மலர்வு: 74. உதிர்வு: 98.
“நிறுத்து.!” என்று அதிகாரத்துடன் தலைப்பு எழுதப்பட்டிருந்த பலகையில்ää கீழேää ‘சகளர்ரும் வகனத்தை வீட்டு இநங்கி வரவுழ்..
அருப்புவெளி விஷேசட அதிர்டிப் பணட.’ என்று ‘அழகு’ தமிழில் எழுதப்பட்டிருந்தää அறிவித்தல் பலகை நாட்டப்பட்டிருந்தது.
அருப்பு வெளி விஷேட அதிரடிப்படையின் மினி முகாமின் தொடக்கத்தில்ää வலது பக்கம் சற்று ஒட்டினாற் போல் அமைந்திருந்ததுதான் நான் அதிபராக இருக்கும்ää அருப்புவெளி தமிழ் மத்திய மகா வித்தியாலயம்.
பதின்நான்கு ஆசிரியர்களும்ää முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்களும் உள்ள இங்கு சசி ரீச்சர் ஒரு தொண்டர் ஆசிரியையாகத்தான்
இருந்தாள். சசி ரீச்சர் நல்ல வடிவுதான். தும்புக் கூந்தலும்ää பளீர் பற்களும் இவளது விஷேட அம்சங்கள்.
இவளைப் பற்றிக் கேள்விப்படும் செய்திகள் அவ்வளவு கற்புபூர்வமாக இருக்காது. முக்கியமாக
மதியழகன் மாஸ்டர் சசியைப் பற்றி ஒரு போதும்
நல்ல செய்திகள் சொல்லவே மாட்டான்.
ஆசிரியர்களின் வரவு இடாப்பை நான் பரிசீலித்துக் கொண்டிருந்த போதுää மதியழகன் உள்ளே வந்தான். இந்நேரம் மதியழகனுக்கு நாலாம் ஆண்டுக்கு கணித பாடம் இருக்கும்..
குறுகிய விடுமுறை கேட்க வந்திருக்கிறானோ..?
எனினும் படிப்பித்தலில்
குறைபாடு வைக்க மாட்டான்.
‘அதிபர் ஸேர்..?’
நான் நிமிர்ந்து பார்க்கவில்லை. என் மேசைக்கெதிரேயிருந்த கதிரையில் சுவாதீனமாக அமர்ந்து
கொண்டான். குரலைக் கொஞ்சம் செருமிய பின் சொன்னான்..
‘ஸேருக்கு விசயம் தெரியிமே..?’
‘உமக்கு இப்ப கணித பாடமெல்லே..?’
‘ஓம் ஸேர்.! வகுப்புக்குப் போகத்தான் போகிறேன்.. ஒரு முக்கியமான
விசயம் கேள்விப்பட்டியளோ தெரியாது..’
‘ ............................................................’
‘நம்மட..ää ஸ்கூல்ல தொண்டராயிருக்கிற சசிரீச்சருக்கு ஸ்கூலுக்கு முன்னாலயிருக்கிற சென்ட்ரிபொயின்ற்றில
காவலிருப்பானே.. அந்த ;எஸ்ரிஎப்’ பெடியன் ஒரு ஸாரி வாங்கிக் கொடுத்திருக்கிறான்.. ஸேர்..’
நான் உள்ளுரத் துணுக்குற்றேன். ஆனால்ää வியப்பை வெளியில் காட்டவில்லை. மதியழகன் இப்படி வார்த்தை ரொக்கட் லோஞ்சர்களை ஏவுவதில்
சமர்த்தன். ஆனால்ää பெரும்பாலும் பொய் சொல்ல மாட்டான். எனினும் இக் ‘கோள்’ சொல்வதைக் கேட்க
விரும்பாதவன் போல்ää முகத்தை வைத்துக் கொண்டேன்.
‘உதுக்கும் நாலாம் ஆண்டு கணித பாடத்துக்கும்
சம்பந்தம் ஏதுமிருக்கிறாப் போல தெரியல்லையே மாஸ்டர்..’ அவனுக்கு வெறுப்பேற்படுத்துமாறு
புன்னகைத்தேன்.
‘அதிபர் ஸேர்.. நீங்கள் ப்படி விதண்டமாகக் கதைக்கிறதெண்டால் நான் போறேன்.
ஆனா ஞ்ச ஒரு மாதமாகவே நடக்கிற கூத்துகள தெரியாதது போல இருந்தீங்கள் எண்டால்ää நானென்ன செய்ய..? சரி நான் போறன்..’
‘மாஸ்டர்..! என்ன வார்த்தை இது.. ம்..? கூத்துகள்.! இருந்தாலும் நான் அதில் அக்கறையில்லை.
சசி ரீச்சரின்ர ‘பேர்சனல்’ கதைகளை கதைக்கிறதாயிருந்தா
அது எனக்கு வேண்டாம்.. அதுகளைக் கேட்க நான் தயாரில்லைப்பு. என்ர பள்ளிப் பிள்ளைகளின்ர
பாடவிதானங்கள்ள ஏதும் குறைபாடு இருந்தா அதை மட்டும் சொல்லுமன்..’
‘ஆனா என்னட்ட வெளியாட்களும் கேக்கினம்...’
‘என்னட்டக் N;கட்கயில்லை. பாடசாலை விசயங்கள அதிபருட்டயெல்லே கேக்கனும்..’
ஆயினும் உள்ளுர மதியழகன் இந்தக் ;கூத்துகளை’ சொல்லாமலே போய் விடுவானோ என்றும் பயமாக இருந்தது. எனினும் கொஞ்சம் இறுக்கமாகவே
இருந்தேன். எனது மௌனத்தை விரும்பாத மதியழகன் கோபத்துடன் கதிரையைச் சத்தமாகப் பின்னுக்குத்
தள்ளிவிட்டெழுந்து சென்று விட்டான்.. அடப்பாவி..! சொல்லாமலே போய்விட்டான்.. ஆயினும் பரவாயில்லை. சசிரீச்சரின்
தனிப்பட்ட நடவடிக்கையை கண்காணிக்க மதியழகன் யார்.. அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க எனக்கேது
அதிகாரம்..? அவளது தனிப்பட்ட நடவடிக்கைகளை பாடசாலையோடு
சம்பந்தப்படுத்திப் பார்;க்க நான் துளியும் விரும்பவில்லை. அது எனது பாடசாலையின் நற்பெயரைப் பாதிக்காத போதுää அதுபற்றி எனக்கென்ன வந்தது..?
எனினும்ää சசிரீச்சரின் மீது எனக்கு கோபம் வந்தது.. இவளது கூத்துகளை அறியவும் எனக்கு ஆவலாயிற்று.
என் கீழ் மனதின் ஆவலை விரட்டி விட்டுää ஐந்தாம் பாட வேளைக்கான மணியைக் கோபத்துடன்
நீளமாக ஒலித்தேன். இவளைக் கூப்பிட்டு கொஞ்சம் எச்சரிக்கை செய்தாலென்ன என்று திடீரெனத்
தோன்றியது.. மதியழகன் மாஸ்டர் பொய் சொல்கிறவனில்லை.. அதுதான் சரி.. அறைக்குள் இடாப்புக் கொணர்ந்த பையனிடம்ää சசிரீச்சரைக் கூப்பிட்டு அனுப்பினேன். இந்நேரம்ää நேர்ஸரி வகுப்பிலிருப்பாள்.. என்னவென்று
எச்சரிப்பது..? எழுத்து மூலமாக ஒரு புகாரும் இல்;லாத போது..? ஆயினும்ää பாடசாலை நன்மைக்காக ஒரு பொய் சொல்வதால் ஒன்றும் பாதகமில்லை.
ஒரு இதமான வாசனை அறையெங்கும் பரவிää என் நாசியில் குடைந்தேறியது.. சட்டென நிமிர்ந்தேன். சசிரீச்சர்தான்.. உள்ளே வந்தாள்..
‘ஸேர்..! கூப்பிட்டனீங்களே..?’
நான் நிமிர்ந்து பார்த்தேன். அதேää இலயிக்க வைக்கும் கீற்றுப்புன்னகை.. பளீரிடும் வரிசைப் பற்கள்.. நெற்றியில்ää கண்ணீர்த் துளி வடிவத்தில்ää கறுப்புப் பொட்டு.. தும்புக் கூந்தல்.. கூர் மூக்கு.. ஒன்றல்ல ஆயிரம் சாரிகள் இந்தச் சிரிப்புக்காகவே கொடுக்கலாம்தான்..
ச்சீ.. என்ன கீழ்த்தரமாக நானும் எண்ணுகிறேன்..
என்று என் வக்கிர மனதை அடக்கினேன்..
‘இப்படி இரும் பிள்ளை..’
கதையை எப்படி ஆரம்பிப்பது என்றே புரியவில்லை..
இதையெல்லாம் கேட்கலாமா நான்..? நான் மௌனமாக ஆனால்ää பலத்த யோசனையுடன் என்னைத் தயார் செய்து கொள்வதற்காக ஏதோ எழுதுவது போலிருந்தேன்..
சசிரீச்சர்ää ஒன்றும் என்னைக் குழப்பாமல்ää என் மேசை மீதிருந்த உலகப் படத்தை உற்றுப்பார்த்துக்
கொண்டிருந்தாள்.. திடீரெனää
‘அதிபர் ஸேருக்கு வேலை போல.. நான் கொஞ்ச
நேரம் கழித்து வரட்டுமா ஸேர்..?’
நான் சட்;டென நிமிர்ந்;தேன்.. என் கண்களில் நிச்சயம் கோபம்
இருந்தது.. அதை மறைத்தபடி கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடியேää ஆரம்பித்தேன்..
‘ஒரு ரீச்சரின் நன்னடத்தைதான் மாணாக்கருக்குக் கற்றுத் தரும் முதற்பாடம்.. இப்படி
எங்காயிலும் படிச்சிருக்கிறீயே பிள்ள..?’
சசிரீச்சர் குழப்பமடைவாள் என்று எதிர்பார்ததேன்
ஆனால்ää தெளிவாக என்னைப் பாத்தாள். கொஞ்சம்
புன்னகைத்தாள்.. பின் சட்டெனச் சொன்னாள்..
‘மதியழகன் மாஸ்டர் இத என்னட்டயே நேராக்
கேட்டிருக்கலாம் ஸேர்..!’
நான் சவுக்கடிபட்டாற் போலத் துணுக்குற்றேன்.
இவளுக்கு இந்த அணுகுமுறை பொருந்தாது.. சட்டென எனது வியூகத்தை மாற்றிää அவளைச் சற்றுக் கனிவுடன் நோக்கிää
‘சசி.. பிள்ள! உன்ர வயசில எனக்கும் மகள் இருக்கிறாள். ஓண்டு
மட்டும் சொல்றன்.. கொஞ்ச நாளா நான் கேள்விப்படுற செய்திகள் அவ்வளவு ரசிக்கிற மாதிரி
தெரியல்ல.’
‘அப்படியானால்ää ரசிக்கிற மாதிரியான செய்திகள் என்ன ஸேர்..?’
அவளது கேள்விச் சாட்டையில் சுருண்டு
விட்டேன்.. என் வார்த்தைகள் வயதுக்குத் தக்கவாறில்லை என உணர்ந்தேன்.. ஆயினும்ää இனித் தயங்காமல்ää நேரிடையாக விசயத்தை எடுத்தேன்..
‘ஞ்சப் பாருமன்.. அதெல்லாம் வெளியில
சொல்லற மாதிரியில்ல.. ஆனா நீ நம்மட ;ஸ்கூல் கேட்;’டுக்கு முன்னால
இருக்கிற ;சென்றி’யில காவலிருக்கிற அந்தச் சிங்குள.....’
‘ஞா.. அத்தநாயக்க வைச் சொல்றீங்களா ஸேர்..?’
‘அந்தச் சிங்களவன்ர பேரெல்லாம் எனக்குத்
தெரிய வேண்டிய அவசியமில்லை பிள்ளை. ஆனா..’
‘அத்தநாயக்க வேதான் ஸேர்.. எனக்கு மஞ்சள்
கலர்ல பூ டிஸைன் போர்டர் போட்ட ஸாரி வாங்கித் தந்தவன்.. அத்தநாயக்கவேதான் ஸேர்.. அவனுக்கென்ன.. ஸேர்?’
அவளது நேரடித் தாக்குதலால் நிலைகுலைந்த
நான்ää கடும் கோபத்துடன்ää பார்த்தேன்.. ஆனால்ää சசிரீச்சர் சிரித்தாள்.. ஆனால்ää முகம் திடமாகவும்ää தெளிவாகவும் இருந்ததுää ஆச்சரியமாவிருந்தது. அவளது பெரிய வட்ட விழிகளில் எவ்விதமான கலங்கலும் இல்லை. நேராகவே
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘அத்தநாயக்க வுக்கு என்ன ஸேர்..?’
மறுபடியும் அவளது இந்தக் கேள்வியால்ää என் கோபம் உச்சத்தை அடைந்தது..
‘இதப்பாருமன்.. நீ ஸாரி வாங்கினாலென்ன..
ல்லாட்டா என்ன.. ஆனாää நீர் அடிக்கடி அந்தச் ;சென்றிபொயின்ற்’ அருக போறதாயும்ää அவனுட்ட நெருக்கமாகப் பேசிப் பழகுறதாயும்....’
‘மதியழகன் மாஸ்டர் சொன்னவரா ஸேர்..?’
நான் மறுபடியும் பளீரெனத் தாக்கப்பட்டேன்.. இந்தக் கேள்வியை நான் கொஞ்;சமும் விரும்பவில்லை. யார் சொன்னால் இவளுக்கென்ன.. சொன்ன விசயத்தை விட்டுää பேச்சின் போக்கைத் திசை மாற்றுகிற பச்சைக்… ச்சே..வேண்டாம்..
எனது இரத்த அழுத்த உடம்புக்;கு இந்த உச்சக் கோபம் கூடாது.. ஆயினும்ää முகத்தை இறுக்கமாக்கி அவளை உறுத்துப் பார்த்தேன்.
‘இதப் பாருமன் பிள்ள.. அனாவஸயமா யாரின்
பெயரையும் குறிப்பிட வேணாம். ம்.. நீர் விரும்பியபடி விரும்புற ஆட்களோட கதையுமன்..
ஸாரி ஸாரியா வாங்கிக் குவியுமன். ஆனாää பாடசாலையின்ர நற்பெயரைப் பாதுகாக்கிற பொறுப்பு எனக்கு மட்டுமில்ல எல்லார்க்கி;ட்டயும் இருக்கணும்.. நீர் விரும்பியபடி
இரும். ஆனாää இதுர பின் விளைவுகள நீர் ஒரு குமர்ப் பிள்ளையா இருந்து யோசிச்சுப் பார்க்கிறது
நல்லது.. அது உன்ர பொறுப்புத்தான்.. அது மட்டுமில்ல
நீர் ஞ்ச ஒரு தொண்டர் ஆசிரியைதான். நெனச்ச நேரத்துல உம்ம நிப்பாட்டவும் ஏலும். ப்ப நீர் போகலாம்..’
அதிபர் கர்வம் என்னுள் பூக்கää நான்ää எச்சரிக்கைப் பார்வையுடன் கண்ணாடியை அணிந்தேன்.
‘ஸே..ர்ää அத்தநாயக்க வைப் பற்றி உங்களுக் கொண்டும்
தெரியாது.. அவ...’ அவளது குரலில் பணிவு வந்திருந்தது.
‘அந்தச் சிங்.. அவனப் பற்றி அறிய எனக்கொரு
தேவையுமில்லை பிள்ளை. ப்ப நீர் போம்..’
‘சரி.. இதை மட்டும் சொல்லிட்டுப் போறன்
ஸேர்.. அத்தநாயக்க சரியான அப்பாவி நாயக்க ஸேர்..
எனக்காகää சிங்களத்துலää ஒரு கவிதை எழுதித் தந்தவன்.. என்ர ‘நேஸரி’ப் பிள்ளைகளுக்குää சொக்லேற்றுகள் வாங்கித் தந்தவன்.. த..தங்கச்சியின்ர ;பேர்த்டே’யாம்..’
திடீரெனச் சத்தமாகச் சிரித்தாள்.. என்
சொற்கள் அவளைத்; துளியும் பாதித்ததாகத் தெரியவில்லை.
என் மார்பு ஆத்திரத்தால் துடித்தது. ஓஹோ.. விசயம் வெகு தூரம் போயிருக்கிறது.. இவ்வளவு செய்திருக்கும் அத்தநாய்க்க இவளை பங்கருக்குள் வைத்தே..? ச்சே.. என்ன மடத்தனமான கீழ்த்தரமான கற்பனை.. ச்சே..
‘சசி. உம்மப் போகச் சொன்னனான். மற்றது
இந்தப் பாடசாலையின்ர நற்பெயரை..’
‘…பாதுகாப்பேன் ஸேர்..! ஸேர்.. நான் ஒண்டும் சின்னப் பிள்ளையில்லை.. ஒண்டு
சொல்றன்.. அத்தநாயக்க ஒன்பதாம் எண்காரன்..
இள வயதில் அவனுக்குச் சாவு வரலாம்.. பாவம்..’ என்று மறுபடியும்ää சிரித்தபடியே சொல்லிவிட்டுää சட்டென எழுந்தாள். போகத் திரும்பினாள்.
நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்..
‘மதியழகன் மாஸ்டர் நாலாம் எண்காரர்..
வீண் குழப்பமான எண்ணங்கள் கொண்டவர்.. சந்தேகப் பிராணி.. நீங்கää ஆறாம் நம்பர்.. கறாறான ஆட்கள் ஆறாம் இலக்கக்காரார்கள்தான்..’
நான்ää அளவுகடந்த ஆத்திரத்துடன் திரும்பியபோதுää கலீரெனச் சிரித்தபடி சசிரீச்சர் திரும்பிப்
படியிறங்கினாள். அவளது திண்ணென்ற பின்புறங்கள் நீண்ட பின்னலை தூக்கியடித்து விளையாடின..
ச்சே.. நான் ஆத்திரமும் அவமானமுமாகப் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.. அத்தநாயக்கவை மரத்தில் கட்டி வைத்து
உதடு கிழியு மட்டும் உதைத்தேன்.. பற்றியிழுத்தபடி வீதிகளில் இழுத்தெறிந்தேன்.. அவனது
துவக்கைப் பறித்து அவனது ஆணுடம்பில் சுட்டபடியேää அதிபரின் அறிக்கைப் புத்தகத்தை மூடிவிட்டு
இடைவேளைக்கான மணியை ஒலித்தேன்.. இதற்கு ஏதாவது
செய்தே ஆக வேண்டும்.
()
இன்றைக்கு புதிதாக மதியழகன் மாஸ்டர்
கொண்டு வந்த செய்தி மிக ஆவேசப்படத்தக்கது. எனினும் இன்றைக்கு அவனை என்னால் கண்டிக்க
முடியவில்லை. ஓய்வான பாடவேளையில் என்னைச் சந்தித்தான்.
தனது உளவுச் செய்திகளைச் சொன்னான். அவன் சொல்லச்
சொல்ல எனக்கே இந்தச் செய்திகளில் மிகுந்த அக்கறை பிறந்தது. இவற்றில் எனது வயோதிப மனதின்ää வக்கிரங்களின் தீர்த்தல்கள் இருந்தனவா..?
‘அதிபர் ஸேர்.. நேற்று உவள் என்ன செய்தவள்
தெரியிமே..?’
‘ம்ஹ்..?’
‘நேற்றுப் பள்ளிக்கூடம் விட்டுப் போனவள்
நேரா வீட்ட போகயில்ல.. உந்த ~எஸ்ரிஎப் கேம்பு|க்குள்ள போனத்த என்ர ரெண்டு கண்ணாலயும் கண்டனான். நானும் வீட்ட போகாமல்ää ப்படிää ‘ஸ்டாப் ரூமு’க்குப் பின்னால ஒழிஞ்சு நின்று கொண்டு கவனிச்சனான். கன
நேரமா வெளியில வரயில்ல.. பேந்து ஒரு மூண்டு பத்துக்கு அந்தச் சிங்களப் பெடியனோட சிரிச்சுக் கதச்சபடி வெளிய வந்தவள்.. அந்தச் ‘சீனா’ அவளச் சக்கிளில்
ஏத்திக் கொண்டு குச்சவெட்டைக் காட்டுப் பக்கமாப் போனவங்கள்.. நான் பின்னால போகப் பயந்துட்டுää போகயில்ல. உவள் மோசமான பெட்டை எண்டு தெரியிம்தான்..
ஆனாää இந்தளவு மோசமானவளா இருப்பாள் எண்டு ..’
என் வயதையும் மீறி மனம் படபடத்தது. கேட்கவே சகிக்க முடியவில்லை. குச்சவெட்டைக்
காட்டுக்குள்ள யாரும் அவ்வளவு லேசாப் போகவும் முடியாது. அதற்குள் இவளும் அவனும் மட்டும்
போறதெண்டால்...? ச்சே! வயிற்றுக்குள் ஒரு குத்தீட்டியால்ää குடைந்தது போல வலி ஊடுருவி மறைந்தது..
மனது விறைத்துப் போய் விட்டது.. காட்டுக்குள்ளேயே...ச்சீ..
‘உவள ந்தப் பள்ளியவிட்டும் நிப்பாட்ட
வேணும் ஸேர்.. தொண்டர்தானே.. ஒண்டும் பிரச்சினையில்லை. உவள்ர வேசைத்தனத்துக்கு நாம ஏன் உதவியா இருக்க வேணும்..? தொண்டரா இருந்தே ப்பிடியண்டால்ää ~பேமனெண்டா|வும் ஆயிட்டால்..?’
‘..ம்..?’
‘ந்தப் பள்ளிக்கு உவள் வாறபடியால்தானே
ஸேர் ‘கேம்ப்’ பக்கமாப் போறவள். நாங்கள் நிப்பாட்டி விட்டால்ää சும்மாசும்மா ‘கேம்ப்’ பக்கம் போக
படையினர் விடமாட்டினம்தானே..’
மதியழகனின் பேச்சிலிருந்த நியாயங்கள்
என்னை யோசிக்க வைத்தன. எனக்கு ஒரு வேலையும்
ஓடவில்லை. இதனை எவ்வாறு கையாளுவதென்றும் தெரியவில்லை. இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும். எக்கேடாவது
கெட்டுப் போகட்டும் விட்டுவிடேன் என்றது மனம்.
