காக்காவின்;
மாப்பிள்ளைக் கிடாவைக் கண்டு அசந்து
போனார்.. ஏறக்குறைய ஒரு மாட்டின் உயரத்தில் தாடியும்.. நீண்டு வளைந்திருந்த கொம்புகளும்....
கழுத்தில் கிண்கிணிமணிகளுடனும் மிக்க கம்பீரத்துடன் நின்று கொண்டு திமிறிக் கொண்டிருந்தது..
அதன் சத்தமே கரகரப்பாக ஆண்கள் கத்துவதைப் போலிருந்தது. அதன் வீச்சம் மூக்கைத் துளைத்தது.. தன்னை நெருங்கும் ஆட்களை முட்டித்
தள்ள மூர்க்கம் கொண்டு பாய்ந்தது..
மய்யதீன் காக்காவும் அந்த ஆட்டுக்கிடாவைப் போலவே ஆஜானுபாகுவாக கம்பீரமாக காட்சியளித்தான்.. சின்னப்புவைக் கண்டதும் வரவேற்று ஆட்டுப்பால் கொடுத்து
உபசரித்த பின் விசயத்தைக் கேட்டு விட்டு நக்கலாய்ச் சிரித்தான்..
~~சின்னப்பு அண்ணேய்... நம்மட கிடாவப் பாத்தாய்தானே... சின்னப்பெட்டையெல்லாம்
இதுக்குக் கிட்ட நிக்க ஏலுமா.. ஒரு தரத்தில
நாலைஞ்சி பெட்ட வேணும் இதுக்கு... || என்று தன் மாப்பிள்ளைக்கிடாவின்;
பாலியல் சக்திப் புராணம் பாடிவிட்டு
~~நான் எல்லாருக்கும் மறிக்கு விடுறல்ல
சின்னப்பண்ணே.. நீ தூரத்துல யிரிந்து வந்திருக்காய் ண்டபடியால பரவாயில்ல உனக்கு தாரன்.. ஆனா ஒருதரம் மறிக்கு விட மூவாயிரம் ரூவாத்
தெரணும்..|| என்று தயைதாட்சண்யமின்றிக் கேட்டான். அவனே கிடாவைக் கூட்டி வந்து மறிக்கு விட்டுக்கூட்டிப் போக போக்குவரத்துச் செலவு..
தனக்கு சாப்பாட்டுச் செலவு.. கிடாய்க்கு தாராளமாக கிளிசறிப் புண்ணாக்கு... மறியேற முன்
கிடாய்க்குச் சாராயம்.. என்று சில உபவிதிகளும் சொன்னான். மய்யதீன் காக்காவின் நிபந்தனைகளும் விலையும் மிகமிக
அதிகமாகவே இருந்ததாலும் அகிலமக்காவிடம் தன் கெட்டிக்காரத்தனத்தை நிருபிக்க வேண்டி அவன்
சொன்னவற்றுக்கெல்லாம் சம்மதித்துத் திரும்பினார் சின்னப்பு.
சொன்னபடியே அடுத்தநாள் அதிகாலையிலேயே மய்யதீன்
காக்கா தன் மாப்பிள்ளைக் கிடாவுடன் அகிலமக்காவின் வீட்டுக்கு வந்துவிட்டான். சின்னப்பு
எங்கோ போய்விட்டிருந்தார். அகிலமக்காதான் வந்து வரவேற்றாள். அகிலமக்காவின் கட்டுமஸ்தான
அழகில் ஒரு கணம் ஒருகணம் மெய்மறந்தான் மய்யதீன் காக்கா... .இந்த நோஞ்சான் சின்னப்புவுக்கு
இப்படி ஒரு பெண்சாதியா... என்று மறுகினான். சட்டெனத் தன்னைச் சுதாகரித்துக் கொண்ட மய்யதீன்
காக்கா
~~சின்னப்பு அண்ணர் வரச்சொல்லியிரிந்தாருக்கா... ||
என்றான்.
~~ஓம்..ஓம்.. நீதானா மறிக்கு
விட வந்த.. கிடா நல்லாருக்குது காக்கா...! இது உன்னதா..?
| என்ற அகிலமக்கா கிடாயின் அருகே வந்தாள்.
மய்யதீன் காக்காவின் .இடுப்பளவு உயரத்தில் கம்பீரமாக நின்றிருந்த கிடாய் அகிலமக்காவைக்
கண்டதுமே உற்சாகமாகிப் பாய்ந்தது. அதன் உயரத்திலும்
பிடரிமயிர்ச்சிலிர்ப்பிலும் கனபரிமானத்துடன்
உயர்ந்து நீண்டு சுருண்டிருந்த கொம்புகளிலும் பெரிய வட்டச் செவ்விழிகளில் தெரிந்த ஆவேசத்திலும் அகிலமக்கா மயங்கித்தான் போனாள்.
~~எங்கக்கா சின்னப்பண்ணரைக் காணல்லை..?||
என்று கேட்ட மய்யதீன்காக்கா அகிலமக்காவின்
கட்டுடலில் வைத்த பார்வையை மீட்டிக் கொள்ள முடியாமல் மறுகினான்...
~~கொத்து பறிக்க கரப்பத்துக்குப் போயிட்டாரு.. வந்துருவாரு...||
மய்யதீன் காக்கா தன்னை கள்ளத்தனமாகக்
குறுகுறுவெனப் பார்ப்பதை உணர்ந்து கொண்ட அகிலமக்கா உள்ளுர நகைத்துக் கொண்டாள். ஏதோ
கொஞ்சம் சந்தோஸமாகவும் கர்வமாகவும் இருந்தது..
~~இதுர குறியப் பாருக்கா... இத பட்டியடிப்பிட்டிக்கே போய் சின்னக்குட்டியா
வாங்கி வந்து வளத்தது.. நெல்ல திறமான சாப்பாடு போட்டு வளத்த கிடா... ஒருநாளைக்கிச் சாப்பாட்டு;க்கே அய்நூறு போகுதுக்கா..|| என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் மய்யதீன்காக்காவின் பார்வை
அகிலமக்காவின் அங்கங்களில் இரகசியமாக மேய்ந்தது.. மறிக்கிடாவின் பார்வை தூரத்திலிருந்த
பெட்டைஆடுகளின் தொழுவத்தின் மீதிருந்தது.
~~விலைக்கு கேட்டா குடுக்க மாட்டியா..?||
அகிலமக்கா நழுவும் முந்தானையைச் சரிசெய்யாமலே
கேட்டாள்.
~~ல்லக்கா.. லச்சம் தந்தாலும் சரியான்.. அது நம்முட மாப்பிள்ள...
புள்ள மாயிரி வளக்கன். நான்...||
ஆட்டுத் தொழுவத்துள் அடைபட்டுக் கிடந்த பெட்டைகளின் மதனநீர் நாற்றத்தில் கவரப்பட்ட
கிடா மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து விடுபட கால்களை உயர்த்திக் கிளம்பித் திமிறியது. ~ஞ்ங்ங்ஙமேமமய்ங்ங்ங்|| என்று விசித்திரத்தொனியில் கத்தி மய்யதீன் காக்காவின் தோளில்
கால்களை உயர்த்தித் துள்ளியது. அவனை நெட்டித்தள்ளியது. அதன் உயர்த்திய கால்களிடையே
வெளித்தள்ளிய கிடாயின் ஆண்குறி செஞ்சிவப்புக்கலரில் விறைத்துக் கிளம்பி நீண்டிருந்தது.
~~குறியப் பாத்தியாக்கா... ?|| என்று சாதாரணமாகத்தான் கேட்டான் மய்யதீன் காக்கா. ~~ம்ம்..ம்..|| என்ற அகிலமக்கா அதனைப் பார்த்துக் கிறுகிறுத்துப் போனாள்.. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...||
என்ற உள்ளார்ந்த அருட்டுணர்வால்;
அவளுக்குள் ஏதோ சிலீரிட்டு மனதுக்குள்
பாய்ந்தது...
~~அக்கா கிடாய்க்கு கொஞ்சம் சாராயம் வேணுமக்கா...||
~~சாராயமா..?||
~~ஓமக்கா... கொஞ்சம் குடிச்சா நெல்ல திறமா மறிப்படுமக்கா..||
அகிலமக்கா வியப்புடன் சின்னப்பு குடிக்க
வைத்திருந்த அரைப்போத்தலைக் கொணர்ந்து கொடுத்தாள்.
உபசாரங்கள் முடிந்ததும் இருவருமாக கிடாவை தொழுவத்துக்குள் கூட்டிப் போனார்கள்.. ஆனால் மதனநீர் வாசத்தால் கம்பேறியிருந்த
கிடா பெட்டைகளைக் கண்டதுமே மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து திமிறிக் கிளம்பி
அவனை முட்டிக் கொண்டு பாய்ந்தது
~ஞ்ங்ங்ஙமேமமய்ங்|| என்று கத்தி ஆவேசப்பட்டது. ~~விடுவிடு..|| என்றாள் அகிலமக்கா.. மய்யதீன் காக்கா பிடியை விட்டதும்... எகிறிப்
பாய்ந்த கிடா ஒருபெட்டையின் பின்பக்கத்தை நோக்கி ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது.
பெட்டையின் பின்புறம் தன்னிரு கால்ககளால் இறுக்கிப்
பிடித்துக் கொண்டு மேல் உயர்ந்தது. அதன் செந்நிறக் குறி ஒரே கணத்தில் கம்பீரமாக வெளிப்பட்டுப்
பெட்டையின் பின்புறத்தைத் துளைத்துக் கொண்டு மறைந்தது.. மறிக்கிடா மிக ஆவேசத்துடன் ஆடியது..
அதன் ஆக்ரோசத்தையும் ஆவேசத்தையும் கண்ட அகிலமக்காவின் பார்வை தன்னிச்சையாகவே
மய்யதீன் காக்காவின் மயிரடர்ந்திருந்த பரந்த தொடைகளின் மீது பட்டு மீண்டது.....
~~என்னக்கா எப்பிடி மறியேறுது பாத்தியாக்கா..?|
என்ற மய்யதீன்காக்கா ஒடுக்கமான தொழுவத்துக்குள்
அகிலமக்காவை மிகநெருங்கி அவளது வெற்றிலைவாசம்
மூக்கருகே மணக்குமளவுக்கு நின்றிருந்தான்..அவனது தார்ப்பாய்ச்சிக் கட்டியிருந்த சாரனுக்கு
வெளிப்புறம் தெரிந்த கால்களில் மறிக்கிடாவின் ரோமக்கற்றைகள் போலவே அடர்ந்திருந்தது..
~~ம்...|| என்ற அகிலமக்கா தன்வசத்திலில்லை. மறியாடும் கிடாவின் கம்பீரத்தில்
இலயித்திருந்தாள்...
மறிக்கிடா ஒரு பெட்டையை முடித்துவிட்டு அடுத்ததை நோக்கித் தாவ...
மய்யதீன் காக்கா கிடாவை இழுத்துப் பிடித்துக் கொண்டு சிரித்தான்..
~~~ஒரு பெட்டைக்கு மூவாயிரமக்கா.. மத்ததுக்கு ஏறணுமெண்டால் வேறயா
ரெண்டாயிரம் தெரணுமக்கா...||
~~காசிலேயே குறியா இரி.... பாத்துத் தாரண்.. விடு.. விடு...||
என்று அவசரப்படுத்தி தற்செயலாகப்படுவது
போல கயிற்றைப் பிடித்திருந்த அவனது கையைப் பிடித்து உலுக்கி விட்டாள் அகிலமக்கா...
~~விட்டா ஆக்கள்ளயும் ஏறுமக்கா இது.. சரியான மறி...! ஆனா பொருத்தமான பெட்டை ல்லக்கா உங்கிட்ட..||
என்ற மய்யதீன்காக்கா ~~ஒரு மணித்தியாலத்துல மூணு தெரம் ஏறுமக்கா.. பட்டியடியில ஒருநாள்
நாலு பெட்டையளுக்கு ஏறிச்சக்கா...|| என்று பெருமை கூறியவாறே ஒரு விசமப் புன்னகையுடன் அகிலமக்காவை
கடைக்கண்ணால் பார்த்தான்.
அகிலமக்காவோ- மய்யதீன்காக்கா தன்னை உரசும் அளவுக்கு நெருங்கி நின்றிருந்ததை ஆட்சேபிக்கவுமில்லை.. தள்ளிப்போகவுமில்லை.. அவனிடமிருந்து வீசிய ஒருவகையான வியர்வை நெடி அவளைத் தள்ளிப் போகச் செய்யவில்லை.
அவனது ஆட்டுவாசத்தை உள்ளுர ரசித்துச் சுவாசித்தபடி... வெளிப்படைக்கு மூக்கைப் பொத்திக்
கொண்டிருந்தாள்..
மறிக்கிடா ஆவேசம் அடங்காமல் மறுபடி உயரக்கிளம்பியது... ~~எங்கக்கா அவரு.. சின்னப்பு...அண்ணர்...?|
என்று கேட்டு தன் வலிமையான கரங்களால்
மறிக்கிடாவின் கயிற்றைப் பற்றித் திடீரென இழுத்தான் மய்யதீன் காக்கா
~~கரப்பத்துக்குப் போனவரு..|| .என்ற அகிலமக்கா தன்னையறியாமலே ~~அவரு வெர நெல்லாச் சுணங்கும்....|| என்றும் முணுமுணுத்துவிட்டு பின்- ~~காக்கா கன பெட்டையளுக்கு விட்டிருப்பாய் போல....||
என்றாள் எதையோ நினைத்துக்கொண்டு.
~~என்னக்கா... கன பெட்டையளுக்கா...?...ஙிக்கிக்கஹ{ய்... அப்பிடி ல்லக்கா.. கண்டகண்ட எல்லாப் பெட்டையளுக்கும் விடுறயில்லக்கா...
பரவாயில்ல...|| என்றான் பூடகமாக..
திடீரென மறிக்கிடா மய்யதீன் காக்காவின் பிடியிலிருந்து திமிறி விடுபட்டு அகிலமக்காவை
நோக்கிப் பாய... அகிலமக்கா பயந்து கத்தியபடி ஒரு தற்செயல் கணத்தில் மய்யதீன் காக்காவின்
பின்பக்கமாகப் பாய்ந்து அவனது முதுகைப் பிடித்துக் கொண்டாள். மய்யதீன் காக்கா சிரித்தபடியே
~~பயந்துட்டியாக்கா..?||
என்று கேட்டு கிடாயை இறுகப் பிடித்து
இழுத்து அதன் விறைத்த குறியில் கொஞ்சம் சாராயத்தை ஊற்றினான். பின் அகிலமக்காவிடம் ~~இதக் கொஞ்சம் பிடித்துப் பாரனக்கா... இன்னம் வெறைப்பு அடங்கல்ல...|| என்றான் குறும்பாக...
~~எ...என.ன...ந..நா..னா...புடிக்கவா....?||
பயத்துடன் அகிலமக்கா தயங்கியபடியே கையை நீட்ட... ~~அப்பிடி ல்லக்கா ந்தா இப்பிடிப் பிடிச்சுப் பாருக்கா..||
என்ற மய்தீன்காக்கா திடீரென வெகு சுவாதீனமாக அகிலமக்காவின் கையோடு தன் கையை வைத்துப்
பிடித்துக் கொண்டு . கிடாயின் விறைத்த குறியைப்
பிடிக்கச் செய்தான்.. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...||
கிடாயின் குறியில் கைபட்டதுமே அகிலமக்காவுக்குள் ஒரு பூகம்பம் வெடித்து மனதெல்லாம்
சிலீரிட்டுப் பரவியது.. அகிலமக்காவின் கைபட்ட
கூச்சத்தில் கிடாய் திமிறி ஆவேசத்துடன் அகிலமக்காவை
நோக்கி அசுர வேகத்துடன் தாவ- ~~.க.கடவு..ளே...ய்...|| என்று கத்திக்கொண்டே நிலை தடுமாறித் தரையில் விழுந்தாள்
அகிலமக்கா. மய்யதீன் காக்காவும் தடுமாறி சமநிலை குலைந்து அகிலமக்காவின் மீது
இடறினான். மறிக்கிடா விடுபட்டு அடுத்த பெட்டையை நோக்கித் தாவியது.
~~ச்சீ.. நாசமத்துப் போன மறிக்கிடாதான் இது.||
என்று கிடாயைத் திட்டியபடியே எழுந்த
மய்யதீன்காக்கா ~~உளுந்துட்டியாக்கா..?|| என்று கேட்டு அகிலமக்கா எழத் தன் கைகளை நீட்டினான்.. அவனது கைகளைப் பற்றிப்பிடித்த
அகிலமக்கா எழும்பாமல் கீழே கிடந்தவாறே ~~அவரு... வரச் சுண....ங்கு.......||
என்று ஏதோ முணுமுணுத்தாள். மய்யதீன்காக்கா ஒருநமுட்டுச் சிரிப்புடன் கீழே கிடந்த
அகிலமக்காவையே உற்றுப்பார்த்தான்...
சற்றுநேரத்தின் பின் தொழுவத்துக்குள் மய்யதீன் காக்காவின் மறிக்கிடா வேகத்துடன் இயங்கத் தொடங்கியது. ~~ஆ..என்ன நீட்டமும் பெரிசும்...||
என்ற உள்ளுணர்ச்சியுடன் அகிலமக்கா அதன் வேகத்தில் இலயித்துவிட்டாள்.. சின்னப்பர்
வரச் சுணங்கும்தானே...? ..0 (2012)
8888888888888888888888888888
கள்ளக்கோழி.
கள்ளக்கோழி.
~மண்டயப் பொளந்துருவன்...ல்லாட்டி
கைச்சந்துல ஒண்ட எறக்கிற...எந்த அறாங்குட்டி யெண்டு பாத்துருவம்..||
ண்டு நம்முட ஆத்தப்பாக் கௌவன் கய்யிலிரிந்த
அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு நட்ட ராவையில அவண்ட ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற
பெரப்பம் பத்தைக்க ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான்.
ஒளிச்சிட்டுக் குந்திரிந்தான். ஒரு மனிசன வெட்டி அரியிற அளவுக்கு ந்த எளுவத்தாறு
வயசில ஆத்தப்பாக் கௌவனுக்கு வெஞ்சினம் வந்தததென்ன..?அப்பிடி ஆர வெட்டி அரியப் போறான்..?:
ஆரந்த அறாங்குட்டி...?
வேறாரு..?
.பேத்திற்ற ராவையில இருட்டுக்க வந்து
போற...ஒரு அறாமி..!..ஆரவன்...? ஆரா இரிக்கட்டும்..! .கவையில்ல... ண்டைக்கி வெட்டிப்போட்டுத்தான்
மறுவேல... ரெண்டு பேரையும் வெட்டிப்போட்டுட்டு
தூக்குல தொங்கிற யெண்டாலும் செரிதாங்....ஆத்தப்பாக் கௌவன் உரத்த ரோசக்காரன்....
கௌவன் உரத்த ரோசக்காரன்.... ஆத்தப்பாக் கௌவண்ட பேத்தி நெல்ல வடிவான கொம்புள.. நெல்ல
செறப்பாத்தான் கலியானம் செஞ்சிவெச்ச.. நகநட்டு
சீருசெனத்தி எல்லாம் குடுத்த.. என்ன நடந்த கொதறத்தோ..?.
பண்ணினவன் ஒரு பொடவ யாவாரி.. நெல்லாத்
தெரிஞ்சவன்தான்.. காசிகப்பும் வெச்சிரிந்தான்.. மட்டக்களப்புல பொட்டணி யாவாரம்... ஆத்தப்பாக்
கௌவனுக்கு ம்மாட வழியில கொஞ்சம் ஒறவு... ...அவண்ட சாதிசனம்தான்.. பண்ணி மூணுமாசம்தான்
இரிந்தான். அண்டொரு நாள் சும்மா ஏசிப் போட்டுக் கோவிச்சிற்றுப் போய்ட்டான். ம்மாட ஊட்ட போனவன் திரும்பி வெரல்ல... சும்மாரிந்த
குமரப் பழுதாக்கிப் போட்டுப் போய்ட்டான்.. .. ரெண்டு வரிசமாகுது...
ரெண்டு வரிசமாகுது... கோய்ச்சிட்டுப் போனவனக் கூட்டிட்டு வெரப் போன ஆத்தப்பாக்
கௌவன அவன் மாப்புள்ளட வாப்பாக்காரன் புடிச்சித் தள்ளி உட்டுட்டான். ~போடாக் கௌட்டு வள்ளா.. ஒண்ட பேத்திர .........க்க எண்ட மகன்ட
....ஒரு நாளும் இனிப் பூர மாட்டா..போடா போடா....ண்டு
வெரசினான. ~~அப்பிடி என்ன குத்தம்டா
செஞ்ச எண்ட பேத்தி...என்னடா கொறடா அவளுக்கு..? செல்லுங்களண்டா அறாமியள்..?|| ண்டு ஆத்தப்பாக் கௌவன் ரோட்டுல நிண்டு கொம்பினத்துக்கு...மாப்புள்ளட
ம்மாக்காரி முந்தானய சுத்திக்கட்டிட்டு ரோட்டுக்கு ஓடியாந்து..
ரோட்டுக்கு ஓடியாந்து.. .~~டெ ஆத்தப்பாக் கௌவா...ஒ;ண்ட பேத்தியப் பண்ணின நாள்ள இரிந்து என்ட மகனுக்கு யாவாரத்தல நட்டம்டா நக்கு வள்ளா.. குறி கேட்டுப்
பாத்துட்டம்.. அவள வெலக்கினாத்தான் முசிவத்தும்
வெலகுமாம்.. இனி இஞ்ச வெராதடா கௌவா.. காதிக் கோட்டுலதான் வளக்கு வெளக்கம் எல்லாம்.. இனி ஞ்சாலப் பக்கம் வந்தியெண்டா....த்த்த்த்த...||
ண்டு டானிஸ் ஆடிட்டாள்...
டானிஸ் ஆடிட்டாள்... கோவத்துல ஆத்தப்பாக் கௌவன் சம்பந்திர சொத்தையில வெத்திலாக்கக் காறித் துப்பிட்டு ~~அடி வெங்கிளாத்துர வேலக்காரி... ஒண்ட வங்கிசத்த நெக்கித் தெரியாதா.. ஒருவாக்காசிக்கி மாட்டுப்பீயத் திண்ட
கூட்டம்... இனி ஒன்ட மகன் அறாமாக்கும் வேணா...நெல்ல ஒரிச்சினல் மாப்ள்ள நான் எடுப்பன்டி...||
ண்டு சவால் உட்டுட்டு வெட்டக்கிறங்கி
வந்துட்டான்.. அத்தோட எல்லாம் அறுந்து போச்சி.....
எல்லாம் அறுந்து போச்சி.... மாப்ள்ள பொண்ணப் பிரிக்கிறத்துக்கு காதிக் கோட்டுல
வழக்கு நடக்குது...வேள் பேத்தி புரியனோட ஒளுங்கா வாள ல்ல அவளும் நெல்ல பார்வையான கொம்புள.. ரோட்டுல திரியிற வளிசலுகள் பேத்தில கண்ணக்
கிண்ணப் போட்ருவாணுகள் ண்டத்தால ஆத்தப்பாக்
கௌவன் கண்ணுல எண்ண ஊத்திக் கங்காணிப்பாயிரிந்தான்.. மஸிமாவ வெட்டக் கிறங்க உட மாட்டான்.. கேட்டதெல்லாம்
காலடியில கெடைக்கிற மாயிரி கட்டுக் காவலா வெச்சிருந்தான்..
பேத்திக்கி அவிசிரமா மாப்பிள்ள பாத்தான்....
பாத்தான்தான்...ஆனா என்ன வெச்சிரிந்து என்ன..? ப்ப கொஞ்ச நாளா...பேத்திர நடத்தயள்ள கொஞ்சம் சமிசயம் தட்டுது.
.கொஞ்ச நாளா ராவையில பவுடர் பூசுறாள்.. தனிய நிண்டுட்டுச் சிரிக்காள்... அத்துரு மணக்குது... தலையில கிளிப்புகளும்.. களுத்துல
மணி நெக்கிளசும் ஊசாடுது.. கொசாலா இரிக்காள்... சொணங்கித்தான் எளும்புறாள்.. செல நேரம்
மாலமசண்டைக்க ஒரு பத்தப்பதினஞ்சி நிமிசம் ஆளக் காணல்ல... . எங்கடி போன ண்டு கேட்டா ~~என்னது நா ஒண்டுக்கு இரண்டுக்குப் போறல்லியா.. ஊட்டுக்குள்ளயா
பீமூத்திரம் உர்ர..?||
ண்டு கேட்டு கடிச்சி ஏறப்பாக்காள்..
~~கௌட்டு வயதுல சோத்தத் திண்டுட்டுப்
படுக்காம கௌவண்ட கேள்வியப் பாரு... || ண்டு செல சமயம் புறுபுறுக்காள்..
செல சமயம் பரபரக்காள்... வேள்ள ந்தப் புதுக் குசாலுக்கு என்னடா காரணம் ண்டு ஆத்தப்பாக்
கௌவன் உசுப்பாம ஒசாரா கங்காணிக்கத் தொடங்கினான்.
ரெண்டொரு நாள் மாட்டுக்குடில்ப் பக்கம் ஆரோ பொளங்கின மாயிரி சமுசயம் தட்டிட்டு...
ன்னமின்னம் ஊசாட்டம் பாத்ததுல பேத்திக்கு ஆரோ ஒர்த்தனோட சாடமாடயாத் கள்ளத்தொடர்வு இரிக்கி
ண்டு வெளங்கிப் போச்சி... ம்.. நமக்குத் தெரியாம
வேளவு தகிரியமா ஞ்சயே வந்து சந்திக்கிறவன்...ஆரந்த அறாமி..?
ஆரந்த அறாமி.. கள்ளக்கோழி புடிக்க வாறவன்...? ஒரு நா பகல் அப்பான் சாப்பிட்டுட்டு கொஞ்சம் கெளிவம் ண்டு ஆத்தப்பாக்
கௌவன் கண்ணமூடிட்டு உள்ளறைக்க கட்டில்ல படுக்கிற மாய்ரி சாஞ்சிற்று இரிந்தான்.. வேள்
பேத்தி சாப்புக்க படுத்தவள் எளும்பி பொறக்கடக் கதவ உசுப்பாம தொறந்துட்டு.. வெட்டயால
போறாள்.... ஆத்தப்பாக் கௌவனும் தவண்டுட்டு வெட்டையால வந்து ஊட்டுக்குப் பொறகால இரிக்கிற பெரப்பம் பத்தைக்க ஒழிச்சிட்டு இரிந்து பாத்தான்..
நெனச்சது செர்தாங்...! ஒரு சீட்டிச் சத்தம் கேக்குது.... ஒடன மாட்டுக்குடிலுக்க வேள்
பேத்தி போறதும்... ஆரோடயோ குசுகுசுக்கிறதும்.....ம்..... .சிக்கிலட்டுப் பொகையும் மணக்குது..? ஆத்தப்பாக் கௌவன்
வெறச்சிப் போய்ட்டான்.. ஆரந்த அறாங்குட்டி...? என்ன கட்டுக்காவலா வெச்சிருந்தும் ந்தப் பொட்ட நாய் போன போக்கென்ன..?
போன போக்கென்ன..? பேத்தி ஒரு அஞ்சி நிமிசத்தில திரும்பிட்டாள்.. கய்யில ஒரு பெரிய பார்சல்... சிரிச்சிட்டு திரும்பிப் பாத்து கைகாட்றாள்...என்னயோ கதைக்காள்...
டக்கெண்டு கௌவன் திரிம்பி வந்து படுத்துட்டான்... நெஞ்சப் பொத்திற்று வெஞ்சினத்த விளுங்கிற்றான்...
ம்மாட மண்ட.... இத ரெண்டுல ஒண்டு பாக்காம உட்றல்ல... ண்டு அந்நரம் முடிவு கட்டினான்.
ஆரு நாயா இரிந்தாலும் நக்க வார நாய்க்கி அருவாக்கத்தியால மண்டையில கொத்துற ண்டு தீமானங்
கட்டிட்டான்...
அந்நரமே முடிவு கட்டிட்டான்.. இதப்பத்தி
ஆத்தப்பாக் கௌவன் பேத்திட்ட ஒரு கதயும் கேக்கல்ல.. தெரிஞ்ச மாய்ரி காட்டிக்கயும் ல்ல.. ஆனா செரியான
சந்தர்ப்பத்த காத்துட்டு அதுலயே ஒரு கண்ணாயிரிந்தான்..
அதுலயே கண்ணா இரிந்தவன்...ஒரு திட்டம் போட்டுட்டான்.. இண்டு ராவைக்கி தோட்டத்துல
பண்டிக் காவலுக்குப் போறண் ண்டு செல்லிட்டு
சாப்பாடும் கட்டி எடுத்துட்டு.. போறாப்பல போக்குக் காட்டிட்டுப் போய்.....நெல்ல
மசமசண்ட இருட்டுக்க ஆத்தப்பாக் கௌவன் கிறுகி வந்து ஆருக்கும் தெரியாம ஊட்டுக்குப் பொறகால
இரிக்கிற பெரப்பம் பத்தைக்க குந்திரிந்தான். கய்யில மூணு வெத்தி டோர்ச்சி லைட்டும்
நெல்ல கூரான அருவாக்கத்தியும் வெச்சிட்டுப் பதுங்கிற்று சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......
சத்தம்கித்தம் போடாம குந்திரிக்கான்......ண்டைக்கி நெல்ல அம்மாச இருட்டு... ஒத்தச்
சாமக் கோளி கூவக்க.. வெசயம் தொடங்கிட்டு... ஆத்தப்பாக் கௌவன் நெனச்ச மாய்pரியே நடந்திச்சு...
திடிருண்டு மாட்டுக்காலைக்கிப் பொறகால இரிந்து ஒரு சின்ன விசில்ச்சத்தம் கேட்டிச்சு...
ஒடனே பேத்தி பொளக்கடக் கதவத் தொறந்துட்டு வெட்டால
வாறாள்.. சாட்டுக்கு கெணத்துல தண்ணி அள்ளி காலக்களுவுறாள்.. பொறகு.. ன்னொரு கனப்புச்
சத்தம் கேட்டதும்... பேத்தி வந்து மாட்டுக்காலைக்குள்ள பூந்துட்டாள்... ஆத்தப்பாக்
கௌவனுக்கு எரத்தம் கொதிக்குது.... பல்லக் கடிச்சிட்டு அருவாக்கத்திய இறுக்கயாப் புடிச்சிட்டு
சரசரண்டு பெரப்பம் பத்தைக்க தவண்டு தவண்டு மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான்.
மாட்டுக்காலப்பக்கம் வந்துட்டான். ஆனா கௌவன் வந்த சத்தம் கேட்டுட்டுப் போல.... வேள் பேத்தி குசுகுசுப்பாக ~~ஆரே வாறாக.. ஆரே வாறாக..|| ண்டு செல்லிட்டு டக்குண்டு எழும்பி பொடவயத் தூக்கிட்டு ஒட-கூட
இரிந்த ஆரோ ஒரு கள்ளன் உடுத்திரிந்த சாரனையும்
அவுட்டுட்டு மாட்டுக்காலைக்கி வெளியால பாஞ்சான்...
ஆனா.. ஆத்தப்பாக் கௌவனும் உடல்ல.. டக்கெண்டு
பாஞ்சி அவண்ட காலக் கட்டிப்; புடிச்சிட்டான்.. ரெண்டு
பேரும் தட்டுமுட்டுப் பட்டு மாட்டுக்காலைக்க உளுந்து கட்டிப்புடிச்சிட்டுப்;
பெரள.... பேத்தி பயத்தில ஊட்டுக்க ஓடிட்டாள்..
ஆத்தப்பாக் கௌவன் தன்னோட மல்லுக்கட்டின ஆம்பிளய ஒரே புடியா அமுக்கிட்டான்... ஆனா அவன் எளந்தாரிப் பொடியன்..