இல்லை விடக்கூடாது என்றது மற்ற மனம். ஏனிது.. ? என் நரைத்துப் போன ஆசைகளின் தூண்டுதலா..? அவள் மீதான என் நிறைவேற்ற முடியாத மெல்லிய ஆசைகளின் விஸ்வரூப வெளிப்பாடா..? மதியழகனைப் போலவே எனக்குள்ளும் ஆண்மைப் பொறாமையா..?
பாடசாலையின் ஒழுக்கத்தைப் பேணும் ஒரு
உயரிய அதிபரின் ஒழுக்காற்று நடவடிக்கையாக இதனைக் கையாள்வது என்று தீர்மானித்தேன்..
இது பொய்தான். ஆனால்ää மெய்யும்தான். தலை விண்ணென்று வலித்தது.
ஒரு பிளேன்ரியும் சிகரெட்டும்ää குடிக்க வேணும் போலிருக்கவேää (அபூர்வமாக யாருக்கும் தெரியாமல் புகைப்பதுண்டு) மெதுவாக எழுந்து பாடசாலை வளவைக் கடந்து கண்காணியின் பெட்டிக்கடைப்பக்கமாக நடந்தேன். மனம்
போர்க்களமாயிருந்தது.
()
நான் திரும்பி வந்து எனது அறைக்குள்
அமர்ந்த போதுää ஆச்சரியப்படுமாறுää ஒரு பேப்பர் கோரிக்கை என் மேசை மீதிருந்த கண்ணாடியின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. எடுத்துப் பார்த்தேன். ஓர் ஆசிரியையின் ஒழுக்கக்கேடுகள் என்று தலைப்பிடப்பட்டிருந்தது. யார் வைத்திருப்பார்கள்
இதை..? எடுத்து ஆர்வமாக வாசித்துப் பார்;த்தேன். சரிதான்..... சசிரீச்சரின் ஒழுக்கக்கேடான
நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டிருந்தன. அதன்
அடியில்ää
“..........எனவேää இவரை இப்பாடசாலையிலிருந்து உடனடியாக நீக்குமாறு
வேண்டுகிறோம். இப்படிக்குää தங்கள் உண்மையுள்ள..” பதினொரு ஆசிரிய ஆசிரியைகள் ஒப்பமிட்டிருந்தனர்.
இனி இதற்கொரு முடிவு காண வேண்டிய நேரம் வந்து விட்டது. இக்கடிதக் கோரிக்கையின் பின்னணியில்
நிச்சயம் மதியழகன் மாஸ்டர்தான் இருந்திருப்பான். நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.
சசி ரீச்சரை நீக்குவதென்பது ஒரு செக்கனில் செய்யக் கூடிய அதிகாரம் எனக்கு இருந்தாலும்ää அவளைää நியமனம் செய்யச் சிபார்சு செய்த ‘பெரியஇடம்’ பற்றி எனக்குத்
தயக்கமாகவிருந்தது.
அச்சமயம்ää தபாற்சேவகன் சில கடிதங்களைக் கொணர்ந்தான்.. எல்லாம் வழமையான கல்விச் சுற்றிக்கைகள்தான்.
ஆனால்ää ஒரு கடிதம் மட்டும் வித்தியாசமான முறையில்ää எனது சொந்தப் பெயர் எழுதி விலாசமிட்டிருந்தது.
முத்திரையும் ஒட்டப்படாதிருந்தது. இந்த அனாமதேயக் கடிதத்திற்குää இரட்டைக் கட்டணம் கட்டிப் பெற்றுக் கொண்டேன். பிரித்துப் பார்த்தேன். உள்ளே ஒரு
வெள்ளைத் தாளில்ää ஒரு பெண்ணின் கோரமான நிர்வாணப் படம் கைகளால் வரையப்பட்டிருந்தது. பக்கத்தில் ஒரு துப்பாக்கி.. மறுபக்கத்தில் அம்பு.
கீழேää ;டும்.. சசி டீச்சரின்.....க்குள் டும்..
உடனே விரட்டி விடு. இல்லாவிட்டால்ää உனக்கும் டும்..டும்..’
நிச்சயமாக இத்தபாலை மதியழகன் மாஸ்டர்
எழுதியிருக்க மாட்டான். அவன் யதார்த்தமானவன்.
இது பாடசாலைக்கு வெளியேயான வேறொரு ஒரு அதிபுத்திசாலியின் வேலையாக இருக்கும். சரி..
இனி நான் தாமதிக்க முடியாது.. இதற்கொரு தீர்க்கமான முடிவு கட்டியேயாக வேண்டும். விலக்கி
விடுவதா..? இந்த மொட்டைக் கடிதத்துக்குப் பயந்தா..? அல்லது ஆசிரியர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தா..? இதற்கெல்லாம் இடம் கொடுப்பதா.. எனது நிர்வாகம் பிழையா..? எதற்கும்ää கடைசியாகää சசிரீச்சருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கக் கூடாதா..? இன்று பாடசாலையை ஒரு மணிநேரம் முன்னதாகக்
கலைத்து விடவும்ää அந்நேரத்தில்ää ஆசிரியர் கூட்டம் கூட்டவும் முடிவு செய்தேன். அதற்கு முன் சசி ரீச்சரைக் கூப்பிட்டு
அனுப்பினேன்.
அவளைக் கூப்பிடப்போன மாணவன் மட்டும்
திரும்பி வந்தான்.
‘எங்கடா மனேää சசிரீச்சர்?’
‘ரீச்சர் ஒரு இடமும் காணல்லை ஸேர்..
கேம்ப் பக்கம் போனவ எண்டு பிள்ளைகள் சொல்லிச்சு ஸேர்..’
என்னது.. பாட வேளையிலுமா.. என்ன மானம்
கெட்ட வேலை இது.. எனக்குள் ஆத்திரம் கட்டுமீறிப்
பிரவாகித்தது. இனியும் இவளை இங்கு வைத்திருப்பதா..? என் மனதின் ஓரத்தில் ஊறிக் கொண்டிருந்த ஒரு இறுதிச் சொட்டுக் கருணையைக் கூட இந்த நடத்தை
உலரச் செய்து விட்டது. முகாம் பக்கம் போனாளோ..
அல்லது இக்கோரிக்கைகளை அறிந்துää அவமானத்துக்கஞ்சி வீட்டு;க்குப் போய் விட்டாளோ..? எப்படியும்ää என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவள் போய்விட்டபின் இனி என்ன வேண்டிக் கிடக்கிறது..?
அன்று பாடசாலை கலைந்து ‘ஸ்டாப்; மீற்றிங்’ முடிந்த போதும்ää அவள் திரும்பி வரவி;ல்லை. கூட்டத்தில்ää எடுக்கப்பட்ட இவளை உடன் பாடசாலையிலிருந்து நீக்கும் முடிவுக்கு ஏக மனதாக அங்கீகாரம்
கிடைத்தது. ஒருவர் கூட எதிர்க்கவில்லை. (என் மனதைத் தவிர).
()
அடுத்தநாள் வேலை நீக்கக் கடிதம் என்
மேசை மீது தயாராகவிருந்தது. அவளைச் சிபார்சு செய்திருந்த பெரிய இடத்திலும் விசயத்தைத் தெரிவித்து ஒப்புதல் பெற்றுக் கொண்டேன்..
இப்போது அவள் வந்ததும்ää இன்று வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.. ஆசிரியர் வரவு இடாப்பை என்வசம்
வைத்துக் கொண்டேன்.. சிலவேளை இதனைக் கேள்விப்பட்டிருந்தால்ää அவள் வரவே மாட்டாள். வராவிட்டால்ää அவளது வீட்டுக்கே கடிதத்தைப் பதிவுத் தபாலில் அனுப்பிவிட இருந்தேன்.
நான் ஓரளவு எதிர்பார்த்தது போலத்தான்
நடந்தது. சசி ரீச்சர் வரவில்லை. அன்று மட்டுமல்ல..
அதன் பிறகும் அவள் வரவில்லை. விடுமுறைக்;
கடிதமோ அல்லது
எவ்வித அறிவித்தலுமோ அவளிடமிருந்து வரவும் இல்லை.
எனவேää அவளதுää வீட்டுக்கு தபாலில் கடிதத்தை அனுப்பி விட்டுää அதன் பிரதியை இருஉயர்வகுப்பு மாணவர்களிடம் கொடுத்துää அவளது வீட்டுக்குச் சென்று நேரிலும் கொடுக்கச் சொல்லியனுப்பி வைத்தேன்.. அம்மாணவர்கள்
திரும்பி வந்துää சசிரீச்சர் வீட்டிலும் இல்லையென்றும்ää அவள் ஏதோ வேறு ஒரு வேலைக்கான நேர்முகப் பரீட்சைக் கடிதம் பெற்று கண்டிக்குச் சென்று
விட்டதாகவும் தகவல் சொன்னார்கள்.
கண்டிக்கா சென்று விட்டாள்..? ஒரு வேளை அந்த அத்தநாயக்க வுடன் ஓடி விட்டிருப்பாளோ..ஆனால்ää சிலவேளைகளில்ää அத்தநாயக்கவை காவல் முன்னரங்கில் கண்டதால்ää மனம் சற்று நிம்மதியாயிருந்தது. சிலவேளை
அவள் முகாமுக்குள்ளேயே இருக்கலாம் என்ற மதியழகனின் கூற்றை நான் கண்டிப்புடன் நிராகரித்துவிட்டேன்.
எப்படியோ சனி தொலைந்தது என்று நான்
இப்பிரச்சினையைக் கைகழுவி விட்டேன். அதன் பின் நாங்கள் சசிரீச்சருக்குப் பதிலாக வே
நபரை நியமனமும் செய்தாகி விட்டது. கண்டிக்குப் போன சசி தான் அங்கிருந்து கொழும்புக்குச்
சென்றுää கனடா தூதுவராலயத்தில்ää விஸாவுக்கு விண்ணப்பித்துää அடுத்த வாரமே புறப்படவுள்ளதாகவும்ää சசிரீச்சரின் அம்மா விடமிருந்து மதியழகன் தகவல் கேட்டு வந்து சொன்னான். விசர்ப்பெட்டை
மீது ஒரு மகள் போல நான் வைத்திருந்த பாசத்திற்கு ஒரு சின்னத் தகவல் கூடத் தெரிவிக்காமல்
போய்விட்டாள். நன்றிகெட்ட நாய்.. அதன் பின் அவளை நாங்கள் எதிர்பார்க்க ஒரு காரணமும்
இருக்கவில்லை. சில நாட்கள் கழித்துää காவலரணிலிருந்துää அந்த அத்தநாயக்க என்னிடம் மிக்க மரியாதையுடன்ää வந்து சசியைப் பற்றி விஸாரித்தான்.
நான் பிடிகொடுக்காமல் அவனுக்குப் பதில் சொல்லித் துண்டித்து வி;ட்டேன். ஆனால்ää அவன் வெகு நாட்களாக அவளை விஸாரிப்பதிலேயே தன் காலத்தைக் கழித்து வந்தான். பின்
அவனும் ஏமாற்றத்துடன் ஓய்ந்து போய் விட்டான்.
()
அருப்புவெளி விஷேட அதிரடிப்படை மினிமுகாம் திடீரெனத் தாக்கப்படும்
வரை எமக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. எதிர்பாராத ஒரு நள்ளிரவில் அது நிகழ்ந்தது.
முக்கால் மைலுக்குள் நாங்கள் இருந்ததால்ää அந்த நள்ளிரவில்ää பக்கத்துக் கிராமங்களுக்குள் ஓடிச்சென்றோம்.
வெடிச்சத்தங்கள் வெகு தூரம் வரை கேட்டன. ஆனால்ää விடிகாலை ஐந்து மணியிலிருந்து எந்தச்
சத்தமும் கேட்கவில்லை. எவரும் வெளியில் தலை
காட்டவுமில்லை. இடையிடையே இராணுவ வானூர்தி ஒன்று உறுமி உறுமிப் பறந்தாலும்ää மினிமுகாமிலிருந்து ஒரு எதிரொலி கூடக் கேட்கவில்லை. யாரும் அங்கு உயிருடன் எஞ்சியிருந்ததாகவும்
தெரியவில்லை. என்ன நடந்ததோ தெரியாது. நாங்கள்
யாரும் இரண்டு நாட்கள் அருப்புவெளிப் பக்கம் வரவுமில்லை. அதிசயமாகää இராணுவமும் வரவில்லை.
நாங்கள் பயமின்றி வெளியில் சற்று நடமாட
முடிந்தது. எனது பாடசாலையின் கதி பற்றி சொல்ல முடியாதிருந்தது. நொறுங்கித் தூளாகியிருக்குமோவெனப்
பயமாகவிருந்தது. எனவேää நான்ää மதியழகன் மாஸ்டரின் வீட்டுக்குத் தகவல் அனுப்பிää அவன் வந்தவுடன்ää இருவரும்ää தேவையான முன்னெச்சரிக்கைகளுடன்ää அருப்புவெளிக்கு பொடி நடையாகச் சென்றோம்.
எமது பாடசாலை வெளியிலிருந்து பார்க்கும்
போது எச்சேதமுமின்றியிருப்பது போலத்தான் தெரிந்தது. ஆனால்ää முன்சுவர் வெடித்துப் பிளந்திருந்தது. கூரைகளில்ää ஆங்காங்கே சிற்சில உடைசல்கள் தெரிந்தன. வேறு பெரிய பிரச்சினையில்லை. உட்சென்ற போதுää முன்வகுப்பறைக் கூடம் துப்பாக்கிச் சன்னங்களால்ää ஆயிரக்கணக்காகத் துளையிடப்பட்டிருந்ததைக்
காணமுடிந்தது.. எனினும்ää ஒரு கட்டிடம் கூட உடைந்திருக்கவில்லை. தளபாடங்களிலும்ää பொருட்களிலும்ää பெரிய சிறிய பொத்தல்கள் தவிர பெரிதாக
சேதங்களைக் காணவில்லை.
ஆனால்ää எதிரேää தாக்கியழிக்கப்பட்ட மினிமுகாம்ää சிதறிச் சிதிலமாகிக் கிடந்தன. இன்னும்
மிகுதியாகää வெடிக்காத பொருட்கள் கிடந்து வெடிக்கலாம் என்ற அச்சத்தில்ää நாங்களிருவருவரும் முகாமுக்குள் செல்லாமல்ää பாடசாலைச் சுற்றயலிலேயே சுற்றிச் சுற்றி
நடந்து பார்வையிட்டோம். மினிமுகாமின்ää கூரைகள் பிய்ந்து தொங்கின. காவலரண்களும்ää கட்டிடங்களும் நொறுங்கித் தூக்கி விசிறப்பட்டிருந்தன. அதிரடிப்படை வாகனங்கள் இரண்டும்
கருகிப் போய் வெறும் இரும்புச்சட்டங்களாக உருகிக் கிடந்தன. சுருட்கம்பிகளும்ää மண்மூட்டைகளும்ää பெரிய பெரிய பனைமரக் குற்றிகளும் தாறுமாறாக உழக்கப்பட்டுக் கிடந்தன. முற்றத்தில்ää குளிர்பானப் போத்தல்களும்ää பருப்பு முட்டைகளும் சாப்பாட்டுப் பாத்திரங்களும்ää சில ‘ரீஷேர்ட்’டுகளும்ää காற்சட்டைகளும் குழப்பி விசிறப்பட்டிருந்தன. இராணுவ உறை அணிந்த சில மெத்தைகள் கைவிடப்பட்டுக்
கிடந்தன. பிணங்கள் எதையும் காணவில்லை. முகாம்
படையதிகாரியின்ää விசுவாசமுள்ள பெரிய கறுப்பு நாய் மட்டும்ää மல்லாந்து கால்களை வானத்தை நோக்கி நீட்டியபடி நாக்கிழுபட்டுப் போய்ச் செத்துக்
கிடந்தது. சுற்றிலும் சிற்சில இடங்களில்ää இரத்தக் கறைகள் தோய்ந்து காய்ந்து போய்க்
கிடந்தன.
அந்தச் சுற்றுப்புறத்திலேயேää ஒரு ஈ காக்காய் இல்லை. இந்த வெற்றுச் சூழலேää மிகவும் பயமுறுத்தியது. இரண்டொரு நாய்கள்
விரோதமாக எங்களைப் பார்த்துக் குரைத்தன. தாக்கியவர்கள் தமது வேலையைக் கச்சிதமாகச் செய்திருப்பது
தெரிந்தது.
பாடசாலை முன்முகப்பருகே இருந்த காவலரன்
அருகே நாம் வந்தோம். எனக்கு திடீரென அந்தää அத்தநாயக்கவின் நினைவு வந்தது.
‘மாஸ்டர்! இந்த இடத்திலயெல்லோ உவன் அத்தநாயக்க
காவலிருந்தவன்..?’ என்று பின்னால்
வந்து கொண்டிருந்த மதியழகனைக் கேட்டேன்.
அவனது நிலைமை என்னவாயிருக்குமென்பது
தெரிந்ததுதான். பாவம்.. இளம்வாலிபன்.. ;அத்தநாயக்க ஒன்பதாம் எண்காரர் இளவயதில்
சாவு வரலாம் ஸேர்’ அட சசிரீச்சரை ஏன் மறந்தேன்.. இதனை அறிந்தால் வேதனைப்படுவாள்.. ;அத்தநாயக்கவுக்கு ஒரு கால் ஊனமான தங்கச்சி இருக்கு ஸேர்..’ இவனது துர்மரணம் அவளை மிகவும் பாதிக்கலாம்..
;நேஸரி’ப் பிள்ளைகளுக்கு ;சொக்ளேற்’ வாங்கித் தந்தவன் ஸேர்..’ பாவம் அத்தநாயக்க.. எனக்கு முதன்முதலாக அத்தநாயக்க மீது பரிதாபம் எழுந்தது. என்
இரண்டாவது மகனின் வயதுதான் அவனுக்குமிருக்கும்.. சிங்களக் கிராமத்து ஏழைப் பெடியன்தானே..
சம்பளத்துக்காக போர்த் தொழில் செய்;ய வந்தவன்.. தங்கச்சிக்காக சம்பாதிக்க.. தமிழரைக் கொல்ல அல்லவே..?
நான் கேட்டதற்கு மதியழகனிமிருந்து பதிலேதும்
வரவில்லை. நான் பின்னால் வந்து கொண்டிருந்த
மதியழகனைத் திரும்பிப் பார்த்தேன்.. அவனைக்
காணவில்லை. ஒருகணத்தில்ää நெஞ்சு திடுக்கிட்டது. எங்கே இவன்..? ஆனால்ää சட்டெனää மதியழகன் என் பார்வையில் தட்டுப்பட்டான். அவன் தூரத்தே பாடசாலையின் வெளிப்புறச்
சுவரையே மிக்க கவனத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் அவனை அழைத்தபடியே
அருகே சென்றேன். வெளிப்புறச் சுவரில்ää பெரிதாக ஒட்டப்பட்டுத் தெரிந்தää ஒரு சுவரொட்டியைத்தான் அவ்வளவு கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில்
தெரிந்த பீதியையும் கலவரத்தையும் கண்டு நானே பயந்து போனேன். சுவரொட்டியைப் பார்த்தேன்.
“வீர அஞ்சலி;.!” என்ற தலைப்பு. கீழேää ஒரு பெண்ணின் பூரண இராணுவச் சீருடையணிந்த மார்பளவுப் படம். இருபக்கங்களிலும்ää மலர்களும்ää குத்துவிளக்கும். மற்றும்ää புலித் தலைச் சின்னமும். அதன் கீழேää பெரிய எழுத்தில்ää இரண்டாம் லெப்டினன்ட். தமிழ்விழி. மலர்வு:
1974. உதிர்வு: 1998. அருப்புவெளி
வீரப்புதல்வி தமிழ்விழியின் கனவுகளை நனவாக்குவோம்.’
என்னது..? மூக்குக்கண்ணாடியை அவசரமாக அணிந்து கொண்டுää மறுபடி அந்தப் பெண்ணின் முகத்தை உற்று
நோக்கினேன். அது தமிழ்விழி என்ற சசிரீச்சரின் புகைப்படம்தான். ஒரு இரண்டாம் நிலைப்
படைத்தளபதிக்கான தொப்பி அவளது தும்புக் கூந்தலை மறைத்திருந்தது. தொப்பியில்ää புலிச்சின்னமும்ää ஒரு நட்சத்திர அந்தஸ்தும் இருந்தன. முகத்தில்
சிரிப்பு இல்லை. ஒரு இறுக்கமான கண்டிப்பு கண்களில் குடியிருந்தது. தோள்களிலும். இரு
வீர அடையாளங்கள் இருந்தன.
நான் பேயறைந்தவனைப் போல மிரண்டு போய்
மதியழகனைப் பார்த்தேன். மதியழகனின்ää கண்களில் மரணபயம் தாண்டவமாடியது. வெளிறிப்
போய் என்னைப் பார்த்து விழி பிதுங்கினான். இருவரும்ää ஏதும் பேச வக்கற்றுப் போய்ää மௌனமாகத் திரும்பி நடந்தோம். வேறன்ன செய்ய..?
இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு
பெற்ற கதை.கீதம். 1998
மேலும் பற்குணமானவர்ää ‘பல்’ லவ நாடுவிட்டு
வந்து பற்சேவை புரிபவராதலால்ää நானும் என் ‘பல்’ கலைக் கழகத்திலிருந்து அன்னாருக்கு
‘பல்’கலைவேந்தர்என்ற பட்டத்தையும் இலவச இணைப்பாக அளித்துää ஆமோதிக்கவேää டொக்டருக்கு ‘பற்’பல பட்டங்களாயிற்று.
பற்கிளிப் பெண்ää தலைக்கவசம்ää கைப்
ஒரு துளிச் சுனாமி
தோணாவடிக் கிராமத்திற்கு நான் இடமாற்றம்
பெற்று வந்துää இன்றோடு 912 நாட்களாகியிருந்தன.
அதாவது இரண்டரை வருடங்கள். இன்றோ நாளையோ என் பணி முடிந்து மறுபடி கொழும்பு தலைமையகத்திற்கு
செல்லத் தயாராகவிருந்தேன். தோணாடிக் கிராமத்தை விட்டும் பிரிவதென்பது என்னோடிருந்த
என் மனைவிக்கும்ää என் ஐந்து வயது மகள் ஷேபி க்கும்ää அவளது மியாமி என்ற செல்லப் பூனைக்குட்டிக்கும்தான் சரியான கவலையாகவிருந்தது.
என்ன ஒரு அழகான கடலோரக் கிராமம் இது.
வங்காள விரிகுடாப் பெருங்கடலின் விரிந்த பரப்பின் ஒரு முனை தொட்டு நிற்கும் தோணாவடிக்
கிராமத்தின் கால்கiளை எப்போதும் ஓயாமற் கழுவி மீளும் அலைகள்..
மஞ்சட் பரப்பாக கண்ணாடிப் பளபளப்பாக நீளும் வெண்மணற் பரப்பு. கடல் முனைதள்ளும் இயற்கையான
தோணாக்கால்வாய்.. அதில்தரிக்கும் சிலபடகுகள்.. மேற்கேää மீனவர்வாடிகள்... குடிசைகள்... மனிதர்கள்.... பெண்களின் சிறுசந்தை.. ஐந்தாறுகடைகள்.. வலப்பக்கமாக அரசாங்கஅ.மு.க.பாடசாலை..
மூன்றே ஆசிரியர்கள்.. மிகச்சிறிதானää ‘பெரியபள்ளிவாசல்’.. மையித்துப்பிட்டி...
தொடர்ந்து அடர்இருளாக.. பச்சையிருட்டாகää அடர்ந்திருக்கும் தென்னந்Nதோப்புää... ஊடறுக்கும்ää சிலீர்காற்று... வலைக்கும்பங்கள்... சிப்பம்கள்... மிதலைனகள்... மீன்வீச்சம்...
கருவாட்டுமணம்... தூரத்தேää ஒற்றைக்; கட்டடிடத்தில் கிராமிய வைத்தியசாலை... எப்போதாவது அங்கு (மீனுக்காக) தலை காட்டும் அப்போதிக்கரி
ஐயா...
கிழக்குப்புறமாக மண்மலை அதிசயம்.. கால்கள் புதையப்புதைய மேலேறிச்
செல்லும் 66 அடி உயர மணல்மேடு.
முழு உயரத்திற்கும் ஏறுவதானால் மூச்சு முட்டும். ஏறிப் பார்த்திருக்கிறோம். தென்னைமரங்கள்
கால்களுக்குக் கீழே தெரியும். கிராமம் முழுவதும் ஒரு வரைபடம் போல் தெரியும். தூரத்துக்
கல்முனை நகரத்தின் ~டெலிகொம்| அன்டெனா பக்கத்தில் தெரியும்.
மணல் மேட்டின் சரிவில் புவியீர்ப்பு
உபயத்தில் பத்தே நிமிடத்தில் முழங்கால் புதையச் சறுக்கி இறங்கினால் செமிலத்துவின் சில்லறைக்கடையுடனான குடிசை வீடு.
வீட்டில் செமிலத்துவும்ää அவளதுää தகப்பன் முகமறியாத நான்கு வயதான ஜமீலா என்ற மகளும் வாழ்கிறார்கள். தகப்பன் முகமறியாத
என்றால் இவள் பிறக்கும் போது செமிலத்துவின் கணவன் சாரதி வேலைக்காகச் சவுதி சென்றுவிட்டிருந்தான்..
நான்கு வருடங்க ளாகிவிட்டன..தனக்குப் பிறந்த குழந்தையின் முகத்தை இன்னமும் நேரில் காணாத
அப்பாவி... புகைப்படத்தில் மட்டுமே தன் மகளைக்
கண்டிருக்கிறான்... தொலைபேசியில் மட்டுமே தன் மகளின் மழலைக் குரலைக் கேட்டிருக்கிறான்... இனி விரைவில் திரும்பவிருக்கிறான்.....இந்த ஜமீலா
என் மகள் ஷேபியின் விளையாட்டுத் தோழி.. அவளுக்குத் தன் ~மியாமி| என்ற வளர்ப்புப் பூனைக் குட்டியை அன்பளிப்புச்
செய்த பரோபகாரி..... அவளது தாய் செமிலத்து என் மனைவியின் வேலைக்காரத் தோழி..
()
தோணாவடிக்கிராமத்தின் வலது கரையில்
கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டிருந்த படகுத்துறை
ஒன்றுக்காக கடல் சமிக்ஞை விளக்குக் கோபுரம் ஒன்றினை அமைத்தது முடித்ததே என் பணி...
இருநூறு கடல் மைல்களுக்கப்பால்ää தெரியக் கூடியவாறு இக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது.
கோபுரத்தின் உச்சியில் நான் அமைத்திருந்த செம்மஞ்சள்
சமிக்ஞை விளக்கு இரவில் பளீர்பளீரென ஒளிச் சிமிட்டிச் சிமிட்டிய அதிசயத்தில் கிராமமே
என்னை வியந்து பார்த்தது.
இரண்டரை வருடகால சிரமமிக்க பணி. எல்லாம்
சரியாக நடந்தேறி விட்டன. பிரதேச எந்திரி திரு.
ஜயலத் கொடித்துவக்கு விடம் அலுவலக ரீதியாக
கடமைப் பொறுப்புக் கொடுத்தால்ää சரி. அவர் வரமட்டும்ää சும்மா கடற்கரையில் உலவிக் காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தேன்.. கொழும்புக்குச்
செல்லும் ஆயத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்த மனைவிக்கு உதவிக் கொண்டிருந்தேன். பிரியாவிடை
தர வரும் கிராமத்து மக்களிடம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டும்ää விருந்தோம்பிக் கொண்டும்ää ஷேபியாää ஜமீலா மற்றும் மியாமியுடனும் விளையாடிக் கொண்டுமிருந்தேன்..
கடைசிமுறையாகக் கிராமத்தைச் சில புகைப்படங்கள்
எடுப்பதற்காக மனைவியுடனும்ää ஷேபியுடனும்ääமியாமி முன் தொடர மண்மலை உச்சிக்கு
ஏறினோம்... இன்றைய இராச்சாப்பாட்டைக் கூட மண்மலை உச்சியில்தான் சாப்பிடää மனைவி ஆயத்த ஐடியாக்கள் செய்திருந்தாள். ஆறுதலாகவும்ää புகைப்படங்கள் எடுத்தும்ää மண்மலை உச்சியை சென்றடைய நாற்பது நிமிடங்காளாகின. மண்மலை உச்சி நோக்கியும்ää அதல சரிவு நோக்கியும்ää படமெடுத்த போதெல்லாம் மனைவி கூட புதுப்புது அழகில் தெரிந்தாள்... மண்மலை உசச்சியில்
எங்களைக் கண்டதுமே அடிவாரக் குடிசைகளிலிருந்து கிராமத்து சனங்கள் சிரித்துக் கையசைத்தனர்.
எல்லோரும் ஓரடிக் குள்ளர்களாகத் தெரிந்தனர்.. ஷேபியா கீழ்நோக்கி உரத்த குரலில்ää
“ஜம்ம்ம்மீஈஈஈலாhஆஆ..”
என்றுவீரிட்டுக்கூப்பிடääஅதுஅவர்களுக்குக்கேட்டிருக்காதுஆயினும்ää சட்டென ஜமீலா தென்பட்டாள்.. எங்களைக் கண்டுவிட்டாள். உடன் பரபரப்பாக அவளது தாயைக்
கூப்பிட்டு ஏதோ சொன்னாள்... பின் ஓடி வந்து மணல் மேட்டில் ஏறி எங்களை நோக்கி ஓடி வந்தாள்..அவள்
விழுந்துவிடுவாளோஎன்றுஎங்களுக்கு பயமாகவிருந்தாலும்ää வெகு அநாயாசமாக மேல் நோக்கி ஓடி வந்தாள்..வரும்
போதே ;சேபியா...சேபியா...’ என்று கூப்பிட்டுக்
கொண்டே வந்தாள்..உச்சியை வந்தடைந்தாள்.. மூச்சிரைத்ததாள்.. மனைவி கொடுத்த சொக்கிளேற்றை சாப்பிட்டுக் கொண்டே பிள்ளளைகள் இருவரும்ää மியாமியுடன் விளையாட ஆரம்பித்தனர்.. நானும் மனைவியும்ää சாமான்களை பரப்பிவைத்து உட்கார்ந்து கொண்டோம்...
மண்மலைஉச்சியிலிருந்துஎத்தனைமுறைபார்த்தாலும்ääஅலுக்காதääஅற்புதக்காட்சியில்இலியித்திருந்தோம்.
மாலைச் சூரிய மஞ்சள் ஒளி நடுக்கடலில் பட்டுப்படர்ந்துää அலைகளின் தளம்பலில் தங்க ஜரிகைச் சேலையாக அசைவதும்ää கரையில் மஞ்சள் வெயிலும்ää நீலக் கடலும் வெண்மை நுரையும் கலந்துää இனம் புரியா வர்ணத்தில் ஆக்ரோஷ அலைப்பாம்பாக
உருவெடுத்துச் சீறி உயரே எழுந்துää மணற்றரையிற் கொத்திப் பிளந்து படர்ந்து
மண்மலை மீதேற முயன்றுää மறுபடி பின் வாங்குவதும்ää ;அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்.. அலையின் மீதும்ää மலையின் மீதும் ஆட்சி செய்பவனின்” வல்லமையைச் சந்தேகமறப் புரிய வைக்;கும் அற்புதக் காட்சி அது......
“பிள்ளைகள்.. ஓடிவாங்க...ஷேபிக்குட்டி..!
பிஸ்கட்சாப்பிடுங்க.. ந்தா..ஜமீலா...”
என்னங்க பிளாஸக்குல ரீ இருக்கு குடிங்க”
மனைவியின் குரலில் மோனம் கலைந்தேன்..
பி;ள்ளைகள் தேநீர் அருந்தி சாப்பிட்டு
முடிக்கும் போது ää ஜமீலா என்னைப் பார்த்துää சிக்குப் பிடித்த தலையை ஆட்டியபடிää கண்களை அகல விரித்துää மூச்சிரைக்கää
“இஞ்சினர்மாமா..இஞ்சினிர்மாமா..ம்மச்சிசெல்லின..வப்பச்சிவாற..சட்டசாமான்ääகுச்செருப்புääகிளிப்புக் கொண்டாரயாம்.. ஒட்டகயம்
கொண்டாரயாம்.. ஙா.....டெலிவன் செஞ்ச.. ம்மச்சி கதச்ச.. வப்பச்சி என்கூட அல்லோ..அலோண்டு
சென்னயே...” என்றாள் மீனவ மழலைத் தமிழில்..
“என்னங்க சொல்லுது ந்தப் பிள்ள..?” மனைவி சிரித்தாள்.
“என்ன டெடா சொல்றா ஜமிலா...?”
“அது என்னண்டால்ää ஜமீலாட வாப்பா சவுதியில இருக்கிறார்தானே.. அவர் ஊர் வாராறாம்..இவளுக்குச் சட்டைääசாமான்ää குதிச்செருப்புää ஒட்டகம் எல்லாம் கொண்டு வாராராம்.. சவுதியிலயிருந்து டெலிபோனுல.. கதச்சவராம். இவளும்
ஹலோ ஹலோ ண்டு சொன்னவளாம்.....”
என்று அதனை விரிவுரை செய்தேன்..அப்போது ;ஜமீலா...ஜமீலா” என்று கூப்பிட்டபடியேää அவளது தாய் செமிலத்து மேலேறி வந்தாள்..
“ம்மாச்சி...ம்மாச்சி..” என்று ஜமீலா
குதித்தாள்..
மேலேறி வந்த செமிலத்துää
“புள்ளே..கனநேரமா வந்த...?” என்ற கேள்வியுடன் ஆரம்பித்துää -நாளைக்கி ஊருட்டு மாறிப் போறீங்களமே..
அழிச்சி வெருவீங்களா..நீங்க போனா வேள் செமிலா எப்பிடித்தான் இரிக்கப் போறாளோ.. ஒரே
ஊட்ட சேவி..சேவி யெண்டு ஒங்கட மகள்ள கததான்
அவளுக்கு.. எப்பிடித்தான் பிரிஞ்சிரிக்கப் போறாளோ..” என்றாள்.
“அவள்ட வாப்பா எப்ப வாறாராம்?” கேட்டாள் மனைவி..
“மச்சான் ப்பதான் டெலிவன் எடுத்த.. இருவத்தஞ்சாம்
தியதி வாராராம்..” என்று கிராமத்து நாணத்துடன் சொன்ன செமிலத்துää மறுபடியும்ää -மச்சான் கலியானம் கட்டி எட்டு மாசம்தான்
இருந்தாஹ. ரைவர் வேல கெடச்சி சவுதிக்கிப் பெய்த்தாஹ.. நாலு வரிசமாச்சி..இவள் பொறந்ததும்
அவஹளுக்குத் தெரியா..ன்னம் புள்ளட மொகம்தெரியா..போட்டோதான் தெரியிம்..ன்னரம் பார்க்கத்
துடிச்சிட்டு இரிப்பாஹ..” என்hறாள் ஏக்கமாக.
திருமணமாகி எட்டே மதாங்கள் இருந்த பின்
செமிலத்துவின் கணவன் சவுதி போய் நான்கு வருடங்களாகி விட்டன.. தனக்குப் பிறந்த குழந்தையின்
முகமே தெரியாது. புகைப்படத்தில் மட்டுமே கண்டிருககிறான்.. தொலைபேசி வசதி அதிகமாக இல்லாத
இந்தக் கிராமத்தில் தன் மகளின் குரலை இரண்டொரு தடவைகள் மட்டுமேää கேட்டு மிருக் கிறான்..இளம்மனைவியையும்ää ஒரே மகளையும் பிரிந்து தூரமிக்கää துயரமிக்க பாலைவன நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாகி விட்டது.. இனி வந்துவிடுவான்..
ஆயினும் நான் அவனைப் பார்க்க முடியுமோ என்னவோ..நாளைக்குத் தவறினால்ää அவன் வருமுன்னரே நான் மாற்றலாகிப் போய் விடுவேன். ஷேபியின்ää இந்த துன்பியல் பிரிவைää ஜமீலா தாங்க மாட்டாள்தான். ஆயினும் இரண்டொரு
நாட்களில் தகப்பன் வந்து விடுவான்தானே..
கணவன்திரும்பும்கனவுகளுடன் ஒரே மகள்
ஜமீலாவுடன் செமிலத்து வாழ்ந்து வரும் தன்கதையை என் மனைவியுடன்ää முழுää ஈடுபாட்டுடன ;பேசிக்கொண் டிருந்தாள். நான் அவர்களைப்
படமெடுத்தேன்..மியாமியைத் தனியாக ஒரு படம் எடுத்தேன். அச்சமயம் ஒரு கிராமத்து ஆள் அவசரமாக
மண்மலையேறி வந்து கொண்டிருந்தான்.
“சேர்...சேர்..” என்று கூப்பிட்டபடியே
வந்து சேர்ந்தான்.
“என்னது..நீயா? ஏன்.?”
“ஓம். சேர்..தந்தி ஒண்டு வந்திரிக்கி சேர்..”
தந்தியைப் பிரித்தேன். சரிதான்.. நாளை வரும் பிரதேச எந்திரி திரு. ஜயலத் கொடித்துவக்குவிடம் பொறுப்பை ஒப்புக்கொடுத்துவிட்டுத் தலைமையகத்திற்குச்
செல்லும் உத்தரவு வந்திருந்தது.
()
நாங்கள் கொழும்புக்குத் திரும்பி மறுபடி தலைமையகத்தில் கடமை பொறுப்பேற்று பழையபடி
எமது மாமூல் வாழ்க்கைக்குத் திரும்பி ஒரு வாரமாகிவிட்டது. எதிர்வரும் ஏப்ரல் மாத விடுமுறையில்
மறுபடி ஒரு தடவை தோணாவடிக் கிராமத்திற்குச் சென்றுவரத் திட்டமட்டிருந்தோம்...ஆனால்...அது
இவ்வளவு விரைவில்...இவ்வளவு குரூரமாகப் பலிக்கும் என்பது தெரிந்திருக்கவில்லை.
வலைவீசி வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி மக்களைää அலை வீசி விதி கொன்று வீசிய நாள் இன்றைய மார்கழி 26 என்பதைத் தெரியாமலேயே அன்றைய
ஞாயிற்றுக் கிழமை எங்களது வீட்டில் நான் ஓய்வாக
உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென உரத்து அலறின ஊடகங்கள்..ஆழிப் பேரலைகள் இலங்கையில் ஊழிப் பேரழிவை விதைத்து
மானுட உயிர்களை மொத்தமாக அறுவடை செய்து மீண்ட சுனாமியின் பயங்கரச் செய்திகளால் நாங்கள்
உறைந்து போனோம்....
மனைவியும்ää ஷேபியும் என்னைக் குடைந்தெடுத்தனர்..
உடனடியாகத் தோணாவடிக் கிராமத்திற்குச் சென்று பார்த்து வரத் துடியாய்த் துடித்தனர்...
நான் அவர்களைச் சமாதானப்படுத்தி தொலைபேசியில் தோணாவடிக் கிராமத்திற்குப்ää பேசமுயற்சித்தும்ää அது முடியவில்லை.... உடனடியாக ஒரு வாகனம் ஏற்பாடு செய்து தோணாவடிக் கிராமம் சென்று
செமிலத்துவையும்ää ஜமீலாவையும் மியாமியையும்ää கூட்டிவரச் சொல்லி அடம்பிடித்த மனைவிääகுழந்தையைத் தவிர்த்து பதைபதைப்புடன் நான் மட்டும் தனித்துää தனிப்பட்ட வாகனம் பிடித்தும் கூட தோணாவடிக் கிராமம் வந்து சேர இண்டு நாட்களாகி விட்டன.
()
சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போடப்பட்ட ஓவியம் போலச் சிதறிக் கிடந்தது தோணாவடிக்
கிராமம். சனங்கள் எவரையும் காணவில்லை...செய்வதையெல்லாம் செய்து விட்டு ஊழித் தாண்டவமாடிவிட்டு
வழமை போல் அமைதியாக ஆடிக்கொண்டிருந்தது கடல்... கொலைகாரனின் முகம் போலக் கறுத்துக்
கிடந்தது... தூரதூரத்தில் உடைந்து சிதறிய படகுகளின் சிதறல்கள்.. அழிந்து தடயமற்றுக்
கிடக்கும் மீனவர் வாடிகள்.. அத்திவாரத்தோடு பிடுங்கப்பட்டு வீசப்பட்டிருந்த சந்தைக்
கட்டிடம்..உலுக்கி விட்டாற் போலக் கொட்டுப்பட்டுப் போயிருந்த தோணாவடிப் பாலம்... கசங்கிய
கந்தலாகிப் போன ஆரம்பப் பாடசாலை.... தாறுமாறாகக் கலைந்து பின்னிப்பிடுங்கப்பட்டு வீசப்பட்டிருந்த
தென்னந்தோப்பு... எங்கு பார்த்தாலும் உடைசல்கள்..கற்குவியல்கள்.. மகா அழிவின் பயங்கரக்
காட்சி கண்முன்னே ..... மனிதர் எவரையும் காணவில்லை....
வாகனத்தை தூரத்தே நிறுத்தி விட்டுச் சற்றுத்
தூரம் இடிபாடுகளிடையே நடந்தேன்... இனம்புரியாத பிண நாற்றம் மூக்கைக் குடைந்தெடுத்தது...
மண்மலை நோக்கிச் சென்றேன்.... மறுபடியும் பயங்கரச் சுனாமி உயரே எழுந்து வீசுமோவென அச்சமடைந்தேன்....
ஆச்சரியமாக மண்மலைமேடு சற்றும் கலையாமல் அப்படியே இருந்ததது.மெதுவாக மேலேறினேன்....உச்சியை
அடைந்தேன்... கீழே பார்த்தேன்.. ஒரு கிராமம் இருந்த தடயமேயில்லை...நான்அமைத்திருந்த
கடல் சமிக்ஞைக் கோபுரத்தைக் காணவேயில்லை...மனம் குமைந்தது...கீழே சில மனிதர்கள் தென்பட்டனர்..
வேகமாகக் கீழே இறங்கினேன்...செமிலத்துவின் குடிசை வீடிருந்த உத்தேச திசையிற் சென்றேன்..
செமிலத்து.... ஜமீலா.... மியாமி....?
பதட்டமாக நடந்தேன்.. காணப்பட்ட மனிதர்கள்
தன்னார்வத் தொண்டர் நிறுவத்தினர்....பிணங்கள் தேடி அப்புறப்படுத்தும் பணிக்காக
வந்திருந்தனர்.. அவர்களை அடைந்தேன்.. அவர்களோடு இக்கிராமத்து மீனவர்களும் இரண்டொருபேர்
நின்றிருந்தனர்.. என்னைக்கண்டதுமே ஒப்பாரியுடன் என்னைநோக்கி ஓடிவந்தனர்....ஒட்டுமொத்தமாகக்
கதறியபடி தமது சோகக் கதைகளை ஒரே சமயத்தில் ஒப்புவித்து அரற்றினர்...என் கண்களில் நீர்முட்டி
மனம் குமைந்து போய்... யாருக்கு யார் ஆறதல்
சொல்வது...? செமிலத்துää ஜமீலாவின் சிந்தனையில் என் மனம் பரபரப்படைந்தது... அவர்கள் ஓய மட்டும் காத்திருந்தேன்....
“சரி..சரி..இவ்விடத்த சில்லறைக் கடை வச்சிருந்த செமிலத்து..ஜமீலா
யெண்டு...? அவங்க இப்ப....?”
“நேத்தைக்கித்தான் அவங்கட மையித்தக் கண்டு பிடிச்சி எடுத்து
அடக்கினம் ஸேர்..”
“என்னது.....?” அதிர்ந்து போனேன்..
“தாயும் புள்ளயும் கட்டிப் புடிச்சபடி மண்ணுக்க பொதையுண்டு கெடந்தாங்க... ஸேர்.! ந்தா.. இவ்விடத்ததான்....”
“ரெண்டு பேருமா...?”
“ஓம் ஸேர்...அதுல
வெஸயம் என்னண்டால்ää அவன் செமிலத்துர புருஷன்காரனும்
அண்டைக்கித்தான் சவுதிலருந்து வந்திருந்தான் ஸேர்..”
“என்னது...?”
“ஓம் ஸேர்..அண்டு காலத்தால கல்முன டவுனுல வந்து எறங்கினான்.
ஊட்ட போகää கடக்கர ஓரமாகவே நடந்து வரக்குள்ளதான்
அல எழும்பிற்று ஸேர்...”
“அ...அவனுமா.....?”
“ல்லஸேர்...தப்பிட்டான். பெரிய அல அவனத் தூக்கி எறிஞ்சிற்று...
ந்தத் தென்னமரத்தப் புடிச்சிட்டு தொங்கிட்டி ருந்தான்....எல்லாம் முடிஞ்சாப் பொறகு
நாங்க போய் அவனக் காப்பாத்திட்டம்...|
“ப்ப எங்க அவன்..?”
“ஆளக் காணல்ல ஸேர்..”
இதற்கு மேல் பேச என்ன இருக்கிறது...?