எளந்தாரிப் பொடியன். ஆத்தப்பாக் கெனவன்ட கய்யக் கடிச்சிற்றான்..புடிய ஒதறி உடுபட்டுட்டு...
டக்கெண்டு பசுமாட்ர கவுட்டுக்குள்ளால ப10ந்துட்டு மத்தப்பக்கமா
பாஞ்சிட்டான்.. ஆனா ஆத்தப்பாக் கௌவன் சட்டுண டோச்சி லைற்ற அவண்ட சொத்தையில வெளிச்சம்
அடிச்சிற்று...அருவாள ஓங்க......
அருவாள ஓங்க...... டோர்ச்சி லைற்று வெளிச்சத்துல அவண்ட சொத்தையப் பாத்த ஆத்தப்பாக் கௌவன் வெறைச்சிப் போய்ட்டான்... ஒடன
அருவாக்கத்திய கீள போட்டுட்டான். வெக்கத்துல மெலச்சிப் போய் அப்பிடியே செல மாய்ரி நிண்டுட்டான்.
அப்பிடியே குந்திட்டான்.. வெறப்படி இரிக்கிம்..? வந்துட்டுப் போற அந்தக் கள்ள அறாங்குட்டி வேள் பேத்திர உட்டுட்டுப்
போன புரிசன்காரன்தான் ண்டு தெரிஞ்ச பொறகு........................? (2011)
8888888888888888888888888888
பொன்னெழுத்துப் பீங்கான்.
என்ட கண்டுமணி மகளாருக்கு... பத்துமாசம் செமந்து பெத்த ஒங்கு ம்மா சவரியத்தும்மா
பேசி அனுப்புற கடசிக் கெசட்டுப் பீசி இது.. நீ லண்டனுல இரிந்து அனுப்பின காய்தமும்..காசியிம்;;
கெடைச்சிச்சு.. நம்முட போஷிமாஸ்டரு
எல்லாம் வாசிச்சுக் காட்டினாரு.. அதக் கேக்கக்குள்ளேயே என்ட ரெண்டு கண்ணுலயும் தண்ணி..
என்ட மகளே... ஒன்ன நெனச்சிக் கொளறிட்டன்டா..மளே... நீ வெளிநாட்டுல..கங்காணா தேசத்துல...
நா ஞ்ச ஊர்ல..உள்ளதும் ஒரு கொம்புளப் புள்ள நீ.. ஒன்னப் பிரிஞ்சி நான் எப்பிடி மகள் நெம்மதியா இரிக்கிற....?
எண்ட கண்டு மஹளாரே.... நீ அந்தக் கடிதத்தோட அனுப்பி இரிந்த அந்தப் போட்டோவுல இரிக்கிற
ஒனக்குக் கூட நிக்கிற அந்த வெள்ளக்காரக்காரன் ஆரு புள்ளேய்...?
என்ட மனசு கெடந்து மறுகுதுடி... அவனுக்கும்
ஒனக்கும் என்ன ஒறவுஹா புள்ளேய்.. . கூடப் படிக்கிறவனா...?
வேல செய்யிறவனா..?
கூட இரிக்கிறவனா...?
அவனப்பத்தி நீ ஒண்டும் எழுதல்லியே...
ஏண்டா மஹளே... ஆருஹா அவன்..?
அவனத்தான் நீ கலியாணம்கிலியாணம் முடிக்கிற ண்ட மாதரி... .அப்பிடி ஒரு எண்ணம் உன்ட
மனசில இரிந்தா அத உட்டுர்ரி.. ராசா..மஹளே..
அந்த அறாமான வேல நமக்கு வாணா.. ஒனக்கு தெறிச்சிப் பாத்து மாப்புள்ள எடுக்க எனக்கித்
தெரியிம்.. ஊருல கன சனம் இரிக்கி... உன்னக் கேட்டு..ஊடுவளவும் ஒண்டும் வேணா ண்டு சொல்லி
ஒன்னக் கேட்டு வேலம் வெதானட மகன் லாக்குத்தருப்
பொடியன் வெசளம் அனுப்பின... நம்மட பள்ளிக்குடப்
பிரிஞ்சிப்பில்லும் அவர்ர ரெண்டாவது மகன் எஞ்சினியருக்கு கேட்டு நடக்காரு.. மறுகா நம்முட காசிம்போடிமாமாட
மகன் ஒரே சாடமாடயா கேட்டுட்டுத்தான் இரிக்காரு... ப்பிடி ஊருல மாப்புள்ளமார் அடிபுடி... எத்தினயோ சனம் காத்திரிக்கி
ஒண்ண எடுக்க... நீ அங்க வெளிநாட்டுல அப்பிடியிப்பிடி ஒண்டும் செஞ்சி பொட்ராத ம்மா......
ஒண்ட கால் ரெண்டையும் புடிச்சன்... ஒன்னயப் பெத்த வவ்த்துல நெருப்ப அள்ளிக் கொட்டிராத...
நான் வருத்தக்காரி... வாள்ர வயசில புரிசனப் பலி குடுத்த கைம்பொண்சாதி...... நாப்பது
வரிசமா மான ஒளுக்கத்தோட வாள்ர இசலாமான கொம்புள நான்...நீ எள்ட ஈரக் கொளுந்து... என்ட சொத்தையில கரியள்ளிப் பூசிராத கிpளியே.....
ஒங்கு வாப்பா எப்பிடிப்பட்ட மனிசன்...? ஒண்ட பத்து வயசில அவரு மவ்த்தாய்ட்டாரு... அவரும் நானும் வாள்ந்த
வாள்க்க எப்பிடியான வாள்க்க...?
தெரியா ஒனக்கு... ஆனக்காவலுக்கு ராவையில
தட்டத்தனிய போய் வார நெஞ்சுத் தகிரியமான ஆம்புள அவரு.... ஒவ்வொரு ராவையிலயும் போகக்க தப்பாம அந்தப் பொன்னனெளுத்துப் பிங்கான எடுத்து அதுலதான் சாப்பாட்டக் கட்டி எடுத்துட்டுப் போவாரே...;ஊட்ட சாப்பிர்ரதும்
அதுலதான்.. எங்கயும் போய்ச் சாப்பிடுற எண்டாலும் அந்தப் பொன்னெளுத்துப் பிங்கானத்தான்
எடுத்துப் போவாரு... ~~ஞ்சங்க... ஊட்டுல இ.ந்த ஒரு பிங்கான் மட்டும்தானா இரிக்கி...?||
ண்டு நான் கேப்பன்.. நீயும் அதப் பாத்து
~~வாப்பா..வாப்பா.. இது வாப்பாப் பிங்கான்...
ண்டு செல்லுவியே.... அதுக்கு வாப்பா என்ன செல்ற ண்டு தெரியிமாஹா புள்ளே..ய்...?
~~டியெ...சவரியத்து...ந்தப் பொன்னெழுத்துப் பிங்கானுல மட்டும்தாங்கா நான் சாப்பிடுற... பலபல பிங்கானுகள்ள சாப்பிடுற
பளக்கம் எனக்கிட்ட ல்லடி... நீயான் என்ட பொன்னெளுத்துப் பிங்கான்....||
ண்டு செல்லி என்னப் பாத்து கண்ணச் சிமிட்டிட்டுச்
சிரிச்சாரே.... வெளங்கிச்சா புள்ள ஒனக்கு...
அது ஏணுண்டு... அதர கருத்து என்னண்டு....? பெரிய இங்கிலிசி சிங்கிலமெல்லாம் படிச்சிரிக்கிறியே..இதர அர்த்தம்
தெரியிமா நொக்கு..?
அப்பிடி... ஒருபிங்கான்ல மட்டும் சாப்பிட்டவண்ட மகள் நீ... ஒளுக்கமான ஓருமையான
ஆம்புளைக்கிப் பொறந்தவள் நீ.. நீ ஒரு நாளும் பொளயா நடக்க மாட்டாய்.. அப்பிடி நா ஒன்ன
வளக்கல்ல.. ஒண்ட வாப்பாவப் புலிப்பட சுட்டுக்கொண்டுபோடக்குள்ள ஒனக்குப் பத்து வயசி....எனக்கி
26 வயசி.. அந்த மனிசன சுட்டும் வெட்டியும் அரிஞ்சி எரத்தம் ஒறஞ்சி
போய்.... மய்யித்து வரக்க........ என்ட தங்க மகளாரே... நான் எப்பிடித் துடிச்சித் தொவண்டு போயிருப்பன்.... அவரு ஆருக்கு என்ன கருமம் செஞ்ச....?
சும்மா வளக்கம் போல ஆனக்காவலுக்குப் போக
அதே பொன்னெளுத்துப் பிங்கானுல சோறு கட்டிக்
குடுத்தன்.. ~~வெட்டயால தமுளன்ட கொளப்பமா இரிக்காம்... ண்டைக்கும் காவலுக்குப்
போகணுமா...?|| ண்டு கேட்டன்...
சிரிக்காரு... புலிப்படயக் காட்டி சிங்கப்பட பொறுப்பு.. சிங்கப்படயக் காட்டியிம் ஆனப்பட பொறுப்புடி புள்ளேய்...
வயலத் தொவைச்சிரும்... நான் போகாட்டி ஆனக் கூட்டம் வட்டைக்க பூந்து அளிச்சிரும்.. என்ன நம்பி ஒரு கண்டம்
பயிரு இரிக்கி...|| ண்டு செல்லிட்டு.. ஒன்னத் தூக்கிக் கொஞ்சினாரு.. ~~போறன் சவரியத்து! புள்ளயப் பாத்துக்க...||
ண்டுதான் அவரு கடசியாச் சென்ன கத..
போய்ட்டாரு... அதான் கடசிப் போக்கு ண்டு எனக்கி
எப்பிடித் தெரியிம்...? பொலுபொலுண்டு விடியக்க-- வெசளம்வந்துட்டு... அவரச் சுட்டும் வெட்டியும் வட்டைக்க கால்வாய்க்க
போட்டிருக்காம்... பொன்னெளுத்துப் பிங்கான்ல சாப்பிட்ட பாதி சாப்பிடாமப் பாதி கெடக்குதாம்...
துடிச்சிட்டன்டா தங்கோம்... என்னப் படச்ச நாயனே... என்னடாது ந்தக் கொடும.... ண்டு கத்தினன்..கதறினன்...
ஆரு செஞ்ச...? ந்தக் கறுமத்த செஞ்சவன்
ஆரு...? என்ட வாள்க்கயக்
கொலச்சது ஆரு... அவன....? அவன.....? நெஞ்சி அடைச்சி யாது மாறி உளுந்துட்டண்டி கிளியாரே...
இருபத்தாறு வயசில பத்து வயசிப் புள்ளயோட திடீர்ண்டு வெதவ.... ராவு புரிசனனோடப்
படுத்த நான் அடுத்த நாள் கம்பொண்சாதியாப் போனன்...டி
மகளே... ஒண்ட மொகத்தப் பாத்து.. ~எண்டல்லா...எண்டல்லா| ண்டு கத்தினன்.. ஊரு
கூடி ஆறுதல் பண்ணியும் ஆறுமாடி என்ட புண்ணு...? இனி என்னய்ற நான்... இதான் நம்முட தலநசிவு... அதத்தான் நம்முட
தலயில ஆண்டவன் எழுதி வெச்சிட்டான் ண்டு பொறுதி
பொறுத்தன்...ஆருக்காக... ஒனக்காக... நீ மட்டும் ல்லாட்டி என்ட புரிசனோட என்ட உசிரயும்
மாச்சிரிப்பன்.... ஒன்ட மொகத்துக்காகத்தான் பொறுதியானன்... அவர்ர மய்யத்தோட கொண்டாந்திருந்த
அந்தப் பொன்னெளுத்துப் பிங்கான வடிவாக் களுவி
அடிப் பெட்டிக்க வெச்சிப் ப10ட்டிட்டன்... ஒனக்காக
மட்டும் வாளத் துணிஞ்சிற்றன்.
என்ன வேல செய்யல்ல நான்.. பொட்டி எளச்சன்.. புல்லுப் புடுங்கினன்.. அப்பம் சுட்டு
வித்தன்... கடயளுக்கு வட சுட்டுக் குடுத்தன்...
ஊட்டு வேலையள் செஞ்சன்...பயிருபச்ச வெதச்சன்.. நெல்லுக் குத்தினன்.. சீட்டுக் கட்டினன்.. எல்லாம் செலவளிச்சி ஒன்னப்
படிப்பிச்சன்... வாப்பா ல்லாத ஒரு சின்னக் கொறயும் வெயக்கல்ல... நீ கேட்டதெல்லாம் வாங்கித்
தந்தன்... நீயும் நெல்ல கெட்டிக்காரிதான்.. என்ட கய்ட்டத்த ஒணந்து படிச்சாய்... எடுத்த
சோதனயெல்லாம் பாசாய்னாய்....ஒசந்த படிப்புக்கு ண்டு செல்லி அரசாங்கமே ஒண்ண லண்டனுக்கு
அனுப்பிச்சி.. செலவுக்கு ண்டு ஒனக்கு ஊடு கட்ட வெச்சிருந்த காசெல்லாம் தந்தன்..
நீயும் லண்டனுக்குப் போய் ப்ப வரிசம் ரெண்டாய்ற்று.... கடிதம் அனுப்புறாய்..காசனுப்புறாய்...ப்ப
எனக்கு ஒரு கய்ட்டமும் ல்லத்தான்... ஆனா....
நான் என்ட புரிசன எளந்து இரிபத்தஞ்சி வருசத்துலயும் நான் பட்ட கய்ட்டங்கள்....பட்ட சதுரப்பாடுகள்...ஆம்புளத்
தொண ல்லாம தட்டத் தனிய ஒழுகிற
குடிசைக்க படுத்த அந்தக் காலத்துல.... எனக்கி வந்த சோதனயும் வேதனையிம் ஆருக்கு
வெரும்...? அந்நரம் எனக்கும் எத்தின வாள்க்கைகள் தேடி வந்திச்சுகள். மொதலாம் தாரம் ண்டும் ரெண்டாம்தாரம் ண்டும்... எத்தினயோ
பேரு... ஆனா....என்ட மனசில எதுக்கும் எடம் குடுக்க நான் உடல்ல.. எண்ட நபுச ஒரேயடியா
அடக்கிற்றன்... எண்ட ஓருமையான ஆம்புள்ள சாப்பிட்ட ந்தப் பொன்னெளுத்துப் பிங்கான்ல வேற
எவருக்கும் சாப்பிட இடமில்ல.. அது நடக்காது.. கடசி மட்டும் நடக்காது... அப்பிடி ஓருமையோட
இரிக்கிறவள்தான் ந்தச் சவரியத்து....ம்மா.... ஏ..ன்...?
ஒரு பிங்கானுல மட்டும் சாப்பிட்டஅந்த மன ஓருமையான ஆம்பிளக்கி கடசி மட்டும் விசிவாசமா...
அதப் பொன்னப் Nபுhல பாதுகாத்து...
ஆரையும் அதுல சாப்பிட உடாம இருபத்தி அஞ்சி வரிசமா பாதுகாத்திரிக்கன்.......ஏன்....
என்ட விசிவாசம்... நம்பிக்க...ஒளுக்கம்.....
அப்பிடிப்பட்ட எனக்கிப் பொறந்த ஒனக்கிட்டயும்
அந்தப் பொன்னெளுத்தப் பிங்கான்தான் இரிக்கிம்... அதுல நீ ஆரையும் சாப்பிட உடமாட்டாய்
ண்டும் எனக்கித் தெரியிம்... ண்டாலும் புள்ளே.... எண்ட மனம் கெடந்து அல்லாடுது... ஒடன
ந்த கெசட்டுப் பீசக் கேட்ட ஒடனே.... நாட்டுக்குப் பறந்து வாடா என்ட கண்டு மகளாரே....
நீ வெராட்டி என்ட மய்யத்துலதான் முளிப்பாய்... செல்லிட்டன்... வல்ல பெரிய நாயன் ஒனக்கு
ஒதவி செய்யட்டும்....ஆமின்....ம்க்க்க்க...ம்ம்ம்.. (1991)
8888888888888888888888888888
ஒய்த்தா மாமா.
எனக்குப் பத்து வயதிருக்கும் போது அது நடந்தது..... ஒய்த்தாமாமாவைக் கண்டாலே எனக்குப்
பயம். அவர் சிறுவர்களின் குஞ்சாமணியை தயைதாட்சண்யமின்றி அறுத்தெறிகிறவர் என்று கேள்விப்பட்டதிலிருந்து
இந்தப்பயம். இது நிச்சயமாக நமக்கும் எப்போதோ நடக்கத்தான் போகிறதென்று உணர்ந்ததிலிருந்து
அவரைக் கண்டாலே குலை நடுக்கம்தான்.. அப்படி அவர் குஞ்சாமணியை அறுத்தெறிகிறவர் என்றால்
நம்மட வாப்பா பெரியப்பா பெரிய ஆம்பிள்ளைகள் எல்லாம் எப்படி ஒண்டுக்குப் போகிறார்கள்
என்று கேள்வி மண்டையைக் குடையும்.. பள்ளிக்கூடம்
செல்லும் வழியில் ஒய்த்தாமாமா தென்பட்டால் பதறிப் போய் வேறு வழியாக ஓட்டம் பிடிப்பேன்.. வீட்டருகே விளையாடிக் கொண்டிருக்கும் போது கண்டாலோ
துடித்துப் பதைத்து உள்ளறைக்கு ஓடி விடுவேன்..
எங்கள் வீட்டில் வேலையாளாக இரிந்த கலந்தன்காக்காதான் ஒய்த்தா மாமாவைப் பற்றி கதைகதையாகச்
சொல்வான்.. சில பிள்ளைகளின் குஞ்சாமணியை நுனியில் கொஞ்சமாக அறுப்பார் என்றும்.. அறுத்த
குஞ்சு பல்லியின் வால் துடிக்கிறாப் போல் துடிக்குமென்றும்..அதுல
சைத்தான் வந்து நிற்குமென்றும.. சில துடுக்குப் பிள்ளைகளின் குஞ்சாமணியை குலையோடு அறுத்து
அதனைக் கடலில் கொண்டு போய் வீசிவிடுவார் என்றும்.. அபபடிப்பட்ட பிள்ளைகள் இனிச் சூப்பேயவும் முடியாதென்றும் அவன் சொன்ன கதைகள்
பல... அதிலிருந்து நானும் எனது துடுக்குத்தனத்தையெல்லாம் அடக்கி கப்சிப்பென்றிருப்பேன்...
ஆயினும் ஒருநாள் மூன்றாம்தவணைப் பரீட்சை சித்தியடைந்து மிகச் சந்தோசமாக ரிப்போர்ட்டை
வாப்பாவிடம் காட்டியபோதுää அவர் மகிழ்ந்து போய் ~~நாலாம் வகுப்புப் பாசாய்ட்டான் மகன்... இனி நீ அஞ்சாம் வகுப்பா..?
...பெரிய ஆள்... உனக்கு வார வெள்ளிக்கிளம
சுன்னத்து வெய்க்கப் போறம்டா மகனே....|| என்று என் சம்மதமில்லாமலேயே திடீரென்று அறிவித்தார். கூட நின்றிருந்த
கலந்தன்காக்கா வாப்பாவுக்குத் தெரியாமல் என்னிடம் தன் விரலைக் காட்டி கத்தியால் கரகரவென
அறுத்தெறிவது போல் பாவனை காட்டினான்... நான்
பயத்தில் ~~எண்டம்மா...எண்டம்மா...||
என்ற கத்திக் கொண்டே உம்மாவிடம் ஓடி
அவளைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்... உம்மா சிரித்து... ~~பயப்புடாதேடா தம்பி...அது எல்லாருக்கும் செய்றதுதான்.. அபபிடியெல்லாம்
நோகாது...சும்மா கடியன் கடிச்சாப்பல கொஞ்ச நேரம் கடுக்கும்...மறுகாச் செரி...||
என்று சொல்லிச் சிரித்தாள்...
எனக்கு ஒரே குழப்பமாகிப் போய்விட்டது.. என் அங்க இழப்பில் அவர்களுக்கென்ன சந்தோஷம்
என்று புரியவில்லை. முதல் ஆளாக வகுப்பேறிய
சந்தோஷமும் போய்விட்டது.. எல்லோர் மீதும் கோபித்துக் கொண்டு படுத்துவிட்டேன்.. மாலையில் உம்மா என்னை எழுப்பி தேறுதல் சொல்லி சாப்பிட வைத்தாள்.. வாப்பா வந்து..~~என்னடா தம்பி பயந்துட்டியா.. பயப்புடாதே.. எல்லாருக்கும் வெய்க்கிறதுதானே..
எனக்கிம் உண்ர வயதில வெச்சதான்.. அந்த நேரம் கய்ட்டம்...ப்ப எல்லாம் லேசி..! ஒண்டுக்கும்
.பயப்புடாத...|| என்றார்..
நான் பயத்தடன் ~~ எனக்கி முன்ன பொறந்த லாத்தாவுக்கு வெய்க்காம எனக்கேன் வாப்பா வெய்க்கிறீங்க.. மொதல்ல
அவளுக்கு வெய்ங்க...|| என்றேன்.. அதைக் கேட்டு எல்லோரும் கலகலகவென்று சிரித்தார்கள்.. கலந்தன்காக்கா எட்டிப்
பார்த்து...~~உனக்கிட்டதானே குஞ்சாமணி
இருக்கி...லாத்தாக்கிட்ட அது ல்லியே....|| என்று சிரித்து...மறுபடி விரலை வெட்டிக் காட்டினான்... எனது
இந்தக் கேள்வி அல்லசல் முழுவதும் பெண்கள் மத்தியில் பரவி... போறவாற பெண்கள் சிறுமிகள்
எல்லோரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள்... நான் பயத்தடனும் ஏக குழப்பத்தடனும்
வீட்டு தொங்கல் அறைக்குள் ஒழித்திருந்தேன்..
அன்று பின்னேரம் சுன்னத்துக் கலியாணம் என்று கார்ட்டெல்லாம் அடித்து வந்தாயிற்று..
~~
எல்லாம்வல்ல இறைவன் திருவருளால்...
நிகழும் ஹிஜ்ரி 1412 ஸவ்வால் மாதம் பிறை 12க்குச் சரியாகிய 1969ம் ஆண்டு பங்குனி
மாதம் 23ம் திகதி பி.ப.4.00 மணியளவில் எமது
திருநிறைச் செல்வன் அ.ற. முகம்மது றெஸ்வின்
அவர்களுக்கு விருத்தசேதனம் செய்யப் பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால் அன்று
நிகழும் பகற்போசனத்திலும் அன்று மாலை நிகழவுள்ள வைபவத்திலும் தாங்கள் குடும்ப சகிதம்
கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.. இவ்வண்ணம் மீ.மு. அப்துல றகீம் முதலாளியும்
பாரியாரும்.......|| வாசிக்க வாசிக்க ஆனந்தமாயிருந்தாலும் வருவோர் போவோரெல்லாம் மாப்பிள்ள மாப்பிள்ள
என்ற கூப்பிட்டுக் கூப்பிட்டு அன்பு காட்டியதாலும்.. எராளமான அன்பளிப்புக்கள் கிடைத்துக்
கொண்டிருந்ததாலும் ஒய்த்தா மாமா மீதான பயம்
சற்றுக் குறைந்தது... இருந்தாலும்..... கலந்தன்காக்கா எங்கள் வீட்டிலிருந்த ஒரு பெரிய அருவாக்கத்தியை
எடுத்து என் கண்ணில்படும்படியாக ஒழித்து வைத்திருந்தான்.. அடிக்கடி அமை எடுத்து தீட்டிக்
கொண்டுமிருந்தான்.. அக்கத்தியையம் என்னையும் பார்த்து அறுத்தறுத்துக் காட்டி என் பயத்தை
சற்றும் குறையவிடாமல் அதிகரித்துக் கொண்டேயிருந்தான்....
வெள்ளிக்கிழமைக்கு இன்னம் நான்கு நாட்கள்தாம் இருந்தன.. வாப்பா பென்னம்பெரிய ஒரு
மாட்டை அறுத்து தானம் கொடுத்தார்.. வீடெல்லாம் திருத்தினார்கள்.. புது மை பூசி கதவெல்லாம்
பொலிஸ் மணத்தது.. தென்னங்குருத்தோலைகளால் அலங்காரம் செய்து நிலைப்படிகளில் தொங்கின...
வாசலில் பெரிய பந்தல் இட்டு சீலையால் மறைத்து அழகழகாக சோடனைத்தாள்ககளால் அலங்கரித்தார்கள்..
தென்னம்பாளையின் குருத்துகளில் வண்ணவண்ண அலங்காரங்கள்...ஆறு பெரிய டியுப் லைற்றுகள்...
பத்துக் குண்டு பல்புகள் கலர்கலராய் உமிழ்ந்து
கண்ணைப் பறித்தன... ஷ்பீக்கர் கொண்டு வரப் போயிருந்தார்கள்.. பொல்லடி அடிக்கவும்..குருடி
கவி பாடவும். சானாப் புலவன் வாழ்த்துப் பாடவும்..
போட்டோக்கள் பிடிக்கவும்..... ஏற்பாடுகள் நடந்தன..
வாப்பாவின் தங்கச்சிமார்..மாமிமார் பொண்டுகள் கூட்டி வந்தார்கள். என்னை அலங்கரிக்கப்பட்ட
கதிரையில் அமர வைத்து...பூக்கள் சொரிந்து...குரவையிட்டு...பகல்வர்த்தி சக்கரம் கொளுத்தி...பால்பழம்
தந்து...பரிசுகள்...காசுகள்...துணிமணிகள்....உண்மையில் நான் பெரிய மாப்பிள்ளையேதானா..?
வந்தோருக்கு உபசாரங்கள்...அதற்குதவியாக
என் உம்மாவின் உறவினப்பட்டாளங்கள்...எப்போது பார்த்தாலும் கேக்..வாழைப்பழம்...துதல்..மஸ்கற்...கோப்பி..டீ..என்று
பான வகைகள்...பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தார்கள்....வீடெல்லாம் கலகலப்புக்குப் பஞ்சமில்லை...
வெள்ளிக்கிழமை விடிந்தது.. கண்விழித்ததுமே...வீடெல்லாம் பரபரப்பாக இயங்கியது...
ஓ... இண்றைக்கு அல்லவா சுன்னத்து....? என்ற நினைப்பு வந்ததுமே பயந்து போய் சட்டென்று எழுந்து விட்டேன்...
உம்மா வந்து என்னை அணைத்துக் கொண்டாள்... ~~ண்டைக்கித்தான் என்ட பள்ள பெரிய எளந்தாரியா ஆகப் போறான்..டோ..ய்..||
என்ற சிரித்தாள்.. மாப் பிட்டும் காடைக்குருவிக்
கறியும் தந்து சாப்பிடச் செய்தாள்... என்னைக் கண்டதும் கலந்தன் காக்கா சிரித்து...
~~ஙா...மாப்பிள்ள எழும்பிட்டியா... ண்டைக்கி
ஒரு ஆள்ர குஞ்சி அறுந்து தொங்கப் போகுது..பா..ர்....|| என்று என் கண்ணெதிரேயே அந்;த அருவாக்கத்தியை எடுத்து
முற்றத்து முண்டாக்கல்லில் கூர் தீட்டித் தீட்டி என்னைப் பார்த்துச் சிரித்தான்..
நான் வாய்குளறிப் போய் உம்மாவின் பின்னால் நின்று அழத்தொடங்pகினேன்... உம்மா சிரித்து...~~டேய்....கலந்தா..! .பிள்ளயப் போட்டு பயமுளுத்தாட்டாதடா... ||
என்று அவனுக்கு ஏசினாள்.. வாப்பா வந்துää
~~தம்பி...அவண்ட கதய உட்டுட்டு..நீ வடிவாக்
குளிச்சிட்டு வாடாம்பி...பள்ளியடிக்கிப் போய் காணிக்க போட்டுட்டு வருவம்...||
என்றார்...
கலந்தன் காக்காவும் மீரானும் எனக்குக் கிணற்றடியில் வைத்து தண்ணீர் ஊற்றி வார்த்தார்கள்..
அந்நேரம் கலந்தன்காக்கா என் அதைப் பிடித்துப் பார்;த்து ~~ண்டையோட இது அறுந்து போகும்...வெறும் மொட்டையா இரிக்கிம்...
நா ஒய்த்தமாமாட்ட செல்லிட்டன்.. வேரு செரியான துண்டாக்காரன்.. குலையோட அறு..ண்டு செல்லிரிக்கன்...||
என்றான்.. நான் பயத்தால் விறைத்துப்
போனேன். உடனே மீரான் ~~டெ..கலந்தா..புள்ளயப் பயம் காட்டாதடா.
அதெல்லாம் சும்மா செல்றான்டா
தம்பி.. .நீ ஒ;ண்டுக்கும் பயப்புடாத....|| என்று ஆறுதலளித்தாலும் மீரானும் பொய்தான் சொல்கிறானோ என்று மேலும்
பயமாகி விட்டது...
குளித்து முடிந்ததும் எனக்கு புது உடுப்பு அணிவித்தார்கள்.. வாழ்வில் முதற்தடவையாக
லோங்ஸ் அணிந்தேன்... புது உடுப்பும்..காலில் சப்பாத்தும் அணிந்து உண்மையில் பெரிய ஆள்
போலத்தானிருந்தேன்... என்னைக்கண்ட வகுப்புக் கூட்டாளிமாரும் அல்அசலில் வசிக்கிற சிறுமிகளும்
ஆச்சரியம் ததும்ப என்னைப் பார்ப்பதும் கிசுகிசுப்பதுமாக இரு;ந்தனர்.. எனக்குப் பெருமையாக இருந்தாலும் மாலை நடக்கவிருக்கும்
ஒய்த்தா மாமாவின் அறுப்பை எண்ணி எண்ணி பயந்துகொண்டுமிருந்தேன்...
மாலை அஷர் தொழுகை முடிந்த கையோடு பரபரப்பு
ஆரம்பமாகி விட்டது... ஒய்த்தா மாமா வந்துவிட்டார்.. நான் பயத்தால் விறைத்துப் போய்
உம்மாவிடம் போய் ஒட்டிக் கொண்டேன்... உம்மா சற்றுக் கவலையாக.... ~~ஞ்சங்க..புள்ள ஒரமாப் பயப்புடுறான்.. அவர மாமாட்டச் சொல்லி கொஞ்சம்
ஊதிப்பாருங்க.....|| என்றதும் வாப்பா வந்து என்னிடம் ~~ஏன்டா மகன் பயப்பர்ராய்..? வா ..வா.. மாமா கொஞ்சம் ஊதிப்பாக்கட்டும்...வா...|
என்று என்னைப் பலவந்தமாக இழுத்துக்
கொண்டு ஒய்த்தாமாமாவிட்ம கொண்டு வந்தார்... ~~மாமா...புள்ள கொஞ்சம் பயந்திரிக்கான்.. கொஞ்சம் ஊதிப்பாருங்க...||
என்றதும்- ஒய்த்தா மாமா என்னைப் பார்த்தார்...
அவரது கண்களில் ஒன்று மாறுகண்ணாக இருந்தது... ~~தம்பி...நீதானா.. மாப்பிள்ள...சரிசரி..வா..வா...ஒண்டுக்கும்
பயப்புடாத...சும்டமா கொஞ்சத்த நோண்டிவிடுவன்... ப்ப வா..ஊதிப்பாப்பம்....||
என்று சொல்லி என்னை அருகமர்த்தி அரபு
பாஸையால் என்ன்னவோவெல்லாம் ஓதி நெஞ்சில் ஊதி விட்டார்.. கைச்சந்தில் ஒரு சின்ன வெள்ளைச்
சீலையில் ஒருருபாய் நாணயக்குற்றியை முடிச்சிட்டுக் கட்டினார்.. பின் என் நெஞ்சிலும் முகத்திலும் மெதுவாக தண்ணீரினால் ஓங்கியடித்தார்...
~~ஙா..செரிநெசரி.. அ.. இனிப்பயப்படமாட்டாரு
மாப்பிள்ள...உள்ளுக்க கூட்டிட்டுப் போய் உடுப்ப மாத்திக் கூட்டிட்டு வாங்க...||
என்றார்..