தனக்குப் பிறந்த குழந்தையை நான்கு வருடங்களுக்குப் பின்னர்
பார்க்க ஓடிவந்த தந்தை....தனது இளம் மனைவியை காணப் பாலைவனத்திலிருந்து பதறி ஓடிவந்த
கணவன்.....எங்கே அவன்.....?
கனத்துப் போன நெஞ்சுடன் செயலற்றுப் போய் கீழே உட்கார்ந்தேன்....என் மௌனத்தைப் புரிந்து
கொண்ட சனங்கள் தானாகவே கலைந்து போய் தம் பணியைத் தொடர்ந்தனர்....எவ்வளவு நேரம் அப்படியே
உட்கார்ந்திருந்தேனோ தெரியாது...திடீரென என செல்பேசி அலறத் திடுக்கிட்டு உணர்வுற்று
காதில் பொருத்தினேன்....மனைவி!.
“என்னங்க...எங்கஇருக்கிறீங்க..போய்ச்சேர்ந்திட்டீங்களா..?அவங்களக் கண்டீங்களா...? என்ன நடக்குது?”
“அதுவந்து...இப்பதான்வந்துசேர்ந்திருக்கிறன்...அவங்களத்தான்
தேடுறன்.. பிறகு கதைக்கிறேன் ப்ளீஸ்..”
மேலே பேச முடியாமல் செல்பேசியை ஓய்வாக்கி விட்டேன். மெதுவாக எழுந்தேன்...மாலை மங்கிக்
கொண்டிருந்தது.. தள்ளாடிய கால்களை உதறிவிட்டு மறுபடி செமிலத்துவின் கடை இருந்த இடத்தை
நோக்கி நடந்தேன்.திடீனெ ஒரு வாலிபனைக் கண்டேன்...நெஞ்சம் காரணமின்றித் துடித்தது..அவ்விடத்தில்
அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அவனது கையில் ஒரு சிவப்பு நிற சின்னஞ்சிறிய குதிச்செருப்பு
இருந்தது. அது....? என் மகள் ஷேபி ஜமீலாவுக்கு கொடுத்ததுவா....?
“ஹேய்... யார்
நீ..?” என்றேன்.
என்னைப்பார்த்தஅவன்ää திடீரென பரபரப்பாக அச்செருப்பின் பிய்ந்த வாரை இழுத்து விட்டு காதருகில் வைத்து...
“ஹலோ..வ்.. யாரு.. பேசறது? செமிலத்தா...ஜமிலாக் குட்டியா..?” என்றான். திடீரென இடிக்குரலில் சிரித்தான். மறுடிபடி காதருகில் வைத்தான்.
“அலோ..வ். நான் வாப்பா பேசறன். புள்ளேய்.. என்ட புள்ளேய்..
செமிலத்தோ..வ்.. எங்கடி இரிக்காள்...பேசங்கா...” என்றான். திடீரெனக் கேவியழுதபடி தரையில் குப்பற விழுந்தான்...உடன் எழுந்தான்...தலை
கலைந்திருந்தான்.. என்னைப் பார்த்தான்.. உடன் கோபமுற்றான்..
“டேய்...! எங்கடா
என்ட பொண்டாட்டியும் புள்ளயும்.. எங்கடா எங்கடா...?” என்று ஆத்திரமாகக் கேட்டடியே என்னை நோக்கிச் சீறியெழுந்தான்.
நான் பயத்துடன்.
“டேய்..யார்ரா நீ..?” என்று உரத்துக் கத்தினேன்.
கேட்டிருக்கத் தேவையேயில்லை. ஜமீலாக்குட்டியின் கண்களும்ää கூர் மூக்கும் அவனிடம் அப்படியே இருந்தன... இடிக்குரலில்
சிரித்த அவன் மறுபடி அவனது ;செல்பேசி’(?)யை இழுத்துவிட்டு-
“வந்துட்டண்டா செமிலத்தோவ்..! வந்துட்டண்டா வாப்பா செமிலாக் குட்டியோவ்...” என்று கத்திச் சொன்னான்.. சட்டென மண்மலை உச்சி நோக்கி
ஏறி அபாயமான வேகத்தில் ஓடினான்....உச்சியடைந்து..
“என்ட கறுமந்தான்டோவ்...” என்று கத்திவிட்டு மறுபடி எதிர்ச்சரிவு நோக்கி தலைகுப்புற உருண்டு சென்று என் பார்வைக்கு
மறைந்தான். விரைந்து துடித்த இதயத்தைக் கையால் அழுத்தியபடி மெதுவாக பிரதான பாதை நோக்கி
நடக்க ஆரம்பித்தேன்.. தூரத்தே ஏதோ பஞ்சுப் பொதிபோல ஓடி வந்தது...என் கால்களிடை வந்த
வேகத்தில் புகுந்தது. நான் அலறி சட்டெனக் குனிந்து பார்த்ததேன்.
ஓ...மியாமி...!
நீயா......நீ மட்டும் தப்பி விட்டாயா...
அதனைக் குனிந்து தூக்கினேன்... என்னஒரு ஞாபக சக்தி அதற்கு... குறுகுறு விழிகளால்
என்னைப் பார்த்தது. “மிய்ய்யாவ்” என்றது. தன் சோகக் கதையைச் சொல்ல முயன்று
தன்முகத்தை என் மார்பில் தேய்த்தது.. அதை தடவி அணைத்தபடி என் வாகனத்தை நோக்கி
நடந்தேன். அப்போதுää மறுபடி என் செல்பேசி அலறியது.
எடுத்து காதில் வைத்தேன். என் மகள் ஷேபியின் குரல் கேட்டது.
“ஹெல்லோ..? டெடா...! ஜமீலா எங்க டெடா?”
“மிய்ய்ய்யாவ்.” என்று பதிலளித்தது மியாமி.
என் கண்ணில் தழும்பிய ஒரு துளிச் சுனாமியைச் சுண்டியெறிந்து விட்டு இருவரும் வாகனத்தில்
ஏறினோம் கொழும்பு செல்ல.தினகரன் 2004.
பற்கொலைப் போராட்டம்
என்னுடைய அலுவலக நண்பனான யாளுவாவுக்கு ஒரு வாரமாகச் சரியான பல்வலி. ஒரு பக்க ஈறும்
கன்னமும் வீங்கிவிட்டிருந்தன. யாளுவா என்றால்
சிங்கள யாளுவா இல்லை. ஓரிஜினல் இலங்கைத் தமிழன். யாழவன் என்பது அவனது அபூர்வமான பெயர். அது சுருங்கி ‘யாழு’ ஆகிää சிநேகிதனாக இருந்ததில் ‘யாளுவா’ வாகி விட்டது.
பல் விஸயம் என்னவென்றால்ää இவன் தன் பல் நோய்க்கும்ää பற்கொதியைத் தணிக்கவும்ää ஆலோசனை பெறாத ஆட்களே இம் மாவட்டத்தில் இல்லை. பல்வலி போட்டுப்
பாடாய்ப் படுத்தியதில்ää அவன் விடும் அறுவைப் பகிடிகள்
வெகுவாகக் குறைந்து விட்டதில் அலுவலகத்தில் பலரும் பெரும் நிம்மதியடைந்தனர். எனினும் யாளுவாää வலி எழும்பும் போதெல்லாம்ää பாட்டி வைத்தியம் முதல்ää பணடோல் வரை ‘பல்’வேறுபட்ட முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்து விட்டான்.
புகையிலையைக் கசக்கி பல்லிடுக்கில்ää அடக்கிப் புதைத்தான். சிலபோதுää அதி காரமான மூக்குப் பொடியை பல்லிடையில்
கொட்டி நிரப்பினான். ஓரொரு சமயம்ää ‘சித்தாலேப’ களிம்பைக் கூட பூசி அடைத்தான். தவிரவும்ää கொய்யா இலைகளைக் கொய்துää கொதி நீரில் அவித்துக் கொப்பளித்தான். ‘டிஸ்பிரினை’க் கூடக் கடித்துச் சப்பினான். அவன்பட்ட வேதனை எனக்கே தாங்க
முடியவில்லை.
பல்லைப் பிடுங்கிக் கடாசுவதை விட வேறு
எந்த வழியானாலும்ää அது எவ்வளவு கஷ்டமானதாக இருந்தாலும்
அதனைச் செய்வதற்கு திட்டமாகவிருந்தான். ஆனால்ää பல்லைப் பிடுங்குவதைத் தவிர வேறு எந்தவொரு வழியும் இருப்பதாகத் தெரியவுமில்லை.
பல்லொன்றை இழக்க ஊசி மருந்து ஏற்றுவதற்குää ஒரு போதும் அவன் துணியவில்லை. அதற்கு ஒரேயொரு காரணம்ää மட்டுமே இருந்தது. அதாவது பல் பிடுங்கும் முன் பல் வைத்தியர்
ஈறுகளில் ஏற்றும் ஊசியையும்ää பல் பிடுங்கும் ‘குறடு’வையும்ää கனவில் கண்டாலே திடுக்கிட்டு அலறிவிடுவான். அவ்வளவு பயம். இந்த இரு பற்கொலைக் கருவிகளையும்ää கண்டு பிடித்தவனின்; பல்லைக் கழட்டிவிடும்; அளவுக்கு ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஊசிää குறடு பயத்தை வெல்ல ஒரு வழியும்
தென்படவில்லை. பல்வலி இனித் தாங்க முடியாத
உச்சத்தில் பற்கள் நடுநடுங்க இறுதியாக என்னிடம் வந்துää ‘பல்’லைக் காட்டினான்.
‘மச்சான் அப்துல்லா!ää இத இப்பிடியே விட்டுக் கொண்டிருக்க
இனியும் ஏலாதுப்பா.. நேற்று ரா முழுக்க நான் பட்டபாடு கடவுளே. தாங்கேலாதுப்பா.. இனிப்
பிடு;ங்கி விடுவமென்ன மச்சான்..?’
‘நானா பிடுங்க வேணாமென்டு சொன்ன? நீ சின்னப் பிள்ள போல ஊசி..
‘அந்தக் கதைய விடுமன். நாளக்கி எங்காயிலும்ää ‘பிரைவேற்றுல’ காசு கொடுத்து பிடுங்குவமென்று சொல்றன். அங்கயும் ‘இன்ஜெக்ஸனே’ மச்சான்.?’
‘இன்ஜக்ஸன் போடாமலும்ää காசுச் செலவும் இல்லாமலும்ää பல் பிடுங்கிறதென்டால்ää நம்மட ஒபிஸ் மிஸ். சுனெத்ராவிடம் பல்லைக் காட்டிக் கிண்டிப் பாரேன்..’
‘சரி சரி எவ்வளவாகும் பிடுங்க..?’
‘ஆகும் ஒரு நானூறு ரூபா.. பகிடி என்னன்டால்ää நானும் நாளைக்குப் பல் கிளீன் பண்ணத்தான் இருக்கன்.
..சரி ரெண்டு பேருமாப் போவம். ஆனா ஒரு கண்டிஸன்.’
‘நீ என்னடா கண்டிசன் போட அத்துலத்முதலியே..? என்னடாது?’
‘இதப் பாரு நீ ஓட்டை வாய். அங்க பல் டொக்டருட்ட சனம் வாற
இடத்துல உன்ர விழல் பகிடிகளை விடக் கூடா. சுருக்கமாச் சொன்னா நீ வாயே திறக்கக் கூடாது.
செரியோ..’
‘வாயத் திறக்காமப் பல்லப் பிடுங்கேலுமே.. அது மட்டுமில்லாம
எனக்கிருக்கிற கொதியில பகிடி விட ஏலுமே.. சரிää ‘பிரைவற்று’ல எது நல்லது..?’
‘ந்தா டவுனுக்குள்யே இருக்குது. இந்தியன் டொக்டர் போவம்.
ஆனா திடீர் திடீரென்று ‘பிஸ்டல்’ வெடி நடக்குது. பரவாயில்ல.. ந்தாப் பக்கத்துல வாவி வீதியில
பெரிசா போட் மாட்டியிருக்குமே.. ‘மதுரா டெண்டல் ஸர்ஜரி’ யெண்டு..?”
()
“மதுரா டென்டல் ஸர்ஜரி” எங்களை வரவேற்றது. ஒரு வெட்டுப்பல்லையும்ää இரண்டு வேட்டைப் பற்களையும் அடுக்கி வைத்தாற் போன்ற (யாளுவாவின் பார்வையில்)
தோற்றமான கட்டடத்துள் பல்வேறு பயங்களுடன் அவனும்ää பயமற்று நானும் நுழைந்தோம். யாளுவாää ‘வலிக்குமே மச்சான்..? கடுமையா வலிக்குமே மச்சான்..?” என்று வழி நெடுகக் கேட்டு வந்த கேள்வியை பலவந்தமாக நிறுத்திய போது மணி சரியாக 10:10 என்று பல்லைக் காட்டியது.
பல்வரிசை போல அமைக்கப்பட்டிருந்த கருமபீடத்தில்ää முன்பற்கள் சற்றுத் தள்ளியிருந்த ஒரு பெண் வீற்றிருந்தாள். எங்களிருவரையும் கண்டதும்ää ‘பல்’லாண்டு கால சிநேகிதமாய்ப் புன்னகை உண்மையாகவே ‘காhஆட்டினாள்.’ ‘ஹெலோ வெல்கம்’ என்று முகமன் கூற முயன்று ‘வெல்கவ்’ என்று பல் தட்டினாள். துருத்திக் கொண்டிருந்த முன்பற்களை உள்ளே தள்ளும்
இடையறா முயற்சியின் இறுதிக் கட்டமாகää உள்ளே ஈறுகளில்ää பற்கம்பி; மாட்டியிருந்தாள். கொஞ்சம் பல்லை மறந்தால்ää பக்க வாட்டில் சற்றே அழகாகவும் இருந்ததாகத் தோன்றியது. பளீச் சீருடையில்ää தாதியாகவும்ää உபசாரிணிää பதிவாளிää காசாளி ஆக எல்லாமாகவும் செயல்பட்டாள்.
எனக்கு பல் சுத்தம் செய்ய என்று 250 ரூபாவும்ää யாளூவவுக்குப் பல் பிடுங்க 450 ரூபாவும்ää கறாராக அறவிட்டுää பில் தந்தாள்.
கைகளில்ää 2ää 3 என்று முன் ‘பல்’ வடிவிலான ‘டோக்கன்’கள் தந்தாள். அப்போதுää யாளுவா அவளிடம்ää இறுதி முயற்சியாகää ஊசி போடாமல் பல் பிடுங்கும் பொற்காலத்தை நோக்கி பல் நிபுணர்கள் ஏனின்னும்
‘பல்’ வேறு வழிகளிலும்ää முன்னேறவில்லையென்றää தனது பற்பல சந்தேக நிவர்த்திகளை
எடுத்துவிடத் தொடங்கியதும்ää அவள் எரிச்சலுடன் சிரித்துää பற்தொழிற்சாலைக் கதவைச் சுட்டிக் காட்டினாள். கதவில்ää வெண்கல மஞ்சள் தட்டில்ää
னுசு.ர்.யு.ளுநுனுர்ரு ஆயுவுர்யுறுயுN.னு.ளு (iனெயை) Pஆடு. னு.ர். Phட. (நேற னநடாi)
என்;று பல் வைத்தியரின் பல்லாராய்வுத் திறன் பற்றிய பல்வேறுபட்ட
பல்கலைக் கழகங்கள் வழங்கிய பல்வேறுபட்ட பற்பல
பட்டங்கள் அறைச் சுவர் முழுக்க பற்கள் பற்றிய
பற்பல புகைப்படங்கள்.. சித்திரங்கள்.. வர்ணச் சுவரொட்டிகள்.. தத்தம் பற்களைக் காட்டிக்
கொண்டிருந்தன. ஆரோக்கியமான பளிச் பற்களுடன் அப்பா அம்மா பிள்ளை என்று புன்னகைத்தனர்..
வெட்டும் பல் பெரிதாக்கப்பட்டுää கூம்புக் கோபுரமாயிருந்தது. கோடுகளும் அம்புக் குறிகளும்ää கிடைப்பாடாக இழுக்கப்பட்டுää இது என்புமச்சைää இது பற்சுவர்ää இது மச்சைக்குழி என்று சந்தேகமறக்
காட்டின. முப்பத்தி இரண்டு பற்களும்ää பெரிதாக்கப்பட்டுää இன்னொரு படத்தில்ää தலதா மாளிகைச் சுற்றுமதிலை நினைவூட்டியது.
மேலும்ää ‘பற்சுத்தம் பேணிää நற் சுகம் அணி!ää ‘பல்லுப்போனால் சொல்லுப் போச்சு”ää ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி”ää போன்ற ‘பல்’ மொழிகள் வேறு.. இடையிடையே சாமர்த்தியமாகää மதுரா பற்தூரிகைää மதுரா பற்பொடிää மதுரா ‘மௌத்வோஸ்’ää மதுரா பற்பாதுääகாப்பு(க்)கள்ää மதுரா பல்வலி நிவாரணி ஆகிய சுய விளம்பரங்களும்ää ‘பல்’லிளித்துக் கொண்டிருந்தன. பல் பிடுங்க முன்னரும்ää பல் பிடுங்கிய பின்னரும்ää பேண வேண்டிய ‘பற்’பத்து ஆலோசனைகள் அடங்கிய அட்டை வாசிப்பரின்றித் தொங்கின.. டொக்டர் இன்னும் வரவில்லை.
கதிரைகளில் அமர்ந்திருந்தோம். பக்கத்தே முதலாம் இலக்கம் பெற்று முதலில் பல்லைக் காட்டுவதற்காகää ஒரு தமிழ்ப்பெரியவர் உட்கார்ந்திருந்தார். தீரகேசரி படிக்கப்பட்டுää பின் கவனமாக மடிக்கப்பட்டு. கமுக்கட்டில் யாரும் இலேசாக
இரவல் கேட்டுவிடாதபடி பத்திரத்துடன் இருந்தது.
‘இவர் ஓய்வு பெற்ற தமிளாசிரியர். தன்னட்ட மீதியாயிருக்கிற
ஒன்பது பற்களிலும்ää ஒண்டைப் பலி கொடுக்க வந்திருக்கிறார்..
அது கட்டாயம்ää தமிழ்ஞானப் பல்லாகத்தானிருக்கும்..
கேட்டுப் பாக்கிறீரே..?” யாளுவா என் காதைப் பல்லால் கடிக்க ஆரம்பித்தான்.
‘இல்லை பேசாமல் பல்லை மூடிக் கொண்டிரு மஹனே.. உமக்குமிது
வழி.. நீர் போகுமட்டே..” என்று நானும் கோபமாக பல்லைக் கடிக்கவேää யாளுவா அமைதியானான்.
டொக்டர் இன்னும் வரவில்லை. தமிழ்ப்பெரியவர் பொறுமை இழந்துää தீரகேசரியை மீள்படிப்பு ஆரம்பித்தார்.
சற்றுத் தள்ளியிருந்த கதிரையில்ää ஒரு காத்தான்குடி முஸ்லிம் வயோதிப மாதுவும்ää அவளது அழகான ‘பர்தா’ மகளும் அமர்ந்திருந்தனர். ஆறாம் இலக்கம் பெற்றிருந்தனர்.
பல்வருத்தம் யாருக்கென்ற தெரியவில்லை. சாதாரணமாக
இருவருமே கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
பற்கிளிப்பெண் இவர்களை கடலை சாப்பிட வேண்டாமென எச்சரித்துச் சிரித்தாள். திடீரென யாளுவா என் காதருகேää
‘மகளுக்குத்தானப்பு பல் வருத்தம். தாய்க்காரிக்கு ல்லை. ‘பெட்’ கட்றீரே.. கேட்டுப் பாப்பமன்..” என்றான்.
‘இதென்னடா பெரிய கண்டு பிடிப்பு. கிளவிக்குத்தான் பல்லே
இருக்காதே அப்புறம் எப்படி பல் வருத்தம்..? கண்டிஷனை மீறுகிறாய்.. அப்பனே.. பல்லை மூடிக் கொண்டிரு..”
‘இல்லை.. கிளவிக்கு முப்பத்தெட்டுப் பல்லும் இருக்குது
பாரப்பு.”
‘இருபத்தெட்டா பல்..? ஏனப்படி?”
‘ஏனா கண்டுபிடி..
முடியாவிட்டால் கேள்.”
‘சொல்லண்டா.”
‘மகள் ஒரு பக்கமாகத்தான் சாப்பிடுறாள். தாய்க்காரி ஒரு
பக்கத்தில் கடலையும்ää மறு பக்கத்தில் வெற்றிலை பாக்கும் குதப்புகிறாள் பார்..”
‘சரிசரி..”
அச்சமயம்ää வெளியிலிருந்துää திடீரென இரண்டு பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் உள்ளே வந்தனர். தோள்களில் துப்பாக்கிகள்..
இராணுவப் பைகள்.. சீருடை மார்புகளில்ää பல்வேறு சின்னங்கள்.. தொப்பியில் யானை.. மார்பில் சிங்கம்.. நேராக பற்கிளிப் பெண்ணிடம் சென்றனர். மறுபடி அவள் ‘வெல்கவ்’வென்றாள். சிங்களத்தில் விசாரித்தனர். அவள் ஆச்சரியப்படுமாறுää அற்புதமாய்ää சிங்களத்தில் ‘பல்’ பற்றிப் ‘பற்’பல விளக்கமளித்துää முன்னூறு ருபா வசூலித்துää 5ம் இலக்கம் கொடுத்தாள். ஒரு சிப்பாய்
திடீரென திரும்பி எங்களிடம் நெருங்கிää ஆயுதத்தை தலையால் கழற்றி மடியில் வைத்து உட்கார்ந்தான். அதன் குழாய் எங்களையே நோக்கியிருந்ததால்ää ஒரு தற்பாதுகாப்புக் கருதிää நாங்களிருவரும்ää கண்களால்ää பாஷை பரிமாறி சும்மா சாக்குப் போக்குடன்ää எழுந்துää வரிசை மாறி உட்கார்ந்தோம். யாளுவா பயத்துடன்ää
‘ஊசியாலை பல் பிடுங்கினாலும் படுங்கலாம்ää உந்தத் துவக்காலை பல்லுப் பிடுங்கிச் சாகேலுமே மச்சான்.. தற்செயலா வெடிச்சுதெண்டால்..?”
இதை உணர்ந்த சிப்பாய்ää எங்கள் அறியாமை கருதி கொஞ்சமாய்ப்
பல்லைக் காட்டிச் சாந்தப்படுத்தினான். மற்றச் சிப்பாய் வெளியே இவனுக்குக் காவலாக நின்று
கொண்டுää அதே சமயம்ää சிகரெட்டும் புகைத்துக் கெர்ண்டிருந்தான். 10:40. டொக்டர் இன்னும் வரவில்லை. இனி வந்து விடுவார்.
‘மச்சான்.. அந்தா வெளியே சிகரெட் குடிக்கிறவனுக்குத்தான்
பல் வருத்தம்.. விளங்குதே..?”
‘ஷட்அப்.. டேர்ட்டி மௌத்.” என்று பல்லை நறநறத்தேன்.
‘ஏனெண்டாப் பாருமன்.. பல் பிடுங்கிய பிறகாலை சிகரெட் குடிக்க
ஏலாதுதானே.. அதான் ப்பவேää ஒண்டுக்கு மேலொண்டாய் மூட்டுறான்.”
மேலும் யாளுவா கதை வளர்க்க முன்னரே வாசலில்ää ‘ஹொண்டா 125’ உறுமியபடி விரைந்து வந்தது.
நேராக முன் விறாந்தைக்கே வந்து அதனிடத்தில்ää ஓய்வானது. அதில் வந்தவர் இறங்கி தன் மண்டையோட்டுக் கவசத்தை வெகு கவனமுடன்
கழற்றினார். அப்பிப் போயிருந்த தலைமுடியை பின்பொக்கட்
சீப்பெடுத்துää அவசரமாய் வார்ந்தார். உடன் அழகாக இருந்தார்.
‘டொக்டர் வந்துட்டாங்க.. மஹத்தயா எவில்லா”
பற்கிளிப்பெண் இரண்டு அரசகரும மொழிகளையும் அமுலாக்கிக் கூறிவிட்டு முன்விறாந்தைக்குச்
சென்றாள். பல் வைத்தியர் கம்பீரமாகவிருந்தார். வெண்ணிற ஆடையில்ää வெண்ணிறஆடைமூர்த்தி போலவேயிருந்தார். எங்கள் ஏழு பேரையும் ஒருதடவை பார்த்தார். பின் பொத்தாம்
பொதுவாகää
‘வாங்க..வாங்க.. நண்ணாயிருக்கறீங்களா..?” என்று ‘பல்’லவ நாட்டு மண் வாசனையுடன் குசலம்
விசாரித்து அழகாகச் சிரித்தார். உண்மையிலேயே
பல் வைத்தியருக்கு அரிசிப் பற்கள் வரிசைப் பற்களாக இருந்தன. அவரது பற்களே அவரது தொழிலுக்கு
ஒரு இலவச விளம்பரமாகவிருந்தது.
‘பல் டொக்டர் உண்மையில் பல்லழகரெல்லே..? எனவேää புன்னகை அரசர் என்ற பட்டத்தை
அவருக்கு அளிப்பதோடுää அவரது பெயரையும் ‘பற்’குணம் என்றும் சிபார்சு செய்கிறேன்.” என்று யாளுவா ஆரம்பித்தான்.
பை முதலான அவரது ‘பல்’ வேறு சாமான்களை
வாங்கிக் கொண்டுää சென்றாள். புன்னகை அரசர் மறுபடி
எங்களுக்கு புன்னகையும்ää ஆயுதபாணிகளுக்கு விஷேடமாக ‘ஆயுபோவன்’னும் வழங்கி விட்டுää தனது ‘பற்’ பார்வையிடும் அறைக்குள் நுழைந்தார். திடீரென யாளுவா முகம் வேர்த்தான். இதுவரையும்
இல்லாத பயமும்ää பல்வலியும் ஆரம்பித்தன. பயத்தில் ‘பல்’லாடினான். ஊசிப்பயம் அவனது பற்களை
நடுநடுங்க வைத்தது.
முதலாம் இலக்கம் பெற்றிருந்த தமிழ்ப்பெரியவர்ää ‘பொறுத்தது போதும் பொங்கியெழு’ந்துää அறை வாசலை அடைந்தார். உட்புகுந்து
‘பல்’லிளித்துப் ‘பல்’லிழக்கத் துடித்தார்ää உள்ளே எட்டிப் பார்ப்பதும்ää தீரகேசரி ஒருவரி படிப்பதுமாக ‘பல்’ வேறுபட்ட அவஸ்தைகளை வெளிக் காட்....
‘இலக்கவ் ஒண்ணு..! வாங்க..”
வாங்க முன்னரேää தீரகேசரியை விடாது ‘பற்’றிக் கொண்டுää உட்புகுந்தார். புகுந்து மூன்றே நிமிஷத்தில்ää தன்; ‘பல்’வாயை தீரகேசரியால் பொத்திப் பதறியபடி வெளியே வந்தமர்ந்தார்.
வியர்த்;திருந்தார். ஓவ்..ää ஊசி போட்டாயிற்று. வலி தெரியாமலிருக்க முதற்தடவையாக எங்களைப் பார்த்துப் பல்காட்டாமற்
சிரிக்க முயன்று தோற்றார்.
‘
‘மனிசன் சிரிக்குது பாத்தியே.. தமிழ்ப்பழத்துக்கு ஊசி பழக்கமாயிட்டுது
போல..” என்றேன். அதற்கு யாளுவாää தன்னிலை மறந்துää ‘சும்மாவா.. 25வது பல் விழுத்தாட்டும் வெள்ளிப் பல் விழா நாயகரெல்லே..” என்றதும்ää நான் சிரிப்படக்க முடியாமல்
பல்லைக் காட்டää பற்கிளிப்பெண் திடீரென வெளிப்பட்டுää ஊசி சிரிஞ்சரை மேல் நோக்கி பீய்ச்சி
விட்டு. யாளுவாவைப் பார்த்து மெல்லிதாகச் சிரித்தாள். யாளுவாவின் முகம் கறுத்துப் போய் விட்டது. பற்கள் கிடுகிடுக்க ஆரம்பித்தன. எனினும் வருவது
வரட்டுமெனச் சற்று தைரியம் வரவழைத்து எழுந்தான்.
சட்டென பல்வைத்தியர்ää ஊசி சிரிஞ்சரை வாங்கிக் கொண்டுää முகமூடியணிந்து வெளிப்பட்டார். முகமூடியை ஊடறுத்துப் புன்னகைத்தது அவரது கண்களில்
தெரிந்தது. யாளுவா திடுக்கிட்டு அறுவை மாடு
வெட்டுக் கத்தியைப் பார்ப்பது போல பீதியுற்றான். என் கையை இறுக்கமாகப் ‘பற்’றிக் கொண்டான். மாறாத புன்னகையுடன் டொக்டர்ää
‘அது என்னன்னாக்காää ராத்ரி தூங்கப் போறச்சேää பல் துலக்கினாய்ங்க ண்ணு வைங்க.. ஒரு நாளும்ää பல் நோய்க்கு சான்ஸே ல்லீங்க.. அதுல பாருங்கää ‘டூத்பேஸ்டு’கள தினுசு தினுசா ‘அட்வடைஸிங்’ பண்றாங்க. கறுவா கலந்தது.. ‘புளொரைட்’ உள்ளடக்கியது ண்ணெல்லாம் சொல்றாங்க. எல்லாம்
சுத்த ‘டூப்ளிக்கேட்டு’ங்க.. அதெல்லாம்
சுத்தமா மறந்திடுங்க.. இதுல பாத்தீங்கண்ணாää இப்ப என் பல்லைப் பாருங்க. ‘‘..யீஈஇ...யீஈஇ...” பாத்தீங்களா..? எங்க நாட்டு மதுரா பற்பொடி தவிரää நான் எதையுமே இதுவரைக்கும் யூஸ் பண்ணினதில்லீங்க.. இது
நெசங்க..”
என்று ‘பல்’வேறு உபதேசம்
புரிந்து விட்டுச் சிரித்துää யாரும் எதிர்பாராதவிதமாக காத்தான்குடி மகளிரை அணுகிää
‘ஏம்மா.. ந்த மாதிரி நேரங்கள்ளயும் வேர்க்கடலை சாப்ட்டுத்தான்
ஆகனுமா என்ன..?” என்று கோபப்பட்டுää அதற்குப் பழி தீர்க்கு முகமாகவோ என்னவோ
சட்டென பற்கிளிப்பெண்ணுக்குச் சாடை காட்டää அவள் தண்ணீருடன் ஓடோடி வந்து மகளிடம் வாய்
கொப்பளிக்கக் கொடுத்துää முடியää வாயை நெம்பித் திறந்தாள். டொக்டர்ää கண்ணிமைக்கும் வேகத்தில்ää அந்த இடத்தில் வைத்தேää அவளின்ää மேலீறுகளில்ää ஊசியைப் பாய்ச்சினார்.
‘ஙா..ஆ..ஆ..ஹ்” என்று திடீனெ யாளுவா அலறினான். பீதியில்
விறைத்துப் போனான். நான் அவனை அடக்கும் போதேää மகளும் கீச்சுக் குரலில் அவலக் குரல் கொடுத்துத் தன் தாய் மீது சாய்ந்து
விட்டாள். முகம் வியர்த்துப் பல்லொடுங்கிப் பீதியடைந்த யாளுவாவின் பற்கள் தந்தியடிக்க ஆரம்பித்தன. அடுத்துää யாளுவாவின் முறைதான்.
‘அங்க ஊசி போட்டாக்கா சாருக்கு வலிக்குதுங்களா.. சரிங்க.. ப்ப
இலக்கம் ரெண்டு வாங்க..”
‘......................”
‘இலக்கவ் ரெண்டு. அண்ணர் வாங்க..”
‘நீயும் உள்ள வா மச்சான்ää ப்ளீஸ்!”
‘இல்லைங்க.. அவர் நவ்பர் ‘த்ரீ’.. நீங்க மட்டுவ் வாங்க..”
‘போ.ääபோ.ää பயப்படாதடா..! நான் ஞ்சதானே இருக்கன்.”
யாளுவா உயிர்;க்கொலைப் பிராணியின்ää பீதியுடன்ää பரிதாபமாக என்னைப் பார்த்தபடியே கதவு நிலையருகே தயங்கித் தயங்கி நிற்கவேää திடீரென டொக்டரால்ää அன்புப் பலவந்தமாக உள்ளிளுக்கப்
பட்டு மறைந்தான். நான் ஆவலோடு கதவிடுக்கால்ää உள்ளே ஊடறுத்துப் பார்த்தேன். உள்ளே பற்கொலைப் போராட்டம்
நடந்து கொண்டிருந்தது.
அப்ää ‘பல்’லோ விண்வெளிக் கப் ‘பல்’ இருக்கையில்ää உயரத்தில்ää யாளுவா பலிபீடத்தில்ää உட்கார வைக்கப்பட்டிருந்தான்.
கண்கள் பிதுங்கிப் போய்ää டொக்டரின் கையிலிருந்த ஊசி சிரிஞ்சரைப் பார்த்துப் பல்லாடிக் கொண்டிருந்தான். தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டிருந்தான். டொக்டரோää யாளுவாவின் வாயைத் திறப்பதற்காகää மேவாய்க் கட்டைகளைப் பிடித்து பலம் கொண்டு மேல் நோக்கித் தள்ளும் முயற்சியில்ää இடையறாது போராடிக் கொண்டிருந்தார். பற்கிளிப்பெண்ää பஞ்சுää ஊசி சுமந்த தட்டினை வைத்துவிட்டுää டொக்டருக்குதவியாகää ‘மிஸ்டர்ää வாயத் திறங்க.. ஆ காட்டுங்க..’ என்றவாறேää பற் தடியினால்ää யாளுவாவின் வாயைக் கிண்டிச்ää சட்டென உள்ளே ஒட்டினாள். பின் நெம்பித் திறந்தாள். கிடைத்த
அவகாசத்த்pல்ää அங்கேயே உதட்டுக் காவடி போல பற்தடியைச்
சொருகி விட்டாள்.
ஆனால்ää யாளுவா தன்னிரு கைகளினாலும்ää வாயைப் பொத்தப் பேராடிக் கொண்ருக்கää நான் சட்டென உட்புகுந்துää போராட்டக் களத்தில் குதித்துää அவர்களுக்குதவியாகää அவனது இரு கைகளையும் பலமாகப்
பின் தள்ளிப் பிடிக்கää மூவரினதும்ää பலமிக்க விடாமுயற்சியில்ää யாளுவாவின் வாய்க்கோட்டை பிளவு
கண்டது. சுற்றும் தாமதிக்காத டொக்டர்ää யாளுவாவின் வாய்ப் பிளவுக்குள் கிடைத்த இடைவெளியில்ää வெற்றிகரமாக உள் நுழைந்துää முழுமையாக ஆக்கிரமிப்புச் செய்துää அவனது கடைவாய்க் கபாடத்தில் ஏதோ ஆராய்ந்துää பார்த்தாh. அதே கணத்தில்ää பற்கிளிப்பெண்ää ‘சிரிஞ்சரை’ நீட்டää எவ்வித அசூசையுமின்றி யாளுவாவின் நாக்கைப் புறந்தள்ளி அவனதுää கடைமுரசில்ää பொருத்தமான இடம் தேடிச்ää ...சுர்ர்ர்ர்ரீ..ரித்தார்... அதே
விநாடியில்ää எருமை மாடு ஒன்று கதறிய சத்தம் யாளுவாவிடமிருந்து
எழுந்தது. திமிறி விடுபட்டெழுந்த யாளுவா வெளியே பாய்;ந்து சென்றான்.. வாய் பொத்த முயன்று தடுமாறி வாயைத் தேடினான். கண்களில் வெள்ளம்
பிரவாகிக்க என்னைக் கொலை வெறியுடன் பார்த்தான். எனக்கோ வாயெல்லாம் பல்லாகி விட்டது.
தொடர்ந்து டொக்டரும் வெளிப்பட்டார். அழகாகப்
புன்னகைத்து மறுபடியும் தன் பல் வசீகரத்தை வெளிக் காட்டினார்.
யாளுவா வாயைத் தேடிக் கொண்டிருக்க அறை நடுவில் வந்து நின்று தெரு வித்தைக்காரனைப் போல ‘தட்தட்”டென்று கைகளைத் தட்டிää அனைவர் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.
கையில் ஒரு மந்திரக் கோல்.. சுவரில் தொங்கிய ‘புனிதப்பல்” பதித்த தலதாமாளிகைக் கூம்புச் சுவர்களை மந்திரக் கோலால் தொட்டுக்காட்டிää
‘இதுல பாத்தீங்கண்ணா..ää இது வெட்டும் பல் நான்;கு. கோரைப் பல் ரெண்டு. அரைக்கும் பல் நான்கும்ää.. இந்த வரிசையில்ää சாப்பாட்டைக் குழைக்கும் பல் ஆறும் ..ம்.. மொத்தம்.. பதினாறு..”
தன்னுடைய அழகிய பல் வரிசையுடன் மறுபடி ஒப்பிட்டுக் காட்டிää என்னைக் குறிப்பாகப் பார்த்துää
‘கீழ் வரிசையில் பாத்தாக்காää இதே மாதிரி மேலரையில ஆறு..இடப்பக்கம்
ரெண்டு.. அப்பண்ணா.. நாலு.. வலப்பக்கம் நான்கு.. பனிரெண்டு ஒரு பக்கம்.. ஸோ.. மொத்தம்..?” என்று திடீரெனக் கேட்கவேää தடுமாறிய நான்ää
‘இருபத்தெட்டு”
என்று சொல்லிவிட்டேன் போலிருக்கிறது. உடனே யாளுவாவிடமிருந்துää அந்த நிலையிலும் எழ முயன்ற சிரிப்பொலி கீறிச்சிட்டு உறுமலுடன் அடங்கியது. என் தப்பான மறுமொழிக்காக
சிரிப்பை அடக்கமாட்டாமல்ää தோள்கள் குலுங்கிக் கொண்டிருந்தாள்
பற்கிளிப்பெண். .
‘என்ன இருபத்தெட்டா.. நெசமாவே இருபத்தெட்டுங்களா..?”
டொக்டர் ஏகப்பட்ட அவநம்பிக்கையுடன்ää என்னைப் பார்க்க தீரகேசரி கோபத்துடன் படபடத்தது.
நான் சுதாகரித்துää விரைவில் கணக்குப் பார்த்து சரியான பதில் சொல்வதற்கிடையில்ää முன் விறாந்தையில்ää பாடசாலைச் சீருடையுடன் ஒரு மாணவன் சைக்கிளில்
வந்து இறங்கினான். முகத்தில் அரும்பு மீசை. பல் தெரியவில்லை. முதுகில் புத்தகப்பை. பற்கிளிப் பெண்ää மாணவனை அணுகினாள்.டொக்டர் விடாமல் என்னைப் பார்த்துää
‘த்சே.. இருக்காதுங்க.. மேலரை ஆறு ண்ணா கீழரை ஆறு.. பன்னிரண்டு.. முன் வெட்டுப்..”
டொக்டர் முடிக்கு முன்னரே பாதுகாப்புச் சிப்பாய் சட்டென எழுந்துää இந்தத் தமிழ்;ப் பல் விரிவுரையைக் கேட்கத்
தயாரில்லாமல்ää
‘மெ.. தொஸ்தர் மஹத்தயோ.. அபிட்ட ஹதிஸி வெட நிஸா மேகொல்லாட்ட
இஸ்ஸர மாவ டிக்க வளண்ட வெரித..?”
உடன் டொக்டர் தன் பற்பேருரையை இடைநிறுத்திää சிப்பாயுடன் உடன்பட்டுää என்னிடம் புன்னகை வீசி அனுமதி பெற்று அவனுடன்
உள்ளறை சென்று மறைந்தார். மற்றச் சிப்பாயும் கூடவே சென்று
அறைக் கதவருகில் காவலிருந்தான்.
தீரகேசரி திமிர்த்தலுடன்ää கடைசிப் பக்கத்தில் எதையோ கவனமுடன் படித்துக் கொண்டிருந்தார். முஸ்லிம் மாதுவும்
மகளும் ஒருவர் மீதொருவர் சாய்ந்து கொண்டு இருவருமே அணுகிக் கொண்டிருந்தனர்.. நான் யாளுவாவை
பரிதாபத்துடன் பார்த்தேன்.. யாளுவா வாயெல்லாம் மரத்துப் போய்.. உமிழ்நீர் துப்ப முயன்று அநியாயமாக
வீணியிழுத்துக் கொண்டிருந்தான்.. கண்களில் பாதி மரண பயம் மறைந்து விட்டிருந்தது.. அந்த நிலையிலும்ää திடீரெனää யாளுவா கண்களில்ää ஒளி பளிச்சிட.. என்னை நோக்கி சைகை செய்து
கூப்பி;டடு. பெரியவர் படித்துக் கொண்டிருந்த செய்தியைச் சுட்டிக்
காட்டினான்..
பல்லுப் போனாலும் சொல்லுப் போகாது..
உறுதி..! வலிமை..!! சீன நிபுணத்துவ சேவை.!!!
ஹ{வாங்கூ பொய்ப்பல் செட். விலை: 3000 முதல்..
இம்மாதம் 30ம் திகதிக்கிடையில் கொள்முதல் செய்வோருக்கு
‘கிளீனிங் வோஷ் சொலுசன்’ இலவசம்..’
சிரிப்படக்க முடியாது நான் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டேன். பற்கிளிப்பெண்
மாணவனுக்கு பில் எழுதி இருநூறு கேட்டாள். பள்ளிச் சிறுவன்ää தனது முதுகுப் பையைக் கழற்றினான். அதன் வரி ‘ஷிப்’ பற்களை பிரித்துää உள்ளே கை விட்டுää நிதானமாக வெளியே எடுத்தான்.
ஒரு கறுப்புக் கைத்துப்பாக்கி.!
திடீரெனத் தாவிய அவன்ää மறைப்பெடுத்துப் பதுங்கிச் சட்டெனக்
குறி பார்த்துää மூன்று முறை சுட்டான். அறைவாசலில் காவலிலிருந்த சிப்பாய்ää
‘..ம்ம்ம்மே..”
என்ற ஈனஸ்வரச் சத்தத்துடன்ää தலைப் பொத்தலால்ää பீச்சியடித்தää குருதி விளாறுடன்ää ஒருக்களித்து விழுந்ததைப் பீதி
கக்கும் விழிகளால் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்ää..
அந்தப் பள்ளி மாணவன் மிக நிதானமாக எழுந்து மறுபடி புத்தகப் பையைத் தோளில் மாட்டிää சைக்கிளில் நிதானமாக ஏறிச் சென்றதை எப்படிக் கவனித்திருக்க முடியும்..?
அதிர்ச்சியால்ää ஒரு கணம் ஸ்தம்பித்துப் போன
மதுரா டெண்டல் கிளினிக் மறுகணம் திமிலோகப்பட்டது.
வேட்டோலி கேட்டதுமேää பின்புற யன்;னலால்ää மற்றச் சிப்பாய் விறைத்துப்
போன தன் வாயில் பஞ்சடைத்தபடி தன் அருமை நண்பனைக்
கைவிட்டுப் பறந்தோடினான்.
பற்கிளிப்பெண் சிலீரென ஈரம் விட்டு சுவர்ப் ‘பல்’லியாய்ää ஒட்டி ஒடுங்கி நடுநடுங்கää. தீரகேசரியை அஞ்சல் ஓட்டக் கோலாகப் பற்றிக்
கொண்டுää பெரியவர்ää வயதுக்கு மீறிய வேகத்துடன்ää நீளம் பாய்ந்து கொண்டிருக்கää முஸ்லிம் மாதுவும் மகளும்ää சிலைத்துப் போய் அமர்ந்திருக்க..
‘டேய்.. யாளுவா.. வா..வாடா வடா.. கெதியா.. ஓடுவம்..”
‘மஹ்ஸா..ன்! அதுல்..லா..”
நானும் யாளுவாவும்ää அவனது விறைத்த வாயுடன் கதவருகே
கிடந்த சிப்பாயின் சடலத்தைக்; கடந்து பாய.... அதே கணத்தில்ää உள்ளிருந்து டொக்டரும்ää சிப்பாயின் பிணத்தைக் கடந்து எதிர்ப் பாய்ச்சலில் வர-ஓஹ்..!
‘க்ர்ர்ர்ர்ர்க்ம்ம்ம்மஹ்ஹ்”
‘தட்ததத்த தம்மமார்”
நாங்கள் மூவரும் மணிக்கு முப்பது மைல் வேகத்தில் ஒருவருடன் ஒருவர் மோதிப் பிரிந்து
பின் மோதித் தடுமாறி மூவேறு திக்குகளில் விழுந்தோம்...