கலந்தன்காக்கா அநதப் பெரிய அருவாக்கத்தியக் கொண்டு போய் ஒய்த்தாமாமவினருகே வைத்துவிட்டு
என்னை நோக்கிச் சிரித்தான்... ~~வேல செரி..|| என்றான். நான் வெருண்டு
போய்..கத்தியழ ஆரம்பித்தேன்... . இனி நடப்பதெதுவும்;
என் வசத்திலில்லை என்று புரிந்துவிட்டடது...
நான் அணிந்திருந்த லோங்ஸைக்யும் சேர்ட்டையும் கழற்றிவிட்டார்கள்.. வெறும் ஒரு வெள்ளைத்
துண்டை உடுத்துவிட்டார்கள்....
கலந்தன் காக்காவும் மீரானும் என் தாய்மாமாவும்
சேர்ந்து என்னைப் பலவந்தமாக ஒய்த்தாமாமா வின் அருகே கொண்டு சென்றனர்... . ஒரு மர உரலுக்குப்
பக்கத்தில் கீழே அமர்ந்திருந்த ஒய்த்தா மாமாவின்
பக்கத்தே ஒரு தட்டு நிறைய மணல் இருந்தது ..சின்னஞ்சிறிய கத்திகளும்...கூடவே.. பயமுறுத்தும்
ஒரு வகை மணமும்... உத்தரத்திலிருந்து நூல்
தொங்கியது..அதில் ஒரு பெரிய வெள்ளைச்சீலை கட்டி பாயின் மீது படிந்து தொங்கியது....
ஒய்த்தாமாமா ~~கத்தாத மருமகனே...ஒரு
அஞ்சி நிமிசத்தில வேல முடிஞ்சிரும்..|| என்று சொன்னார்.. நான்
உதறிக் கத்தி ஆர்ப்பரித்தேன்.. என் கூச்சலை யாரும் பொருட்படுத்தவில்லை..
ஒய்த்தாமாமா எனக்கு விளங்காதபடி கலந்தன்காக்காவிடம் ஏதோ சைகை செய்தது போலிருந்தது.
அவரின் எதிரே உரலில் என்னைப் பலவந்தமாக இருப்பாட்டினார்கள்.
எனக்குப் பின்னாலிருந்த கலந்தன்காக்கா நான்உடுத்தியிருந்த வெள்ளைத் துண்டை சட்டென உருவிவிட்டான்...
நான் நிர்வானமாக மகா அவமானத்துடனும் ஆத்ததிரத்துடனும் அவனின் கையைக் கடித்தேன்.. ஆனால்..
அவன் என்புறத் தொடைகளுக்கள் அவனது கைகளைச்
செலுத்தி என் கைகளையும் சேர்த்து ஒரே கொடுங்கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டான்... மீரான்
என் தலையை ஒரு பக்கமாகத் திருப்பிப் பிடித்துக் கொண்டான்... என்னால் அசையவே முடியவில்லை...
ஒரு சற்றும் திமிறவும் முடியவில்லை... நான் என்வசமிழந்து கண்களை மூடிக் கொண்டேன்... ஒய்த்தாமாமா மிக இலகுவாக
என் குஞ்சாமணியைப் பிடித்........ வேறு ஒன்றும் என் நினைவிலில்லை.................
எனக்கு ஞாபகம் வந்து விழித்துப் பார்த்தபோதுää
பாயில் படுக்க வைக்கப்பட்டிருந்தேன்...
உம்மாவின் முகம் கண்ணீருடன் தெரிந்தது... வாப்பா சிரித்தபடி என்னிடம்...~~எல்லாம் முடிஞ்சி மகன்... நோகுதா..?||
என்று கேட்டார்... கலந்தன்காக்காவும்
மீரானும் புன்னகைத்தனர்... ~~சின்னத்து வெச்சாச்சேய்...|| என்றனர்... எனக்குத்
துளி கூட வலிக்கவில்லை... நான் தயக்கமாக என்னை மூடியிருந்த வெள்ளைச்சீலையைச் சற்று
உயர்த்திப் பார்த்தேன்... எதுவும் தெரியவில்லை... ஆயினும் என் குஞ்சாமணியைச் சுற்றி
சீலையால் கட்டுப் போடப்பட்டிருந்தது..ஓ..இருக்கிறது. நான் வெட்கத்துடன்..ஒய்த்தாமாமாவைப்
பார்த்தேன்... ஒய்த்தாமாமா என்னைப் பார்த்து ~~எ;ன்ன மருமகனே... ஒரு சின்னத்துண்டை நோண்டிவிட்டேன்.... எப்பிடி..நோகிச்சா...ல்லியே...
வாப்பாட்டச் சொல்லி எனக்கி காணிக்கை கூடயா வாங்கித் தா...||
என்று சிரித்தார்....அதன் பிறகு எனக்கு
ஒய்த்தாமாமாக்களைக் கண்டால் ஒரு பயமும் இல்லை....(2012)
8888888888888888888888888888
அணில்
அலிகன்;முல்ல அஞ்சல் அலுவலகம்
அமைந்திருந்த பெரிய வளவின் முற்றத்தில் பிரமாண்டமாக வளர்ந்திருந்தது மருதமரம் ஒன்று.
அதன் பக்கக் கிளையிலிருந்த பொந்தக்குள்ளிருந்து நாளைக்கு கொல்லப்படவிருந்த அந்த அணில்குஞ்சு
எட்டி எட்டிப் பார்த்தது. ~~கிச்..கிச்||ன்று கத்தியது. திடீரெனத் தாவி மறுகிளைக்குக் குதித்தது. கீழே குறுகுறுவெனப் பார்த்தது. அதன்; பஞ்சு வால் ஆடிக்கொண்டேயிருந்தது. தன் எஜமானான தபாற்சேவகன் இந்திகவைத் தேடிக் கொண்டிருந்தது.
அஞ்சல் அலுவலகத்தினுள் அவசரஅவசரமாகத் தபால்பை கட்டிக் கொண்டிருந்த இந்திகவின் காதுகளில் ~~கிச்..கிச்||சென்ற சத்தம் கேட்டதும் விரைவாக வெளியே வந்தான். அவன் மரத்தினடியில் வந்ததும்
அணில் ~கிச்|சென்ற சத்தத்துடன் அவனது தோளில் பாய்ந்தது.
இந்திக அதன் முதுகைத் தடவிக் கொண்டு அதனிடம் ஏதேதோ சொல்லிக்
கொணடிருந்தான். பலமாத காலமாக இந்த விசித்திர உறவு தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அஞ்சல்அலுவலகத்தினுள்ளிருந்து யன்னலூடாக
விநோதமாகப் பார்;த்துக்கொண்டிருந்த நஸீர். ஒர் உதவித்தபால்அதிபர்..
இந்திகவைக் கூப்பிட்டான்.
~~இனி..? இந்திக அணில் இண்டைக்கு
என்ன சொல்லிற்று..?|| நஸீர்; கேட்டதும் இந்திக
சிரித்து-
~~பவ் மஹத்தயா.. தவஸ் தெக்கஹிந்த கொல்லாட்ட தரஹவெலா மாத்தெக்க..
அய் தன்னவாத..? மெ பேரக்கெட்டியக் துன்நேள்ளு மங்...||
(பாவம் மஹத்தயா.. அதுக்கு ரெண்டு நாளாக
கோபமாம் என்னோட.. ஏன் தெரிமா.. கொய்யாப்பழம் கொடுக்கயில்ல நான்..) என்று சிரித்தான்.
~~ஹரி..ஹரி.. லொக்கு மஹத்தயா ~செக்| கரண்ட எனவா.. ~டக்|காலா மெயில் எக்க வஹண்டகோ..|| (பெரிய ஐயா ~செக்|பண்ண வெருவாரு.. கெதியா மெயிலைக் கட்டு)
அச்சமயம் பெரிய தபாலதிபர் வினாயகமூர்த்தி ஐயா உள்ளே வந்தார். ஊர் கோப்பாய். இந்தச் சிங்களக் கிராமத்தில் ஆறு வருடங்களாகக்
கடமை செய்து வருகிறார். சிங்களம் தளதண்ணி மனிசருக்கு. நஸீருடன் மட்டும் தமிழில் கதைப்பார்.
கூட நஸீருடன் இந்திகவும் இருந்தால் சிங்களம்தான்.. (அவன் தப்பாக நினைத்துக் கொள்வானாம்.)
~~தம்பி..நஸீர்... சரியா எட்டரைக்கெல்லாம் ~மெயில்பஸ்| வந்திடுமடா மோனே....
முடிஞ்சிருமோ.?||
~~ம்..ஐயா.. இப்ப முடிஞ்சிரும்..||
~~சரி முடி.. எதையும் கெதி பண்றத்துல சோனகர் மெத்தவும் உசார்தான்..||
-பெரியவர் அரசியல்வம்புக்கு இழுத்தார்.
கதை கொடுத்தால் பண்டாரவன்னியன் தொடக்கம் பிரபாகரன் வரை அணிவகுப்பர்..
~~.........................||
நஸீர் பேசவில்லை. ஆனால் பெரியவர் விடவில்லை.
~
ந்த நாட்டுல பூர்விகம் எண்டால் அது
இசக்கர் நாகர் என்ட தமிள் பேசின இனம் மட்டும்தான்.. தெரியிதே..?
சிங்களரும் விஜயன்ட வருகைக்குப் பிறகுதான்
வந்திச்சினம்.. சோனகருக்கும் லங்கைக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.. நான் தந்த உவன் ~வால்ட் டய்லரி|ன் கட்டுரையைப் படிச்சனீர்தானே..? அப்பிடி இருக்கேக்க
அவரு உங்கட தலவரு அதென்னது.. ஙா.. பூர்விகம் பத்தி பார்ளிமெந்துல பேசப் போறாராமே..
என்ன பேசாம இருக்கிறீர்..? என்னவெண்டாலும் சொல்லுமன்...|| பெரியவர் விடவில்லை..
~~இதுக்குப் பதில் சொல்ல ப்ப நேரமில்ல ஐயா..!||
நஸீர் சுருக்கமாக வெட்டினான்.
~~ஹிக்ககீய்.. ஏ.. என்னது..? ஙா...ங்.. தனிஅலகு! ...
தனிஅலகு வேற வேணுமாம்.. ம்க்க்க்.. நல்ல பகிடியொண்டெல்லே இது..?||
நஸீர் வாய் பேசவில்லை. எனவே. பெரியவர்;
தன்; பேச்சை தற்காலிக போர்நிறுத்தம் செய்தார். பெரிய மேசையில் உட்கார்ந்து
முத்திரைக் கணக்குகளைச் சரிபார்க்க ஆரம்பித்தார்.
திடீரென யன்னலில் ~~கிச்கிச்சென|| சத்தம்.. முதலில் ஒரு பட்டுப் பஞ்சு வால் தெரிந்தது. பின்னர் துள்ளித் திரும்பியதில்
முதுகில் மூன்று கோடுகளுடன் சின்னக் கண்களால் எட்டிப் பார்த்தது அணில். இந்திக கண்களால் எச்சரித்ததை அது அலட்சியம் செய்து
உள்ளே தாவி வந்தது. பெரியவரின் அருகே ஓடியது..~~ச்சூ..ய்ய்ய.|| என்று அதட்ட அணில் பயத்துடன்
ஒரே தாவலில் இந்திகவின் சீருடைப் பக்கெட்டினுள் தாவி ஒழிந்து கொண்டு பொட்டுக் கண்களால்
எட்டிப் பார்த்தது. அமைதி கலைந்த பெரியவர்
~~~உன்ர அணிலுக்குச் சிங்களம் தெரியுமே..?||
என்று தமிழில் கேட்டார்.
~~கொஞ்சம் கொஞ்சம் இயலும் ஸேர்..||
கேள்வியில் விருப்பமின்றிச் சிரித்தான்;
இந்திக.
~~எடடே.. மிருக சாதிக்கே சிங்களம் வெளங்குது.. இந்த உந்தச் சிங்கச்
சாதிக்கு தமிள் விளங்கறயில்லையாம்.. உங்கட சோனகச்சாதிக்கு பாசைப் பிரச்சினயில்லையப்பு..
சிங்களவனோடச் சேர்ந்தா சிங்களம்.. தம்ளனோடச் சேர்ந்தா தம்ள்.. அரபுநாட்டுக்கப் போனால்
அரபு.. உந்த வெசயத்துல சோனகரின்ர திறமையை பாராட்டத்தான்
வேணுமப்பா.. சாதாரணமா மூணுநாலு பாசை தெரியுமில்லே.. சோனகருக்கு..?||
என்றார். நஸீர் பேசவில்லை. அதைப் பொருட்படுத்தாத
பெரியவர்
-~அடே நஸீர்.. இந்திக்க கேளுங்களடா.... ஒமந்த கேம்ப் எக்க அபே கொட்டி அற்றாக் கரண்ட வெலாவட்ட...||
(ஓமந்தை கேம்ப்பை எங்கள் புலிகள் தாக்கும்
போது...)... என்று புலிப்படைப் புகழ் பாடத் தொடங்கி ஸ்ரீ போராட்டம் தொடக்கம் தரப்படுத்தல் சட்டம்...
சிங்களம் மட்டும் சட்டம்... அதன் விளைவான தமிழர் பாதிப்புக்கள்.. அதன் தொடர்ச்சியான
போராட்டங்கள்.. அது ஆயுதப் பேராட்டமாக உருவெடுத்த வரலாறு... என்றெல்லாம் தொடரவே நஸீரும்
இந்திகவும் அணிலும் புன்னகைத்தபடி வேறுவழியின்றி வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
0
அணிலின் மரணம் தீர்மானிக்கப்பட்ட அன்று ஞாயிற்றுக் கிழமை தபாலகம் இரண்டுமணி நேரம்தான்
திறந்திருக்கும். முக்கியமான தபால்கள் கட்டப்பட
வேண்டும். பெரியவரும் நஸீரும் இந்திகவும் மும்முரமாகவேலை செய்துகொண்டிருந்தனர். அணிலும்
வெகு சுதந்திரமாக தபால் அறையில் ஒடித் திரிந்து கொண்டிருந்தது.
திடீரெனப் பெரியவர்
ஆரம்பித்தார்.
~~-நேத்து பீபிஸி கேட்டனீரே.. ..உம்மட தலைவருக்கு தனிமாநிலம் வேணுமாம்.
ஆடு அறுக்கிறத்துக்கிடையில அதுர புடுக்க அறுக்........அடச்ச்ச்ச..சே.. உந்;த அணிலப் பாருமன்.. ~மெய்ல்பேக்கு|க்குள்ளயெல்லே போய்ட்டுது.. கலையடாப்பா அத..||
~~~ஐயா சமைக்கல்லையா..?|| கேட்டான் நஸீர் மறுபடி தமிழரசியலுக்கு பெரியவர் வந்துவிடாதபடி..
~~-
சமைக்கத்தான்.. இண்டைக்கு அசைவம்தான்..
நானும் உவன் இந்திகவும் கொஞ்சம் ~முஸ்;பாத்தி| எடுப்பமெண்டு.... நில்லுமன் நீரும்.. இண்டைக்கு எங்களோட.. கொஞ்சம்
~ட்ரிங்க்|
எடுப்பமென்ன..?||
~~நான் குடிக்கிறல்லை ஐயா..
இண்டைக்கு நான் வீட்ட போயே ஆகணும்.. அய்யா.. தலைக்கு மேல வேல இருக்கு..||
~~மோமோம் தெரியும்.. தலைக்கு மேலயில்ல கீழதான் வேல இரிக்கும்..
சோனகர் என்ன இல்லாட்டாலும்; இருப்பினம். ஆனா ........ ல்லாம இருக்கமாட்டினமெல்லே..?
சரி..சரி.. நீர் போறெதெண்டால் போம்..
என்ற பெரியவர்- இந்திகவிடம்..
- இந்திக.. ரெட்ரம் தெக்க வைற் காலயக்.. பியர் எக்க .||
பெரியவர் இந்த விசயத்தில் மட்டும் கஞ்சத்தனம்
பார்க்கமாட்டார். ஐநூறு நோட்டை விசிறிவிட்டு குவார்ட்டஸ் பக்கம் சென்றார்.
~~
இரண்டுமணியாகிவிட்டது. அம்பலாங்கொட தபால்வண்டி வந்துவிட்டது. தபாலைப் பாரம் கொடுத்து
ஒப்பம் பெற்று சகல கதவுகளையும் சாத்தித் தாளிட்ட
நஸீர் திறப்;புக்களை எடுத்தக்
கொண்டு ~குவார்ட்டஸ்|
பக்கம் வந்தான். சமையற்கட்டிலிருந்து இறைச்சி பொரியும் மணம் ~கம்மெ|ன மணத்தது.
~~அய்யாட அசைவச்சமையல ஒரு நாளைக்கு ருசி பார்க்கனும் நான். ~தக்பீர்| பண்ணிண இறைச்சி கொண்டு வாரன்.. ~ரோஸ்| பண்ணுவீங்களா அய்யா..||
~~உதென்ன விசர்க்கேள்வி.. றச்சி ~ரோஸ்| பண்றத்துல நான் ~கிச்சன்கிங்| தெரியுமே..? கொண்டாரும்..கொண்டாருமன்.. அதெல்லாம் வெகு ~ஸ்பெசலாக|ச் செய்வனடா.. றச்சி சமைக்க எனக்கு ஒரு காத்தான்குடிச் சோனகன்தான்;
பழக்கி விட்டவன்.. அருமையாச் சமைப்பானப்பா..
நான் காத்தான்குடியில... ஆயிரத்தி..||
~~ஆயிரத்தி அறுவத்தி ரெண்டு தடவ சொல்லிட்டீங்கய்யா.. நன்றிகெட்ட
சோனகர் குவார்ட்டஸ்க்க புகுந்து சுட வந்திட்டினம் எண்டு.... |
~~அந்தா பாத்தியா..? அதான் சோனகர்..!||
~~கறி என்னய்யா... மாடா..? கோழியா.. இன்றைய ஸ்பெசல்..?||
~~ரண்டுமில்ல.. அணில்..
~~என்னது...? என்னய்யா.. என்;ன இறைச்சி..?||
~~அணில்..! உவன் பியோன் இந்திகவின்ர லேணா..||றச்சி ரோஸ்ட்..||
அதிர்ந்துபோய்விட்டான் நஸீர். இந்திக வளர்த்த அந்;த அணிலா..? ச்சே என்ன மனிசன் இந்த ஆள்..? ஆத்திரமும் அதிர்ச்சியுமாக நஸீர் படபடத்தான்.
~~என்ன அய்யா இது.. மோட்டுக்; காரியம் பண்ணீங்கள்..? அவன்ர அணிலயா கறி
ஆக்குறது..? இத அவன் அறிஞ்சால்
எண்டால்...? அறியத்தானே போகிறான்..
இப்ப சாராயம் எடுத்திற்று வந்து அணிலத்தானே தேடுவான்..?
இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்களோ
தெரியா.. என்ன மடத்தனம் இது.. இத்தனைக்கும் அவன் அன்பா வளர்க்கிற அணிலயா... ச்சே..க்..!||
~~என்னப்பா பினாத்துறீர்..? சோனகரும் தாம் அன்பா வளர்க்கிற ஆடு மாடுகளத்தானே வெட்டுகினம்..
அது பாவமில்லையே...?||
~~என்ன மடத்தனம்..! அதுவும்
இதுவும்; ஒண்டா அய்யா..?||
~~வேறென்ன..? எல்லாம் வாயில்லாத சீவராசிகள்தானே ப்பு..?||
~~இப்ப இந்திக வந்தான் என்டால்..?
என்ன நடக்கும்..?
இங்க நடக்கப்போற கொலைக்கு நான் சாட்சியா
இருக்க விரும்பல்ல.. திறப்பப் புடிங்க அய்யா.. நான் வீட்ட போறன்.. என்ன மடத்தனம் இது..
அவன்ட அணிலப் புடிச்சி... பாவம் புண்ணியம் பாக்காமக் கொண்டு.. ச்சே.. அய்யா.. கடசியா
ச் சொல்றன்.. நீங்க இஞ்ச இருக்கிறது நல்லா இரிக்காது.. ~டக்கெ|ண்டு வெளிக்கிட்டு எங்கேயாச்சம் போங்க.. இல்ல என்னோட வாங்க..
அவன் இந்திகட அண்ணண்மார் ஆமில இரிக்கான்..
அனுராதபுரத்துல அறுத்து ஒரு மாதமாகயில்ல.. ச்சே.. என்ன செய்யப் போறீங்க அய்யா..?||
பெரியவர் ஒரு குறுஞ்சிரிப்படன் அதி நிதானத்துடன் சொன்னார்.
~~இண்டைய சாராயத்க்கு
~றச்சிரோஸ்|தான் ~பைற்| வேண்டுமென்று அவன்தான் கேட்டவன். இப்ப அவசரத்துக்கு மாடு ஆடு
தேடேலுமே... உதுதான் வசதியா அகப்பட்டுது.. நீர் விரும்பினா நில்லும்.. இல்லாட்டால்
உன்ர பெண்டிலுட்ட ஓடுமன்..||
நஸீர் பதற்றத்துடன் சட்டென்று திரும்பி வெளியே வந்தான்.. தன் கைப்பைகளை எடுத்துக்
கொண்டு வேகமாக மருதமரத்தைக் கடந்த போது இந்திக..
மனம் பயத்தில் துணுக்குற்றது. இந்திக
கையில் தபாற்பைக்குள் மூன்று சாராயப் போத்தல்களை மறைத்துக் கொண்டு ஒரு ~டிபிடிப்| பக்கட்டை எடுத்து மருதமரத்திடம் காண்பித்து..~~சிக்கூ.....ஸ்...| என்று விசிலடித்தான்.. பதிலளிக்க யாருமில்லை.. மீண்டும் கூப்பிட்டுப் பார்த்தான். அணில் வெளிவரவில்லை.. ~
~ஙா..ஙா.. வடகினினம் எனவாந் நே..?
வலமுவலமு..||
(பசியென்றால் வருவாய்தானே பார்ப்போம்..
பாhப்போம்..!!) ;என்று கறுவியபடி ஒரு சிறு கல்லைப் பொறுக்கி அணில்ப் பொந்தை நோக்கி
எறிந்து விட்டு உல்லாசமாகச் சீட்டியடித்தபடி குவார்ட்டஸ் பக்கம் சென்றான்..
;.
நஸீர் பயத்துடன் குறுக்குக் கிறவல் பாதையில் இறங்கி விரைந்தான்..
0
எல்லைகளில்லாத கொலைக் கற்பனைகளுடனும்.. அதீத கலவரத்துடனும் பிரயாணம் செய்து இரவு
சரியாக எட்டரைக்கு வீடு வந்த சேர்ந்த நஸீர் உடனடியாகப் பரபரப்புடன் அலிகன்முல்ல தபாற்கந்தோருக்கு தொலைபேசி எடுத்தான். நெடு நேரமாக
மணி அடித்துக் கொண்டிருந்தது. மனம் பதைபதைத்தது.
அலிகன்முல்ல பொலிசுக்கு அறிவிப்போமா என்று யோசித்தான். திடீரென தொலைபேசி மணி அடித்தது..
பரபரப்புடன் எடுத்தான்.
~~ஹெல்லோ.. ஙா.. நஸீர்.. ப்ப நீர் கோல் எடுத்தனீரே..?||
பெரியவரின்; சற்றே போதை கலந்த
குரல்.
~~அய்யாவா..?
நான்தான் எடுத்தனான். நீங்க உயிரோட இருக்......||
~~நான் சாகுறத்தில் உந்தச்
சோனகருக்கு அவ்வளவு விருப்பமே..?||
~~ல்லை அய்யா.. அவன் இந்திக
தன்ர அணில....||
~~உன்ர கற்பனப் புத்திய கதையள் எழுதறத்தோட நிப்பாட்டப்பு.. உது
இந்திகவின்ர நான் ~ரோஸ்| பண்ணின ஆறாவது அணில்
தெரியுமே...? அந்தா சட்டியோட
வழிச்சிவழிச்சி விழுங்கிற்று விழுந்து கிடக்கிறானடா பாவி..மோனே...!||0 (1998)
8888888888888888888888888888
தாய்மொழி.
தாய்லாந்து..! கிழக்காசியாவிலேயே பிரித்;தானியப் படைகளால் ஒரு போதும் ஆளப்படாத ஒரேயொரு நாடு.! தாய்லாந்தின் தலைநகரம் பாங்கொக்கிலிருந்து முன்னூறு
கிலோ மீற்றர் தூரம்ää அதன் ‘கூவன்கோவ்’
மாநிலத்திற்கு பறந்து அல்லது விரைந்து
வாருங்கள். உங்களை வரவேற்கிறது ‘ஹொங்க்லா’!
இரவுக்களியாட்ட விடுதிகளின் மாநகரம்.!
சூதாட்டக்கிடங்குகளின் சொர்க்க பூமி. பகலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிää இரவில் விழித்திருக்கும் மின்மினி நகரம்.
‘ஹோங்க்லா’வின் நெருக்கமான சீமெந்துக்
கட்டிட மரங்களிடையே படு சுத்தமான கார்ப்பட் தெருக்களில் வழுக்கும் பன்னாட்டுக் கார்கள்..
பாதாள ரயில்த் தொடர்.. பளீரிடும் நியோன் விளக்குகளின் வர்ணஜால ஒளிவெள்ளத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பந்தயத்
திடல்கள்.. பற்பல நட்சத்திரங்கள் மார்பில் சூடிய ஹோட்டல்கள்.. உல்லாசபுரிக்கான சிவப்புத்
தெருக்கள்.. இலட்சக்கணக்கில் மனிதர்கள்.. மனிதர்கள்.. மனிதர்களிடையே ஒருவனாக நான்ää தாமோங்..! தாய்யீக்காரனல்லன். அசல் இலங்கைத் தமிழன். அரசரத்தினம்
தாமோதரநாதன். என்ற நீளப் பெயர் இங்கு தாய்யி(லாந்து)
மொழி உச்சரிப்பு வசதிக்காக “தாமோங்.!”
அப்படித்தான் என்னை அழைக்கிறார்கள். ஊர் கோவில்பற்று. வயது முப்பது. புலம் பெயர்ந்து
வந்த கதைகள் ஏராளமாக பின்னணியில் உள்ளன. ஆனால்ää
அதல்ல நான் இப்போது சொல்ல வந்தது.
நீண்டுயர்ந்த தென்னைமரங்களை புற்களாகக் கருதிக் குனிந்து பார்க்கும் ஊசிக்கட்டிடங்களின்
அடுக்குகளிடையே தனிக் கம்பீரமாக மூன்று ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் இரவுக்களியாட்டரங்கு ‘சாயுங்’! ஆறாயிரத்து நூறு
ஊழியர்கள் பணி செய்யம் இந்தக் களியாட்டரங்க
விடுதியில் எனக்கு வேலை. என் வேலை சுலபமானதுதான். ஆனால் எப்போதும் அபாயம் அதன் பின்னணியில்
ஒழிந்திருக்கும். ‘சாயுங்’ களியாட்டரங்க விடுதியின் ஸீ வலயக் கட்டிடத் தொகுதியில் உட்புற
வாகனத் தரிப்பிடத்தில் நான் ஒரு சாதாரண காவல் சிப்பாய். இரப்பர் குண்டுகள் நிரப்பிய அதிநவீன துப்பாக்கியும்ää கறுப்புச் சீருடையும் தந்திருக்கிறார்கள். தீப்;பெட்டிகளை அடுக்கி வைத்தாற் போன்று பரந்து தரித்திருக்கும் வாகனத்தரிப்பிடத்தில் அவற்றை ஒழுங்குபடுத்தும் காவல்சிற்றாழியர்களில்
ஒருவன் நான். இரவு பத்துமணி தொடக்கம் காலை
ஆறு மணிவரை வேலை.
பணத்தையும் வாழ்க்கையையும் சேர்த்தே பிடுங்கும் “சாயுங்”கின்ää ஸீ வலயமான சூதாட்டக் கிடங்கில் முதலீடு செய்ய வரும் மனிதர்கள்..
தாய்யிகள்.. அரபிகள்.. வெள்ளையர்கள்.. ஆபிரிக்கர்கள்.. விதம்விதமான மனிதர்கள்.. “வர்ணங்கள் வேற்றமைப்பட்டாலும் அதில் மானிடர் வேற்றுமையில்லை” என்று பாரதி பாடியது இந்த இடத்திற்கும் மிகப் பொருந்தும். தனி விமானத்தில் பறந்து வந்து சூதாடிää உடுத்தாடையும் இழந்து தம் தாய்நாட்டுக்கு சாயுங் தெருக்களில் பிச்சையெடுத்தபடியே திரும்பிச்
சென்றோரும்ää அதே தெருக்களில் பிச்சையெடுத்து அதை வைத்துச் சூதாடி அதிர்ஸ்ட
தேவதை முகம் பார்த்ததால் பண வெள்ளம் கொட்டித் தனி விமானத்தில் வேறு தாய்நாடு தேடிப்
பறந்தவர்களும் இருக்கிறார்கள்..! இன்றைய உன் பணம் நாளை என் பணம் என்பது இங்கு எழுதப்படாத
விதியாயிருக்கும் போது அபாயம் அதன் பின்னணியிலிருக்காதா
என்ன..?
என்ன சொல்ல வந்தேன்.. ஆம்..! நான் தாமோங்.! வாகனத் தரிப்பிடத்pல் காவல் புரிந்து கொண்டும்ää சூதாடிவிட்டு வெளிவரும்
வாடிக்கையாளரின் வாகனத்தை முன்பின்னாக எடுக்க உதவுவதிலும் ஈடுபட்டிருப்பேன். வெற்றியுடன்
வருபவர்கள் என்னை நோக்கி சில ‘பாத்’களை வீசிச் செல்வர்.
அவற்றைப் பொறுக்கிச் சட்டைப்பைக்குள் போடுவேன். தோற்றுவிட்டு வருவோர் வீசும் தாயிமொழித்
தூஷணச் சொற்களை அப்படியே ‘குவான்ஸோ’ நதியில் வீசிவிடுவேன். எட்டு மணித்தியால வேலை என்றாலும்ää வேண்டிய மட்டிலும் மேலதிகநேர வேலையும் கிடைக்கும். சாப்பாடும்ää தங்குமிட வசதியும் 320 பாத்களும் தருகிறார்கள்.
தாராளம்.. வாகனத் தரிப்பிட அன்பளிப்புகள் வேறு..
இந்த வேலைக்கு அவர்களின் தாயிமொழி ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். எனக்கு தாயிமொழி பேசப் புரியும். ஆயின் எனது சொந்தத் தாய்மொழி பேசத்தான்
இங்கு யாருமிலர்.
ஆயிரத்து இருநூறு கார்கள் வரிசையிட்டு நிறுத்தியிருக்கும் அழகை ரசித்தபடிää
போகும் வரும் வாகனங்களுக்கு உதவியாக சிற்சில சமிக்ஞைகள் காட்டிக் கொண்டிருந்தேன். கதவு திறந்து வெளிப்படும் பிரமுகர்களுக்கு தலைவணங்கி ‘சாலானு’ கூறி வழியனுப்பிக் கொண்டிருந்தேன். திடீரென அரங்கிலிருந்து வெளியே
ஒரு தாயிப் பெண்மணியும்ää எனது மேலதிகாரியான
ஒரு பாதுகாப்பதிகாரியும் பரபரப்புடன் வருவது தெரிந்தது. அப்பெண் தாயிமொழியில் ஆத்திரத்தில்
கிறீச்சிட்டுக் கத்திக் கொண்டே வந்தாள். மேலதிகாரிää
ஒரு வாலிபனைப் பிடித்து இழுத்துக் கொண்டு
கூடவேää வந்தான். நான் மேலதிகாரியை நோக்கி ஒடிச் சென்றேன். என்ன கலவரமோ..?
நான் ஓடி அவர்களை நெருங்கியதும்ää
மேலதிகாரிää “
தாமோங்..! ஹாங்கூ. ஹொக்குந் ஜதாஸியோவ்.!