அடுத்தடுத்துää எத்தனையோ அதிர்ச்சியான சம்பவங்கள்
நடந்தேறின. அவை எல்லாவற்றையும் விடää எனக்கும் யாளுவாவுக்கும்ää எமது வாழ் நாளிலேயே மறக்க முடியாத அதிர்ச்சிச் சம்பவம் என்னவென்றால்ää
நாங்கள் முட்டி மோதி விழுந்ததில்ää டொக்டர் சேதுமாதவன் னு.ளு (iனெயை) Pஆடு னு.ர். Phட. (நேற னநடாi ) அவர்கள் எசகுத் தப்பாக முகம் குப்பற விழுந்து விட்டார். விழுந்த வேகத்தில்ää அவர் அதுவரையும்
பெருமையாகக் க(h)ட்டிக் கொண்டிருந்த அவரதுää
உண்மையான(?) பொய்ப்பல்செற் சடுதியில் கழன்று விடுபட்டுää எங்களை நோக்கிச் சிரித்தபடியே வழுக்கிக் கொண்டு விரைந்து வந்து கொண்டிருந்தது.
அரிசிப் பற்கள் என்றும்ää புன்னகை அரசர் என்;றும்ää ‘பல்’கலை வேந்தர் என்றும்ää ‘பற்’பல பட்டங்கள் பெறக் காரணகர்த்தாவாகவிருந்த அவரது விலையுயர்ந்த சீனத் தயாரிப்பு
ஹ{வாங்க்கோ பற்தொகுதி
சிவப்பு ஈறுகளுடன்ää இளித்தபடி வந்த வேகத்தைக் கண்டு
பயந்து போய்.. திமிர்த்துப் போன வாயுடன்ää யாளுவா அலறிய அலறலில்....
நம்பினால் நம்புங்கள்.. அன்றிலிருந்துää எனது யாளுவாவுக்கு பல் பிடுங்காத போதும்
கூடää அதன் பின்னர் அந்தப் பல் ஒரு போதும் வலிக்கவுமில்லை.. பல் நோய் வந்ததுமில்லை.இதயம்.
2004.
மீ;ள்தகவு
- பேரு.?
- முகம்மது யூசுப் அப்துல்லா.
- ஊரு.?
- காங்கேயனோடை.. மட்டக்களப்பு.
- என்ன விஸயமா வந்தீங்க.?
- சேர்..போன மாசமும் வந்திருந்தன்.. ந்த
அங்கயினருக்கான உதவிக் காசு வெசயமா....
ந்தா இரிக்கி சேர் என்ட பைல் நம்பர்..
- ஙா.. சரி.. சரி.. அதுல ஒரு ரிப்போர்ட் குறையுது.. அதுதான் உம்மட பைல் பெண்டிங்ல
கிடக்குது..
- ரிப்போட்டுக் கொறைதா.. போன மாசந்தானே சேர் ரெண்டு ‘சேட்டிகட்டு’க் கொறைது எண்டு சொன்னீங்க.. அதுகளக் கொணந்து தந்துட்டனே சேர்..
- அது ஜீயெஸ் ரெகமண்டேசன்..! பொலிஸ் என்ட்ரி!!
அதெல்லாம் சரி.. ஆனா இது வேற.. இது டயக்னஸிஸ் கார்ட்.. அது பைலில இல்லை.
- டைக்னிஸா.. அப்பிடியெண்டா..?
- அந்த நேரம் நீர் ஹொஸ்பிட்டல்ல அனுமதிச்சிப் பதியிற கார்ட் அது. ஹொஸ்பிட்டல் ரிப்போர்ட்டு..
- அதுவும் எடுக்கனுமா..
- எடுக்கனும்.. எடுத்துட்டு வாங்க.
- ப்ப எப்பிடி சேர் எடுக்கிற.. ஊருக்குப் போய் வெரனும்.. ரெண்டு கௌம ஆய்டும் சேர்..
நான் கை வெளங்காதவன்.. டக்டக்கெண்டு போக ஏலா சேர்.. அதுவும் கௌக்கு மாகாணம்.. கரச்சல்
கூடின ஏரியா சேர்.. சேர் அது ல்லாம செய்ய ஏலாதா..
சேர்..?
- அதுக்கு நான் என்ன செய்ற.. கார் பிடித்துத் தரவா.. ஒண்டும் அவசரமில்ல.. ஊருக்குப்
போய் அத எடுத்துட்டு அடுத்த மாதம் வாங்க.. வரேக்க நல்ல கஜூக் கொட்ட அரைக் கிலோ எடுத்திட்டு வாங்க. இங்க பெரியவருக்கு கொடுக்கனும்..
- அடுத்த மாசமா..? என்ன சேர் இது.. நான் ஒண்டுக்கும்
ஏலாதவன்.. ஏள.. ஒதவிபதவி ல்லாதவன்.. ப்பிடி
அலய வெக்கிறீங்க.. எம்பத்தாறு எனக்கலவரத்துல என்ட கை பிஞ்சி பறந்த சேர்.. இதப் பாருங்க.. ஒத்தக் கய் ல்ல.. கஜுக் கொட்ட கொண்டாரன்.
பாத்துச் செய்ங்க சேர்.. நான்; போன மொறையும் தயிருப் பானயும்ää கொளுக்கட்டயும் கொண்டு தந்த.....
- என்ன மடத்தனமாப் பேசறீங்க மிஸ்டர்.. டயக்னஸிஸ் ரிப்போர்ட் இல்லாம பைல எப்பிடி சப்மிற்
பன்ற.. எக்கவுன்டன் மூலக் கொதியன். மூஞ்சியில விட்டெறிவான்.. உம்மட பைல. எனக்கு நீர்
ஒண்டும் ~கவனிக்கத்| தேவல்ல. ஆனா டயக்னஸிஸ் கார்ட் கொணந்தாச் செரி..போங்க. போங்க.. எனக்கி கன வேல கிடக்குது..
- அப்பிடியெண்டால் ஏலாதா சேர்.?
- ஹையோ.ää ஏய்..! விக்டர்பெரேரா! மெ மனுஸ்யாவ பொட்டக் எலவன்டக்கோ
- செரி செரி கோவிக்காதங்க சேர்.. அத எடுத்துட்டு வாரன்.
()
- பேரு.?
- முகம்மது யூசுப் அப்துல்லா.
- ஊரு.?
- காங்கேயனோடை.. மட்டக்களப்பு.
- எப்ப நடந்த.. ப்பு?
- எம்பத்தியாறாமாண்டு எனக்கலவரத்துல.. ஐயா.
- எங்க?
- ஊருலதான் ஐயா
- எந்த ஆஸ்பத்திரியில மொதல்ல இருந்த நீர்?
- ஞ்சதான் ஏத்தி விட்டாங்கள் ஐயா
- திகதி தெரியுமா.. ப்பு..?
- எம்பத்தாறு சித்திர மாசம் தேதி பதுனாறு
ல்லாட்டிப் பதுனேளு
- தேடனும்.. ஆள் லீவு. போய் அடுத்த மாசம் வாரும்
- நாளக்கி கொளும்புக்கு அனுப்பனும் ஐயா நானு
- அதுக்கு.? நானென்ன செய்ற ப்பு..? நீர் முந்தியெல்லே வந்திருக்கனும்.
- முந்தி அங்க கேட்கயில்ல ஐயா! ப்பதான் ஒண்டொண்டாக் கேக்காஹ
- அங்க கேட்காததற்கு நானா பழி? அடுத்த மாசம் வாரும். வரேக்க
கொஞ்சம் சுத்தமான பசுநெய் ஒரு போத்தலும் கொண்டு வாரும் சரியே..?
- கொஞ்சம் மனசு வெய்ங்க ஐயா.. எனக்கலவரத்துல
எங்க வாப்பா மீன் யாவாரத்துல போனவரு..
கடத்தி மௌத்தாய்ட்டாரு.. அவரத் தேடிப் போன எனக்கி
புலிப்பட வெடி வெச்ச. ந்தக் கய் பிஞ்சி பறந்துட்டு ஐயா!
- புலியெண்டு சொல்லாதப்பு.. ஆமிக்காரன் சுட்ட யெண்டு சொல்லு. ப்படி ஆயிரம் புராணம்
கேட்டுட்டன் அப்பு. எண்பத்தியாறாம் ஆண்டு என்டால்ää எப்.ஆர்.ஐ பாக்கனும். அதுக்கு ஏ.ஓ. வேணும்.
சப்ஜக்ட் செய்யிற பொம்புள பிள்ளத்தாச்சி லீவு. வரியத்தில மூணு பிள்ளப் பொறுவாளப்பு..
பசுநெய் மலிவா எடுக்கலாமா அந்தப் பக்கம்..?
- ஐயாää காலப் புடிச்சன். அவிசிரம்.
ஐயா.. பசிநய் கொண்டாரன். கொஞ்சம் எரக்கம் காட்டுங்க..நா அங்கயீனன்..
என்ட கய்யப் பாருங்க..
- கைய முகத்துக்கு நீட்டாதப்பு.. புண் மணக்குது.. அவிசிரமா எடுக்கிறதாயிரிந்தால்ää ஒரு வேல செய்யுமன். இது ஹொஸ்பிட்டல் பொலிஸ் பதிவுலயும்
இருக்கும். அங்க போய் என்னத்தையும் நீட்டினயெண்டால் உடன எடுக்கலாம் நீர்.
- நீங்க தர மாட்டீங்களா ஐயா
- தமுள்ளதானே சொல்றன். சப்ஜக்ட்டு ஆள் மெற்றனிற்றி லீவு. ஏ.ஓ.தான் அது பார்க்கிற. நானில்லப்பு. பசுநெய் போத்தல்
என்ன விலையப்பு?
- அவரு ஏயோ எப்ப வெருவாரு?
- அது அவரின்ற பெண்டிலுக்கெல்லே தெரியும். எனக்குத் தெரியாது..
- அப்படிண்டால்..?
- போய் அடுத்த மாசம் வாரும். புலி சுட்ட
எண்டு சொல்லாதப்பு. ஆமி யெண்டு சொல்லு. அப்பதான் லேசா ரிப்போட்டுக் கெடக்கிம். போ..போ..
பசுநெய்ய மறந்துராதப்பு..
()
- நம..நம..பேரு.?
- முகம்மது யூசுப். அப்துல்லா. மஹத்தயா.
- கம?
- காங்கேயனோடை.. வெற்றிக்கலோ மாத்தையா
- கவதா மெ சிதுவுனே..?
- சிங்குளம் தெரியா மாத்தையா
- ஹெட்ட என்டகோ
- கய்ல.. துவக்கு வெடி பட்ட..
- ஹெட்ட..ஹெட்ட என்னங்கோ..
- எம்பத்தாறு எனக் கலவரத்துல ஆமிக்காரன் வெடி வெச்சி…
-மே... மச்சான்.! பொட்டக் என்டகோ.. மெயா கியன்ன பொட்டக் அஹன்டகோ..
மொனஹரி கியனவா முக்குத் தேருன் நே..
- அந்த மாத்தயாக்குத் தமுள் தெரியிமா ஸேர்?
- அடோ ஆர்ரா நியி? கய்ல என்னடா பொல்லு.?
- கய் ஒண்டு ல்ல மாத்தையா.. எம்பத்தாறு எனக்கவரத்துல.. ஆமிக்காரன் வெடி வெச்சி கய்
பிஞ்சி பறந்துட்டுது மாத்தையா.. வாப்பாவும்..
- புலி சுட்ட எண்டு செல்லண்டா பண்டி.! நீ ப்ப என்னடா வந்த?
- இதப் பாருங்க மாத்தையா.. ந்த ரிப்போட்டு வேணும்.. மினிஸ்ட்டியில் கேக்காஹ.. ஒதவிக்
காசி எடுக்க ரெண்டு வரிசமா அலையிறன்..
- டெ.. இது ஒஸ்பிட்டல்ல எடுடா பேயா..
- ஒஸ்பிட்டல்ல அடுத்த மாசம் வரச்சொல்றாங்க மாத்தையா.. ஆள் லீவாம்.. இதுல ஒரு ‘விராஞ்சி’ ஞ்சயும் இருக்குதாம். ஞ்சதான் எடுக்கச் சென்னாஹ.. எனக்கி இது அவிசரமா வேணும்..
மாத்தையா..
- என்னடா அவிசிரம்.. போய் அப்பிடி நில்றா நாயே..
- செரி மாத்தையா நிக்கிறன்.. ண்டைக்கு எடுக்கலாமா மாத்தையா..
- அம்மட ..ண்டைக்க எடுக்கலாம். போய் சோடா ரெண்டு போத்தலும் சிக்கிரட்டு ஒரு பக்கட்டும்
வாங்கிட்டு முத்திரக் காசி இருநூறுவாவும் வேறயா கவருல போட்டு எடுத்துட்டு வாடா வள்ளா
- செரி மாத்தையா நான் அங்கயீனன்.. ண்டைக்கி…
- வள்ளா.. ரிப்போட்டுல ஸைன் பண்ற ஓஐஸி குடிச்சிட்டுப் படுக்கான்.. போய் எழுப்பி ஸைன்
வாங்குவியாடா பேயா.. புடிச்சி மத்தக் கய்ய முறிச்சி ரிமாண்டுல போட்டு மூத்திரம் பருக்குவான்..
- அப்ப நாளக்கி வெரயா மாத்தையா..?
- மொதல்ல சிக்கிரட்ட வாங்கிட்டு வாடா சொத்திக்
கய்யா..
()
- பேரு.?
- முகம்மது யூசுப் அப்துல்லா.
- ஊரு.?
- காங்கேயனோடை.. மட்டக்களப்பு.
- என்ன விஸயமா வந்தீங்க.?
- சேர்..போன மாசமும் வந்திருந்தன்.. ந்த
அங்கயினருக்கான உதவிக் காசு வெசயமா....ந்தா இரிக்கி சேர் என்ட பைல் நம்பர்...
- ஙா.. வந்துட்டியா..? கஜுக்கொட்ட கொண்டு வரயில்லயா ? சரி..சரி.. நீங்க அனுப்பின ரிப்போர்ட்டு
கெடச்சிருக்கு. அது நாங்க கேட்ட டயக்னஸிஸ் கார்ட்
ல்லை. பொலிஸ் ஹொஸ்பிட்டல் ரிப்போர்ட்.
அதுலயும் முந்தி புலி சுட்ட என்று நோட்
இருக்கு.. ப்ப ஆமி சுட்ட எண்டு ரிப்போர்ட் சொல்லுது.. அது மட்டுமில்ல.. இதுல ஒஸ்பிட்டல் ஏஓ ஸைன் பண்ணாம பொலிஸ் ஓஐஸி ஸைன் பண்ணியிருக்கிறான்.
என்னப்பா.. இது.. ஸேர்க்குலர்ல கேட்ட டயக்னஸிஸ்
காட்டுத்தான் வேணும்.. இதப் பாரமெடுக்க ஏலாது
ஐஸே..
- என்ன ஸேர் செல்றீங்க ? நான்.. அங்கயீன..
- அந்தக் கத வேணாம்.. காசி எடுக்கிறதாயிருந்தா நாங்க கேட்ட ரிப்போர்ட்டோட வா.. ல்லாட்டி… ல்லை.
- அப்பிடியெண்டால்?
- எல்ல்ல்லாத்தையும் எடுத்துட்டு அடுத்த மாதம் வாங்க..
- அடுத்த மாசமா?
- ம்..
- வேற ஒரு வளியிம் ல்லியா ஸேர்.. நான் கய் ஏலாதவன்.. ஒதவி ல்லாதவன்..
- இதப்பாரும் ஐஸேää அறிவில்லையா உனக்கு.. இதுல பாரும்.. அற்றாக்ட்
பை ஸம் அந்நோன் பேர்ஸன் சஸ்பெக்ற்றட் தி போர்ஸஸ் . அதாவது
பாதுகாப்புப்படை சுட்ட எண்டுதானே எழுதியிருக்கு.. ந்தா இத வாசிச்சுப் பாரும்.. கமட்ட ஆப்பு ஹந்துரு நெட்தி கொட்டி வெடி தபா எத்தி.. புலிப்படை வந்து சுட்ட.. அப்ப எப்பிடி செக் எலவ் பண்ற.. மடையனா அவன்
எக்கவுண்டன்ற்.?
- ப்ப நா என்ன ஸேர் செய்யனும்.. கஜுக்கொட்ட
வாங்யரட்டா..?
- ஹையோ.. இதெல்லாம் உனக்குச் சொல்லி விளங்காது. ரிப்போர்ட்டு முதல்ல ஒழுங்கா இருக்கணும்..
பிறகுதான் கஜு பிஸினஸ் எல்லாம். ஓண்டு எல்றிற்றி சுட்டயா அல்லது ஆமி சுட்டயா.. சரியான
ரிப்போட்ட எடுத்துட்டு வாங்க..
- ஆருண்டு எப்பிடி ஸேர் செல்ற..?
எனக்கலவரத்துல ஊருல பூந்து அவனும் சுட்டான்.. இவனும் சுட்டான்..
வாப்பாவக் கடத்திட்டுப் போன எண்டு நான் பொறகால ஓடின.. சாக்குமரச் சந்தியில் வெச்சி
படபட ண்டு..
- ஸ்டொப். நிப்பாட்டுங்க.. என்னால இத விளங்கப்படுத்த
ஏலாது. சரி.. பாத்தால் பாவமாக் கெடக்கு.. சரி.. லேசா ஒரு வேல செய்ங்க.. உங்கட ஊரு டீஎஸ்ஸிட்டப் போய் இத வெரிபை செஞ்சி இதுல ஒரு ஸைன் வாங்கி அனுப்பிடுங்க.. ல்லாட்டி நேருல
எடுத்துட்டு வாங்க .. வேல லேசா முடியும். வரேக்க...
()
- பேரு.?
- முகம்மது யூசுப் அப்துல்லா.
- ஊரு.?
- காங்கேயனோடை.. மட்டக்களப்பு.
- என்ன வந்த.. விடிய எளும்பி வந்துருவீங்க.. ஒப்பிஸில மனிசன கொஞ்ச நேரம் நிம்மதியா
இருக்க விர்ரல்ல..
- தம்பி.. நான் கய் ஏலாதவன். அங்கயீனக் காசி எடுக்க எல்லா திப்பட்டும் அனுப்பியாச்சி.
கடசில இதுல பெரிய டீஎஸ்ஸி ஐயாட ஒரு ஸனை; வேணுமாம்.. இதப் பாருங்க..
- அத நீட்டாத.. கை நாறுது.. இப்படி மேசையில படாம வய். இதுல ஸைன் பண்ற டீஎஸ் ஸேர் களம்புக்கு மீற்றிங் போயிட்டாரு. அடுத்த வாரம் வா..
- அடுத்த கௌமயா.. ப்ப தெர ஏலாதா தம்பி..?
- ஏலும்.. ஒரு பிளேன் புடிச்சித் தந்தியென்டால் களம்புக்குப் போய் டீஎஸ்ஸிட்ட ஸைன்
வாங்கித் தந்திரலாம்..
- ஹீ..ஹிக்.. நெல்ல பஹ்டி இது. தம்பிää டீஎஸ் ஐயாக்கு அய்டடிங்காக ஒத்தரும் ல்லியா.. அவருட்ட
வாங்கித் தெர ஏலாதா ம்பி.. எனக்கலவரத்துல என்ட கய் பிஞ்சி பறந்துட்டு தம்பி.. ஊட்டுலயும் கய்ட்டம்.
- இனக்கலவரத்துல ஆள் கடத்தலுக்குப் போனா இப்படி வரும்தானே.. கய் நாத்தப் பொணம். தள்ளி எடு..
- அல்லாறிய சத்தியமா நான் அப்பிடியான ஆளு ல்ல தம்பி.. எங்கு வாப்பாக் கௌவன கடத்திட்டுப்
போய்..
- சரிசரி.. போய் வா.. எனக்கு வேல இரிக்கி.. அடுத்த ஆள் ஆரு.. வாங்க..
- தம்பி..யம்பி.. காலப் புடிச்சன் வாப்பா இத ஒளுப்பம் முடிச்சித் தா வாப்பா நா ஒண்ட
வாப்பாவப் போல..
- என்ன எளவுடாது.. இது பெரிய வெசயம் காக்காவ்… புலியா.. ஆமியா சுட்ட எண்டு ஆரு ஸைன் பன்ற..? ஆரும் பண்ணுவானா.. பேய்க்கத கதக்கிறாய்.. மொதல்ல ஆரு சுட்ட எண்டு ஊர் விதானைட்ட
ஒரு கடிதம் எடு..
- எடுத்து..?
- எடுத்துட்டு வா.. அத நாங்க கவ்ண்டர் ஸைன்
பண்ணுவம்..
- திட்டமா ஆரு சுட்ட எண்டு கேக்கிற தம்பி..
- உனக்குச் சுட்ட ஆருண்டு எனக்கா தெரியும்.. உனக்கா தெரியிம்..
- ஆருண்டு எப்பிடிச் செல்ற ம்பி..? சந்தியில சைக்கிள்ள திரும்பக்குள்ள
படபட ண்டு வெடி.. அந்தப் பக்கம் ஆமிக்காரனுகள்.. .. ந்தப் பக்கம் புலிப்பொடியனுகள்....
ரெண்டு பக்கமும் வெடி.. குறிப்பா எப்பிடிச் செல்ல.. ஒஸ்பிட்ல்ல ஆமியெண்டு செல்லச் செல்றாஹ.. பொலிஸில புலி யெண்டு
செல்லச் செல்றாஹ.. எடையில நான்.. ஆருண்டு எப்பிடிச் செல்லி என்ட காசி எடுக்கிற..?
- அப்ப வைரவண்ட சாத்திரிட்டப் போய் ஆரு சுட்ட என்று குறி பார்த்து ஒரு கடிதம் வாங்கிட்டு
வாரியா.. ஹையோ.. சுட்ட ஆரு என்டாலும் திட்டமா ரிப்போர்ட்டு வேணும்..
- என்னம்பி.. பஹ்டி பண்றீங்க.. அலஞ்சிலஞ்சி என்ர சீவன் போகுதும்பி.. வேற லேசான வளி ஒண்டும் ல்லியாம்பி..
- ஏனில்லாம.. இரிக்கு. எல்லாம் வெல்லலாம்..
உங்கட ஊருல தாய்தகப்பன் ல்லாத சின்னப் புள்ளயள்
எடுக்க ஏலாதா.? வீட்ட புள்ளத்தாச்சி.. பொம்பிளக்கி
உதவியா ஒரு சின்னப்பிள்ள வேணும்.. பார்க்க ஏலுமா அந்தப் பக்கம்..?
- நான் எங்க தம்பி தேர்ர.. ந்தக் கய்யோட அலைய ஏலமா..?