ஜதாஸி.! குனங்குவ்.. மாவோ..!”
என்று கட்டளையிட்டான். நான் சற்றும் தாமதியாது பிடித்துவரப்பட்ட அவ்வாலிபனை பின்கட்டாக மடக்கிப்
பிடித்துக் கொண்டேன். அந்த வாலிபன் தாயிக்களைப் போலல்லாது கறுப்பு நிறத்தவனாக இருந்தான்.
தலையை மொட்டையடித்திருந்தான். பார்வைக்கு அப்பாவி
ஆசாமி போலும்ää ஆனால்ää
தாய்லாந்தின் பாதாளக் கிடங்குவாசிகள்
போலும்ää இருந்தான். தாயிமொழியில் என்னவோ சொன்னான். சொன்னது விளங்கவில்லை.
முகத்தில் அடி வாங்கியதில் உதடுகள் வெடித்து இரத்தம் கசிந்திருந்தது. அந்தப் பெண்மணி
இன்னமும் உரக்க ஏதோ புகார் சொல்லிக் கத்திக் கொண்டிருந்தாள். என் மேலதிகாரி அவளது ஆத்திரத்தை
உள்வாங்கிää வருத்தம் தெரிவித்துää
சிரித்த முகத்துடன் கவனமாகக் கேட்டுக்
கொண்டு அவளைச் சாந்தப்படுத்தினார்...
எனக்கு விளங்கியதிலிருந்துää
இவ்வாலிபன் இப்பெண்மணியிடம் அதிக இலாபம் கிடைக்கும் அதிர்ஸ்டச் சக்கரத்தில் பலவந்தமாக முதலீடு செய்வித்து ஆயிரத்திருநூறு பாத்களைத் தோற்க வைத்ததாகவும்ää அதே சமயம் இதற்காக இருநூறு பாத்கள் கமிஷன் பெற்றுக் கொண்டதாகவும்
மேலும்ää தனது பெறுமதிவாய்ந்;;த தங்கக் கைக்கடிகாரம் ஒன்றைத் திருடி விட்டதாகவும் குற்றம்
சாட்டியிருந்தாள். பணத்தைத் தோற்ற ஆத்திரத்தில் வாடிக்கையாளர்கள் இப்படிக் குற்றம்
சாட்டிச் சண்டைக்கு வருவது இங்கு வழக்கம்தான் என்றாலும்ää கைக்கடிகாரத் திருட்டு நடந்ததில்லை. பாதுகாப்பதிகாரியும்ää அக்கைக்கடிகாரத்தை அவ்வாலிபனின் காற்சட்டைப் பையிலிருந்தே கைப்பற்றியிருந்தார்.
இக்குற்றத்திற்குää இங்கு தண்டணை கொடூரமாகவிருக்கும். பொலிஸில் ஒப்படைக்கு முன்னரே விடுதியின் உள் நிலவறையில் அடைத்து வைப்பார்கள்.
மணல் நிரப்பப்பட்ட பொலித்தீன் பைகளால் கடுமையாக அடிப்பார்கள். காயம்; ஏதும் இல்லாமல் வலி உயிர் போகுமளவுக்கு இருக்கும். போதுமானளவு
அடித்து விட்டு மிகத் தாமதமாகவே பொலிஸாரை வரவழைப்பார்கள்.
அவ்வாலிபனைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாகவும்ää
அதேசமயம் கோபமாகவும் இருந்தது. தாயிப்பெண்மணி
அவனை இலேசாக மன்னிப்பதாயில்லை. எனவேää
பாதுகாப்பதிகாரி அப்பெண்ணை மேலதிக விசாரணை
அறைப்பக்கமாக அழைத்துச் செல்ல முடிவு செய்துää அவ்வாலிபனை என்னிடம்
ஒப்படைத்தார்.
‘யஜ்ஜிங்கூவ்.. தாய்க்வ. சாவோங்ää
ஸீஙான்..!” (இவனை நிலவறைச் சிறைப் பொறுப்பாளன் சாவோங்கிடம் ஒப்படை.!)
நான் அந்த வாலிபனை துப்பாக்கிமுனையில் சற்றுப் பலவந்தமாக நிலச்சிறையறைக்குத்
தள்ளிச் சென்றேன்.. அவனை நடத்திக் கொண்டு வருவதில் ஒரு சிரமமுமிருக்கவில்லை. ஏற்கனவே
இங்கு வந்த அனுபவம் உள்ளவனைப் போலத்தான் தோன்றியது. ஏனெனில்ää அவன் முன்னால் நடந்து கொண்டிருக்கும் போதே சந்து பொந்துகளில்
தானாகவே திரும்பினான். மற்றதுää
போகும் போதே ஒரு தடவை என்னைத் திரும்பிப்
பார்க்காமலேää மெதுவாக
“ நுமக்னா ஸதோஜ் பாத்
செவுஙீன்? ” என்றான். (உனக்கு
எழுபது பாத்கள் வேண்டுமா..?) இதன் கருத்து அவனைத் தப்ப வைப்பதற்குச் சம்மதமா.
“ஜிமஞன் மஸாநு ழய்யீ…லய்யீ..”
(நான் மலம் சாப்பிடுவதில்லை.) என்று
அவனுக்குப் பிடரியில் ஒரு அறை கொடுத்தேன். புpன்ää நிலவறைக்குள் நெட்டித் தள்ளி விட்டேன். வேகமாகத் தள்ளுப்பட்டுச்
சென்று சுவரில் மோதி விழுந்தான்.
00
நிலவறைச் சிறையில் பொறுப்பதிகாரியாக இருப்பவன் சாவோங். சப்பை மூக்குடனும் கொடூரமான இடுங்கிய கண்களுடனும் இருப்பான். பொல்லாத
குரூர மனத்தினன். குடித்தால்ää
அடிப்பதற்கு யாராவது கட்டாயமாக வேண்டும்.!
இன்னும் குடிக்கவில்லை. போலும். நிதானமாக இருந்தான். கூண்டுக்குள் இன்று குற்றவாளிகள்
யாருமிலர். வழமையாக இரண்டு மூன்று குற்றவாளிகளாவது இருப்பர். ஆனால்ää நேற்று இங்கு விஜயம் செய்த தலைமைப்பாதுகாப்பு அதிகாரியால் அனைவரும்
பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் அறை
காலியாகவிருந்தது. இப்படி இருப்பதும் ஒரு வகையில் ஆபத்து. ஏனெனில்ää வரும் போகும்ää
பாதுகாப்புச் சிற்றூழியர்கள் எல்லோரும்ää குடித்து விட்டு யாரையாவது அடிக்க வேண்டும் போலிருந்தால்ää இங்குதான் வருவார்கள். அல்லது இவன் சாவோங்கே போய் யாரையாவது கூட்டி வருவான். குடிப்பதற்கும்ää அடிப்பதற்கும் பங்காளியாக.. சந்தர்ப்பத்தில் பல குற்றவாளிகள்
இருந்தால்ää அடிகள் பரவலாக எலலோருக்கும்
பகிரப்பட்டுவிடும். ஆனால்ää இவ்வாலிபனின் துரதிர்ஸ்டம்.. இன்று இவன் மட்டும் தனியாக.. சகல அடிகளையும் வாங்கியாக
வேண்டும்.
பொறுப்பதிகாரி சாவோங் மகிழ்ச்சியடன் எழுந்தான்.. இரும்புக் கம்பிக்கூண்டுக்
கதவை இழுத்துச் சாத்தினான். மோதி விழுந்த அந்த வாலிபன்ää விரைவாக ஓடிவந்து கம்பிக் கதவுகளைப் பிடித்துக் கொண்டு
‘ஞா.. ஸொல்ங்கவு..
சஜ்ஜி லாங்கூ.. சஜ்ஜி லாங்கூ!”
என்று கத்தினான்.
‘சஜ்ஜிலாங்கூ தாவோயிங்..
பொலிஸ்லு நுஞ்சி கட்கு வாணங்கோவ்..’
இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டுää
சாவோங்கைப் பார்த்தேன். சாவோங் தன்
கண்களை இடுக்கிக் கொண்டு.
‘நாஞ்சுக்கு சன்வியாவோ..தாமோங்.!’ என்று என்னிடம் கேட்டான். (பசியோடிருந்தேன். புதிய பட்சி கிடைத்திருக்கிறது
தாமோங்.)
‘சோய்ங்.. சாஜூ!” (அடித்துச் சாப்பிடு) என்று வெறுப்புடன் சொன்னேன். .
‘ஞா.. சோல்வர்..!
ஞா.. சோல்வர்..!’ (நான் நிரபராதி.. நான் நிரபராதி.. ) கூண்டுக்குள்ளிருந்து அந்த
வாலிபன் கூப்பாடினான். அவனது கெஞ்சுதலுக்கும்ää
கூப்பாடுகளுக்கும் செவி கொடாமல் சாவோங்
கூண்டுக்குள் கைவிட்டு துப்பாக்கியால் அவனை ஒரு இடி இடித்தான்.
‘ஆ….!.’
கதறித் துடித்தபடியே நிலத்தில் விழுந்தான்
அவன். இதைப் பார்த்துக் கொண்டு நிற்க என்னால் முடியாது. எக்கேடாவது கெட்டுப் போகட்டும்.
இனி அவன் பாடு.. சாவோங் பாடு.. இப்படி எத்தனையோ கேஸ்கள் பார்த்தாயிற்றே.. ‘ ஜய்.. சாவோங்..! நுய்ஞ்ஙாய் ஸல்மோவ்’ என்று சொல்லி விட்டு நடந்தேன்.
எனக்கு பசியெடுத்தது. வாகனத்தரிப்பிடத்தை விட்டும் நீங்கி வந்ததால்ää பொருளாதார இழப்புகளும் இருந்தன. விரைவாக வந்து மறுபக்கத்திலுள்ள
சிற்றாழியர்களின் உணவுக் கூடத்துள் நுழைந்தேன். பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
எங்கும் பளீரென சுத்தம். காதுகளில்ää
தாய்யின் இசைமேதை லாஜூனின் புகழ்பெற்ற
“தாயீ..தாயீ.. ஸென்மஹோ..வொக்சஙீ..…”
ஒலித்துக் கொண்டிருந்தது. உணவு அட்டையை
இயந்திரத்தில் காட்டி இரண்டு தமிஸ_ம்ää கோலாவும் பெற்று வந்து ஓரமாக உட்கார்ந்தேன். சாப்பிடும் போது.
மனம் கோவில்பற்று புட்டுக்கும்ää
தேங்காய்ச் சம்பலுக்கும் ஏங்கியது.
விரைவில் சாப்பிட்டு துரிதமாக வாகனத்தரிப்பிடம் திரும்பினேன். நேரம் அதிகாலை நாலரை
மணியாகி விட்டிருந்தது. அதிகமான வாகனங்கள் போய்விட்டிருந்தன. என் காவலரணில் போய் நின்று
கொண்டேன்.
என்னவோ காரணமின்றி என் நினைவுகள் என் பிறந்தகமான கோயில்பற்று நோக்கி அலைந்தன.. எத்துணை இன்பமான பூமி..
சொர்ணமக்கா வளவின்ää முருங்கைமரங்களின் அடர்த்தி.. ஆறுமுகத்தார் வாத்தியாரின் கத்தரி..
வெண்டித் தோட்டங்கள்.. திலீபனின் ரேடியோக்கடை.. “அச்சம் என்பது மடமையடா.. அஞ்சாமை திராவிடர் உடமையடா..”
ஊN 114 இலக்க சபாரத்தினம் போஸ்ட்மாஸ்டரின் ‘பேஜோ’ கார்.. (ஒரு அஞ்சடி
தூரம் தள்ளி விடுறிரே..தாமுப்பெடியா..?) மாரியம்மன் கோவிலடி..
சிதம்பர சக்கரம்.. தேர்.. சிற்பத் தூண்கள்.. வாரத்துக்கொரு திருவிழா.. காப்புக்கட்டு..
விரதங்கள்.. விஷேசங்கள்.. ஊத்தப் பரஞ்சோதியின்
தோசைக்கடை..
மாபெரிய ஆலமரத்தடியில் பஸ் தரிப்பிடம்.. நிழற்குடையம்ää தண்ணிர்ப் பந்தலும்ää
உபயம்: அமரர் நல்லதங்கம் மாணிக்கம்
1937. மரத்தடியில் வீமனின் திடீர் தோசைக்கடை.. உடனடி உழுந்து வடை..
ராஜியக்காவின் ஆலங்காய்ப் பணிகாரம் பச்சை ஈர்க்கிளில் கோர்த்து.. ஒன்றுää ஐம்பது சதம்… முருகன் தியேட்டரில்ää புரட்சி நடிகர் எம்ஜீ.ஆர்
நடிக்கும்ää முகராசி.. அதன் பாட்டுப்புத்தகங்கள்.. வீரகேசரி..
உட்புற வீதியில்ää
சரஸ்வதி அரச தமிழ்க் கலவன் பாடசாலை..
கல்வியே கருந்தனம்..! உடையார்ப்போடி மாணிக்கம்
சனசமூக மண்டபம்.. முன்னால்ää கல்லுப்பிள்ளையார் உண்டியல்.. நவம் மாஸ்டரின் முத்தமிழ் இலக்கியக்
கழகம்.. அளிக்கும்ää “வெளிநாட்டு மாப்பிள்ளை” நகைச்சுவை நாடகம்.. டிக்கட் விற்கும் முருகப்பன்.. பெண்வேடம்
சுரேஸ்.. அசரத்தினம்.. குமாரன்.. சிவக்குமார்.. தியாகமூர்த்தி.. ஜோஸப்பு.. நவநீதராசா
மாஸ்டரின் மகள் சுபோதினி.. அவளது மயக்கும் கண்கள்.. காதல்கடிதம்.. கைக்குட்டை பரிமாற்றம்..
மற்றும் வேதா.ääசுகுணகுமாரி.. கமலாம்பிகை.. வீட்டுக்குள்ää நாகலிங்கம் மாமா..
தங்கச்சி சரோஜா.. மருமக்கள் அமுதன்ää
சஜிக்குட்டி.. எண்பத்திரண்டு வயதில்
கூட அநியாயமாகக் கொல்லப்பட்டு விட்ட அப்பாவின்
பிரிவுத்துயரில் ஆழ்ந்து நோய்ப்பட்டு சென்ற மாதம் காலம்சென்ற.. அம்மா.! .அம்மாவின்
சாவுக்கும் போகவில்லை.. …அம்மா…அம்மா…
‘அம்மா…நான் எங்கேயிருக்கிறேன்.?
யாருக்காக.. ?
எதற்காக..?
ஏன்..?
இந்தத் தாய்மொழி கேட்காத தூரத்தில்..
தாய்யிமொழி குடைகிற தேசத்தில்.. இன்னும் எத்தனை காலம்..?
எவ்வளவு நேரம் இப்படி இருந்தேன்.. நினைவுப்
பெருங்; கடலில் ஆழந்து..?
“தாமொங்..! ஞே..
தூமோஜுஸிக்.. பாஞச்சிக் காவ்ங்லே!” (தாமோங்.. ஏன் அழுதிருக்கிறாய்..?)
திடுக்கிட்டுச் சுதாகரித்துக் கொண்டேன்.. மணி 5.57. அடுத்த ஆள் வந்துவிட்டான். இரண்டரை மணிநேரம் ஒரு நிமிசத்தில்
பறந்து விட்டிருந்தது.. ஒருநாளுமில்லாதவாறு ஆழ்நத தாய்மண் நினைவுகள்..
‘ஸில்யாங்.. சாய்யிக்..
சாஞ்.. !” (சில பிரிவுத்துயரங்கள்.. ஸில்யாங்..!) என்று சும்மா
சிரித்து விட்டுää எனது பொறுப்புக்களை ஸில்யாங்க்கிடம் ஒப்படைத்து இயந்திரத்தில்
விரலடையாளம் பதித்து ஓய்வடைந்தேன். போகத் திரும்பினேன்.
00
நான் மறுபடி நிலவறைப்
பக்கமாக நடந்து சென்றேன்.. சீருடை மாற்ற வேண்டும். மனம் சரியில்லை. 97 கிலோமீற்றர் தூரத்தில் ‘காமுங்’
நகரில் உள்ள ‘தாய்’ப்பிள்ளையார் கோயிலுக்கு
எப்படியும் இன்று போக வேண்டும்.. இலட்சாதிபதியான இந்திய அய்யர் இருக்கிறார். களியாட்டரங்கிலிருந்துää பெரும்பாலோனார் சென்று விட்டிருந்தனர். துப்புரவுத் தொழிலாளர்கள்
வந்து கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கூடம் அமைதியடைந்திருந்தது.
சிற்றூழியர் அறைக்குச் சென்று என் சீருடையை மாற்ற முயன்ற போதுää…
திடீரென என் உடல் முழுவதும் திடுக்கிட்டுக் குலுங்கியது. நான்
துணுக்குற்றேன்.. ஒரு அவலமான அழுகுரல் என் செவியில் மெதுவாகக் கேட்டது போலிருந்தது.
உற்றுக் கேட்டேன்.. ஆம்..! பாதுகாப்புக் கூண்டுக்குள்ளிருந்துதான் அந்த அழுகுரல் கேட்டது.
இப்படி எத்தனையோ அவலக்குரல்கள் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.. பொருட்டாகக் கருதாமல்
அலட்சியம் செய்துää என் வேலையைப் பார்த்துக் கொண்டு பறந்து விட்டிருக்கிறேன்.. ஆனால்.. இந்தக் குரல்..?
அதன் அவலம்.. அதன் ஒலியமைப்பு.. அதன்
இராகம்.. அதன் தாய்மொழி…? தாய்யி மொழி..? என்னது.. என்னது.. காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அந்த
அழுகையின் மொழி…?
‘என்ர அம்மோ..வ்…!’
என் சர்வாங்கமும் கூசி மயிர்க் கூச்செறிந்தது.. இந்த மொழி;..
தாய்யி மொழி அல்ல… சொந்தத் தாய்மொழி.. எத்தனையோ வருடங்களின் பின் காதுகளில் விழுந்த
அந்த இன்பத் தமிழ் மொழி… தாய்மொழி.. தமிழழுகை…!
தாய்மொழியின் அழுகை.. வேதனையின் போது
அடி உணர்விலிருந்து யாராலும் தடுக்கவொண்ணாமல்ää
பீறிட்டெழும் உண்மைமிக்க சுய மொழிப்
புலம்பல்..!
யாரது..? அவனா அலறினான்..? அந்தக் குற்றவாளி வாலிபனா..? அல்லது வேறு யாராவது தமிழனா..?
மனம் படபடத்தது.. கால்கள் சற்றே நடுங்கின..
மெதுவாக அடியெடுத்து வைத்து வர முயன்ற போது மறுபடியும் அந்த அவலமமான அழுகுரல்ää மன நிம்மதி வேண்டி மிகச் சத்தமிட்டு வாய்விட்டு அரற்றிக் கொண்;டிருந்தது..
;என்ர அம்மோவ்..! என்ர கடவுளே..! …ம்ம்ம்ம்ம..மாஆஆஆ..
நோ…கு..து…!”
என் இரத்த நாளமெல்லாம் புடைத்தெழுந்தன.. விரைந்து பாதுகாப்புக்
கூண்டை நோக்கி நடந்தேன். உள்ளே தயக்கத்துடன் பார்த்தேன். அவன்தான்.. நான் பிடித்து
வந்து தள்ளிய அந்த வாலிபன் மண்டியிட்டு உட்கார்ந்தபடிää முழங்கால்களிடையே தன் கைகளை வைத்துக் கொண்டு கண்களைப் பாதி மூடிக்
கொண்டு வேதனையால் அரற்றித் தீர்த்துக் கொண்டிருந்தான். தமிழனா இவன்..?
தாய்யீயா..?
யாரிவன்.. என்ன பெயர்..?
எங்கிருந்து வந்து எங்கு சேர்ந்திருக்கிறான்..?
பாதாளத் திருட்டுக் கும்பல்களுடன் எப்படித்
தொடர்பு..? ஏன்..?
என் கேள்விகளுக்கு யார் பதிலளிக்க..?
இரும்புக் கம்பியைச் சற்றுத் தட்டினேன். அவ்வாலிபன் நிமிர்ந்து பார்த்தான்.. மருட்சியுடன்
மிரண்டான். அடுத்த அடிக்கு ஆள் வந்து விட்டதாக எண்ணிப் பீதி கக்கும் விழிகளுடன் என்னை
நோக்கினான். என்னையும் ஒரு தாய்யிக்காரனாக எண்ணிப் பயந்து போய் “ஞா.. சோல்வஙீ.!
ஞயக் காஜிங்க்கா ஸ{..ஸாங்…” (நான் நிரபராதி.. எனக்கு அடிக்க வேண்டாம்.. மதிப்புக்குரியவரே..)
என்று என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான். நான் ஒன்றும் பேசாமல் அவனைப் பார்ததேன். இவனிடம் தமிழ் பேசினால் மிகப்பெரும்
மகிழ்ச்சியடைவான்.. இன்பத்தேன் வந்து இவன் காதுகளில் பாயும்.. பட்ட அத்தனை வேதனைகளும்
நொடிப் பொழுதில் பறந்து விடும். ஆயினும் பேசக் கூடாது. இன்பத் தேனைப் பாய்ச்சக் கூடாது.
இவன் குற்றவாளி.. எந்த நாட்டவனாகää
எந்த இனமாக இருந்தாலும்..! இருந்தாலும்..?
கூண்டுக்கு வெளியேää
சாவோங் மேஜை மீது சாய்ந்தபடி சற்றே
தூங்கிக் கொண்டிருந்தான். விடியவிடிய அடித்தää
குடித்த களைப்பில் அயர்ந்திருக்கிறான்..
எனக்கு ஒருநாளுமில்லாதவாறு ஆத்திரம் பொத்துக் கொண்டு பரவியது. ஆயின் என் செய்ய..? என் ஆளரவம் கேட்டுச்
சட்டென விழித்தான்.
‘ச்சாங்க்.. தஸ்ஜாங்..சரபாவ்ஜ்..?
தாமோங்க்..?’ (அவனைச் சாப்பிட வேண்டுமா உனக்கு.. தாமோங்க்.)
பல்லைக்கடித்தபடி அவனைப் பார்த்தேன். அசதியுடன் எழுந்த சாவோங்க் “ஸஜ்கிங்.. ஞாஸீஞ்ஜின்
பய்ஜவாவோவ்..” ( சற்று நின்று கொள். இதோ வருகிறேன்.) என்று என்னிடம் சொல்லி விட்டு
கழிவறைப்பக்கமாகச் சென்றான். இன்னொரு காவலதிகாரி
தூரத்தில் நின்று கொண்டு துப்பாக்கியைக் கழற்றிப் பூட்டிக் கொண்டிருந்தான்..
“என்ர கடவுளே..!
என்ன இதுலருந்து காப்பாற்றப்பா பிள்ளயாரே..! என்ர அம்மோ..வ்..”
கூண்டுக்குள்ளிருந்து தமிழ் அரற்றல் தொடர்ந்தது. நான் அனுதாபத்துடன்
அவனைப் பார்த்தேன். குற்றம் செய்தவனைக் கூடக்
காப்பாற்ற பிள்ளையார் வேண்டும்.. நான் என்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனை உறுக்கினேன். “ஜங்ஙியாஸ்.. ஞானுக் ? தாமிங்.. ஜா..க்.!?” (திருட்டு நாயே.. என்ன புலம்புகிறாய்..?
என்ன பாஷை அது..?)
அவன் தன் புலம்பலை நிறுத்தி என்னை பயத்துடனும் அசதியுடனும் பார்த்துவிட்டுää “
தமிழுங் ஞா.. மாஙேப தய்ப்..” என முனகினான். (தமிழ்.. என் தாய் மொழி..) திடீரென எங்கோ பார்த்துää கைகளைக் கூப்பினான். தனது வீங்கிப் போயிருந்த முழங்கால்களையம்ää
பாதங்களையம் தடவித்தடவி முனகினான்.
பின் மெதுவாக முணுமுணுத்தான்.. “என்ர கடவுளே..ய்…
என்ர சீவனிருந்தா நான் கதிர்காமத்துக்கு
வந்து உதடு குத்தித் தேரிழுக்கன்.. என்ர பிள்ளையின்ர தோழுல காவடி ஏத்துரன்.. முருகப்பா..
கடவுளே..ய்.. என்னக் காப்பாத்தப்பா…”
இதற்கு மேல் நான் சற்றும் தாமதிக்கவில்லை.
சவோங் கழிவறைப்பக்கம் போய்வி;ட்டான். மற்றக் காவலதிகாரி நானிருந்த தைரியத்தில் எங்கோ வெளியில்
பார்த்துக் கொண்டிருந்தான். நான் இரும்புக் கூண்டைப் பார்த்தேன்.. பூட்டப்படாமல்ää இரும்புத் தாழ்மட்டும் போடப்பட்டிருந்தது. விரைந்து செயற்பட்டேன்.
தாழை இழுத்துக் கதவைத் திறந்தேன். அவ்வாலிபன் பயத்துடன் “ஙா…ஆஆ…” என்ற கதறியபடி எழுந்திருக்க முயன்று விழுந்தான். நான் அவனுடன்
ஒன்றும் பேசாமல்ää திறந்த கதவைக் காட்டி “ஙெய்க் ஜஸ்ஸி.. ஜஸ்ஸிங்”
என்று மெதுவாகச் சொன்னேன். (தப்பி ஓடிவிடு)
ஆனால் என் கண்களில் சிநேகித பாவத்தைக் காட்டவில்லை. அவன் சற்றும் நம்பாமல் என்னைப்
பார்த்தான்.. ஓடவிட்டுப் பிடித்து பலமாக அடிப்பேன் என்று சந்தேகத்துடன் இல்லையென்ற
பாவனையுடன் தலையை அசைத்தான்.. ஆனால் என்னை நோக்கிக் கும்பிட்டபடியிருந்தான்.. தவழ்ந்து
வந்து என் கால்களைப் பிடித்தான்..
நான் அவனை எட்டித் தள்ளிவிட்டுää
அவனைப்பார்த்துää கொஞ்சம் சிரித்து நம்பிக்கையூட்டி மறுபடியும்ää “ஙெய்க் ஜஸ்ஸி.. ஜஸ்ஸிங்”
என்றேன். என்னைத் தமிழனாகக் காட்டிக்
கொள்ளாமல்.! அவன் தன் காற்சட்டைக்குள் கைவிட்டுத் தடவிக் காட்டிää “ஙாகசஙீய்.. சவ்கம ஸஜிமங் பாத் மனரைதஙி” என்று முனகினான். (என்னிடமிருந்த எழுபது பாத்களையும் அவன் பறித்து
விட்டான். உனக்குத் தர ஒன்றுமில்லை.)
நான் ஆத்திரத்துடன்ää
அவனை அறைந்தேன்.. பொங்கி வந்த தமிழைக் கஸ்டப்படுத்திக் கட்டுப்படுத்திக் கொண்டுää “அடப்….ஞாய்யீங்.. ஸீமுக்கூ..”
( ஓடித் தெலைந்து விடுடா அற்பனே ..!)
என்று அவனது சட்டையைப் பிடித்து தூக்கித் தள்ளி விட்டேன்.
என் தீவிரத்தை உணர்ந்த அவன் ‘விருட்’டென்று எழுந்தான். நான் வெளியில் எட்டிப் பார்த்துச் சமிக்ஞை
செய்ததும்ää நொண்டிய கால்களைப்
பொருட்படுத்தாமல்ää பல்லைக் கடித்தபடி விரைவாக வெளி வந்தான்.. நான் அவனை மற்றக் கழிவறைப்பக்கமாக நடத்திச் சென்றுää பின்பக்க வழியால் ஓடிவிடும்படி சைகை செய்தேன். இனி அவன் தாமதிக்கவில்லை.
“தாய்ப்பிள்ளையாரப்பா….!” என்று கூவி என்னை நோக்கிக் கும்பிட்டான். ஏற்கனவே இவ்வழியால்
பழக்கப்பட்டவனைப் போல அந்தக் கழிவறை வழியாக
நுழைந்து குப்பைக்கிடங்குப் பக்கம் அபாயமாக ஆனால் கவனமாக நொன்டியபடி நடந்து சென்றான்.
அங்கிருந்த குட்டைச் சுவரில் ஏற முயன்று முயன்று விழுந்தான்.. பாதுகாப்பதிகாரிகள் கண்ணில்
பட்டால்ää இரப்பர் குண்டுகள் சீறிவரும்…
நான் பதைபதைக்கும் நெஞ்சுடன் பார்த்துக்
கொண்டிருக்க.. அவன்ää அடுத்த தடவை முழு உந்துதலில் கட்டைச் சுவரைக் கடந்து பாய்ந்து
வெளிப்பக்கம் விழுந்து விட்டான்.. “அம்மா..ஆஆ..!”
என்ற வேதனைக்குரல் தமிழ்மொழியில் என்
தாய்மொழியில் மெல்லிய சத்தமாக வந்து பாய்ந்தது
காதினிலே.. இனி அவன் தப்பிவிடுவான்..!
எனக்குள் ஒருநிம்மதிப் பெருமூச்சுப் பிறந்தது. உண்மையிலேயே ஏதோ ஒரு கடவுட் தன்மையை
அடைந்ததைப் போன்றுணர்ந்தேன். தத்தம் தாய்மொழிக்காக எத்தனையெத்தனையோ தியாகங்கள் செய்த
புனிதர்களிடையே என் தாய்மொழிக்காக நான் இது
கூடச் செய்யாவிட்டால் என் தாய்மொழிதான் என்ன..? திடீரெனää ஏதோ விசித்திர உணர்ச்சியால் திடுக்கிட்டேன். பயத்துடன் திரும்பிப்
பார்த்தேன். என்னை விசித்திரமாகப் பார்த்தபடி நெருங்கி வந்து கொண்டிருந்தான் சாவோங்.
0 (2007.11.11)
8888888888888888888888888888
ஆத்துமீன்; ஆசை.
கடந்த ஒருவாரகாலமாகச் சரியாகச் சாப்பிடாமல்ää மசக்கையாயிருந்த மனைவி மரியம்பீவி இன்று திடீரென ஆத்துமீன் சாப்பிட ஆசைப்பட்டாள். வாய்வி;ட்டுக் கேட்டும’
விட்டாள். ஆனால் றாபிக் மாஸ்டர் கடைசிச் சீட்டுக் காசையும்
கொடுத்து விட்டுää மீதியாயிருந்த சில்லறைப் பணத்துடன் நிம்மதியாகவிருந்தார். அப்போதுதான் மரியமுக்கு இந்த ஆத்துமீன் ஆசை வந்துவிட்டது.
கைப்பையை இவரிடம் நீட்டிவிட்டுää
கெஞ்சுதலாக ஒரு பார்வை பார்த்தாள். அடுத்தகணம் இவரிடம் கைவசமிருந்த நூறு ரூபாய்ää எங்கோ புத்தக இடுக்கில் ஐம்பது ரூபாய். .. வேறென்ன செய்ய..?
அவரது விதி அவரை உந்தித் தள்ளியது.
கோடீஸ்வரர் சந்தைக்கு வந்து விட்டார். சேர்ட்
பைக்குள் வெறும் நூற்றிஐம்பது ரூபாய் வெட்கத்துடன் ஒழிந்திருந்தது.
“கோடீஸ்வரர் சந்தை”
என்றும்ää ‘டொலர் மர்ர்க்கட்’
என்றும்ää விகடமாகக் குறிப்பிடப்படும் எங்கள் பள்ளியடி மாலைச்சந்தை முக்கியத்துவமிக்க
பிரதான வீதியில் அமைந்திருந்ததால்ää
அதன் ‘சந்தைப் பெறுமதிகள்’ அதிகம். பிரதான வீதிப் போக்குவரத்துப் பிரயாணிகளையே பெரும்பாலும்ää வாடிக்கையாளராகக் கொண்டதால் அவசர கொள்முதல் அதிகம். பேரம் குறைவு.
சொன்ன விலைதான் பெரும்பாலும். சிறிது தாமதித்தால் அடுத்த பிரயாணியிடம் கறியை
இழந்துவிடுவீர்கள்.
கொழும்பு மனிங் மார்க்கட்டில் அறக்குளா மீன்
கிலோ ஐநூறு ரூபாய் என்றால்ää
இங்கு எழுநூற்றி ஐம்பது ரூபாய் விற்கும். முட்டை ஒன்று ஆறு ரூபாய் என்றால்ää இங்குää
பத்து ரூபாய். இப்படிச் சகல மீன்கள்ää மரக்கறிää
வகைகள் யாவுமே கண்டிப்பாக உச்ச விலையில் விற்பதும்ää வாங்குவதுமே இங்கு வாடிக்கை. சாதாரண கீரிமீனின் விலையே கிலோ முன்னாறுக்குப் போகும்
என்றால்ää அபுர்வமாகவே அகப்படும் ஆற்றுப்படுக்கையில் பிடிக்கும் மீன்களின்
பெறுமதி சொல்லுந்தரமன்று..
றாபீக் மாஸ்டரைப் போல ஒரு சாமான்ய குடும்பத் தலைவருக்கு இங்கு என்ன வேலையிருக்க
முடியும்..? றாபிக் மாஸ்டர் சாதாரணமாக இங்கு வருவதில்லை. இன்றுää மனைவியின் அன்புநிர்ப்பந்தம் காரணமாக வந்திருந்தார்.
அச்சத்துடன் சந்தையை தூரத்தில் சைக்கிளில் நின்றவாறே உற்றுப் பார்த்தார். ஆத்து
மீன் கொட்டப்பட்டிருக்கும் அங்காடிப் பக்கமாக சற்றே கடைக்கண்ணெறிந்து நோட்டமிட்டுக்
கொண்டார். முன்யோசனையின்றி நேரடியாகச் சென்று
ஆத்துமீன் விலை கேட்டால்ää மேனி நடுங்கும். மீனவத் தமிழில் பிலால் நாறும்.
றாபீக் மாஸ்டர் ஆத்துமீன் கும்பத்தை நோக்கி
வெகு முன்ஜாக்கிதையாக முன்னேறினார். ஆற்று மீன்களான சுங்கான்ää பனையான்ää
குறட்டைää விரால்ää
கெளுத்தி வகையறாக்கள் வகை பிரிக்கப்பட்டு
பரப்பியிருந்தன. துடித்துத் துள்ளிக் கலந்தன.
பனையான்களை ஒரு குச்சியினால்ää கவனமாகப் பிரித்துக்
கொண்டே மீனவன் கூவினான்.
“ஙா.. துடிக்கத்
துடிக்க.. துடிக்கத் துடிக்க..”
துள்ளிய சுங்கானின்ää தலையில் பாவ புண்ணியம் பார்க்காமல்ää ‘நச்’சென்று அடித்து நசுக்கிய மீனவன்ää
“எடுங்க..எடுங்க.. ஆத்து மீன் எடுங்க..
போனா வராது.. கறி போனா வராது.. கிலோ எடுங்க கொறைச்சித் தாரன்.. கெலோ சுங்கான் நாநூறு.. பனையான் இருநூத்தம்பது..
கெளுத்தி சோடி முன்னூத்தம்பது.. செனைக் கெளுத்தி.. கறிக்கு சும்மா அந்த மாதிரி இரிக்கிம்..
ஓவ்…!
என்று எதிர்வு கூவினான்.
தவிரவும்ää ஆக்கி முடித்த பின்ää
கெளுத்தி மீனின் தலையை எப்படி உறுஞ்சி உள்ளுறைவுகளைத் துப்புரவாக்க வேண்டும் என்று ஒரு
செய்முறைப் பயிற்சியையும் முற்றிலும் இலவசமாகச் செய்து காட்டினான். றாபீக் மாஸ்டரின்
வாய்க்குள் எச்சில் ஊறியது. கூடி நின்றோர்
பேசாமல் விலை வைக்கப் பயந்து மீன் வகையறாக்களையே சும்மா பார்த்துக் கொண்டிருக்க
ää அலுத்துப் போன மீனவன்ää
“சும்மா சும்மா விடுப்புப்
பாக்காம கேளுங்களன்டா ஆக்களே..ய்... வாய்க்க
என்ன முட்டடப்பனா..?”
என்று அவர்களை வலிந்து பேரத்துக்கு அழைத்தான். அவன் கையில் தை;திருந்த செங்கல்லுக்கும்ää
அவனது செஞ்சொல்லுக்கும் பயந்து அனைவரும்
பதிலின்றிப் புன்னகைத்தனர். றாபீக் மாஸ்டர்
நன்றாக தலையை சனக் கூட்டத்துள் மறைத்துக் கொண்டார். அதுதான் ஆபத்தாயிற்று.. இவரது தலைமறைவைச் சட்டென
அவதானித்த மீனவன். நேரடியாகää
றாபிக் மாஸ்டரை நோக்கிää
“ஞா.. கணக்குச் சேர்..
முன்னுக்கு வாங்க..வெலாங்குமீனப் போல தலைய
ஒழிக்காதீங்க.. நெல்ல கறி எடுங்க.. சுங்கான் அரக்கெலோ போடுவமா..?
கெளுத்தி..?
கடுகு போட்டு சொதி வெச்சா சாள வாய்
ஊறும்.. ஏளு ஊட்டுக்கு மணக்கும்.. காக்கெலோ தரயா..?”
“இல்..ல.. வந்..தூ..”
“அப்ப.. பனையான்..?
சதப் பளையான்.. அம்பட்டும் சதான்..
எறக்காமத்துச் சாமான்.. அரக்கெல போடயா..? பாருங்க சதைய..’
என்று ‘சட்டக்’கென ஒரு பனையான் மீனை இலாவகமாகப் பிடித்துää
முகத்தினருகே அதன் வீச்சம் அடிக்கும்
அளவுக்கு கொணர்ந்து காட்டிää நிருபணம் செய்தான்.
இதை எப்படிச் சமாளிப்பது..?
கூடிநின்ற சனங்கள் ஆஹா ஒரு ஏமாளி அகப்பட்டார் என்ற திருப்தியுடன்ää “பனையானைக் கேளுங்க மாஸ்டர்.. கெளுத்திக்கு கடசி வெலயக் கேளுங்க
மாஸ்டர்.. கலவன் கும்பம் கடசியா ஒரு வெலயக் கேளுங்க சேர்..” என்று தத்தமது கேள்விகளையும் றாபீக்மாஸ்டரிடம் ஒப்புக் கொடுத்தனர்.
தாம் பாதுகாப்பாக விலகினர். அகப்பட்டுக் கொண்ட அதிர்ச்சிää முகத்தில் அப்பட்டமாகத் தெரியää முன்னுக்கு வந்த றாபீக்
மாஸ்டர் உள்ளார்ந்த பயத்துடன்ää
“சரிசரி.. நியாயமா
வெல சொன்னா.. சனம் வாங்கும்.. நீங்க மீனுக்குத் தங்கத்துக்கு வெல சொல்றாப்பல சொன்னா
சனம் வெலகி ஓடத்தான் செய்யும்..”
என்று ஒரு தன்னிலை விளக்கமளித்துவிட்டு “சனங்கள் தமக்குக் கட்டுப்படியாகிற விலைக்குத்தானே கேட்கும்கள்....
சரி.. இதுக்கு என்ன விலை..?”
என்று குத்துமதிப்பாக ஆரம்பித்தார்.
இப்படி எத்தனையோ பேரைப் பார்த்துவிட்ட மீனவன்ää விலை ஏதும் சொல்லாமல்ää சும்மா சிரித்தபடிää
தன் உதவிப் பையனிடம்ää
“டேய்ää மம்மத்தம்பி.. சேருக்குச் சுங்கான் போடுறா.. டே.. ஒரு அர” என்று கத்தினான். அவன்
வீசிய வலையில் அவசரமாகச் சிக்கிக் கொண்டார் றாபீக் மாஸ்டர்.
“சேச்சே.. சுங்கான்
வேணா.. பொறு.. பொறு..” வலையினின்றும் தப்பிக்கத் துடித்தார்.
“அப்ப இந்த ரெண்டு
கெளுத்தியையும் கட்டிக் குர்ரோவ்.. சேருக்கு..”
வலை மேலும் இறுகியது.
மாட்டிக் கொண்டு துள்ளிய மாஸ்டர் எதையோ சுட்டிக் காட்டித் தப்பிக்க முயன்று.
“ல்லல்லல்;லல.. முதல்ல இதுர கடசி வெலயச் சொல்லு.” . ஆனால் அவர் தெரியாத்தனமான
சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது ஒரு பெரிய விரால் மீனை. றாபீக்மாஸ்டரின் அசாத்திய
துணிவை வியந்து போன மீனவனும்ää
கூடி நின்றோரும். “மாஸ்டருக்கு இண்டைக்குச்
சம்பள நாளாக்கும்..” என்றும்ää “புது மாப்பிள்ள பொண்ணுக்கு மாஸ்டர் சாப்பாடுää கீப்பாடு குடுக்கப் போறாரு போல.. அதான் பெரிய விராலக் கேக்காரு..” என்றும்ää
கற்பனை செய்துகொண்ட பொதுசனம் மீனவன்
கூறப்போகும் விலையைக் கேட்டுத் தாம் மயக்கமுற தயார்படுத்திக் கொள்ள…
“ச்சா.. விராலா..?
விராலா சேர் வேணும்..?
இதுக்கெல்லாம் வெலகில கேக்கிறயா..சேர்..
உங்களப் போலத் ‘திண்டுகழிச்ச’ ஆக்கள் வில கேக்கிறயா..? ஊட்ட தங்கச்சி புள்ளத்தாச்சி..ல்லோ.. டெ படிச்சிக் கட்றா அந்த
விரால....”
மீன்சார அதிர்ச்சியில் விதிர்விதிர்த்துப் போனார் மாஸ்டர்...
இப்ப என்ன செய்ய..? இப்ப என்ன செய்ய..? எப்படித் தப்பிக்க..? என்ன உத்தி..? என்ன கணக்குப் போட..? என்ன திருப்பம் நிகழ்ந்து நான் இவ்விடத்தினின்றும் தப்பித்தல் கூடும்..?
ஆனால் மீனவன் அகமகிழ்ந்து போய் ‘சடக்’கென அந்தப் பெரிய விரால் மீனை எடுத்துää அது இருபக்கமும் நெளிந்து துடிக்கத் துடிக்கää இரக்கமற்று அதன் மூக்கினுள் ஈர்க்குச்சி ஒன்றைச் ‘சரக்’கெனக் குத்தி மறுஓட்டையால்
இழுத்து முடிச்சிட்டு பாதுகாப்பாகத் தூக்கிச் செல்லும் வண்ணம் தூக்கிக் காட்டினான்.
நீட்டினான். பைக்குள்ளிருந்த நூற்றிஐம்பது ருபாய் பணத்துடன் சேர்த்து இதயத்தைப் பொத்திக்
கொண்டார் றாபீக் மாஸ்டர். மீனவன் பரபரவென ஒரு ‘சொப்பிங்பேக்’கைப் பிரித்து அதனையிட்டு மகிழ்ச்சிப்;
பெருக்குடன் அவரிடம் நீட்டிää
“ஹஙாhங்.. வெரால் போய்ட்டுது. சுப்பர் கறி.. வெல கேக்காம சும்மா பாத்துப்பாத்து
நிண்டாக்களுக்கு கறி கெடைக்க மாட்டா.. நெல்ல கறி திங்கிற சேரைப் போல மனிசன் வரணும்..
ஓவ். மாஸ்டர்.. ந்தாங்க புடிங்க.. வெரால்.. நீங்க துணிஞ்சி கேட்டதுக்காக எளுநூறுவாக்குக்
கேட்டும் நான் குடுக்கல்ல.. ஒங்களுக்காக அம்பதக் கொறச்சிட்டு அறுநூத்தம்பது றுவாத்
தாங்க மாஸ்டர்.. புடிங்க.. புடிங்க.. சொணங்கினா வேறாக்கள் கேட்டுடப் போறாங்க.. ம்ää..
புடிங்க..”
என அவசரப்படுத்தினான்.
வெலவெலத்துப் போன றாபீக்மாஸ்டர் தான் சிந்திப்பதற்காகவும்ää அவனைச் சற்றுத் தாமதிக்க வைப்பதற்காகவும். தன் பையினுள் கைவிட்டுää அங்கிங்கெனாதபடி எங்கும் சும்மா துளாவிக் கொண்டிருந்தார். ஆளடையாள
அட்டையை வெளியிலெடுத்து மறுபடி உள்வைத்து முதலில் நூறு ரூபாயை எடுத்துக் காட்சிப்படுத்தி
விட்டு மறுபடி பையினுள் துளாவினார். சட்டியில் இருந்தாலல்லவா அகப்பையில் வர.. காசை
மறந்துபோய் வந்து விட்டேனப்பா என்ற தனது கடைசி ஆயுதத்தை கையாள்வதற்குத் துணிந்தார்.
அதைச் சொல்வதற்கான வழியில் நேரத்தைக் கடத்தினார். ஆனால்ää அவரின் தாமதம் மீனவனின்
பொறுமையையும்ää கோபத்தையும் சோதித்துக் கொண்டிருந்தது. கூடி நின்ற சனங்கள் றாபீக்மாஸ்டரைப்
பரிதாபமாகப் பார்க்க அவருக்குள் கௌரவப் பிரச்சினை
பற்றி எரிந்தது. இப்ப என்ன செய்ய.. என்ன செய்ய..?
“என்ன மாய்ட்டர்..?
பக்கட்டப் பக்கட்ட போட்டுப் பெனையிற..?
காசி..ல்லியா..?
காசில்லாம மீம் வாங்க வந்தயா..?
ஹிக்கிக்கீஹ்;ஹ.. அதுவும் வெரால் மீன..?”
மீனவன் நிர்த்தாட்சண்யமாக ஆரம்பித்தான்.
றாபீக்மாஸ்டர் மகா ஆத்திரத்தடன்ää
வாய் குளறிப்போயிருக்க தெய்வமே நேரில்
வந்தாற்போல் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. அவ்விடத்தில்ää முச்சக்கர வண்டியில் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்த
ஒரு முதியவர் தன் ஒற்றைக்கையால் சக்கரத்தை உருட்டிக் கொண்டே கூட்டத்துள் புகுந்து வந்தார். றாபீக்மாஸ்டரைத் தன் முச்சக்கர முன் சக்கரத்தால்ää சற்றே முட்டித் தள்ளி விட்டு அந்தப் பிச்சைக்காரர் மாஸ்டரின்
பச்சடித்துப் போயிருந்த முகத்தையும்ää
மீனவனின் கர்ணகடூரமான கெளுத்திக் கண்களையும்
மாறிமாறிப் பார்த்து.. சற்றே புன்னகைத்தார். பின் மீனவனிடம்ää
“என்ன மம்மது..?
அந்த விராலக் குடுத்துட்டியா..?
ல்லாட்டி எனக்கித் தாவன்.. எவ்வளவு..?’ என்றார். றாபீக் மாஸ்டரின் காதுக்குள் தேன்மதுரத் தமிழோசை கேட்டது.
அக்கணமே மீனவன் கட்சி மாறி..
“விரால் திங்கிற
மனிசனப் பாத்தாத் தெரியிம்.. எளுநூறுவாக் காசிக்கி பக்கட்டப் போட்டுப் பெனையிற ஆக்கள்
விலகுங்க.. வெலகு.. வெலகு.. இந்தாங்க முதலாளி..”
என்று பிச்சைக்காரரின் பதவி அந்தஸ்தை
ஒரேயடியாகக் கூட்டிவிட்ட மீனவன்ää
விலையையும் மேலும் ஐம்பது ரூபாயாகக்
கூட்டிää
“இந்தக் காலத்துல
எளுநூத்தம்பது ரூவால்லாம் ஒரு காசா..?’ என்றவாறேää
சற்றும் தாமதிக்காதுää இன்னுமொரு ‘சொப்பிங்பேக்’கினுள் விராலைச் சுற்றி பிச்சைக்காரரின் முச்சக்கரவண்டி முன்னிடத்தில்
கொணர்ந்து பவ்வியமாக தாழ் பணிந்து வைத்தான்.
_வெரால் மீன் சினைய தனிய பொரிக்கனும்... நடு வகுத்து சதைய எண்ணையில ரோஸ்பண்ணி வெங்காயம்
பச்சசொச்சிக்கா போட்டு சாடயா பெரட்டி எடுக்கனும்.. மத்தத்துண்டுகள கடுகு போட்டு ஒரு ஆணம் வெச்சா நாப்பது ஊட்டுக்க மணக்கும்.. தலைய தனியா
உறிஞ்சணும்... அதோடயே ரெண்டு பிங்கான் சோறு திங்கலாம்... .. சுப்பரா இரிக்கும்... என்ற பிச்சைக்காரர் தன் அழுக்குச் சீலைப் பைக்குள்ளிருந்துää
பத்துää இருபதுää
ஐம்பது கட்டுக்களாக ஒரு நோட்டுக் கற்றையை
உருவிää “ந்தா எள்நூத்தம்பது..
புடி:” என்று விசிறினார். இருகைநீட்டிப்
பெற்றுக் கொண்ட மீனவன் எச்சில் ஊறிய வாயைக் கூட்டி விழுங்கியபடியே பிச்சைக்காரரின் முச்சக்கரத்தை அவருக்குதவியாகக்
கொஞ்சமாகத் தள்ளியும் விட்டான்.
பிச்சைக்காரரின் இராச்சாப்பாடு வர்ணணையில் வாய் ஊறியிருந்த சனம் பொறாமைக் கண்களுடன்
ஒருவரையொருவர் நோக்க- இந்த உச்ச திருப்பக் காட்சியைப் பார்த்து அசந்து போயிருந்த றாபிக்
மாஸ்டர் மீன்காரன் திரும்பவும் தன் மீதே திpரும்புவான் என்ற திடீர் ஞானோதயத்தில்ää அவ்விடத்திலிருந்து. அசாதாரன வேகத்துடன்ää நழுவித் தலைமறையும் போதுää
மீனவன் தன் செஞ்சொற்களால் சொன்னது கேட்காமலில்லை.
தவிரவும்ää அவனது மீனவச் சொற்களுக்குள் வாழ்க்கையின் தத்துவமும் அடங்கியிருந்ததை உணரவும் முடிந்தது.
“ந்தா.. விரால் மீனுக்கு
வெல கேட்டும் வாங்காமää அந்தா மரக்கறிப்பக்கம் ஓடுர கணக்கு மாஸ்டருக்கு மட்டுமில்லடா
ஆக்களே.. வவ்த்துல புள்ளக்காரிக்கும்.. இந்த
விராலப் புடிச்சவனுக்கும்ää இத வாங்கி விக்கிற எனக்கும்தான் விரால் மீன் சாப்பிடக் கட்டுப்படியாகாது.
இத வித்து என்ட கடன அடச்சிட்டுää
இரவைக்கிச் சுண்டலோட சோறு திண்டுட்டுப்
படுப்பன்… பிச்சை எடுக்கிற இந்த ஆள் ராச்சாப்பாட்டுக்குக் கூட விரால் மீன்
பொரியல்.. என்டால்ää இதென்ன புதினமான கணக்கு.. ஆரு போட்ட கணக்கு..?
விளங்குதா கணக்குப் பாடம் எடுக்கிற
மாஸ்டரே..ய்..?”0.(2011)
8888888888888888888888888888
மும்மான்.
(ரகுமான். பெருமான். முசல்மான்.)
ஒரே ஒரு காட்டில் ஒரேயொரு ராஜா. அது சிங்கராஜா. காடு முழுவதையும் சிங்கம் தன் கட்டுப்பாட்டில
வைத்திருந்தது. தன் ஏக இராச்சியத்தில்ää தானே எல்லாவற்றையும் அனுபவித்து வந்தது. தட்டிக் கேட்பார் யார்..? சிங்கம்ää பிடரி மயிர்கள் சிலிர்த்தெழ உறுதிமிக்க தன்னிரு முன்னங்கால்களிலும்ää வாளை ஏந்தி முன்னுயர்த்தி கொடூர விழிகளை உருட்டிää கர்ச்சிக்கும் போது காடே கிடுகிடுத்தது. விலங்கினங்கள் பயத்தில் திடுக்கிட்டு தினம்தினம் செத்தன. ‘ஒரு உறையில் ஒரே
வாள். ஒரு காட்டில் ஒரே ராஜா’
என்றும் திட்டமாகக் கர்ச்சித்தது.
சிங்கத்தின் இந்த ஆதிக்க அட்டூழியத்தில்ää
கதிகலங்கிப் போன ஏனைய விலங்கினங்கள்
கூடி யோசித்தன. வரவர இந்தச் சிங்கத்தின் ஆக்கிரமிப்பையும்ää அட்டூழியத்தையும் தாங்க முடியவில்லை. நாம் வேட்டையாடும் சிறுநிலப் பரப்பிலும் அது தன்
ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறது. நாம் இப்படியே
பொறுத்துக் கொண்டிருந்தால் விரைவில்ää
நமது இருப்பே கேள்விக்குரியதாகிவிடும்..
நமக்கு ஒரு துண்டுக் காடாவது கிடைக்கப் போவதில்லை. எப்படியும்ää
நமது சிறுகாட்டுப் பரப்பினுள் சிங்கத்தை
வரவிடக் கூடாது. ஏன்று முடிவு செய்தன. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை
சிங்கத்திடம் எடுத்துச் செ(h)ல்ல ஒரு துர்துக்குழுவையும்
தெரிவு செய்தன.
இக்குழுவை சிங்கம் சந்திக்கவே
மறுத்துவிட்டது. இவை சிங்கத்தின் குகைவாசலிலää; சத்தியாக்கிரகமும்ää உண்ணாவிரதமுமாகää இருந்து பார்த்தன. ஆனால்ää
சிங்கம் மசியவில்லை. மாறாகää தன் குட்டிகனை ஏவிää
உண்ணாவிரதிகளை கடித்துக் குதறி அனுப்பியது.
“சிங்கத்தோடு பேச்சுவார்த்தை ஏதும் நடத்தி இனி ஒரு பலனுமில்லை. இனி நம்மைக் கடவுள்தான்
காப்பாற்ற வேண்டும்” என்று சொல்லி விட்;டுää கிழட்டுப்பசு உயிரை விட்டது.
சிங்கத்துக்குத் தகுந்த ஒரு பாடம் படிப்பிக்கவே வேண்டும் என்று இரகசியமாகவும்ää திட்டவட்டமாகவும் சில வரிப்புலிகள் தீர்மானித்தன. புரட்சி நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. இரண்டாவது பலம்பான்மை நாம்தான். மற்ற விலங்கினங்களை
விட நமக்குத்தான்ää போராடக் கூடிய வல்லமையும்ää
வேட்டைப் பற்களும்ää கூரிய நகங்களும்ää
குரூர நெஞ்சும்ää போராட்டத்தளமும்ää
உண்டு. சிங்கத்துக்கு நிகராக வேட்டையாடவும்
முடியும். எதிர்க்கவும் முடியும் என்று முடிவு செய்தன.
எனவே முதலில் புலிகள் சிங்கத்தின் அட்டகாசத்தை பக்கத்துப் பெருங்காட்டை
ஆளும் காண்டாவிடம் முறையிட்டன.. காண்டா அதைக்
கண்டு கொள்ளவேயில்லை.. 1010அது உங்கள் உள்காட்டு விசயம் நான் தலையிடமாட்டேன்__
என்று சொல்லி விட்டது. சிங்கத்துக்கு
நல்லபிள்ளையாக நடந்து கொண்டு ஆனால் புலிகளுக்கு இரகசியமாக எலும்புத் துண்டுகளை தும்பிகளிடம்
கொடுத்தனுப்பி வானத்திலிருந்து போட்டது. அத்துடன் இரகசியமாக சில புரட்சிப் புலிகளை தன்னிடத்துக்கு வரவழைத்து போர்ப்பயிற்சி அளித்தது.
10இது ஒரு காட்டின் கானக எல்லையை மீறிய செயல்.._
என்று வெகுண்டெழுற்த சிங்கம் காண்டாவின் பருத்த உடல் வலிமை கண்டு கொஞ்சம் பயந்து அடக்கியே
கர்ஜித்தது..
தொடர்ந்த சில நாட்களில்
நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கக்குட்டிகள்ää
எல்லைக் காட்டருகில் கொல்லப்பட்டுக்
கிடந்தன. இதுகண்டு வெகுண்டெழுந்த சிங்கம்ää
வெறிகொண்டுää எல்லை கடந்து உட்புகுந்து கண்ணில் கண்ட விலங்குகளையெல்லாம் வேட்டையாடியது.
காடு போர்க்களமானது.
அதேசமயம்ää காட்டில் தாமுண்டு தம் வேலையுண்டு என்று வாழ்ந்திருந்த சில அப்பாவி முசல்மான்களும் கூட பயங்கரமான முறையில்
கொல்லப்பட்டு எல்லைப்புறத்தில் விசிறப்பட்டுக் கிடந்தன. “இது சிங்கத்தின்
உச்சக்கட்ட வெறித்தனம்.” என்று வரிப்புலிகள் அறிவிக்க “இல்லை இது வரிப்புலியின் குருரக் கொலை… ” என்று சிங்கமும்
குற்றம் சாட்டியது.
இடையில் அகப்பட்டுக்
கொண்ட முசல்மான்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவை வேட்டைப்பற்களும்ää கூரிய நகங்களுமற்று இருந்ததால்ää
வேட்டையாடப்படும் விலங்குகளாகவே இருந்து
வந்தன. சிங்கத்தின் கர்ச்சிப்பிலும்ää புலியின் உறுமலிலும்ää தினம் தினம் தம்மை
இழந்து வந்தன. தாம் அநாவசியமாக இந்;த ஆதிக்கச் சண்டையில் மாட்டுப் பட்டதென்ன.. ஏன்.. என்றெல்லாம்
யோசிக்கத் திராணியற்று பயத்துடன் அங்குமிங்கும்ää
அகதிமான்களாய் அலைந்து திரியத் தொடங்கின.
போராட்ட விலங்குகளின் இனவெறிக் கூச்சலில்ää முசல்மான்களின்
முனகல் எவர் காதிலும் விழவில்லை.
விலங்கினங்களின் அநியாய அழிவைத் தடுக்கவும்ää தான் இந்தப் போரில்ää
ஒரு அரசியல் இலாபம் பெறவும்ää வலிமை பெற்றுவரும் வரிப் புலிகளை ஒரு மட்டம் தட்டவும் காண்டா
திடீரெனத் தீர்மானித்தது. ;
இதில் இனி நேரடியாக களமிறங்கத் தீர்மானித்தது.
“போரை நிறுத்துங்கள்.!” என்று பெருங்குரலில் கத்தியது. “இல்லாவிட்டால் எனது
கரும்பூனைப்படையை அனுப்புவேன்.”
என்று இரு தரப்பாரையும் அச்சுறுத்தியது.
அதன் அனுசரனையின் பேரில்ää
சிங்கம்ää புலியுடன் பேச்சுவார்த்தை நடத்த இணங்கியது. “அதிகாரப் பகிர்வுக்கு
முன்னர் அமைதியை ஏற்படுத்துங்கள்”
என்று சிங்கம்ää காண்டாவிடம் கூறியது. “இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும்” என்று உறுதியளித்த காண்டா உபகண்டம் முழுக்க நிறுத்தி வைத்திருந்த
வலிமைமிக்கää தன் கரும்பூனைப் படைகளைக் களத்தில் இறக்கியது. கரும்பூனைப்படைகளுக்குää அமைதிகாக்கச் சொல்லி ஆணையிட்டது.
ஆனால் எதிர்பார்த்தபடி
ஏதும் நடக்கவில்லை. அமைதி காக்கவந்த கரும்;பூனைகளால்ää
அமைதிகாக்க முடியவில்லை. விரைவிலேயேää புலிகளுக்கும் கரும்ப10னைப்படைகளுக்கும்
போர் தொடங்கிவிட்டது. காட்டுக்குள் உக்கிர யுத்தம் வெடிக்க--கொஞ்சம் நிம்மதியாயிருந்த முசல்மான்களுக்கு மீண்டும் கிலி
பிடித்துக் கொண்டது. இரண்டுக்கும் நடுவில்
அகப்பட்டு முசல்மான்கள் மீண்டும் கொல்லப்பட்டன.. சிங்கமும் முசல்மான்களைத் தந்திரமாக
கைவிட்டுவிட்டது..
அவை இருக்கவும் புலம்பெயரவும் இருவழியும் ஆபத்தாகி இக்காட்டுக்குள்ளேயே கிடந்து
வாழ்ந்து யுத்தத்தில் அழிய ஆரம்பித்தன. இதனையே நிலையான வாழ்வாகக் கொண்டன. சிங்கத்தின்
காட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த முசல்மான்களைச் சிங்கம் சந்தேகக் கண் கொண்டு பார்த்தது.
10நீங்கள் மான் தோல் போர்த்திய புலிகளா..|’ என்று சிலசமயம் குதறியும் பார்த்தது. புலிக்கட்டுப்பாட்டுப்
பகுதியில் வாழ்ந்த முசல்மான்களைää
10நீங்கள் மான் தோல் போர்த்திய சிங்கங்கள் என்று புலி சந்தேகித்து சில முசல்மான்களை கொன்று தோலுரித்துப் பார்த்தது.
அது போதாதென்று கரும்பூனைப்படைகளும்ää அதனுடன் ஒட்டிக் கொண்டிருந்த சிலகழுதைப் புலிகளும் கூட தம் பாட்டுக்கு
முசல்மான்களை காரணகாரியம் ஏதுமின்றியே வேட்டையாடத் தொடங்கின.. முசல்மான்கள் முப்பக்க
நெருக்குவாரத்தில் சிக்குப்பட்டுச் சீரழிந்தன. நிரந்தரமாக மரணபீதி ஆரம்பித்து விட்டது.
காட்டில்ää சும்மா மேய்ந்து கொண்டிருந்த நம்மை யார் கொல்கிறார்கள்.. ஏன்
கொல்கிறார்கள்.... உண்மையில்ää நாம் காடு கேட்கவுமில்லை.. காட்டைப் பிரித்துக் கேட்பவர்களுக்கு இடைஞ்சலாய் இருந்ததுமில்லை... ஆயினும்
நமக்கு இந்தக் கதி ஏனோ..
இந்நிர்க்கதி நிலையை
யோசித்த முசல்மான்கள் தனிவழி செல்லத்
தீர்மானித்து கஸ்தூரிமானின் தலைமையில் ஒரு மரத்தின் கீழ் ஒன்று கூடின. காட்டுக்கு உண்மையான ராஜா யார்..? சிங்கமா..?
புலியா..?
காண்டாவா...?.. முத்தரப்பையும்
சந்தித்துத் தமது அவல நிலையை எடுத்துச் சொல்லத்
தீர்மானித்தன.. முத்தரப்பும் முசல்மான்களின் கதையைக் கேட்டு ஆவண செய்கிறோம் என்று கூறி வழியனுப்பி விட்டு கோரிக்கையை
வரலாற்றுக் குப்பைத்தொட்டிக்குள் எறிந்தன. முசல்மான்களுக்கு கிலி பிடித்தாட்டியது.
திடீரென ஒரு நாள்ää
நூற்றுக் கணக்கான முசல்மான்களின் உயிரற்ற
உடல்கள் குதறப்பட்டுக் காடெங்கும் சிதறிக் கிடந்தன. மறுபடியும்ää இது புலிகளின் இரத்த வெறி என்று சிங்கங்களும்ää இது சிங்கத்தின் பிரித்தாளும் தந்திரம் அல்லது கரும்”னைப் படையும்;
அதனுடன் சேர்ந்து விளையாடும் குள்ளநரிக்
கூட்டமும் மற்றும் கழுதைப் புலிகளும் பார்;க்கின்ற வேலை என்று வரிப்புலிகளும்; மாறிமாறிப் பழி
சொல்லி யுத்த மூர்க்கமுற்றன.