- அப்ப என்ன செய்யப் போறாய்.. போய் டிஎஸ் வந்தாப் பிறகு வாரியா.. போ.. சும்மா ஒத்தக்
கைய வீசிட்டு வராமல் ஊருல விதானையிட்ட ஒரு
கடிதம் எடுத்துட்டு வா.. இனம் தெரியாத நபர்கள் சுட்ட என்று ஒரு கடிதம்..
- செரிம்பி..
()
- பேரு.?
- முகம்மது யூசுப் அப்துல்லா.
- ஊரு.?
- காங்கேயனோடை.. மட்டக்களப்பு. அங்கயீனருக்கான..............
புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற
கதை.ஞானம். 2006.
காலவட்டம்
எப்போது தொடங்கியதென்று தெரியவில்லை.
ஆனால்ää அப்போது
ஆயிரத்து எழுநூற்று எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1788.05.01.
...................த்தான். சுவாசிக்கத் திணறினான். இது வன்னி நிலத்தின்ää அடர் வனப்பகுதி. அதி விடியலின் இருட்டு. ஒல்லாந்து நாட்டு
டச்சுப் படையின் கட்டளைத் தளபதி கேர்ணல். வான்ஸ்டைமன் இரண்டாம்; எல்லாள மன்னரின் தமிழ்ப்படை வீரர்களால்ää துரத்தப்பட்டுக் கொண்டிருந்தான். இருளி;ல் மரங்களில் மோதி விழுந்தான். வாயால்
நிறையக் காற்று வாங்கி விழுங்கினான். ஓடச் சக்தியற்று விழுந்;தான்.
ஒன்றும் புரியவில்லை. ஞாபகத் தொடர்கள் அறுந்தன. தூரத்தே பீரங்கி முழக்கம் கேட்டது. தாகம் வாட்டியது. உடலில் ஆங்காங்கேää இரத்தம் அப்பி மசமசத்தது. உணரும் இடமெல்லாம்
வலித்தது. கண்கள் பற்றி எரிந்தன. இலக்குத் தெரியாமல் விழுந்தான். உயிர்ப்பயத்தால் மறுபடி உந்தி எழுந்தான். முடியாமல் தடுமாறினான். விழுந்தான்.. மண்டியிட்டு ஊர்ந்தான். இலக்கின்றித்
தவழ்ந்தான். எதிரிப்படை வீரர்களின் குதிரைகளின்
கனைப்புச் சத்தங்கள் பயங்கரமாக அருகில் கேட்டன.
இரண்டாம் எல்லாள மன்னரின் தமிழ்ப்படை வீரர்கள் தேடி வருகிறார்கள். தீபப்பந்தங்கள் நெருங்கி வந்தன. இவனைத்தான் தேடுகின்றார்கள். தமிழ்க்குரல்கள் மிக அருகே கேட்டன. வான்ஸ்டைமன்
மூச்சின்றிப் பதுங்கினான். அடர் புதரில்
உயிர்ப் பிச்சை தேடிப் புகுந்தான்.
விஷப் பாம்புகளின் பயத்தை விட உயிர்ப்பயம் வென்றது. அப்படியே புதரில் மறைந்து
கிடந்தான்.
புரவிகள் அருகில் வந்து நின்றன. தமிழ்க் குரல்கள் கேட்டன. ஓன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் யாரோ உரக்க ஏதோ சொல்வது கேட்டதுää திடீரென புரவிகள் கனைத்துத் திரும்பின. தீபப்பந்தங்களின்
ஒளி குறைந்தன. திரும்பிப் போகிறார்கள். கொஞ்சம் உயிர் நம்பிக்கை வந்தது. யாழ். மண்ணின் அசைக்கவே முடியாத முடியாதென நம்பப்பட்ட டச்சுக் கோட்டை திடீரெனத் தாக்குதலுக்குள்ளாகி வீழ்ந்ததும்ää அதன்ää பிரதான கட்டளைத் தளபதி புதரில் கிடப்பதும்…யோசிப்பதும் அவனுக்கே புதுமையாயிருந்தன.
பலம் பொருந்திய இந்த டச்சுக் கோட்டை இரண்டாம்
எல்லாள மன்னரின் வீரர்களிடம் எதிர்பாராதவிதமாக வீழ்ந்ததும்ää மதுவருந்தி பஸ்கா பண்டிகை கொண்டாடிக் கொண்டிருந்தää ஒல்லாந்து வீரர்கள் சிதறி ஓடியதும்ää ஒரு கனவு போலத்தானிருந்தது. ஆனால்ää இது ஜீரணிக்க முடியாத நிஜம். வான்ஸ்டைமனுக்கு மறுபடி மரணபயம் வந்தது. இன்னும்
சற்று நேரத்தில்ää விடிந்து விடும். வெளிச்சம் பரவி விடும்..
ஒல்லாந்துப் படைகள் தேடி வந்து காப்பாற்றும் என்று நம்பிக்கையில்லை. இது எந்த இடமென்றும் தெரியவில்லை. இவனை உடனேயே அடையாளம் கண்டு விடுவார்கள். செம்பட்டைத்
தலையும்.. சிவப்பு உடம்பும்.. உடன் எச்சரிக்கையாக
எழுந்தான். இரைத்தது. தயங்கித் தயங்கிää எச்சரிக்கை உணர்வோடு நடந்தான் வெளிச்சம் வருவதற்குள் எங்காவது போய் விட வேண்டும். உத்தேச திசையில்ää வலிக்க வலிக்க எட்டு வைத்தான். யாரையும் காணவில்லை.
சிலீரென்று நீரோடை குறுக்கிட்டது. குனிந்து குளிர்ந்த நீரை அள்ளிக் குடித்தான்.
கொஞ்சம் தெம்பு வந்தாற் போலிருந்தது. மேலும்
தாமதிக்காது ஓடையைக் கடந்தான். எஞ்சிய பயத்தை விரட்டியபடி கூடிய முயற்சியோடு விரைவாக தத்தி நடந்தான்.
சிறிதுசிறிதாக வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.
வான்ஸ்டைமன் ஊகித்த திசை ஓரளவு சரியாகவே இருந்தது. ஓன்றிரண்டாய் குடிசைகள் தெரிய ஆரம்பித்தன. பதுங்கி நடந்தான். வெகு முன்னெச்சரிக்கையோடு குக்கிராமத்தை நெருங்கினான். தூரத்தே மாரியம்மன் கோயில்ää கோபுரம் மங்கலாகப் புலப்பட்டது. உடனே வான்ஸ்டைமனுக்கு இது நாகர்சேரி என்பது விளங்கி விட்டது. டச்சுக் கோட்டையிலிருந்து சுமார் நான்கைந்து கற்கள் தொலைவில் இது இருக்கிறது. உடனே அவனுக்குத்
தான் செல்ல வேண்டிய பாதை தெளிவாகி விட்டது.
விரைவாகத் திரும்ப்p கோயில் பக்கமாக சற்று மெதுவாக
ஓட ஆரம்பித்;தான். வலி பிடுங்கியது. பொருட்படுத்த முடியாது. இரண்டாம் எல்லாள மன்னரின்
தமிழ்ப்படை வீரர்கள் எந்நேரமும் குறுக்கிடக்
கூடிய அபாயம் இருந்தது. பொதுமக்கள் அல்லது ஆஸ்ரம ஊழியர்கள் யார் கண்டாலும்ää காட்டிக் கொடுத்து விடுவார்கள். கூடியவரை பனங்காட்டுப் புதர்களுடாகப் பதுங்கிச்
சென்றான். கறுப்பு மண்ணை அள்ளி கைகளிலும் முகத்திலும் தடவிக் கொண்;டான்;. மேலும் நடக்...
- யாரங்கே..?
அதட்டலாக ஒலித்த திடீர்க் குரலால் திடுக்கிட்டான். உடனே கைகளை மேலே தூக்கி விட்டான். மரணப்பீதி
உயிரைக் கௌவியது. மெதுவான அநிச்சையாகத்
திரும்பினான். குரலுக்குரிய உருவம் மெதுவாக இவனை நோக்கி வந்தது. ஓ…கறுத்த தடியான
உருவம்.. மொட்டைத் தலை. திருநீறு ஏடாகூடமாக
அப்பிக் கிடந்தது. மார்பில் பூநூல்.. கைகளில்
தட்டில் அதிகாலைப் பூக்கள். …மாரியம்மன் கோயில் குரு. நெருங்கி இவனை உற்றுப் பார்த்து.
- எட.. தாங்கள் கேப்டன் வான்ஸ்டைமன் அல்லவா?
தன்னை ஒரு கோயில் குரு சந்தேகமற இனம் கண்டு
கொண்டார் என்பதை அவர் தன் பெயரை தீர்க்;கமாக உச்சரித்ததிலிருந்தே உணர்ந்து திகிலடைந்தான். இருவரும் சற்று ஒருவரையொருவர் நெருங்கியதும்ää அசைவற்று நின்றனர். ஏதும் பேசத் தொடங்கு முன்னரேää பெரும் பனைக் காட்டை ஊடுருவிய
படி சில புரவிகள் விரைந்து வருவது தூரத்தே தெரிந்தது. ஓ.. எல்லாள மன்னரின் வீரர்கள் வருகிறார்கள்.
- காப்பாற்றுங்கள் குருவே..
வான்ஸ்டைமன் திகிலுடன் கூவினான். மெல்லிய
கதறலுடன் குருவின் கால்களில் விழுந்து கட்டிப் பிடித்தான். குரு திகைத்துப் போய் தூரத்தே விரைந்து வரும் புரவி
வீரர்களைப்; பார்த்தார். வான்ஸ்டைமன் முனகியபடியே அவரது கறுத்த பாதங்களில் தன் முகத்தைத்
தேய்த்தான். விழி நீரால் நனைத்தான். முக்கி
அழுதான்.. டச்சு மொழியில் பிதற்றினான்.. தீனமாக
உயிர்ப்பிச்சை இரக்கும் இந்தக் குரல்..? இந்தக் குரலை.. எப்போதோ கேட்டிருப்பது போலுணர்ந்தார்.. எப்போது.. ஒரு யுகத்தின் முன்னரா..? குருவின் உடல் திடுக்கிட்டு நடு;ங்கியது. குரு கீழே குனிந்து அவனது விழிகளைப்
பார்த்....
அதன் பின்னர்ää
ஆயிரத்து எண்ணூற்றி எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1888.05.01.
................தார் அர்ச்சகர். விழிகளில் உயிர்ப்பிச்சைக்கான
இரப்பு.. புதுமையாவிருந்தது. இது பிரிட்டிஷாரின்; காலம்.. பழைய ஒல்லாந்துக் காலமல்ல. நவீனத்துவக் காலம்.. இங்கிலாந்து நாட்டின்ää பிரிட்டிஷ் படைக் கட்டளை அதிகாரி கப்டன் மக்மில்லன் ஹென்றி ஒரு சாதாரண கறுப்புக் கோயில் அர்ச்சகரின் கால்களில்..
கப்டன் மக்மில்லன் ஹென்றியின் பரிதாப விழிகள்
காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சின. விழிகளில் தெரிந்த
ஏதோ ஒன்று பல யுகங்களுக்கு முன்னரும்ää இவ்வாறே ஒரு சம்பவம்ää இதே மாதிரி வேறு ஒரு சூழலில்ää நடைபெற்றதாக நினைவில் சிக்கியது. ஆயினும் ஞாபகத் தொடர் அறுந்து சரியாக நினைக்க முடியவில்லை. நிச்சயமாக இதே கெஞ்சும் பரிதாப
விழிகளை பார்த்திருக்கிறார். யுக யுகாந்திரமாகத் தொடரும்ää ~விழியீர்ப்பு விசை|யா இதுää?
சிந்திக்க நேரமில்லை. வன்னி மன்னர் பண்டாரவன்னியனின் கிளர்ச்சிப் படை வீரர்கள்ää ஆங்கிலேயப் படைகளிடமிருந்து கைப்பற்றிய ஜீப் வண்டிகளில்ää வன்னிக் காட்டை ஊடுருவியபடி நெருங்கிக் கொண்டிருந்;தனர். இனி செய்வதற்கொன்றுதானிருந்தது.
அர்ச்சகர் துரிதமாகச் செயற்பட்டார்.
காலடியில் மயங்கிக் கிடந்த கப்டன் மக்மில்லன் ஹென்றியின் மீது தன் நீண்ட காவியை உருவிப் போர்த்தினார். சில புதர்களைச் சாய்த்து மறைத்தார். விரைவாகப் புதரை விட்டும் வெளியே வந்தார். வேறொரு புதரை அண்டிச் சென்று சாதாரணமாகப் பூப்பறிக்க
ஆரம்பித்தார்.
ஜீப் உரசியபடி வந்து நின்றது. கிளர்ச்சிப்
படை அதிகாரி அர்ச்சகரை உற்றுப் பார்;தான். மார்பில் புலித் தலையிட்ட சீருடை அணிந்திருந்தான். இடையில் நீண்ட வாளும்ää தோளில்ää அதிசயமாக உள்ளுர்த் தயாரிப்புத்
துப்பாக்கியும் தரித்திருந்தான். அவனது விழிகளின் தீட்சண்யத்த்pல்ää அர்ச்சகரின்ää பார்வை தாழ்ந்தது. விரல் சொடுக்கி
அர்ச்சகரை அழைத்தான்.
- அய்யரேää. ஒரு வெள்ளைக்காரன் ந்தப் பக்கம் ஓடி வந்தவனா..?
அதிகாலையிலேயே ஒரு கோயில் அர்ச்சகர் தன் இனத்து வீரர்களிடமேää பொய் பேசுவதா.. ஒரு வெள்ளையனைக் காப்பாற்றி தான் அகப்படுவதா.? ஆனால்ää அந்த விழிகளில் தெரிந்த யுகாந்திரத் தொடர்பு..?
- அய்யரே.. காது கேட்கல்லைப் போல.?
- ஓடி வந்ததைப் பார்க்கவில்லை அப்பனே.!
என்றார் சாதுரியமாக..
அவநம்பிக்கையுடன் அர்ச்சகரைப் பார்த்தான் கிளர்ச்சிப் படை அதிகாரி அவனது கண்களில்
தெரிந்த யுகாந்திரப் பகையுணர்ச்சியில் வெலவெலத்துப்
போனார் அர்ச்சகர். இவனுமா..? மேற்கொண்டு ஏதும் கேட்காத கிளர்ச்சி அதிகாரி
- சரி.. எடு வாகனத்தை..
என்று கட்டளையிட்டதும் ஜீப் தூள் கிளப்பிப்
பறந்தது. வாகனம் சென்று மறைந்ததும் அர்ச்சகர்
விரைந்து செயற்பட்டார். புதரில் சுருண்டு கிடந்த கப்டன் மக்மில்லன் ஹென்றியை மிகச்
சிரமத்துடன்ää தூக்கியும் இழுத்தும் வெளியே
கொணர்ந்தார். கப்டனும் தனது இயலாமையுடன் அரைகுறைப் பிரக்ஞையுடன் கூட ஒத்துழைத்தான். மெதுவாக நடத்தி கோயிலை நெருங்கினார். கதவுகளைத் திறந்தார். அவனது விழிகளில் தெரிந்த அந்த அறுந்து போனää யுகாந்திரத் தொடர்பலையை மறுபடி தன் ஞாபகத்தில்ää இணைத்துப் பார்க்க
ஆவலுற்றார்.. அறியாமையால் ஆவலுற்றார்.
கோயில் உள் மண்டபத்துள் கப்டனைச் சிரமத்துடன் கொணர்ந்தார். கதவுகளைத் தாழிட்டார். கர்ப்பக்கிருகத்தின் வலதுபக்க வாசலூடே கப்டனைத் தாங்கிச் சென்றார். ஓரளவான வெளிச்சத்தில் அவனை ஒருக்களித்துச் சாய்த்து வைத்தார். அவனது யுத்த
ஆடைகளை நீக்கினார். குடத்திலிருந்த குளிர் நீரை வார்த்து முகத்தைத் துடைத்து விட்டார். நெற்றியில் திருநீறு இட்டார். ஸ்லோகம் ஓதி ஊதினார். சற்றே விசிறினார்.. கப்டனின் கண்கள் ஆயாசத்தில் இறுக மூடியிருந்தன.
அவனது விழிகள் சொன்ன யுகாந்திரத் தொடர்பை அறிய காத்திருந்தார்.. நிச்சயமாக இவனை இதே போலொரு சூழலில் இதற்கு முன்னரும்
எங்கோ எப்போதோ சந்தித்திருக்கிறார்.. எங்கே.. எப்போது..?
இரண்டு நிமிடங்களில் கப்டன் அசைந்தான். கண்களைத் திறந்தான்.. ஓ..! இதே விழிகள்..
ஆச்சரியத்துடன் அர்ச்சகரைப் பார்த்தான்.. சற்றுத் தெம்படைந்தான். சூழலை உணர்ந்தான். முனகி எழ முயன்றான். சட்டென மறுபடி
அர்ச்சகரின் கால்களில் விழுந்தான். பற்றிப்
பிடித்தான்.
- கால்களை விடுங்கள்.. எழுந்திருங்கள் கப்டன் மக்மில்லன் ஹென்றி அவர்களே..!
என்ற அர்ச்சகர் சற்றே விலகி நின்றார்.
அவனது விழிகளைத் தெளிவாக நோக்கினார். ஆழமாக ஊடுருவிப் பார்த்தார். ஆனால்ää
- ந..நான்.. இதற்கு முன் தங்களைச் சந்தித்திருக்கிறேனா கோயில் தந்தையே..? திடீரென ஆங்கிலத்தில் கேட்டான் கப்டன்.
- அப்படி இல்லை.. ஆயினும் கப்டனை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது போலிருக்கிறது. அர்ச்சகரும் சுத்;தமான ஆங்கிலத்தில் விடையிறுத்ததும்ää கப்டன் மேலும் அதிர்ந்து போனான்.
- மதிப்பிற்குரியகோயில் தந்தையே.. தமிழ்க்கிளர்ச்சிப்படையினரிடமிருந்து காப்பாற்றி
எனக்கு உயிர்ப் பிச்சை தருவீர்களா.. இங்கிருந்து
நான் நலமாகத் தப்பிச் செல்ல உதவுவீர்களா..?
- என்னால் எப்படி முடியும் கப்டன்.. நான்.?
- அப்படிச் சொல்லாதீர்கள் தந்தையேää நீங்கள்தான் இப்போது என் கடவுள்.. முன்னர் ஒரு தடவையும் இந்த உதவியை?
- இன்னும் வெளியே சண்டை நடந்து கொண்டிருக்கிறது.. தற்செயலாக அவர்கள் இந்தப் பக்கம்
வந்தால்ää இதனைக் கண்டால்.. முதலில் என்னையல்லவா கொன்று விடுவார்கள்.. நானே நிச்சயமில்லாத
போது தங்களுக்கு உயிர்ப் பிச்சை தர முடியுமா..கப்டன்
மக்மில்லன் ஹென்றி அவர்களே..
கப்டன் மக்மில்லன் ஹென்றிக்கு தம்மிருவரதும் தற்காலிக உயிர் நிலை உறைத்தது. அர்ச்சகர் தானே வலிந்து தேடிக் கொண்ட விதியுடன்
செயலற்றிருந்தார். அடுத்;து என்ன செய்வதென்றே தெரிவில்லை. என்ன பேசுவதென்றும் புரியவில்லை. கப்டனின் கண்களை
சும்மா பார்த்துக் கொண்டிருந்தார்.. ஏதோ ஞாபகத்தில் இடறியது. பூஜைக்கு நேரம் தவறுகிறது.
மௌனம் இறைந்து கிடந்தது.
பூஜைக்கு ஒரு சனமும் வராது. வெளியே யுத்தம்
நடக்கிறது. இடையிடையே கோயிலின் வெளியே வாகனங்களின் சத்தம் உறுமி உறுமிக் கேட்டது. புரவிக்
குளம்பொலிகளும் இடையிடையே கேட்டன.தமிழ்க்குரல்களில் சில தெளிவற்ற கட்டளைகள் தூரத்தே
கேட்டன.. ம்;.. பண்டாரவன்னியன் படை வீரர்கள்.. பிரித்தானியர் முகாமிட்டடிருந்த ;நாக்சேர்ச்’ கோட்டை கிளர்ச்சியாளர்களிடம் விழுந்து விட்டமை சந்தேகமறப்
புரிந்து விட்டது. இனித் தப்புவதற்கு எவ்வித
வழியும் இருப்பதாகத் தெரியவில்லை. மாரியம்மனின் துணை தவிர.. அர்ச்சகர் சட்டென எழுந்தார்.
- கப்டன் மக்மில்லன் ஹென்றி ! இனி யோசிப்பதற்கேதுமில்லை. நான் இப்போதுää வெளியே கோயிலைப் பூட்டிக் கொண்டு கிராமத்துள் செல்லப் போகின்றேன். மாலையானதும்
திரும்பி வருகிறேன். கொஞ்ச உணவும் கொண்டு
வருகின்றேன். அதுவரைக்கும் இந்த மாரியம்மன் தங்கள் உயிரை வைத்திருந்தால் சரி.. நான்
வந்ததும்ää கொஞ்சம் இருட்டானதும் தாங்களாகவே
இங்கிருந்து வெளியேறி எங்காவது சென்று விடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
கப்டன் மக்மில்லன் ஹென்றி துரிதமாக எழுந்து அர்ச்சகரின் கைகளைப் பிடித்தான். கண்ணீர் குளமாகிக் கொப்பளித்தது.
- மிகவும் சரியான செயல். இந்த மகோன்னத உதவியை நா..ன் முன்னொரு தடவையும் பெற்றிருக்கிறேனோ என்று தோன்றுகிறது..
கோயில் தந்தையே..
ஆனால்ää படபடவெனக் கோயில் வெளிக்கதவு
தட்டப்பட்டது. பலவந்தமாக ஆட்டப்பட்டது. இருவரும் விதிர்விதிர்த்துப் போனார்கள்.. அடுத்தகணம்ää கப்டன் மக்மில்லன் ஹென்றி ஒரே பாய்ச்சலில்ää மூலஸ்தானத்திற்குள் பாய்ந்து புகுந்து மறைந்தான். தட்டப்பட்ட கதவுகள் பயங்கரமாக ஆடின. கலகலத்தன… அர்ச்சகர் துரிதமாக உட்கதவைப் பூட்டிவிட்டு ஓடி வந்து வெளிக்கதவுகளை நடுங்கும் கரங்களால் திறக்கää
ஆவேசமாகப் புகுந்தனர் பண்டாரவன்னியன் மன்னரின் தமிழ்க் கிளர்ச்சிப்படை வீரர்கள்.