இன்னொரு நாள்ää
வரிப்புலிகள் மூன்றே நிமிசத்தில் வாழிடங்களை விட்;டும் முசல்மான்களைப் பலவந்தமாக ;
வெளியேற்றின. இப்போதுää வரிப்புலிக்கட்டுப்பாட்டுப் பகுதி தனிஇனநிலமாக இருந்தது.
மற்றுமொரு நாள் முசல்மான்களின் தலைமையான கஸ்தூரிமான் நடுக் கானகத்தில் வைத்து வெகு சூட்சுமமான முறையில்
கொல்லப்பட்டுவிட்டது.. தலைமையையும் இழந்த முசல்மான்களின்
நிலை பற்றிக் கவலைப்பட யாரும் இருக்கவில்லை.
இந்த வேட்டைப் பிராணிகளின் மத்தியில்ää
எமது தனித்துவத் தலைமையும் இழந்து கூரிய நகம் மற்றும் வேட்டைப் பற்கள் முதலான ஆயுதங்களும்
இன்றி சாதுவாக இக்காட்டிலிருப்பது எவ்வளவு ஆபத்தானது.. தாமும் வேட்டைப்பற்களும்ää கூரிய நகங்களும் கொண்ட ஆயுதப் பிராணிகளாhக மாற முடிவு செய்தன. பலம் கொண்டு பாய்ந்து கர்ச்சித்துää அல்லது பதுங்கி உறுமிää
சிங்கத்தையும்ää புலிகளையும் கரும்”னைகளையும் தாக்குதல் வேண்டும். ஆயின்ää சாதுவான முசல்மான்கள் எப்படி சிங்கமாக மாற முடியும்..?
அல்லது புலியாக மாற முடியும்..? இயல்பை மாற்றுதல்
சாத்திமா..? உருவைத்தான் ஆக்குதல்
சாத்தியமா..? அதுவும் இச்சிறுகாட்டினுள்
இருந்து கொண்டு..?
எவ்வழிகளும் சாத்தியமாகாத நிலையில்ää இறுதியில் முசல்மான்கள்
தம் பிரச்சினையை மான்களுக்குப் பிணை நின்ற கருணையே உருவான நம் பெருமான் ஊடாக தம்மைப் படைத்த வல்லபெரிய ரகுமானிடம்;
கொண்டு செல்லத் தீர்மானித்தன. யாகங்கள்
பல செய்து அங்கிருந்த பெரும் பரிந்துரைக்கதிகாரியான
பெருமானைச் சரணடைந்து புகழ்ந்தேற்றி வல்லபெரிய ரகுமான்;
சந்நிதியை அடைந்தன. வல்லபெரிய ரகுமானிடம்
தம் பிரச்சினையச் சமர்ப்பித்தன. முசல்மான்களைப்
படைத்த வல்லபெரிய ரகுமான் சொன்னது_
“ஓ.. முசல்மான்களே..
வேட்டைப் பிராணிகளாக நீங்கள் படைக்கப்படவுமில்லை.
நீங்கள் சிங்கங்களாக அல்லது புலிகளாகää
அல்லது வேறு எதுவுமாக மாற வேண்டிய அவசியமேயில்லை.
முதலில் நீங்கள் உண்மையான முசல்மான்களாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் தலையில் என்ன இருக்கிறது..?”
திகைத்துப்போன முசல்மான்கள் அப்போதுதான் தம் தலைக்கு மேல் மேலிருந்த
தொப்பிக்குள் பார்த்தன. சிங்கத்தையும்ää புலிகளையும் வெருண்டோடச் செய்யும்;
மனித முகமும் வல்லூறை விடவும் விசாலிப்பான
இறக்கைகளும்ää குதிரையின் வலிமையான உடலும் ஒருங்கேää
கொண்ட பிராணியாக தம்மைக் கண்டன. அவை
தம் வாயைத் திறந்ததும் “புராக்……புராக்…” கென்ற சத்தத்தில் ஈருலகங்களும் அதிர்ந்தன.
வல்லபெரிய ரகுமான் மீன்டும் சொன்னது “ஓ.. முசல்மான்களே..பார்த்தீர்களா.. இந்த புராக் உங்களுக்குள்ளேயே
இருக்கிறது. நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய தேவையில்லை.. நீங்கள் முதலில் உண்மையான
முசல்மான்களாக வாழ்ந்தால் வலிமையான புராக்காக மாற முடியும்.. இப்போதுää நீங்கள் போகலாம்..”
இனியென்ன.. முசல்மான்கள்
திரும்பி வந்தன. வலிமைமிக்க அந்த “புராக்”கைப் பெறுவது நம் நடத்தையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து
கொண்டன. அவை தம் தொப்பிகளை ஒழுங்காக அணியத் தொடங்கின. .0(2012)
.000000000000000000000000000000000000
வெள்ளி விரல்.
அதி சிறந்த மலையாள மகாவசிய மாந்திரீகம்.! முஸ்லிம் ~ஜின்’
வாசிலாத்து முறைப்படி செய்து தரப்படும்.
வீடு வியாபாரம் விருத்தியாக வேண்டுமா.. தீராத நோய்கள்.. மற்றும்ää பேய்ää
ஜின்ää சாத்தான்ää
பிசாசுää துஷ்டஆவிகள்ää
பீடித்த உளநோய் கண்டிருப்போரை உடன்
குணப்படுத்த வேண்டுமா.. மற்றும்ää
தாமதிக்கும் திருமணம் கடுதில் நிறைவேற..
குழந்தைப் பாக்கியம் கிட்டää. விலைபோகாத காணி விற்பனையாக..ää
பரீட்சையில் சித்தி பெற..ää வேண்டாத பகையை வேரோடறுக்க..ää
காதலன்ääகாதலி சேர..ää வெளிநாட்டு வேலை வாய்ப்பு பலிதமாக..ää சுவீப் அதிர்ஸ்டம் கிடைக்க..ää மற்றும். உங்கள்
வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகள் எதுவானாலும்ää
பரிகாரம் உண்டு. சந்தேகமே வேண்டாம்.
குருகுல முறைப்படிää மலையாளத்தில்ää
தேர்ச்சி பெற்றவரும்ää
அருள்மிகு இறைநேசச் செல்வர்களின் அருள்பெற்றவரும்
மனோதத்துவ வைத்தியரும்ää எண்ஞான வித்தகருமானää
அஸ்ஸெய்ஹ_
அல்லாமா அல்ஹாஜ். அபுபக்கர் சித்தாயுள்வேத நிபுனர் (வெள்ளிப்பரிகாரி) அவர்களைச்
சந்தியுங்கள். மூன்றே மாதத்தில் முழுப்பலன் கிடைக்கும். வெற்றி உறுதி. நேரில் சந்திப்போர் கல்முனை நகரத்திலிருந்து
வடக்குப் புறமாகää கட்டைவெளிப் பள்ளிவாயிலுக்கு எதிரேயுள்ள பஸ் நிலையம் முன்பாகவுள்ள
வீதியால் பத்து மீற்றர் தூரத்தில்ää
வரவும்.
வந்திருந்தார்கள். வாசலில் இடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகையின் கீழ் உட்கார்ந்திருந்தார்கள். சூழல் முழுவதும்ää
ஊதுபத்தி மணம்.. சாம்பிராணி வாசைன..
வாசலெங்கும்ää அடர் பற்றைபற்றையாகää
இனம்புரியாத மூலிகைப் புதர்கள்.. ஏழெட்டுப்பேர் முன் விறாந்தையில் உட்கார்ந்திருந்தனர். முறைப்படி காணிக்கை ரூ.20 செலுத்தி இலக்கமும்ää
ஊதுபத்திää வெற்றிலை பாக்கு முடிச்;சுகளுடன் வெள்ளிப் பரிகாரியைச் சந்தித்துத் தம் குறைகளை நிவர்த்திக்க
முறைப்படி காத்திருந்தனர். எவரும் அநாவசியமாகச் சத்தமாகப் பேசவில்லை. உதவியாளர்ää
வந்திருந்தேரை இலக்க வரிசைப்படி ஒவ்வொருத்தராக
அனுப்பிக் கொண்டிருந்தார். சலுகாக்கிழவிää தன் பேர்த்தியானää
புதுமணப்பெண் நஸீறாவை அழைத்து வந்திருந்தாள்.
உதவியாளர்ää விநோதமான நீண்ட ஜிப்பா சகிதம் இந்திய சர்வாணிகள் பாணியில் காட்சியளித்தார்.
இடையிடையேää மெல்லிய குரலில்ää
வெள்ளிப்பரிகாரி அவர்களின்ää திறமைகளைப் புகழ்ந்து கொண்டும்ää தானே வியந்து கொண்டுமிருந்தார். வெள்ளிப் பரிகாரியிடம்ää ஜின்கள் எப்படிக் கட்டுண்டு அடங்கிக் கிடக்கின்றன என்ற அதிசயச் சம்பவங்களை மெய்சிலிர்க்கும் விதமாக சலுகாக்கிழவிக்கும்ää நஸீறாவுக்கும்ää கதைக்குக் காது
கொடுத்த ஏனையோருக்கும் சொல்லிக் கொண்டிருந்தார். இடையிடையேää உள்ளறையிலிருந்துää
வெள்ளிப்பரிகாரி உரத்த குரலில் யாரையோ
அதட்டும் சத்தம் கேட்டது. சில கெட்ட ஆவிகள் வெள்ளிப் பரிகாரிக்கும் அடங்குவதில்லை எனினும்ää அவற்றை ஜின்களின் உதவி கொண்டுää அவர் விரட்டியடிக்கும் காட்சியை வெள்ளிக் கிழமை தோறும்ää தன்னைத் தவிரää
வேறு யாராலும் பார்க்கமுடியாது என்றும்ää இந்த ~ஜின் ஆட்டும்’
நிகழ்வு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும்
நடைபெறும் என்றும்ää அன்று நோயாளிகளைப் பார்வையிடமாட்டார் என்றும் உதவியாளர் சொன்னார். பன்னீர்ப் போத்தல் ஒன்றுக்குள்
நோயாளியின் சுட்டு விரலை நுழைத்து வெளியே எடுத்தால்ää விரல்ää
அப்படியேää பளபளக்கும்ää
வெள்ளி உலோகமாக மாறியிருக்குமாம். அப்படி
ஆகினால்ää உடம்பில் ~சூனியம்’
இருக்கிறதென்று அர்த்தமாம். அந்த வெள்ளி
விரலின் மீது ~ஜின்’ வந்து ஆஜராகுமாம். அதனிடம்ää
நோயாளியின் சுயவிபரங்களையும்ää
பரிகாரி கேட்டறிந்து கொண்டுää அதற்கேற்ப வைத்தியம் செய்வாராம்.
இப்படித்தான் ஒரு அரசியல்வாதிக்கு ~ஜின் வாசிலாத்து’
முறைப்படி ஒரு வேலை செய்து கொடுத்ததில்ää அவர்ää
மூன்றே மாதத்தில் அமைச்சர் ஆகிää தன் நன்றிக் கடனாக அன்பளித்தää
~ஜப்பான் சன்னி டபுள்கப்.| வெளிக் கூடாரத்தில்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தததைச் சுட்டிக் காட்டினார். பரிகாரி அதைப் பாவிப்பதே இல்லையாம்.
இறைசேவைää மனித சேவை தவிரää
பொருளாதாரத் தேவைகள் பரிகாரிக்கு கிஞ்சித்தேனும் கிடையாதாம்.
சலுகாக்கிழவிக்கு ~ஜின்’களை ஆட்டுவிக்கும் இந்த இடத்திற்கு வந்த நேரத்திலிருந்து பயத்தால்ää மூத்திரம் போகப் பார்த்தாலும்ää
வெள்ளிப் பரிகாரியின் மீது அசைக்க முடியாத
நம்பிக்கையும் இருந்தது. புதுமணப்பெண்ணான தனது பேர்த்தி நஸீறாவின் இனம்புரியாத வியாதிக்கும்ää விசித்திரமான நடத்தைக்கும் இந்த இடத்தில்தான் சரியான தீர்வு
கிடைக்கும் என்று திட்டமாக நம்பினாள்.
உள்ளே போயிருந்தää
ஒரு தாயும்ää அவளது காதுகேளாத சிறுவனும்ää வெளிவரமட்டும்ää அடக்க முடியா ஆவலுடன் காத்திருந்தனர். சலுகாக்கிழவி பரபரப்புடன்ää தனது பேர்த்தியின் கதையை வெள்ளிப் பரிகாரியிடம் எப்படிச் சொல்லுவதென்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டாள்.
திடீரென்று உள்ளறைக் கதவு திறந்து உள்ளே சென்றிருந்தவர்கள் வெளியே வந்தனர். சலுகாக்
கிழவியும்ää நஸீறாவும்ää
பரபரப்படன் எழுந்திருந்தனர். உதவியாளரின்
சமிக்ஞையை அடுத்துää உள்ளறைக்குள் பயபக்தியடன் நுழைந்தனர். உள்ளே..
விசாலமான ஒரு அறை. சற்றே இருள். கும்மென்ற பல்வகை வாசைன.. ஊதுபத்திப் புகை.. அறைமுழுக்க
விநோதமான பொருட்கள்.. கடற்கரும் பவளக் கொடிகள்.. பெரியபெரிய கிரந்தங்கள்.. பச்சைப்
பெரிய படுதா.. அதில்ää மலையாள எழுத்துக்களில் வேலைப்பாடுகள்.. மக்காமதினாப் படங்கள்..
குவிந்து கிடக்கும்ää மூலிகை வேர்கள்.. கொடிகள்.. செடிகள்.. பெரிய பாத்திரத்தில்ää கடல் நீர்.. மயில் தோகை.. அடுக்கப்பட்டிருக்கும் காலிப் பன்னீர்ப்
போத்தல்கள்.. மேலும் பல எண்ணெய் வகைகள்.. பயமுறுத்தும் பக்திமயமான பின்னணியில்ää அறையின் நடு மையத்தில்ää
சம்மணமிட்டுää கண்கள் மூடி ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார் வெள்ளிப் பரிகாரி.
அவரது முகம் எவ்விதமான சலனமுமற்றிருந்தது. கருகருவென்ற தலைமுடி சடாமுடியாக வளர்ந்து
தோள்கள் தாண்டி தாறுமாறாகத் தொங்கின.. தாடியும் மீசையும்ää அழகுற வாரப்பட்டுச் சீராக அப்பிப் போய் இருந்தன. நீண்ட கூர்மையான
மூக்கில் நிச்சயம் வசீகரம் இருந்தது.
சலுகாக்கிழவியும்ää நஸீறாவும்ää
பக்திப் பரவசத்துடன்ää எதிரே கிடந்த பாயின் மீது அமர்ந்தனர். அவரது நிஷ்டயைக் குழப்பாமல்
அமைதியாகவிருந்தனர். சற்று நேரத்தில். வெள்ளிப்
பரிகாரி கண்களைத் திறந்தார்ää
இவர்களைப் பார்த்தார். அவரது தீட்சண்யமிக்க
விழிகளின் ஊடுருவலில்ää அதிசயமான ஒரு ஒளி மின்னுவதாகப் புலப்பட்டது. வெள்ளிப் பரிகாரிää இதழ்களைத் திறந்து மெதுவாகப் புன்முறுவலித்;;தார். பின் திடீரென்று
கூறினார்.
~வந்ததும் தெரியும். போறதும் தெரியும். புள்ளட உடம்புல கொதிக்கிற
கொதி ஆண்பிள்ளையளத் தீய்ச்சுரும். எல்லாம் பெரியவஹ சொல்லித் தந்தது.. சரி..சரி.. ஆருக்குப்
பார்க்கனும் நீங்க..?|
இருவரும் திடுக்கிட்டுப் போயினர். தன் பேர்த்தியின் நோயைச் சரியாக
விளங்கிக் கொண்ட வெள்ளிப் பரிகாரியை வியந்து போய்ப் பார்த்துக் கொண்டிருந்த சல்ஹா கிழவி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மெதுவான குரலில் சொல்லத்
தொடங்கினாள்.
~இவள் என்ட பேத்தி. மகள்ள மஹள் பாபா.! பத்தொம்பது வயஸி. கலியாணம்
பண்ணி இப்ப ஆறு மாசம். பண்ணின நாள்லயிரிந்து புரிசனோட ஓயாத சண்டை. ஒவ்வொரு நாளும் வாய்ச்சண்டதான்.
இவளுக்கு என்னவும்ää சூனியம்ää
கீனியம் இரிக்கா ல்லாட்டிää
இவளுக்கு பெசாசி என்னயும் புடிச்சிருக்கா
எண்டு பாத்துச் சொல்லனும் பாபா.’
~பாக்கலாம்.. பாக்கலாம்.. ஏன் புள்ள உனக்குப் புரிசனப் புடிக்கல்லியா..?’
நஸீறாவிடம் நேரடியாகக் கேட்டார் வெள்ளிப்
பரிகாரி.
~…………………..’ நஸீறா பேசாமல் தலைகுனிந்து விட்டாள். சலுகா கிழவி கொஞ்சம் ஆத்திரப்பட்டுää
~செல்லேண்டி பண்டீ..! பரிசாரியாரு ஒண்ட நன்மக்கித்தானே கேக்காஹ.
வாயத் தொறந்து கேக்கிற கேள்விக்குப் பதில் செல்லுடி. ல்லாட்டிää பரிசாரியாரு ஒண்ட வாயப் பூட்டிருவாரு ஒருநாளும் தொறக்காதபடி..ஓவ்..’
நஸீறாää திடுக்கிட்டுப் போய் வெள்ளிப் பரிகாரியை மருண்ட விழிகளுடன்ää நிமிர்ந்து பார்த்தாள். அவரின் கண்கள் தீட்சண்யத்துடன் நஸீறாவின்
விழிகளை ஊடுருவின. அவள் தன் கண்களை விடுவிக்க முடியாமல் மிரண்டாள். திடீரென வெள்ளிப்
பரிகாரியின் கண்களில் ஒரு கனிவு உற்பத்தியானது. மறுபடியம் கேட்டார்.
~ஏன் புள்ளே.. உனக்குப் புரிசனப் பிடிக்கல்லையா..?’
நஸீறா தயங்கி மெதுவாகச்
சொன்னாள். ~அப்படீ..ண்டு.. ல்ல..’ பேச முடியாமல் வெட்கத்தில் மறுகினாள்.
~அப்ப ஏன் சண்டை பிடிக்காய்..?’
விடாமற் கேட்டார்.
~…………..’
நஸீறா பேசவில்லை. நாணத்துடன் தலை குனிந்தாள்.
சலுகாக் கிழவி கோபமாகää
~செல்லேண்டி பண்டீ..! வேள் ப்பிடித்தான் பாபா.. புரிசன் நல்ல
ஆள் ண்டு செல்றாள். ஆனா ராப்பட்டா விடியிம் வெரைக்கும் சண்டதான். பிரிஞ்சி பிரிஞ்சி
படுக்காள். புரிசனோட கிட்டப்படுத்தா வேளுக்கு எரியிதாம். ஏனுண்டு ஒரு எளவும்ää நெக்கி வெளங்குதுமில்ல. பாபா.. அவன் புரிசன்காரன் நெல்ல கொணமான
பொடியன். கட்டுச்செட்டான ஆம்புள. வேள்ள வடிவக்
கண்டு ‘கக்கிலிகிக்கிலி’ ஒண்டும் வாங்காமத்தான் பண்ணிட்டான். நெல்லா வச்சிருப்பான். வேளும் அவன விரும்பித்தான் சம்மதப்பட்டாள். ஆனா
கலியாணம் முடிஞ்ச அண்டைக்கித் தொடங்கிட்டு சண்ட.. அவன் ஒண்டும் பேசறயில்ல. இவள்தான்
அவனுக்கு ஏசறதும்ää பிரிஞ்சி படுக்கிறதுமா இரிக்காள் பாபா..’
~ஓகோ.. ஏன் புள்ளே அப்பிடி..?’ வெள்ளிப்பரிகாரி புன்முறுவல் செய்தார்.
‘………………’
~செல்லேண்டி பண்டீ..! வேள என்னயோ பெசாசி புடிச்சி ஆட்டுது பாபா..
பகலயள்ள புரிசனோட கதைக்காள் சிரிக்காள்.. சோறு சாமான் குடுக்காள்.. வேலவாட செய்றாள்.
அவனுக்கு ஒரு கொறையும் ல்லாம எல்லாம் செய்றாள். ஆனாää
அவன் தொட்டா மட்டும்ää கத்துறாள்.. துடிக்காள்.. அவன்ட கை பட்டா போதும்ää ஒரே மகுறம்தான்..
சண்டதான். அவன்ட ஒடம்பு பட்டாலே சுடுதுஹா.. தீய்க்குதுஹா.. கிட்டப் படுத்தா அனல் அடிக்குதுஹா
எண்டு செல்றாள். அவரு கிட்ட வந்தாலேää
இவள்ள உடம்பு நெருப்புத் தீய்க்கிற
மாதிரி இருக்குஹா எண்டு கத்துறாள் குளர்ராள் பாபா.. செல்லேண்டி பண்டீ..!’
வெள்ளிப்பரிகாரி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். சலுகாக் கிழவி
தொடர்ந்தும் சொன்னாள்.
~இதையும் செல்லேண்டி பண்டீ..! வேற பொம்பிளயள்ள கைகால் பட்டா ஒண்டுமில்ல.
ஆம்பிளயள்ள கை பட்டா இந்த மாதிரி நெருப்பாச் சுடுது சுடுது ண்டு செல்றாள். அப்பிடி
தீய்க்குதாம்.. இத எத்தின நாளக்கிப் பாக்குற ண்டுட்டு புரிசன்காரனும்ää இவள்ள வருத்தத்த மொதல்ல சொகமாக்கித் தாங்க ண்டு செல்லிட்டு போயிட்டான்.
அவனச் செல்லிக்குத்தமில்ல. புது மாப்பிள்ள என்ன செய்வான்.. ண்டாலும்ää ரெண்டு நாளைக்கு ஒருக்கா வந்து பாத்துட்டுப் போறான். இது என்ன
~கொதறத்து’ பாபா.. வேளப் புடிச்சிரிக்கிற ~முசிபத்து’ பெசாசா.. ல்ல சூனியம்
கீனியமா.. எங்கள ந்தக் கய்ட்டத்துல இரிந்து
மூட்டு உட்றுங்க பாபா.. காணிக்கையும்ää
மாடும் அறுத்துப் பலி தாரன்.’
~……………’
~ஒங்களத்தான் நம்பி தொலதூரத்துல யிரிந்து வந்திரிக்கம் பாபா..
எப்பிடியும் வேள நெல்லாக்கித் தரணும்.. புரிசனோட சந்தோயமா வாள வெய்க்கனும்.. பாபா..| சலுகாக்கிழவி சட்டென
அழ ஆரம்பித்தாள். நஸீறா தலை நிமிராதிருந்தாலும் அவளும் அழுவது புரிந்தது.
அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த வெள்ளிப்பரிகாரி
~சரிம்மா.. இது ஒரு குணம் காட்டுது. என்னண்டு பார்ப்பம்.’
பக்கத்திலிருந்த ஊதுபத்திக் கட்டை எடுத்தார். கொளுத்தி ஒரு குவளைக்குள் நிறுத்தினார். கும்மென்று
எழுந்த நறும்புகை அனைத்தையும் தன் மூக்கினருகே
கொணர்ந்து ஆழமாகச் சுவாசித்தார். பின் பக்கத்திலிருந்த பன்னீர்ப் போத்தலை எடுத்தார். திறந்து மடமடவென்று பாதியளவு குடித்தார். வாய்க்குள்ளிருந்த கொஞ்ச மீதிப் பன்னீரை யாரும்
எதிர்பாராதவிதமாக நஸீறாவின் மீது சட்டென்று பீய்ச்சித் துப்பினார்.
திடுக்கிட்ட நஸீறா முகத்தில் சுளீரெனப் பாய்ந்த பன்னீரை கையால் துடைத்தபடி ஆத்திரமும்ää பயமுமாக வெள்ளிப் பரிகாரியைப் பார்த்தாள். உடனே வெள்ளிப் பரிகாரி உரத்த குரலில்ää
~ஹேய்.. ஜபர்தார்.. வா..வா..’
என்று சொல்லியபடி நஸீறாவின் கன்னத்தில்
பளீரென அடித்தார். ஏதோ புரியாத பாஷையில் மளமளவெனச் சில மந்திர உச்சாடனங்களை ஒப்புவித்தார்.
சட்டென நஸீறாவின் இடதுகைச் சுட்டு விரலை தொட்டார். தீச்சுட்டாற் போலக் கதறி நஸீறா தன்
விரலை விடுவிக்கப் போராடினாள். ஆனால்ää
வெள்ளிப்பரிகாரி அந்த விரலை விடாது
பற்றிப் பிடித்துக் கொண்டுää பாதியிருந்த பன்னீர்ப் போத்தலுக்குள் அந்த விரலை பலவந்தமாக நுழைத்தார்.
வெகுவேகமாக ஏதேதோ மந்திரங்கள் உச்சரித்தார்.
தன் விரலை விடுவிக்க நஸீறா போராடினாலும் முடியவில்லை. தீக்குள் விரலை வைத்தாற்
போன்று அவள் துடித்தாலும்ää பரிகாரி அது பற்றிக் கவலைப்படாமல்ää தன் உச்சாடனத்திலேயே கவனமாகவிருந்தார். நஸீறாவின் போராட்டம்
கொஞ்சம் குறைந்தது.
~இப்பவும் சுடுதா..?’ என்ற வெள்ளிப் பரிகாரி விரலை விடாது மீண்டும் உச்சாடனம் செய்தார்.
சலுகாக் கிழவி பதைபதைக்கும் நெஞ்சத்துடன் இவற்றைப் பார்த்தக் கொண்டிருந்தாள். சட்டென
வெள்ளப் பரிகாரிää நஸீறாவின் அந்த விரலை போத்தலை விட்டும் மெதுவாக வெளியே எடுத்தார்.
~ஆ…..!’
~எ..என்ட ல்லாவே..ய்…?’
பெண்கள் இருவரும் அலறிவிட்டனர். நஸீறாவின் இடதுகைச் சுட்டுவிரல் மட்டும்ää வெள்ளி உலோகத்தில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. அவ்விரலை மடக்கவும் முடியவில்லை. திண்மமான வெள்ளியில்
வார்க்கப்பட்டாற் போன்று கடினமாக நீட்டியபடியே இருந்தது. அது பன்னீரில் நனைந்திருந்தது.
வெள்ளிப்பரிகாரி சற்றும் பதற்றமின்றி அந்த வெள்ளி விரலை பிடித்தபடியேää மறுகையால்ää
மயிலிறகால்ää மெதுவாக வருடியபடி மேலும்ää
சில மந்திர உச்சாடணங்கள் முணுமுணுத்தார். கால்மணிநேரம் இப்படியே கழிந்தது. பெண்களிருவரும்
அவ்விரலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தனர். ஆவலும்ää பயமுமாக வெள்ளிப் பரிகாரியைப் பார்த்தனர். அவர் கடகடவென்று சொன்னார்.
~ஓம்.. உண்மைதான்.. சர்வமும் உண்மைதான். நெருப்புத் தண்ணீர் ஊற்றித்
தீயணைக்க முடியுமா.. ஜபர்தார்..?’
~……………..’
~சூரியனுக்கு தீமூட்டி பற்ற வைக்க முடியுமா ஜபர்தார்..?’
~………………………’
பெண்கள் இருவரும் யாரிடம் என்ன பேசுகிறார் என்று புரியாமல் அதீத
பயத்துடனும்ää ஆர்வத்துடனும் பார்த்துக் கொண்டிருக்கää வெள்ளிப்பரிகாரி அந்த வெள்ளிவிரலைக் குறிப்பாகப் பார்த்தபடிää விரைவாக புரியாத ஒரு பாஷையில்ää ஏதோ அதில் தரிபட்டிருந்த அமானுஷ்யமான கட்புலனாகா உருவத்துடன் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். பற்பல கேள்விகள்.. அமானுஸ்யமான ஒலியற்ற பதில்கள்..
சற்று நேரம். அழுகை.. பின் சினுங்கல்.. திடீரென அந்த விரலை மறுபடியும்ää பன்னீர்ப் போத்தலுக்குள் பலவந்தமாக நுழைத்தார். இப்போதுää அவ்விரல் சாதாரணமாக முன்பிருந்தது போல் மாறிவிட்டது. நஸீறாவுக்கு உடனே மறுபடியும் அந்த விரல் பழையபடி
நெருப்பாகச் சுட்டது. உதறி விடுவித்துக் கொண்டாள். வெள்ளிப்பரிகாரி சற்றுநேரம் யோசனையிலிருந்தார்.
பின்னர் சற்றே நிமிர்ந்து சலுகாக் கிழவியைப் பார்த்துää
~ம்மா.. உன்ட பேத்திக்கு பெரிசா ஒண்டுமில்ல வருத்தம். ஆனா இவளுக்கு தின்கிற சாமான் ஒண்டுலää பில்லி சூனியம் செஞ்சி உள்ளுக்குக் குடுத்திருக்கு. அது உள்ளுக்க
இருக்கிற மட்டுக்கும் இப்படித்தான் ஆண்களின் உடம்பு பட்டால் தீப்பற்;றி எரியும். அதை வெட்டி விட்டால்தான் இது அடங்கும். குளிராகும்.’
~எ..அ..துக்கு என்ன பாபா செய்யனும் நாங்க.. எம்பட்டுச் செலவு
ண்டாலும்..’
~செலவப் பத்தி ஒண்டுமில்லம்மா.. சின்னதா ஒரு தேசிக்காய் வெட்டி
கழிப்புச் செஞ்சிரலாம். இஞ்ச வச்சே வேலைகளை முடிச்சி சுடலைக்க போய் தாட்டுட்டு வந்தாச்
செரியாகும். பெரியவஹட கிருபையால..’
~அதுக்கு நாங்க என்ன செய்னும் பாபா..’
~ம்மா நீ கொஞ்சம் வெளியே போய் இருங்க.. கூப்பிடுரன்..’
சலுகாக் கிழவி அவசரமாக எழுந்து வெளியே வந்து விட்டாள். வெள்ளிப்பரிகாரியின்
மீதுää இப்போதுää
பூரண நம்பிக்கை வந்து விட்டது. இவ்வளவு
காலமும் இவளை ஆட்டி வைத்த பிசாசுச் சூனியம் வெட்டிக் கழிபட்டு தன் பேர்த்திக்குச் சுகம்
கிடைக்கப் போவதையெண்ணி மாளாத நிம்மதியடைந்தாள். அவசரமாகää மடியை அவிழ்த்து வெற்றிலை பாக்குப் போட்டுக் கொண்டேää உள்ளறையை நோக்கினாள். உள்ளே வெள்ளிப்பரிகாரிää நஸீறாவின் முகத்தருகே நன்றாகக் குனிந்து அவளுக்கு மந்திரங்கள்
சொல்லி ஊதிக் கொண்டிருந்தார். அவரது கண்கள் நஸீறாவின் விழிகளைக் கவ்விக் கொண்டிருந்தன. நஸீறாவம்ää
வெள்ளிப்பரிகாரயையே கண்ணிமையாது கட்டுண்டு
போய் பார்த்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் சலுகாக்கிழவியை உள்ளே அழைத்தார் வெள்ளிப்பரிகாரி.
உள்ளே நஸீறா சற்றுப் பயம் தெளிந்தவளாக சலுகாக் கிழவியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
இதனைக் கண்டதும் கிழவி மஹா ஆனந்தப்பட்டு அதிசயித்தாள். வெள்ளிப் பரிகாரி இவளைச் சற்று
நேரத்துக்குள் எப்படி மாற்றிவிட்டார்..
~ம்மா.. சரிதான்.. உள்ளுக்க இருக்கிற அசிங்கத்தை வெட்டிக் கழிச்சிரலாம்.
நீங்க என்ன செய்யனும்டால்ää நான் எழுதித் தார சாhன்களை ஒண்டுவிடாமல் வாங்கி எடுத்துக் கொண்டுää அடுத்த வெள்ளிக்கிழமை ஞ்ச வாங்க. மச்சம் மாமிசம் ஏதும் வீட்டுக்க எடுக்க வேண்டாம்.
ஊட்டுக்குத் தூரமான பொம்பிளஹளயும் தொட வேணாம்.
இந்தாங்க சாமான் லிஸ்ட்டு..’
~…………………….’
~செரி பாபா..’
~திப்பிலி நூறுகிராம். சுயம்பு அறுபது பட்டை.. கரும்பூனைப் பிடுக்கு..
கருத்தச் சேவல் ஒண்டு.. கஞ்சிரா வேருக் கட்டுää..
சாம்பிராணி.. ஊதுபத்தி.. தாயத்து..
அச்சிலக்கூடு.. அரைஞான்கயிறு ரெண்டு முழம்.. மறுகாக் கொஞ்சம் கடல்தண்ணி.. அவ்வளவுதான்..
இதுகள வெச்சி ஒரு சின்ன வேல செய்வம்.. அத்தோட சுகமாயிரும் பெரியவஹட கிருபையால.. சரி
நீங்க போகலாம்.’
~இதெல்லாம் எங்க பாபா தேடி எடுக்கிற நாங்க..?’
~அப்படியெண்டால்ää வெளியால நிக்கற
என்ட உதவியாளருட்ட காசைக் கொடு;த்தா அவரு எல்லாம் வாங்கி வச்சிருப்பாரு.. நீங்க வாற வெள்ளிக்கிழம
வரலாம். அதுவரைக்கும் இந்த ஓதின பன்னீரை ஒவ்வொரு இரவிலயும் மூணு முடர் குடிக்கக் குடுங்க..’
~வெட்டிக் கழிச்சா ந்த வருத்தம் சுவராக் குணமாகுமா பாபா..?’
~நிச்சயமாக் குணமாக்கித் தாரன். விசயம் முடிஞ்சாää நீங்க திருப்திப்பட்டால்ää
நீங்க வந்த வழியில இருக்கிற கட்டவெளிப்
பள்ளிவாசலுக்கு அய்யாயிரம் ரூவா காணிக்கையாக் குடுத்திருங்க.. நான் செய்ர வேலைக்கு
கூலி சம்பளம் வாங்கிறயில்ல.. சரி.. போய் அடுத்த கிளம..?’
~கட்டாயம் வாரம் பாபா..’
இவ்வளவு நேரமும் பேசாதிருந்த நஸீறாவே
முதற்தடவையாக வாய்திறந்து சொன்னதும் கிழவிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உண்மையில் என்ன
மாயம் இது..?
~இப்ப நீங்க போகலாம்.’
வெள்ளிப்பரிகாரி நஸீறாவைப் பார்த்துச்
சொன்னார். நஸீறா மிகுந்த வெட்கத்துடன் சலுகாக்கிழவியுடன் எழுந்தாள். அவளது கன்னங்கள்ää ஏதோää உள்ளார்ந்த எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகää நாணத்தால் சிவப்பேறியிருந்தன.
இருவரும் மஹா திருப்தியுடன் வெளியேறினர்.
0
வெள்ளிக் கிழமை. உச்சிப் பொழுது.! வெள்ளிப்பரிகாரி இன்று நோயாளர் எவரையும் பார்ப்பதில்லை.
இன்று மடை வைத்து ~ஜின்’ வசியம் செய்து பில்லி சூனியங்களை வெட்டுவது மட்டும்தான் நடக்கும்.
சலுகாக்கிழவியும்ää நஸீறாவும் தயாராக வந்திருந்தனர். இவர்களின் நேர்ச்சைப் பொருட்கள் வாங்கப்பட்டுத் தயாராகவிருந்தன. வெள்ளிப்பரிகாரி
குளித்துää சடைமுடி சீவி அழகாகவும்ää
கம்பீரமாகவும் வெளியிலேயே உட்கார்ந்திருந்தார்.
உதவியாளரும்ää விஷேட பச்சைத் தலைப்பாகையுடன்
தயார் நிலையில் இருந்தார்.
~ம்மா.. சூனியம் வெட்டிக் கழிக்கப் போறம். உள்ளுக்கு இந்தப் பிள்ள மட்டும்தான் என்னோட இருக்கனும்.
ஒடம்பு கொஞ்சம் எரியிற மாதிரி இரிக்கும்.. ஆனாப்ää
பயப்புடத் தேவையில்ல.. நீங்க இந்த தேநீரைக்
குடிச்சிட்டு அப்படி கூடாரத்து நிழல்ல குந்தியிருங்க. ஒரு ரெண்டு மணித்தியாலம் ஆகும்
வேலை முடிய..’
~செரி பாபா..’
~ம்மாவும் கூட இருக்கட்டும் பாபா..’ என்றாள் நஸீறா தயங்கியபடியே.
~ம்மாக்கு ல்ல வருத்தம் உனக்குத்தானே.. மத்தது ~ஜின்’
வார நேரம் அவ தாங்க மாட்டா..’
~டியே.. பண்டி.. நான் ஞ்சதானே குந்தியிரிக்கன் நீ மட்டும் உள்ளுக்குப்
போவண்டி.. பண்டி..’
சட்டென வெள்ளிப்பரிகாரி எழுந்து தனது பிரத்தியேக அறைக்குள் நழைந்தார். உள்ளிருந்து
கமகமவென்று சாம்பிராணி வாசம் பரவியது.
சில உச்சாடன ஒலிகள் கேட்க ஆரம்பித்தன.
உதவியாளர் மடைப் பொருட்களை அதற்குரிய வேலைகளைச் செய்து உள்ளே கொணர்ந்து வைத்துவிட்டுத்
திரும்பி வந்துää நஸீறாவிடம் ஒரு வெள்ளைத் துணியைக் கொடுததார்.
~ந்தாம்மா.. உன்ர பிடவைகளக் களைஞ்சிட்டுää இந்த துணியக் கட்டிக்கிட்டு உள்ள போ!.~
நஸீறா கொஞ்சம் தயங்கினாள். ஆனால்ää உள்ளிருந்து திடீரென வெள்ளிப்பரிகாரியின் குரல் கேட்டது.
~வா புள்ளே..’
~போவண்டி பண்டீ.. போடி..’
சலூகாக் கிழவி உந்தித் தள்ளியதும்ää நஸீறா திரைமறைவுக்குச்
சென்று தனது ஆடைகளை நீக்கிää கமகமத்து மணத்த அந்த வெள்ளைத் துணியைக் கட்டிக் கொண்டு உள்ளே
தயக்கமாக நுழைந்தாள்.
சலுகாக்கிழவி வெளியே மரத்தடியில் குந்திக்கொண்டு உதவியாளரின் ஜின் விவகாரங்களையும்ää பேயாட்டக் கதைகளையும்ää
அதி சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருக்கää உள்ளிருந்துää
பற்பல குரல்களில் மந்திர உச்சாடனங்கள்
கேட்க ஆரம்பித்தன. அரைமணிநேரம் கழிந்ததும்ää
உதவியாளர் உள்ளறைக்குள்ää
குளிர்பானமும்ää சில பழங்களும் கொண்டு சென்று கொடுத்து விட்டு வந்தார். சலுகாக்
கிழவிக்கும் தேநீர் கொடுக்கப்பட்டது. தேநீரைக் குடித்துவிட்டுää எழுந்த சலுகாக்கிழவிää
அடக்கமாட்டாத ஆவலுடன் மெதுவாகச் சென்று
உள்ளறைக்குள் கதவிடுக்கால் எட்டிப் பார்த்;தாள். உள்ளே நஸீறா சம்மணமட்டு உட்கார்ந்திருக்க வெள்ளிப்பரிகாரி கண்களை மூடியபடி உச்சாடனம் செய்து
கொண்டிருந்தார். மிகத் திருப்தி கொண்ட கிழவிää பரிகாரியின் மூலிகைத்தோட்டத்தில்; சற்று உலவச் சென்றாள்.
தன் பேர்த்திக்குப் பீடித்த இனம்புரியா நோய் இன்றுடன் பறந்து விட்டது. அவள் இனித் தன்
கணவனுடன் நன்றாகச் சேர்ந்து வாழ்வாள்.. பிள்ளை பெறுவாள்.. இதற்குக் காரணமான தன்னை அவர்கள்
வாழுமட்டும் வாழ்த்துவார்கள்.. கற்பனைச் சிறகடிப்பில் நேரம் போனதே தெரியவில்லை.
சலுகாக்கிழவி சுமார்ää ஒரு மணிநேரத்தின் பின்னர்ää
தோட்டத்தை விட்டும்ää வெளிவந்துää
வெள்ளிப்பரிகாரியின் அறையை நோக்கி வந்தாள்.
உதவியாளரைக் காணவில்லை. உள்ளறைக் கதவு இறுகச் சாத்தப்பட்டிருந்தது. சாம்பிராணிப் புகை
மட்டும் வெளியே வந்து கொண்டிருந்தது. உள்ளிருந்து ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஆனால்ää நஸீறாவின் குரல்; மட்டும் சற்றே கேட்டாற் போலிருந்தது. கிழவி பதைபதைப்புடன் அறைக்
கதவை நெருங்கினாள். இப்போதுää
நஸீறாவின் தெளிவான ஆர்வமிக்க குரல்ää
~;ச்சீ..ம்ம்...| என மெதுவாகச் சினுங்குவது போல் கேட்டது. சலுகாக்கிழவி அடக்கமுடியாத ஆர்வமாக பூட்டியிருந்த
கதவின் சாவித் துவாரத்தின் வழியே கண்களை வைத்து உற்றுப் பார்த்தாள்.
உள்ளே மங்கலான இருட்டில் ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை. சற்று நேரத்தில்ää உள்ளறைக் காட்சிகள் கொஞ்சமாகத் தெரிந்தன.. வெள்ளிப்பரிகாரியின்
அகலமான கறுத்த முதுகுப் பாகம் தெரிந்தது. வெள்ளிப் பரிகாரி இடுப்பில் கைவைத்தபடி கதவுக்கு
முதுகைக் காட்டியவண்ணம் வெற்றுடம்புடன் நின்று கொண்டிருந்தார். இன்னும் சாய்கோணமாகப்
பார்த்த போதுää பளபளவென்ற வெள்ளி உலோகத்தில் செய்யப்பட்டதைப் போன்று தெரிந்தது நஸீறாவின்
இடதுகைச் சுட்டுவிரல்..? அல்ல..! கிழவி சர்வாங்கமும் அதிர்ந்து போனாள்.
ஒரு ஆணிண் விரல்நுனி பட்டாலே தீப்பற்றினாற் போன்று தகித்துக் கதறும் உடற்தன்மை
கொண்ட நஸீறாää எவ்விதமான ஆட்சேபனையுமின்றி வெள்ளிப்பரிகாரியின் வெற்று மார்பின்
மீதுää வெட்கத்துடன்ää
சாய்ந்து கொண்டுää தனது வெள்ளி விரலால்ää
அவரது முதுகின் மீது ஆர்வத்துடன்ää வருடிக் கொண்டிருந்தாள்.
நஸீறாவுக்கு நோய் முழுவதுமாகக் குணமாகி விட்டது போலும்.0
0000000000000000000000
விட்டு விடுதலையாகி..
இங்கே..ää
பூமியில்ää
ஆசியாக் கண்டத்தில்ää இலங்கையில்ää
கொழும்பில்ää பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில்;ää 186ஃ2 இலக்க அறையில்ää கணிணி முன் உட்கார்ந்துää
தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச்
சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்துää இதனைவிட்டு விடுதலையாகி விட மட்டும்... இன்னும் ஒரு மணி நேரத்தில்
தலைநகரில்ää ஒரு இராணுவ உயர் அதிகாரியைக் குறி வைத்து வெடித்துச் சிதறவிருக்கிறேன்.
உலகில் வாழும் கடைசி மணித்துளியில்ää
ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்..கதைக்கு
விட்டு விடுதலையாகி என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன்.
இன்னும் முற்றும் போடவில்லை. ஆனால்ää
இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது.
என் நேரமும் என் விதியும் என்னை அழைத்தன. எழுந்தேன். சிறுகதை
இன்னும் எழுதி முடியவில்லை. ஆயினும்ää
ஆயத்தமானேன். தற்கொலை அங்கியை அணிந்தேன். பயனித்தேன்.. இடத்தை அடைந்தேன். இலக்கை நெருங்கினேன்.
எனக்கான சமிக்ஞை கிடைத்ததும்ää முழு மூச்சுடன்
உந்திப் பாய்ந்தேன். என்னை ஏற்றி வந்த வாகனச் சாரதி.. இலக்கு வைக்கப்பட்ட இராணுவத்தளபதி..
அவரது காவலர்கள்.. செருப்புத்தைக்கும் தொழிலாளி.. பள்ளி மாணவி.. கர்ப்பிணிப் பெண்ணொருத்தி..
தெருப்பிச்சைக்காரன்.. பாதையில் விரையும் மனிதர்கள்... எவரைப்பற்றியும் யோசிக்க எனக்கு
சொல்லித்தரப்படவில்லை. ஒரு எக்காளப் பேரிடியொலி இறுதியாகச் சிதறிய எனது காதுகளில் கேட்...
()
அங்கே...
ஒரு ஏகாந்தப் பெருவெளியில்ää
வெற்றிடத்தில் மிதந்து கொண்டிருந்தேன்
நான். மேலே என்றும் சொல்ல முடியவில்லை. கீழே
என்றும் சொல்ல முடியவில்லை. ஓளி இல்லை. இருள் இல்லை. காற்று இல்லை. உஷ்ணம்ää குளிர் இல்லை. பொதுவில் எந்த ஒரு சுற்றுப்புறச் சூழலுமே இல்லை.
ஏகாந்தப் பெருவெளி! நானே “வெளி” ஆகியுமிருந்தேன். ஒருதனியான ஏகாந்த வெற்றிடத்தில் தரித்திருந்தேன்.
ஆனால்ää எனது உடம்பைக் காணவில்லை. அது ப10மியில்ää ஒருமரத்தில்ää தலைப்பகுதி ஒரு கிளையிலும்ää
ஒரு கையும் மார்பின் சிறு பகுதியும் வேறொரு கிளையிலும் தொங்கிக் கொண்டிருந்தன.
நான் இருக்கிறேன் என்றுணர்ந்தேன்;. உயிருடன் இருக்கிறேன் என்றும் மனம் சொன்னது. ஆனால்ää உடம்புடன் இல்லை என்றும் புரிந்தது. உடம்புதான் ஒரு கணத்தில்
வெடித்துச் சிதறி விட்டதே. ஒருகணக் குழப்ப நிலையின் பின் என்னுடைய சில புலன்கள் மட்டும்
கூர்மையாகின. “உமது பார்வையைக் கூர்மையாக்கி விட்டோம்..”
என்று யாரோ சொல்வது போலிருந்தது. யாரென்று
தெரியவில்லை. ஒலியாகக் கேட்டதா.. அல்லதுää
வசனங்கள் உணர்வில் பதிந்ததால் மொழி
புரிந்ததா என்று நிர்ணயிக்க முடியவில்லை. நன்றாக உற்றுணர்ந்து பார்த்த போதுää சம்பவங்கள் கனவு போல ஞாபகத்தில் மெல்லியதாக தெளிவாகின.
ஒரு கணம்முன்னர் நான் வாழ்ந்த உலகம் வேறு இந்த உலகம் வேறு என்று விளங்கியது. என்ன
உலகம் இது..ää? இதுதான் நிரந்தர உலகமா..? ஒரு கணத்தின் முன் நான் வாழ்ந்த ப10மியை கோடானுகோடிக் கிரகங்களையும் தாண்டிப் பார்த்தேன். இப்போது பூமியின் சகல காட்சிகளும் தெளிவாகத் தெரிந்தன. பூமியில்
தொலைக்காட்சி பார்ப்பதைப் போல ப10மியையே ஒரு தொலைக்
காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ப10மியின் எந்தப் பகுதியையும்ää புரட்டிப் பார்க்கக் கூடியதாக இருந்தது. காலபேதமின்றிää
பூமியைப் புரட்டிப் புரட்டிää இரவு பகல்களைää
இடி மின்னல்ää மழை பெருவெள்ளத்தை பார்க்க
முடிந்தது. பக்கத்துக் கோடிக் கிரகங்கள் விரைந்தோடும் காட்சிகள் தெரிந்தன. ஓடும் கிரகங்களின்
வேகத்தில் எழுந்த ஒலி எல்லாம் கலந்து ஒரே ஒலியாக ஓங்காரமாகக் கேட்டன. கேட்டன என்று
சொல்ல முடியாது.. கேட்பதாக உணர்ந்தேன். கோடிக் கிரகங்கள்.. கோள்களி;ல் சீறியெழும் இராட்சத நெருப்பலைகள் தெரிந்தன. உருகிப் பிரவாகித்துப்
பெருவெள்ளமெனத் திரண்ட பனிக்கடல் தெரிந்தது.. “எங்கெங்கு நோக்கினும் சக்தி”
கொண்டு தத்தம் குடும்பத்தினரோடு அதி
விசையாய் விரையும் கோடான கோடிச்சு10ரியன்கள்... எண்ணி
முடிக்க முடியாத எண்ணிக்கையில்.. மாபெரும் ஆழிச் சமுத்திரங்கள் ஒரு துளி நீராய் கிரகங்களின்
ஈர்ப்பால் ஒட்டிக் கிடந்தன.
இதுவரை கண்டேயிராத நிறங்கள்... நீலம்ää சிவப்புää
பச்சைää மற்றும்ää ஓளம்ää கடிதால்ää
சுட்டிப்பு என்றெ ல்லாம் உலகத்தோருக்குத்
தெரியாத இன்னும்.. இலட்சக் கணக்கான வர்ணங்களை வாரியிறைத்தபடி கோள்கள்.. கிரகங்கள்..
நட்சத்திரங்கள்.. உடுத் தொகுதிகள்.. ஏதோ சப்தம் தொடராகக் கேட்டபடியே இருந்ததாக எண்ணினேன்.
அதனால். உணர்வற்றிருந்தேன். தொலைக்காட்சியில்ää
ஒலிமறிப்பான் (ஆரவந) போல இருந்தது.
அதை விடுவிக்கச் சொல்லவும்ää விரும்பாது ஏன் அதற்காக
முயற்சிக்காது சும்மாவே பார்த்துக்கொண்டிருந்N;தன்..
()
இங்கே..ää
இலக்கைச் சரியாக இனம் கண்டு நான் நடத்தி முடித்திருந்த தற்கொலைத்
தாக்குதலால்ää தலைநகர் அதிர்ந்தது. தலை தெறிக்க ஓடியது. வெடித்த சுற்றுச் சூழலில்
மரண ஓலங்களுடனும் அலறல்களுடனும் மனிதர்கள் ஓடினர்.. வாகனங்கள் முண்டியடித்து முந்தியடித்துப்
பறந்தன.. யாரோவெல்லாம் யாரைப் பார்க்கவோ ஓடினர்.. அழுதனர்.. தூக்கினர்.. இரத்த விளாறாய்
மயங்கினர்.. தெளிவற்ற குரல்களில் பரபரப்பின் உச்சத்தில் கத்தினர். உளறினர்.. செல்லிடப்
பேசிகள் ஒரே சமயத்த்pல் உயிர் பெற்றுப் பேசிச் செயலிழந்தன. முப்படைகளும்ää கட்டளை அதிகாரிகளின்ää
தாறுமாறான கட்டளைகளின் படி பரபரப்பாக ஓடியாடின. சிவப்பொளிர் தொப்பிகள் அணிந்த
அம்பியூலன்ஸ் வண்டிகள்ää தீயனைப்பு வாகனங்கள் நீளமாய்க் கத்தியபடி பறந்து வந்தன. ஏற்றின..
இறக்கின.. தூக்கின.. நெருப்பணைத்தன.. உள்ளுர் அரசியல்வாதிகள் பாதுகாப்பான தூரங்களில்
நின்று கொண்டு சிப்பாய்களை வேலை வாங்கினர்.. தாறுமாறாகப் பிய்ந்து தெறித்துக் கிடந்த
மானுடத் துண்டங்களைப் பார்த்து வயிறு குமட்டினர். தம் மனைவியருக்கு நேர்முக வர்ணிப்புச்
செய்தனர். பகல் சாப்பாட்டுக்கு இறைச்சி வேண்டாம் என்றனர்..
முக்கால் மணி நேரத்திற்கு தலைநகர வீதிகளில்ää ஒருவருக்கும் தலை சரியாக வேலை செய்யவில்லை. தத்தமது உறவினர்
நண்பர் கதியறிய மக்கள் படையெடுத்துப் பாதையடைத்தனர்.. பாதைகள் மூடப்பட்டன. வாகனங்கள்
திருப்பியனுப்பப்பட்டன. இனம் தெரியாத ஆட்களால் சுற்றிலுமிருந்த கடைகள் சந்தடி சாக்கில்
உடைக்கப்பட்டன. காவலர் பயமின்றி;ää பொருட்கள் கொள்ளை
போயின. ஆஸ்பத்திரி வட்டாரங்கள் உஷாரடைந்தன.
அதி தீவிர கவனிப்புப் பிரிவில் கட்டில்கள் நிறைந்தன.. காயங்களுடனும்ää அரைகுறை உயிர்களுடனும் எழுந்த தீனமான ஒப்பாரி ஒலிகள் வைத்தியசாலையெங்கும் அவலச் சத்தங்களாய் செவிகளைக்
கிழித்தன. தாதிகள் புறாக்;களாய்ப் பறந்து திரிந்தனர்.. அத்தனை வைத்தியர்களும் அதி விரைவில் வந்திறங்கி அதிசயிக்க
வைத்தனர். சின்னக் காயங்கள்பட்டோர்ää வெளிச்சிகிச்சை பெற்றுää சாட்சி சொல்லப்
பயந்து வெளியேறிப் பறந்தனர்.. தனியார் வைத்தியசாலைகள் காயப்பட்டோருக்குää திடீர் இலவச மருந்துகள் கட்டி மலிவான குளிகைகள் வழங்கிப் பேர்
வாங்கின. எல்லாவகை மருந்துகளும் விலை உயர்ந்து பதுங்கின.
()
அங்கே...
தாக்குதலில் என்னோடு கூடவேää உயிரிழந்த பதினைந்து
பேரும்ää என்னுடனேயே இங்கே மிதந்து கொண்டிருந்தனர். எல்லாவற்றையும்ää என்னைப் போலவேää பார்த்துக் கொண்டிருந்தனர்.
இவர்களின் முகங்களைக் காணமுடியவில்லை. உடல்களும் இல்லை. ஆயினும் ஆத்மாக்களை அடையாளம்
காண முடிந்தது. பூமியில் என்னை ஏற்றி வந்த வாகனச் சாரதிää.. இராணுவத் தளபதி.. அவரது
காவலர்கள்.. செருப்புத்தைக்கும் தொழிலாளி.. பள்ளி மாணவி.. கர்ப்பிணிப்பெண்ணொருத்தி..
தெருப்பிச்சைக்காரன்.. பாதையில் விரைந்த மனிதர்கள்... எல்லோரும் மிதந்து கொண்டிருந்தனர்..
ஆளடையாளம் காண முடியாவிட்டாலும்ää உணரக் கூடியதாகவிருந்தது.
ஆயினும்ää எவ்விதமான பய உணர்வும் இல்லை. நட்பும் இல்லை. எல்லோரும் சும்மா
பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்;. அல்லது விரும்பிய கிரகங்களில் விரும்பிய காட்சிகளைப் பார்த்துக்
கொண்டிருந்தோம்.
தலைநகரின் வெடிப்புச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வுக் கணங்களை உணர்ச்சியற்றுத் தெளிவாகப் பார்த்துக்
கொண்டிருந்தேன்.. என்னைச் சார்ந்தவர்களின்ää
தற்கொடைப் போராளிகட்கான வீர வணக்கமும்ää என்னைச் சேர்ந்தவர்களின்ää
பாசவெளிப்பாட்டுக்கானää ஒப்பாரி அழுகையும்ää
இங்கே என்னைத் துளியும்;
பாதிக்கவில்லை. இரண்டு நிகழ்வுகளும்
ஒன்றேää அதேசமயம்ää இரண்டும் எனதல்லää என்று உணர்வு கூறியது. யாருக்கோ யாரோ அழுகிறார்கள்.. “..எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..” என்றுää
மிக நிம்மதியாகவிருந்தது. பயங்கரக்
கனவொன்றை விட்டும் விடுதலையாகி இருந்தாற்
போலிருந்தது.. யாருக்கும் எக்கவலையும் இல்லை. ஆயின்ää
சந்தோஸமும் இல்லை. எதையும் யோசிக்கவோ
செற்படுத்தவோ முடியாத வகையில் எதனாலோ கட்டுண்டதைப் போலிருந்தது.. விடுதலையும் தேவைப்படவில்லை.
எனினும்ää எதற்கோ யாருக்காகவோ காத்திருப்பதைப் போலுமிருந்தது. அதுவரைக்கும்ää சும்மா பூமியைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிரää எங்களுக்குää
வேறு எவ்வேலையும் இருப்பதாகத் தோன்றவில்லை.
()
இங்கே..ää
அரச திணைக்களங்கள் அக்கணமே வெறிச்சோடின. அலறிய தொலைபேசிகள்ää ‘அழைப்பி’
லிருத்தப்பட்டன. அரச ஊழியர்கள்ää கடமை நேரத்தைக் களவெடுத்த திருப்தியுடன்ää கடுகதியில்ää
வீடு திரும்பி மனைவி பிள்ளைகளைச் சந்தோஷப்படுத்தினர்.
தம்முடைய சமயோசித மூளையால்தான் தாம் தப்பியமை பற்றிப் பேசி அதிசயிக்க வைத்தனர். இன்னும்
மூன்று நாட்களுக்குத் தமக்கு விடுமுறையென தாமாகவே
அறிவித்து மகிழ்ந்தனர். தனியார்கள் தாளாத மனத்தாங்கலுடன்ää தட்டிகளை இறக்கி மூடினர். வங்கிகள் தம் பணவெள்ளத்தை நிறுத்தின.
திகதியிட்ட காசோலைகள் சிரித்தன. ஊடகங்கள் செய்தியை தத்தம் கொள்கைகளுக்கேற்ப ஊதிப் பெருப்பித்துப் பரப்பின.
நேரடி வர்ணிக்க வந்தவர்கள் தம்மையே நெடுநேரமாய் காண்பித்து வெறுப்பேற்படுத்தினர்.
.கமராக்காரர்கள் சந்தடி சாக்கில் அழகான பெண்களைத் திருட்டுத்தனமாக காட்சிப்படுத்திப்
பார்க்க வைத்தனர். சம்பவ இடத்தைக் காண்பிக்காமல் அரசியல்வாதிகளைக் காட்டினர்.
வதந்திகள் வாய்த்தந்திகளில் பறந்தன. வானொலிகள் சூடான செய்தியை
சுடச்சுடப் பரிமாறின. அடுத்த கணமே சம்பந்தா சம்பந்தமற்ற சினிமாப் பாட்டுக்களைää நேயர்கள்ää இலங்கையின் அரைவாசிச்
சனத் தொகையின் பெயர்களைக் கூறிää
போதாதென்றுää மற்றும் அப்பா அம்மா அக்காவுக்கும்ää மற்றும் நண்பர்களுக்கும்ää
மற்றும் அறிவிப்பாளருக்கும்ää மற்றும் கலையுலக நண்பர்களுக்கும் விரும்பிக் கேட்டனர். குண்டு வெடிப்பையும்ää தமது கண்டு பிடிப்பையும் பொறுப்புணர்வற்றுப் பொது ஊடகங்களில்ää பேசினர்.. இணையத் தளங்கள் யாவும் முடுக்கப்பட்டு வெடி தளத்தைக் காட்சிப்படுத்தி காசு வாங்கின. பத்திரிகைகள் எனது சிதறிப் பறந்த தலையை இரத்த விளாறாகப் படம்
பிடித்து “இந்தத் தற்கொலையாளியை அடையாளம் தெரிகிறதா.?” என்று கேட்டன “தகவல் தருபவருக்கு
இரண்டு இலட்சம் சன்மானம்!” என்றன.. மாற்றுக் கருத்துப் பத்திரிகைகள் “பாதுகாப்பில் ஓட்டை!
மேலும் நூற்றி இருபத்தேழு தற்கொலைதாரிகள் நகருக்குள் உள்ளனர்.?” என்று சந்தேகம் தெரிவித்தன. “துரித பொலிஸ் விசாரணைக்கு பாதுகாப்பமைச்சர் உத்தரவு!”
என்றன.
()
அங்கே...
ஒரு எக்காள ஒலி போலக்கேட்டது. இதுவரையும் கேட்டேயிராத வாத்தியத்திலிருந்து
அது வாசிக்கப்பட்டது. உடனேää எனது மூன்றாம் கண்ணும் திறந்து கொள்ள மஹா மைதானம் ஒன்று முதற்
தடவையாகத் தெளிவாகப் புலப்பட்டது. மைதானத்தில்ää
நான் கோடானு கோடிப் பேர்களுடன் நின்று
கொண்டிருந்தேன். எனது வலது இடது பக்கங்களில்ää
இரண்டுää பட்டோலைகள் முளைத்திருந்தன. அதில்ää புரிகிற எழுத்தில்ää
என் சரித்திரமும்ää நான் தரித்து நிற்கும் இடமும் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தது.
அடுத்த இடம் குறிப்பிடப்படவில்லை. ஏதோ எழுதப்பட்டிருந்தது தெரிந்தாலும்ää வாசிக்கவோää
புரிந்து கொள்ளவோ முடியவில்லை. அப்பட்டோலைகளைச்
சிறகுகளாகக் கொண்டு மைதானத்தின் மத்தியிலிருந்த மாபெரிய தராசில் அமர ஆவலுடன்ää அசைந்தேன் .அதுவும்
என் வசத்திலில்லை எனப் புரிந்தது. எனக்கான முறை வந்து நான் அழைக்கப்பட்டு விஸாரணைகள்
முடிந்துää கணக்குத் தீர்க்கப்படும் மட்டும் காத்திருக்க வேண்டியிருப்பதாகத்
தோன்றியது.
இனி ஒன்றும் செய்வதற்கில்லை. “..நமக்குமது வழியே நாம் போகுமட்டும்..” சும்மா மிதப்பதை விட வேறென்ன வேலை..? கோடானுகோடிப் பேர்கள்
வரிசையில் மைதானத்தில்ää மிதந்து கொண்டிருக்க திடீரென எனது நாமம் என் தந்தையின்ää பெயரோடு சேர்த்து அழைக்கப்பட்டது. மறுபடியும்ää அந்த எக்காள ஒலியில் என் உயிர் நடுநடுங்கி அச்சமுற்றுப் பரிதவிக்கää
நான் தராசின் முன் கொணரப்பட்டேன்..
என்னிரு பக்கங்களிலும்ää சிலர் ஒளி வண்ணத்தில் நின்று கொண்டிருந்தனர். மறுபடியும் என்
பெயர் மும்முறை யாராலோ உச்சரிக்கப்பட்டது.
உடன்ää என் விசாரனை தொடங்கிற்று. என் முயற்சிகளின்றி என் வாக்குமூலம்
பதிவாகி; கொண்டிருந்தது.
என் அந்தரங்கää பகிரங்க செயல்களும்ää
என் நல்லää தீய நினைவுகளும் கூட என்னாலேயேää ஒப்புவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றில்ää
ஒரு குற்றெழுத்துக் கூட மாற்றமில்லை. யாவும் உண்மையே.
திடீரென என் பட்டோலைச் சிறகுகள் கழற்றப்பட்டன. அவைää தராசில் இடப்பட்டன.. தராசின் மேல் நாக்கு பயங்கரமாக இரு பக்கமும்
ஆடியது. திடீரெனää என்ன நடந்ததென்று புரியவில்லை. ஒரு மஹா நீதிபதி வந்தாற் போல்
உணர்ந்தேன். ஒரு கணக் குழப்பத்தில்ää
யாரோ யாருக்கோ கட்டளையிடää நான் ஒரே விசிறலில் மைதானத்தை விட்டும்ää ‘வெளி’யில்ää
தூக்கியெறியப்பட்டேன். ஒரு இடமிலிக்
குவியத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறேன்.. என்றும்ää அது அப்படித்தான் கோடான கோடி காலங்களாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றது
என்றும் உணர்ந்தேன். அது ஏனென்றெல்லாம் எண்ணவும் விரும்பவில்லை. விடையளிக்க முடியாதää விரிந்த வெளியில் விடை தேடி விரைந்து கொண்டேயிருந்தோருக்குச்
சொல்லப்படும் ஒரு பதிலைத் தேடி...நானும் விரைந்து கொண்டேயிருந்தேன்..
()
இங்கே..ää
இரும்புத்திரைக்குள்ளிருந்தாலும்ää தலைமைப் பீடம் துணுக்குற்றுத் திடுக்கிட்டது. உயர் பீட மட்டத்தில் அவசர ஆலோசனை
நடத்தியது. ஆட்சி கவிழாதிருப்பதை உடன் உறுதி செய்தது. தனதுää மகிழ்ந்த சிந்தனையைச் சற்றே நிறுத்தி தனக்குள்ää முகிழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தது. ஆளும் கட்சிப்பிரதமர்ää
கொல்லப்பட்ட முக்கிய நட்சத்திர அந்தஸ்து தளபதிகளின்ää வீடுகளுக்கு நேரில் சென்றுää
பளபள சவப் பெட்டிகளில்ää தன்முகம் பார்த்துää சோக மனைவியருக்கு கைகூப்பினார்.
எதிர்க்கட்சித் தலைவர்ää பொங்கிய மகிழ்ச்சியை மறைத்துச் சோகமாகிää
திரண்ட மக்களிடையேää ஆவேஷமாய்க் கையசைத்தார். தான் ஆட்சிக்கு வந்;தால்ää
ஒலிவ் மரங்கள் வாசலில் பூக்கும் என்றார்.
பாதுகாப்பு அமைச்சர் ஸ்தலத்தில் பாதுகாப்பாக வந்திறங்கிää பரபரப்பூட்டினார். பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் தாமதமான கட்டளைகள்
பிறப்பித்தார். அரசாங்கப் பேச்சாளரான அமைச்சர் ஒருவர்ää “மூன்றே நாட்களில் அடக்குவோம்” என்று ஊடகங்களில்ää உறுமியதை நம்பாத மக்கள்ää
மூன்று நாட்கள் ஊரடங்கு உத்தரவு என்றுää கொண்டதால்ää
பரபரப்பு உச்சத்தை தொட்டது. மறுபடி
நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் பதுங்கின.
மதுக்கடைகள் உச்சக் கட்டக் கொள்வனவில் தள்ளாடின.
எல்லா வாகனங்களும்ää எரிபொருள் நிரப்பு நிலையங்களில்ää நீள் பாம்புகளாகி கார்பன் விஷம் கக்கின. பெற்றோல் தாங்கியில்ää
வதந்தி நிரப்பி பீதி;ப் புகை கக்கிப் பறந்தன. வாயு விலை சந்தடி சாக்கில்ää புஸ்ஸென உயர்ந்தது. நகரின் பொருளாதார மையங்கள் ஒருகணம் ஸ்தம்பித்துப் பின் உயர்வடைந்தன. தூதுவராலயங்கள்
தூக்கம் கலைந்து வழமையானää வன்மையான கண்டனங்களையும்ää
அனுதாபச் செய்திகளையும்ää அச்சடிக்க ஆரம்பித்தன. “இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.” என்றன. கண்காணிப்புக் குழு கண்களைக் கூனிக் கொண்டு ஆங்கில வார்த்தைகளில்
ஆதங்கப்பட்டது. “இது சமாதான முயற்சியைப் பாதிக்கும்”
என்று எண்ணூற்றிச் சொச்சம் தடவைகள்
சொன்னதைச் சொல்லின. வெள்ளைக்காரர் பயமும் பீதியுமாக களத்தில் நின்று கொண்டு முறைப்பாடு பதிந்து கொண்டிருந்தார்.
தீவிர அரசியற்கட்சித் தலைவர் ஒருவர்ää முழுமையான யுத்தத்தில் இறங்க மக்களை அழைக்கää இதனை நம்பிப் பாதாள உலகிலிருந்துää இனமுறுகல்த் தீப்பொறிகள் ஒன்றிரண்டாய் தெறிக்கத் தொடங்கின. பணப்பெட்டிகள்
சவப்;பெட்டிகளில் பரிமாறின.
ஆயுதங்கள் சேகரிக்கப்பட்டு. பாதாளத் தாதாக்களின் உயர்மட்டச் சமிக்ஞைக்காகக் காத்திருந்தன
இது புரியாத சிறுபாண்மையினர் அவசர அவசரமாக சந்தையில் சாமான்கள் தேடி ஓடிக் கொண்டிருந்தனர்.
உள்நாட்டுப் பாதுகாப்பமைச்சின்; உயர் செயலாளர்கள் குளிர் அறைகளுக்குள் ‘வைப்புத்துணைகளுடன்’ ‘பூட்டிக்’கொண்டுää
‘குண்டுகளையும்ää’ ‘வெடிப்புக ளையும்’
ஆராய்ந்தனர். அடுத்த நிலை உயரதிகாரிகள்ää வீட்டிலிருந்துää
காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துää செல் பேசினர். சிறிய செயலாளர்கள்ää சும்மா காரில்ää
ஓடியாடிக் கொண்டிருந்தனர். கனிஷ்ட அதிகாரிகள்ää திடீர் சுகயீன விடுமுறையில்ää
மனைவி பிள்ளை க ளு ட ன்ää வாகனங்களில் காணாமல் போயினர். கீழ்நிலை இலிகிதர்கள் இதுவரை நடந்த
தற்கொலைத் தாக்குதல்கள்ää காயப்பட்டோர் இறந்தோர் எண்ணிக்கை.. நிவாரண விடயங்கள் என்று தரவு
நிரைப்படுத்த ஆரம்பித்தனர்.
()
அங்கே...
விஸ்தார ‘வெளி’யில் விசிறப்பட்டு திக்கற்ற சூன்யத்தில்ää விரைந்தேன். என்னோடு இன்னும் கோடிக் கணக்கானோரும் விசிறப்பட்டிருந்தனர்..
விரைந்த வேக தூரங்களில்ää அவர்களுடனும்ää
பூமியில் விழாத இன்னும் கோடிப் பேருடனும்ää நானும் அந்தப் பாலத்தை நோக்கியே பயனித்துக் கொண்டிருக்கிறேன்.
மகாப் பிரமாண்;ட கிரகங்களிலிருந்தும்ää பூமியிலிருந்தும் விசிறப்பட்டு இன்னும் கோடிக் கணக்கானவர்கள்
என்னுடன் புதிதாகச் சேர்ந்து கொண்டேயிருந்தனர்.
ஒரு தலைமுடியை ஏழாகப் பிரித்த அளவிலான ஒடுக்கமான பாலத்தைக் கண்டோம்
.அதைக்கடக்கும் போது தாக்குப்பிடிக்க முடியாதää பல கோடிக்கனக்கானோர்ää
மகாப் பிரமாண்டமான கிரகங்களிலும்..
பூமியிலும்ää சிதறி விழுந்தனர்.. விழுந்து சிதறினர்.. சிதறி உயிர்த்தனர்..
உயிர்த்து முளைத்தனர்.. முளைத்து மறுபடி எழுந்தனர்..
ஊர்ந்தனர்.. மேய்ந்தனர்.. பறந்தனர்.. நடந்தனர்..
சிலர்ää அசையாப் பொருளாகி ஸ்தம்பித்தனர். சிலர் அணுவாகி மறைந்தனர்..
சிலர் நட்சத்திரங்களாகி ஒளி வீசி விரைந்தனர். அதே சமயம்- பாலத்தைக் கடக்கையில்ää தவறி வீழ்ந்துää
நானும்ää
மறுபடி ப10மிக்கே மீண்டுää
மேய்வதற்குää ஊர்வதற்குää
நடப்பதற்குää நிற்பதற்கு அல்லது சும்மா கிடப்பதற்கு என்று விழுந்து விடலாம் போலிருந்தது. ஆனால் அது என் வசத்திலில்லை என்றும்
புரிந்தது.
எங்கே விழுவேன்.. நடப்பேனா.. மேய்வேனா.. ஊர்வேனா.. நிற்பேனா..
கோடிக் கிரகங்கள் கடந்து பெருவெளிப் பயனம் செய்துää
பாலம் நெருங்க- எனது மூன்றாவது கண்
ஒளியிழக்கத் தொடங்கியது. காட்சிகள் மங்கின. ஞாபகம் மறந்து வேறேதோ பிரக்ஞை உண்டானது.
பாலத்தைக் கடந்தபோதுää..ää
()
இங்கே..ää
மறுபடி பூமியில்தான்
ஒரு வந்து விழுந்தேன்.. என் ஞாபகத் தொடர்கள் அறுந்திருந்தன.. என் மூன்றாவது கண் முற்றாக
மூடிக் கொண்டது. யாரோ அதனை மறைத்து ஒரு பொட்டு
இட்டார்கள். நான் அழுதேன்.. பலர் சிரித்தார்கள். பலர் கலகலத்தார்கள் பெண்பிள்ளை பிறந்திருக்கிறது
என்றார்கள். என் தாயின் கதகதப்பையும் உணர்ந்தேன்.
“கண்ணே..! கண்ணே..!!” என்று ஏதோ ஒரு மொழியில்
என் தாய்ää என்னை அழைத்துக் கொஞ்சுவது கேட்டது.. இனம் புரியாத பாசம் என்னுள்
முகிழ்த்தது. கொஞ்சம் பசித்தது. தாய் முலை தேடினேன். அமிர்தம் பருகினேன். இதமாக
ஒரு காற்று வீசியது. எங்கிருக்கிறேன்... எப்போது
பிறந்தேன்..? எப்படி வளர்ந்தேன்..? படித்தேன்..? வெட்டுப் புள்ளியில் உயர்கல்வி வாய்ப்பு இழந்தேன்..?
தொழில் வாய்ப்பில் இனமொதுக்கப்பட்டுää இனக்கலவரத்தில் பெற்றோரைப் பலி கொடுத்து..ää விரக்தியாகி..ää
வாழ்வுரிமை பறிக்கப்பட்டு..ää அகதியாய்த் துரத்தப்பட்டு..ää
உச்சக்கட்ட ரோசத்தில்ää இயக்கத்தில் சேர்ந்து..ää
பயிற்சி பெற்று வெளியேறி.. இப்போதுää இங்குää
பூமியில்ää
ஆசியாக் கண்டத்தில்ää இலங்கையில்ää
கொழும்பில்ää பழைய டப்ளியு பெரேரா மாவத்தையில்;ää 186ஃ2 இலக்க அறையில்ää
கணிணி முன் உட்கார்ந்துää தலைநகரில் தற்கொலைத் தாக்குதல் பற்றிச் சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்...
இப் பெருவெளிச் சுழற்சி முடிவடைந்துää
இதனைவிட்டு விடுதலையாகி விட மட்டும்...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைநகரில்ää
ஒரு இராணுவ உயர் அதிகாரியைக் குறி வைத்து
வெடித்துச் சிதறவிருக்கிறேன். உலகில் வாழும் கடைசி மணித்துளியில்ää ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.. கதைக்கு விட்டு விடுதலையாகி
என்று தலைப்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் முற்றும்
போடவில்லை. ஆனால்ää இலக்கை நெருங்கும் நேரம் நெருங்குகிறது. என் நேரமும் என் விதியும்
என்னை அழைக்கின்றன. எழுந்தேன். சிறுகதை இன்னும் எழுதி முடியவில்லை.0
00000000000000000000
கல்லடிப் பாலம்.
கல்லடிப் பாலம்.
தெரியும்தானே மட்டக்களப்பு கல்லடிப் பாலம்..? 1927ம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டு இதுவரைக்கும் புகழோடும் உறுதியோடும்
இருக்கும் கல்லடிப் பாலத்தின்ää
எழுபத்திரண்டு இரும்புச் சட்டகங்களில்
ஒன்றின்ää கைப்பிடியில் அமர்ந்திருந்த நான் தவராஜா.!
பாலத்தின் கீழே அறுபதடி தூரத்தில்ää நெளியும்ää
ஆழமான வாவியில்ää இன்னும் சற்று நேத்தில் மீன்கள் பாட ஆரம்பித்துவிடும். இந்தப்
பாடும் மீன்கள்தாமே இப்பாலத்தின் தனித்தவப் புகழுக்குக் காரணம்.. இப்போதுää மாலை மங்கிக் கொண்டிருந்த நேரம்..! மஞ்சள் நிற ‘டிஸ்பிரின்’
குளிசை போல சூரியன் வாவி நீரில் கரைந்து கொண்டிருந்தது. தூரத்து மாநகரத்து ஒளிவிளக்குகள்
வாவி நீரில் ஆடின.. கருக்கிருட்டின் இந்த இரம்மியமான பொழுதை இரசிக்கும் மனநிலையில்
நான் இல்லை. நான் எனக்குள்ளே கேட்டு வந்த கேள்விக்குப் பதில் இல்லை. இனிக் கிடைக்குமென்றும்
தோன்றவில்லை. பாலத்தில் சில வாகனங்கள் விரைந்து
கடந்தன.. இரும்புச் சட்டகங்கள் ‘தடக்..தடக்’கென்று அதிர்ந்தன என் மனதைப் போலவே..! என் பிரச்சினைக்குத் தீர்வு என்ன.. ஆயிரம் தடவை இக்கேள்வியை மனம் மனதிடமே வினவிக் கொண்டாலும்
விடை தெரியவில்லை. கேள்வி ஒன்றும் பெரிய புதிர்
அல்ல.. ஆனால்ää இது வாழ்க்கைப் பிரச்சினை.. இனப்பிரச்சினை.. மதப்பிரச்சினை..
ஊர்ப்பிரச்சினை.. சமூகப் பிரச்சினை.. எல்லாப் பிரச்சினைகளும் இந்த என்னுடய ஒரே பிரச்சினையில்
தங்கியிருக்கின்றள.
“றுவைதாவைக் கைவிடுவதா..
கரம்பற்றுவதா..?”
தவராஜா என்கிற தமிழ் வாலிபனான நான்ää றுவைதா என்கிற முஸ்லிம்
இனப் பெண்ணை மணந்து கொள்ளுதல் சாத்தியமா.. இது நடக்குமா..?
தீர்வு கிடைக்குமா..?
யாரிடம் கேட்க..?
“என்னிடம் கேள்..!”
என்;று ஒரு அசரீரி ஒலித்தது. யாரது..?
சுற்றிலும் பார்த்தேன். எனக்குள் மறுகிக்
கொண்டிருந்த எண்ணங்களுக்குப் பதிலளிப்பது யார்..?
“நான்தான்..!”
“யார் நீ..?
எங்கிருந்து பேசுகிறாய்..?”
“நான்தான் கல்லடிப்
பாலம்..! என் பெயர்!”
“பாலமா..?
நீ பேசுவதுண்டா..?”
“என்னுடன் மனிதர்கள்
பேசுவதுண்டு. என் வாவிக் காலடியில் மீன்கள்
பாடுவதுண்டு. என் தலைச் சட்டகத்தின் மேலே பறவைகள் இசைப்பதுண்டு.. என் வயிற்றின் மத்தியில்
வாகனங்கள் உறுமிக் கதைப்பதுண்டு..”
“புகழாதே..!”
“ஏன்.. புகழக் கூடாது..?
என் புகழ் உலகளாவியது.. மாண்புமிகு
பிரிட்டிஸ் மகாராணியாரின் தூதுவரிலிருந்துää
பெருந்தலைவர்களானää தந்தை செல்வாää டீ.எஸ். சேனநாயக்கா..
தளபதி.அமிர்தலிங்கம்ääää கேற்முதலியார் காரியப்பர்ää
செ. இராசதுரை.. கல்லடி வேலன்ää பிதா தனிநாயகம் அடிகள்ää.
காசி ஆனந்தன்ää புலவர்மணி சரிபுதின் ஐயா.. தியாகிதிலீபன்.. விமர்சகன் வீ. ஆனந்தன்….”
“நிறுத்து பட்டியல்
போதும்..”
“இன்னுமின்னும் எத்தனை
லட்சம் மனிதர்கள்ää.. வாகனங்கள்.. நூற்றுக்
கணக்கான தலைவர்களைக் கண்ட எனக்கு நீயும்ää உன் பிரச்சினையும்
ஒரு பொருட்டா..?”
“முட்டாள் பாலமே..!
என் பிரச்சினை வித்தியாசமானது.. வெறும் காதல் மட்டும்;
சம்பந்தப்பட்ட பிரச்சினையில்லை இது..”
“தெரியும்.. மதம்
சார்ந்த பிரச்சினை… இனம் வேறு.. மதம் வேறு.. ஊர் வேறு.. கலாச்சாரம் வேறு.. பழக்கவழக்கம்
வேறு.. உணவு வேறு.. எல்லாமே வேறு….வேறு..”
“தெரிந்துமா என்
பிரச்சினை உனக்கு ஒரு பொருட்டாகப்படவில்லை..?”
“தெரியும்.. என்
வயது உனக்குத் தெரியுமா.. அற்ப மனிதனே..?”
“தெரியாது.. எனக்குத்
தேவையில்லை..”
“உனக்கு அது தேவை..!
1927ல் ஆங்கிலேய ஆட்சியில் நான் பிறந்தேன்.. இது 2007.! எண்பது வயது. எஃகு உடம்பு. இப்போதும் என்னைப் பாவிக்கும் மனிதர்கள்
எத்தனை லட்சம் பேர்…”
“சரி சரி.. என் பிரச்சினை
என்னவென்றால்…”
“உன் பிரச்சினை எனக்குத்
தெரியும்.. முதலில் நான் சொல்லப்போகும் இந்தக் கதையைக் கேட்டுப் பார்.. அதில் உனக்குத்
தீர்வு இருக்கிறது..!
“சரி சொல்லித் தொலை” என்றேன் வெறுப்பாக..
“1967ல்ää என் நாற்பதாவது வயதில் நீ அமர்ந்திருக்கும்.. இதே இடத்தில் நடந்த
உண்மைக்கதை இது. உன்னைப் போலவே ஒரு தீவிரமான காதலனை எனக்குத் தெரியும்.. அவனது பெயர்
அஸார்டீன். முஸ்லிம் பெடியன். பக்கத்துக் காத்தான்குடிதான் அவனது ஊர். அவனும்ää அக்காலத்தில்ää
உன்னைப் போலவே இக் கைப்பிடியில் அமர்ந்து
கொண்டிருப்பான். மணிக்கணக்கில் யோசித்திருப்பான்.
உன்னைப் போலவே அவனுக்கும் இன மாறுபாட்டு;க் காதல். அஸார்டீனின்
காதலியின் பெயர் மகேஸ்வரி. தமிழ்ப் பெடிச்சி.
எப்படியோ காதல் வயப்பட்டு விட்டார்கள்.. ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ முடியாமல்
ஆகி வி;ட்டார்கள்…”
“1967ல் அஸார்டீனுக்கும்
மகேஸ்வரிக்கும் காதல்.. 2007ல் தவராஜாவுக்கும்ää றுவைதாவுக்கும் காதல்..! விசித்திரம்தான்..! அவர்களின் முடிவு என்னாயிற்று..?” என்றேன் பரபரப்புடன்.. பாலத்தின் கதையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது
எனக்கு.
“பொறு. அவசரப்படாதே..!
அஸார்டீன்ää மகேஸ்வரி இருவரது வீட்டிலும்ää
ஊரிலும் எதிர்ப்பு..உடனேயே தொடங்கிவிட்டது.
சச்;சரவுகள்ää தடைகள்.. உக்கிரம் பெற்றன.
காதல் கைகூடாது என்று இருவருக்கும் நன்கு புரிந்துவிட்டது. தத்தம் வீடுகளில்
பிடிவாதம்ää ஒத்துழையாமை.ää
உண்ணாவிரதம் முதலான போராட்டங்களையெல்லாம்
செய்து பார்த்துக் களைத்து விட்டனர்…”
“நாங்களும்தான்..” என்றேன் அவசரமாக:ää
“குறுக்கிடாதே..! அஸார்டீன்ää
மகேஸ்வரியின் போராட்டங்கள் அமைதி நிரம்பியிருந்த
அக்காலத்தில் மிகவும் சூடு பிடித்தன.. எனினும்ää மதவாயுதம் கொண்டு அடக்கப்பட்டன. ஆனால்ää பிரச்சினை என்னவோ நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டேயிருந்தது. எத்தனை கட்டுக்காவல் தடைகளைத் தாண்டியும் காதலர்கள்
சந்தித்தே விடுகிறார்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலைகள் சிலசமயங்களில் காதலருக்குச் சாதகமாகவே
அமைந்து விடுவதுண்டு. திடீரென ஒரு நாள் இருவரும் இதே இடத்தில் சந்தித்துக் கொண்டனர்.
நீண்ட நாள் பிரிவின் பின் சந்திப்பு..! காதலர்கள்.. அந்தி மாலை.. பாடும் மீன்கள்..
பலரும் கவனிக்காத இந்தப் பாலத்தடிச் சந்து..
“நிறுத்து.. கறுத்தப்
பாலமே..! வர்ணணை வேண்டாம்.. கதைக்கு வா..” என்னால் ஆவலை அடக்க
முடியவில்லை. பொறுமை இருக்கவில்லை.
“வர்ணிப்பதற்கு மட்டுமல்லää இவ்விடத்தில் ஒரு தமிழ்ச்சினிமாப் பாட்டு பாடுவதற்கும் ஏற்ற
‘சிற்றுவேசன்’தான்.. இருந்தாலும்ää மகேஸ்வரி அழுதுகொண்டிருந்தாள். அஸார்டீன் பேசாமலிருந்தான். இருவரும் அதிகமாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. பேசத்
தேவையிருக்க வில்லை. மகேஸ்வரி தன் கால்களிலிருந்த நெருப்புச் சூட்டுக் காயங்களை காட்டினாள்.
அஸார்டீன் தன் முதுகில் விழுந்திருந்த இரும்புப் பொல்லடிகளின் செந்தழும்புகளைக் காட்டினான்..
இருவரும் அழுதனர்.. இனி என்ன முடிவு செய்வது.? ஒருபோதும் இணைய முடியாதென்று இருவருக்கும்தான் மிகத் தெளிவாகப்
புரிந்து விட்டதே.. பிரிவதைத் தவிர வேறென்ன
செய்வது..?”
“பிரிந்து விட்டார்களா..?”
“மிக நீண்ட நேரம்
அழுதுகொண்டிருந்து விட்டுää அஸார்டீன் ää
மகேஸ்வரியிடம் ஒரு வரியில் சொன்னான்.
மகேஸ்..! உன் காதல் உறுதியும் உளத்தூய்மையுமுடையதாய் இருந்தால்ää அடுத்த வெள்ளிக்கிழமையன்று இதே இடத்திற்கு நீ வர வேண்டும்..
மகேஸ்வரி ஒரு வரியில் பதிலளித்தாள். கட்டாயம் வருவேன்..”
“வந்தார்களா.. சந்தித்தார்களா..?
“குறிப்பிட்டபடி
அதே வெள்ளிக்கிழமையன்று சந்திப்பு நிகழ்ந்தது. காத்தான்குடிப்பக்கமுள்ள எனது முகப்பிலிருந்து
அஸார்டீன் நடந்து வந்து கொண்டிருந்தான். மட்டக்களப்பு
முகத்திலிருந்து மகேஸ்வரி வந்து கொண்டிருந்தாள்.
நடுமத்தியில் இருவரும் சந்தித்தனர்.
அவர்கள் ஒரு கணமும் யோசிக்கவில்லை.
ஒருவரையொருவர் நெருங்கியதும்ää
சுற்றுப்பபுறச் சூழலை மறந்து திடீரென
ஆளையாள்க் கட்டியணைத்தனர்.. ஒரு நிமிடம் அணைப்பில் மெய்மறந்திருந்தனர். பாலத்தால் பயணிததுக்
கொண்டிருந்த அத்தனை வாகனங்களும்ää
மனிதரும் அபூர்வமான இந்தக் காட்சியைக்
கண்டு அதிசயித்துக் கொண்டிருந்த போது. திடீரென.
கட்டியணைத்திருந்த இருவரும்ää
கலகலவெனப் பலமாகச் சிரித்தனர். அடுத்த
கணத்தில்ää அறுபதடி கீழே வாவியில் பாய்ந்தனர். பாயும் போதுää “அ..ஸாhh…ர்ää ! ம..கே.ஏ.ஸ்..!”
எனக் கத்தினர். குரல்கள் ஓயும் முன்னரே
கீழே ஆழமான.. வாவியோடு இருவரும் புதைந்து மறைந்து விட்டனர்.”
“என்னது..?” நான் திடுக்கிட்டுப்
போய் எழுந்தேன்.. தடுமாறினேன்..
“ஆம்.! கடல் பெருக்கெடுத்து வாவியில் நிறைந்திருந்த அந்த 120 அடி ஆழத்தில்ää தம்மையும்ää தமது நிறைவேறாத காதலையும் புதைத்துவிட்டனர்..”
“…………………………..!”
“இச்சம்பவம் அக்காலத்தில் இலங்கையெங்கிலும்ää பிரசித்து பெற்றது. சிறுகதைகள்ää கவிதைகள்..ää
விவாதங்கள்ää ‘இசையும்கதையும்’
என்றெல்லாம் ஊடகங்களில் வெளிவந்தன..
‘அஸார்-மகேஸ் காதல் காவியம்’
எனப் புகழப்பட்ட இதுää
இன்றைக்கு மறக்கடிக்கப்பட்டுப் போன
ஒரு கதையாகிவிட்டது. ஆனால்ää வரலாறு உள் வடிவத்தில் மீள்கிறது...”
“என்ன உளறுகிறாய்.?” எனக்குப் பயமாகவிருந்தது.
“அஸார்டீன் ஒரு முஸ்லிம்..!
மகேஸ்வரி தமிழ்ப்பெண்.… நீ தவராஜா தமிழ்..! றுவைதா ஒரு முஸ்லிம்.. பெண்.. பாத்திரங்கள்தாம் வேறு. தளம் ஒன்றே.. அவர்கள் 67ம் ஆண்டு தேடிக் கொண்ட தீர்வு அது. இது மிலேனிய யுகம்.. 2007ல் நீங்கள் தேடிக் கொள்ளப்போகும் தீர்வு என்ன..?”
“அதைத் தேடித்தானே
நான் இங்கு வந்தேன்..” என்றேன் எரிச்சலுடன்.
“நல்ல இடம்.. நீ
வந்த இடம்..! நான் மட்டக்களப்பையும் காத்தான்குடியையும் இணக்கும் பாலம்.. 67ம் ஆண்டு இனமாறுபாட்டுக் காதலை இணைத்து வைத்த பாலம். மரணத்தில்
காதலர்களை வாழ வைத்த பாலம். இப்போது சொல் நான் அனுபவஸ்தன் இல்லையா.. நான் பிரச்சினையைத்
தீhத்து வைக்க வில்லையா..?”
“நன்றாகத் ‘தீர்த்து’ வைத்தாய்..!”
என்றேன் வெகு நக்கலாக..
“தீர்வுகள் வசனங்களால்ää சொல்லித் தரப்படவேண்டியவை அல்ல. மனதால்ää உணரப்பட வேண்டியவை.
உன் பிரச்சினைக்கான தீர்வை முதலில் நீயே உணர வேண்டும்.”
“போதும்.. உபதேசம்.!
முடிவாக என்னதான் சொல்லுகிறாய் நீ..? நான் றுவைதாவைக் கைவிடுவதா.. கரம் பற்றுவதா.. அதைச் சொல் முதலில்..” கறுத்தப் பாலத்தின்ää
கதைமயக்கலில் கட்டுண்ண விரும்பவில்லை
நான். தீர்வொன்றும் சொல்லாத இந்த இரும்பு(மனது)ப் பாலத்திடம் வெற்றுக் கதை கேட்டுக்
கொண்டிருப்பதில் எனக்கென்ன வந்தது..? என் பிரச்சினக்குத் தீர்வு சொல்ல உன்னால் முடியமா முடியாதா அதைச்
சொல் முதலில்..
என் மனவோட்டத்தை அறிந்து கொண்டாற் போல்ää கறுத்தப் பாலம் கடகடவென்று சிரித்தது.. பின் உறுதியான குரலில்
சொன்னது: “மறுபடியும் என்னையே கேட்கிறாய்.. 67ல் நடந்தது போல
நீயும்ää றுவைதாவும் அடுத்த வெள்ளியன்று இவ்விடத்தில் சந்தித்து தற்கொலை
செய்து கொள்ளலாம் அல்லவா..?” நான் அதிர்ச்சியும்ää ஆத்திரமுமாகப் பாலத்தைப் பார்த்தேன். பாலம் தடதடத்தது. எனது நெஞ்சு பயத்தினால் காய்ந்து
விட்டது. வெறுப்பான குரலில் கத்தினேன்..
“கறுத்தப் பாலமே..!
காதலுக்குத் தற்கொலை ஒன்றுதானா உன்னிடமுள்ள ஒரே தீர்வு..?”
“அது எனக்குத் தெரியாது.
எனக்குத் தெரிந்துää அப்படித்தான் தீர்வு காணப்பட்டது..”
“அப்படியானால்..?
நானும்.. றுவைதாவும்..?”
“உன் விருப்பம்.
அவள் விருப்பம்.. எனக்கென்ன வந்தது..? நான் அடுத்த வெள்ளிக் கிழமையும் இங்கேதான் ஆடாதசையாது காத்திருப்பேன்
உங்களிருவரின் வருகைக்காக..!”
வெகுநேரம் நான் பாலத்துடன் பேசவில்லை. இனிப் பேசினால்ää பாலமே என்னைப் பிடித்து வாவிக்குள் தள்ளிவிட்டுவிடும் என்று
தோன்றியது. நன்றாக இருட்டிவிட்டது. அரசடியம்மன் கோயிலிலிருந்து கடவுட் துதி கேட்டது..
சற்று நேரத்தில்ää மட்டுநகர் பள்ளிவாசல் பாங்கோசையும் கேட்டது. கோவிலுக்குச் செல்வதா..
பள்ளிவாசலுக்குப் போவதா..? நீண்ட மணித்தியாலயங்களின் பின்னர் பாலத்தின் கைப்பிடிச் சட்டகத்திலிருந்து குதித்தேன்.
திமிர்த்துப் போயிருந்த கால்களை உதறிவிட்டேன். மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்..
“என்ன பேசாமல் போகிறாய்..?” பாலம் கேட்டது. குரலில் ஏளனம் கலந்திருந்தது.
“தீர்மானத்தை உணர்ந்து
வி;ட்டேன்…” என்றேன் உறுதியான குரலில்.
“என்னவென்று..?”
“பிரிவினைதான் ஒரே
தீர்வு.”
“உலகத்தை விட்டே
பிரியப் போகின்றீர்களா..?”
“றுவைதவை விட்டும் பிரியப் போகின்றேன்.”
என்குரலில் தெரிந்த உறுதியைப் பார்த்து பாலமே பயந்து விட்டது.
நான் நடக்க ஆரம்பித்தேன்.. இப்போதுää
எனக்கு அரசடி அம்மனின் தேவாரமும்ää பள்ளியின் பாங்கோசையும் கேட்கவில்லை. கீழே வாவியில் மட்டுநகர்
கல்லடிப் பாலத்தின் கீழ் விரையும் வாவியிலிருந்துää
மீனினங்கள் பாடும் இன்னிசை மட்டுமே
கேட்டது.0
கலாப10ஷணம் புலோலியூர்.
க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி.யில் பரிசுச் சான்றிதழ் பெற்றது. 2007.- ஞானம்.
மலர்வு: 74. உதிர்வு: 98.
No comments:
Post a Comment