தலைமைத் தோற்றத்தில் தெரிந்த குழுத் தலைவன்ää ஆச்சரியத்தோடும்ää ஆத்திரத்தோடும்ää அர்ச்சகரை ஊடுருவிப் பார்த்.......
அதன் பின்னர்ää
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தி எட்டாம் ஆண்டில்ää ஒருநாள்ää
1988.05.01.
....................த்தான். பச்சைக்கறுப்பு வரி இராணுவ உடையுடன் கம்பீரமாகவிருந்தான். கழுத்தில் சயனைட்
குப்பி தொங்கியது. தோளில் நவீன ரகத் துப்பாக்கி தொங்கியது. புலித்தலையும் குறுக்காக இரு துப்பாக்கிகளும் பதி;த்த தொப்பி அணிந்திருந்தான். ஐயருக்குச்
சந்தேகமேயில்லை. இவன் விடுதலைப் புலிகளின்
படையணிப் பொறுப்பாளன். ஐயரை நோக்கி நடந்து
வந்தான். அவநம்பிக்கையுடன் ஐயரைப் பார்த்தான். இவனையும் எங்கேயோ எப்போதோ கண்டிருப்பது போலுணர்ந்தார். இதே பகையுணர்ச்சிமிக்க விழிகளை எப்போதோ.. ஒரு யுகத்திற்கு முன்னரா..?
- ஐயரேää நாகச்சேரி இந்தியப் படை முகாமைக்
கலைச்சிட்டம். லெப்டினன்ட். பகதூர்நாத் மட்டும் தப்பிச்சிட்டான். வெளியேயெண்டால்ää ஆளைக் காணயில்ல.. கோயிலுக்கயும் ஒருக்காப் பாத்துடுவமென்று
வந்தனாங்கள்…
ஐயர் விதிர்விதிர்த்துப் போய் நாக்குழறிää
- இ..இஞ்சதான் வ..வந்தவரே..? எ..ப.. ஒருத்தரும் வரேல்லை.
நி..நீங்க பாக்கிறதெண்டால் பாருங்கோ தம்பிமார்..
சிரிக்க முயன்று தோற்றார். குடுமியையும்ää பூநூலையும் தேவையின்றி ஆட்டினார். படையணிப்
பொறுப்பாளன் ஒரு விநாடி யோசித்தான். விழிகளைச்
சுற்றிலும் சுழல விட்டான். மூலஸ்தானத்தை மட்டும்
விஷேஷமாக நோக்கினான். ஐயருக்கு நெஞ்சு காய்ந்து விட்டது. அதை நோக்கி நடந்தான்.
- ஆள் ஒழிய நல்ல இடமொண்டல்லே இது..?
நெருங்கி உள்ளே எட்டிப் பார்த்தான். சட்டென
ஐயரைத் திரும்பிப் பார்த்தான். அடிவயிறு குத்தீட்டி
போல வலித்தது. வியர்த்தது. நடுங்கியது.. சட்டெனத் திரும்பி வந்தான்.
- ஐயரேää என்றான். அவனது பூர்வஜன்ம விழியீர்ப்பு
விசையில் கட்டுண்ட ஐயருக்கு ஜன்மப் பகையுணர்வு பீறிட்டது.
- சரி.. போவமென்ன.. ஐயரே மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. நாங்க போட்டு வாறம்..
படையணிப் பொறுப்பாளன் விரைந்து வெளியே நடந்தான். விடுதலைப் புலி வீரர்கள் தொடர்ந்தனர். வெளியே ஜீப் கிளம்பியது. அனைவரும் போனமை உறுதியான பின் ஐயர் மறுபடி கதவுகளைப்
பூட்டினார். மூலஸ்தானத்தை நோக்கி ஓடினார்.
- மாரியம்மா.. மாரியம்மா..! என்றார். உள்ளே கருக்கிருட்டில் குனிந்து எட்டிப் பார்த்துää ;லெப்டினன்ட். பகதூர்நாத்’ என்று ரகஸியக் குரலில் கூப்பிட்டார். பச்சடித்த பல்லிபோல
உள்ளே ஒட்டிக் கொண்டிருந்த லெப்டினன்ட்.பகதூர்நாத் மெதுவாக
ஊர்ந்து வெளியே வந்தான். பயத்தினால்ää விழிகள் வெளுப்பேறியிருந்தன.
வியர்வையில குளித்திருந்தான் உயிர் அபாயத்தில் உயிர் அபயம் தேடிக் கெஞ்சிய அவனது விழிகளை நோக்கிய ஐயர் மறுபடி திடுக்கிட்டார். இன்னொரு யுகத்தின் தொடர் கதையா இதுää யார் இவன்..? ஓல்லாந்து வான்ஸ்டைமன்னா..? இங்கிலாந்து மக்மில்லன் ஹென்றியா..?
- அவர்கள் போய் விட்டார்களா குருஜீ..? ஹிந்தியில் நாக்குழறியபடி கேட்டான் லெப்.
பகதூர்நாத்.
- போய் மறுபடி வந்தாலும் வரலாம்.. சரளமான ஹிந்தியில் பதிலளித்த ஐயருக்கே தனது மொழி
வல்லமை ஆச்சரியமளித்தது. வெகு குழப்பத்துடன்
அவனைப் பார்;தார். லெப்டினன்ட். பகதூர்நாத்
தடுமாறி எழுந்து மறுபடி ஐயரின் கால்களில் விழுந்தான்.
- குரு ஜீ.. என்று கால்களைக் கட்டிப் பிடித்து உடல் குலுங்கினான். ஏதேதோ சொல்லி அரற்றினான்.
- ஐயோ மாரியம்மா தாயே.. என்ற ஐயர் சற்றே நகர்ந்து ää -எழுந்து நில்லுங்கள் லெப்டினன்ட். பகதூர்நாத்.! இதற்கு மேலும் நான் என்ன செய்யக்
கூடும்..?
-ஙா.. என் பெயர் எப்படித் தங்களுக்குத்
தெ..?
- ஏதோ அப்படித்தான் இருக்கும் என்று தோன்றியது..
- குருஜீ.. இருட்டானதும் நானே போய்க் கொள்கிறேன்.. ஆனால்ää குருஜீ.. இதற்கு மட்டும் விடை சொல்லி விட்டு;ப் போங்கள்.. குருஜீ.. தங்களை இதற்கு முன் நான் எப்போதோ எங்கேயோ சந்தித்திருக்கிறேனா..? நான் ஊர் பூனாகட் மாநிலம். வட
இந்தியா.. இந்தக் கோயில் கூட ஏதோ கனவில் போல கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது…
- தெரியாது. எனக்கும் அப்படித்தானிருக்கிறது.
எல்லாம் மாரியம்மனின் விளையாட்டு..
அவனுக்குள்ளும் ஏதோ ஒரு யுகாந்திர நினைவோட்டம்
ஓடுவதை உணர்ந்து கொண்ட ஐயர் வியப்புற்றார். எனினும் காலக்கனவுத் தொடரை ஞாபகிக்கத் தடுமாறினார். அவன் ஐயரை நிமிர்ந்து பார்த்துää
- குருஜீ நானென்ன கைம்மாறு செய்வேன்.. என்னுயிரைக் காப்பாற்றினீர்கள்.. ஒரு தந்தையைப்
போல…
- லெப்டினன்ட். பகதூர்நாத்.! இது நிச்சயமில்லை. அவர்களை குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.
இன்னும் நாம் பத்திரமாக இல்;லை.
- அப்படியானால் ..? என்னைக் காப்பாற்ற மாட்டீர்களா
குருஜீ..?
- நான் உங்களைக் காப்பாற்றி அனுப்பினேனா அல்லது இருவருமே கொல்லப்பட்டோமா என்பதில்ää எனக்கு வெகு சந்தேகமாக விருக்கிறது.. அது சரியாக ஞாபகத்தில்
வருகுதில்லை.. ம்..? தங்களுக்கு ஏதும் நினைவில் தோன்றுகிறதா
லெப்டினன்ட் அவர்களே..?
திடுக்கிட்டுப் போன லெப்டினன்ட் பகதுர்நாத்
- எ..என்ன கொ..கொல்லப்பட்டோமா.? நி..நீங்கள்
என்ன கூறுகிறீர்கள் குருஜீ அவர்களே..?
அவனால் சரியாக ஊகிக்கவோ ஞாபகத்தில் கொணரவோ முடியவில்லை. ஆனால் அறிய ஆவலுற்றான்.
இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென
ஐயருக்குள் ஏதோ ஒரு பீதியுணர்ச்சி ஏற்பட்டது.
யுகயுகாந்திரமாகத் தொடர்ந்த இந்தச் சம்பவம் இத்தோடும் முற்றுப் பெறாது என்று திட்டமாக மனதில் ஒரு ஞாபக
மின்னல் பளிச்சிட்டு மறைந்தது..
- ஐயோ மாரியம்மா தாயே..!
என்றவர் மிக ஆழமாக லெப்டினன்ட். பகதூர்நாத்தின்
விழிகளை உற்றுப் பார்த்தார்.. ஆனால்ää அவனது விழிகளில் அந்தப் பழைய ஈர்ப்பு இல்லை.
மாறாக பெரும் பீதியில் குத்திட்டு பின்புற
யன்னலை நோக்கிக் கொண்டிருந்தது. ஐயரும் அநிச்சையாகத்
திரும்பி யன்னலைப் பார்த்த போது..
இரத்தம் உறைந்து போனார். மார்பு படபடவென்று
துடித்தது. செய்தலறியாது விறைத்துப் போய்..
சாத்தப்படாத அந்த உயரச் சன்னலின் வழியே
......
‘பிஸ்டல்’ துப்பாக்கியை மிகச் சரியாக குறி பார்த்து நீட்டியபடிää நின்ற விடுதலைப்
புலிப் பொறுப்பாளனின் கூரிய இரு குத்தீட்டி
விழிகளும் இவர்களிருவரையும் அதே யுகயுகாந்திரப்
பகையுணர்ச்சியுடன் பார்த்............
இதன் பின்னர்ää
மீண்டும்
இரண்டாயித்து எண்பத்தி எட்டாம் ஆண்டில் ஒருநாள்ää
2088.05.01 ல் தொடரக் கூடும்..? ஈழநாதம். 1999.
தலைவர் வந்திருந்தார்
என்ன ஒரு அழகான மரம்.! கம்பீரமாக வானளாவும் பெருவிருட்சம். அடியில் குளுகுளு நிழல்.
தென்கிழக்கில் வேர்விட்டு நாடெங்கும் விழுதுகள் விட்டு அதற்காக செந்நீரும் கண்ணீரும் விட்டு வளர்த்த தரு அது. பத்து
இலட்சம் பறவைகள் தங்கலாம். இதமான காற்று. மேலே இலைகளின் ;தக்பீர்’ ஒலி சலசல சங்கீதமாய்... அடிமர
வேரில் படுத்திருந்தேன். தனி ஓராளாய் ஏகாந்த
நினைவுகளிலிருந்தேன். இவ்விருட்சத்தை நட்டு வைத்தவன் எதிர்காலத்தையும் ஊகித்து உணரக்
கூடியää மாபெரிய தலைவனாகத்தானிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். நித்திரை பாதி.. விழிப்பு பாதி.. திடீரென ஒரு நறுமணம் பரவியது. உடன் ஒரு குரல் உரத்து ஒலித்தது.
“போராளியே புறப்படு..!”
கம்பீரமான குரல்.. யாரது.? இந்த ஆண்மையும்ää உறுதியும் மிக்க வசீகரக் குரல்.. யாருக்குரியது..? அ..வரா..? த..தலைவரா..?
ச்சே..இருக்காதே.. அவரைத்தான் அரந்தலாவையில் வைத்து...? அப்படியானால்..?
“போராளியே..! விழித்தெழு..!!
என்னைப் பார்..!!!
பார்த்தேன்.. திடுக்கிட்டேன்.. அதே புன்னகை. அதேசமயம்ää ஆழமாக ஊடுருவும் அந்த விழிகளின் தீட்சண்யம்.. திடீரென
துணுக்குற்றெழுந்தேன். த.. தலைவரேதான்..
“த.. தலைவரா.. நீங்களா ஸேர்..? நீங்க ‘ஹெலி’யில..?” நாக்குழறிப் பயந்து போனேன்.
“தலைவர்கள் ஒரு போதும் மரணிப்பதில்லை என்பதை நான் உனக்குச்
சொல்லித் தரவில்லையா..?” சந்தேகமேயி;ல்லை தலைவரேதான்..
“நீங்க சொல்லித் தந்தது ப்ப ஒண்டும் நடக்கல்லையே ஸேர்..” என்றேன் ஒருவாறு தைரியத்தை வரவழைத்தவனாக.
“நடத்தாமல் விட்டதற்கு நான் பொறுப்பல்ல.. சரி.. நமது அருமைப்
போராளிகள் அனைவரும் நலமா..?” தலைவரின் கேள்வி புரியவில்லை..
விடுதலைப் போராளிகளையா கேட்கிறார்..?
“என்னது..? ஆரு..? போராளிகளா..ஆரு ஸேர் அது..?” திடுக்கிட்டுப் போய்க் கேட்டேன்..
“ப்ளடி பூல்..!
ஆயிரமாயிரம் விளக்குடன் ஆதவன் போல் எழுந்து அணிவகுத்த அந்தப் போராளிகள்..? ஒரு மரத்தைக் கொண்டுää கர்ச்சிக்கும் சிங்கத்தையும்ää சீறும் புலியையும்ää மேலும் பல இனவாத வல்லூறுகளையும் விரட்டிக்
காட்டிய உம்மத்துகள்..? கட்சிக்காக மார்பு திறந்து காட்டித்
துப்பாக்கிக் குண்டுகள் வாங்கிய என் கண்ணியத்துக்குரிய
வீரப் பேராளிகள்..? ஆயிரமாயிரம் விழுதுகளுடன் நமது மரத்தை கண்ணீரால் காத்து செந்நீர் ஊற்றி வளர்த்த
அந்தப் போராளிகளைக் கேட்கிறேன்..” தலைவரின் விழிகளில் நீர்.
“நீங்க சொன்ன ஆட்கள எனக்குத் தெரியாது ஸேர்.. முந்தி அப்பிடிக்
கொஞ்சப் பேரு இருந்தாப் போல ஞாபகம்.. ஆனா ப்ப இருக்கிற அடிமட்டப் பேராளிகள் ஹர்த்தாலுக்கு
ரோட்டுல டயர் பத்த வைக்கிறாங்க.. வாகனங்கள்ள கண்ணாடிய நொறுக்கிறாங்க.. நடுமட்டப் போராளிகள் சுருட்டின வரைக்கும் லாபமெண்டு
சுருண்டு படுக்கிறாங்க.. உயர்பீடப் பேராளிகள்
சங்கீதக் கதிரையைச் சுத்திச்சுத்தி போராட்டம் நடத்துறாங்க..எல்லாப் போராளிகளும் மொத்தத்துல கடுமையாப் போராடிக் கொண்டு’தான்; இருக்கிறாங்க ஸேர்.”
உண்மைகளை தலைவரிடம் சொல்லாமல் யாரிடம் சொல்ல..? என் வார்;த்தைகளில் அதிர்ந்து போன தலைவரின் கண்களில் தீப்பொறி பறந்தது.
“ப்ளடி ஷிட்.! என்ன சொல்கிறாய் நீ.?” இடிந்து போன தலைவர் அப்படியே மரத்தினடியில் உட்கார்ந்து விட்டார். சற்றே கண்களை
மூடினார்..
“உள்ளதச்சொன்னன்..
வேறென்ன சேர் கேக்கனும்;..? எனக்கும் நித்திர வருது..” என்றேன் கொட்டாவி விட்டபடி.. துணுக்குற்ற தலைவர் விரைவாகத்
துள்ளி எழுந்தார்.. தன் கூர்மையான விழிகளால்
என்னைத் துளைத்து விடுவதைப் போன்று பார்த்தார்..
முகம் கோபத்தில் சிவந்து போயிருந்தது..
“எனது வருகைக்காக இரவிரவாக கண்விழித்துக் காத்திருந்த போராளியா
நீ....? ச்சீ..! நமது கட்சியாவது கட்டுக் கோப்பாக இருக்கிறதல்லவா..?” என்ன ஒரு நப்பாசைதான் தலைவருக்கு..
“எந்தக் கட்சியக் கேக்கறீங்க ஸேர்..?” புரியாமல் கேட்டேன்.. தலைவர் மறுபடி தீப்பொறிப்
பார்வையுடன் என்னை எரித்தார்.
“அடி முட்டாள்..!
நமக்கென்று இருப்பது ஒரு கட்சிதானே.. சிறீலங்கா முஸ்லிம் கோங்க்ரஸ்..?”
“என்ன ஸேர்.. முஸ்லிம் காங்கிரஸா.?
அது அந்தக் காலம்..
நீங்க இருந்து ஆண்ட காலம்.”
“அப்படியானால் நமது கட்சி..? அதையும் கலைத்து விட்டீர்களா..?” தலைவர் தன் இதயத்தைப் பொத்தியபடியே
கேட்டார்.. எனது பதிலை எதிர்பார்த்து தயார்
நிலையானார்.. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பாவம்..! வேதனைப்படுவார் என்று சற்று மெல்லிய குரலில் முணுமுணுத்தேன்..
“கலைத்து விடல்ல சேர்..! நாங்களாகவே கலைஞ்சி விட்டோம்.”
“என்ன சொல்கிறாய்..?” தலைவர் விசயம் புரியாதவராக நிமிர்ந்தார். குழப்பத்துடன் பார்த்தார்.
“இப்ப நவீன காலம் ஸேர்.. பத்து லெச்சம் முஸிலிம்களுக்கு
ஒரு கட்சி காணுமா ஸேர்..? அதான் ப்ப நாங்களே பிரிச்சிட்டம்.. ப்ப
போராளிகள் எண்டு ஒரு ஆளும் ல்ல ஸேர்.... எல்லோரும் தலைவர்தான்.. ;எல்லோரும் இந்நாட்டு மன்னர்’தாம்..”
“என்ன..? அப்படியானால் நமது பலம் மிக்க முஸ்லிம் கோங்ரஸ்..?”
“நம்மட பலம் மிக்க முஸ்லிம் காங்கிரஸா..? அது பழைய காலம்.. இப்பல்லாம்
பணபலமிக்க தனித்தனி காங்கிரஸ்தான்.. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.. வடக்கு கிழக்கு
முஸ்லிம் காங்கிரஸ்.. தேசிய முஸ்லிம் காங்கிரஸ்.. அஸ்ரப் காங்கிரஸ்.. அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரஸ்.. சிங்கள முஸ்லிம் காங்கிரஸ்.. தமிழ்முஸ்லிம் காங்கிரஸ்.. உலமா காங்கிரஸ்..
கிழவர்கள் முஸ்லிம் காங்கிரஸ்.. ஐதேக சார்புக் காங்கிரஸ்.. பீஏ சார்புக் காங்கிரஸ்.. தூய காங்கிரஸ்.. முஸ்லிம்
கூட்டமைப்பு.. முஸிலிம் தேசியவாதிகள் இயக்கம்..
முஸ்லிம் தேசக் கட்சிää தேசிய ஐக்கிய முன்னணி.. ஐக்கிய
தேசிய முன்னணி.. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி.. இதெல்லாம் போதாதென்றுää உம்மாää சும்மாää துஆää நுஆää குவாää அவா....” என்னுடைய கட்சிப்பட்டியலைக்
கேட்ட தலைவர் துள்ளிக் குதித்தெழுந்துää
“ஊ..ஆ..” என வீரிட்டலறினார்.
“என்ன ஸேர்.. கடியன் கிடியன் கடிச்சிட்டா..? இப்ப இந்த மரத்துல சீவராசிகள் கூடிட்டுகள் ஸேர்..”
பட்ட மரத்தின் பக்கமாக ஊர்ந்து கொண்டிருந்தää விஷ நாகங்களையும்ää வேரடி மண்ணில் துளைத்தெழும் எறும்புகளையும்ää வேரில் அரிக்கும்ää புழுக்களையும்ää பட்டைகளில் வளரும் கறையான் புற்றினையும்ää கிளைக்குக் கிளை தாவும் குரங்குகளையும்ää உச்சாணிக் கொம்பிலிருக்கும் வல்லூறுகளையும்ää சுற்றிச் சாற்றினைப் பிழிந்து கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளையும் சுட்டிக் காட்டினேன்..
“அதில்ல நீ இப்போது சொன்ன பெயர்களெல்லாம்; என்ன..?”
“கட்சிகள் ஸேர்.. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்..!” என்னப்பா இந்த ஆள்..? தலைவராக எப்படித்தான் இருந்தாரோ.. இது கூடத் தெரியாமல்.. என்று மனதுக்குள் நினைத்துக்
கொண்டே சொன்னேன். ஆயினும் விடாமல் பிடிவாதமாய்க்
கேட்டார்.
“அப்படியானால் கட்டுக்கோப்பான நமது ஒரே கட்சி.. எங்கே..?” தலைவரைப் பார்க்கவே பரிதாபமாகவிருந்தது.
“கட்டிக் கோப்புக்குள் பத்திரமாய் வெச்சிருக்கம் ஸேர்..” இந்த மனுசன் விடமாட்டார் போலிருக்கிறதே..
“அட.. மட்டயா.. மடயா..! கட்சியையே சிதறடித்து விட்டீர்களாடா..?” தள்ளாடிப் போன தலைவரைத் தாங்கிப் பிடிக்க முயன்ற போதுää அருவெறுப்புடன் என்னை விட்டும் விலகிச் சுதாகரித்த தலைவர்ää மறுபடியும்ää
“இதனைச் சிதறடித்தவர்கள் யார்..? சொல்.!” ஆத்திரத்தால் கத்தினார்.
“ஐயோ.. ரொம்பச் சூடாகாதீங்க ஸேர்..! அதுகளச் சொல்லப் போனா பொழுது விடியும்..”
அப்புறம் விடிகாலையில் நான் தலைவருடன்
பேசிக் கொண்டிருப்பதைக் கண்டுää நமது பெருமதிப்புக்குரிய ஊடகவியலாளர்கள்
யாரும் போய் பத்திரிகைகளில்ää எனது பெயரையும் படத்தையும்ää பின்னணியில் தலைவரின் கபன்துணிப் படத்தையும் போட்டுää ;‘லங்கா முஸ்லிம் தலைவர் ஆவிக் காங்கிரஸ்’ ஆரம்பம்! என்று செய்திபரப்பி விட்டால்.? ஆகவேää இந்தக் கேள்விக்குப் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தேன்..
நெடுநேரம் என் பதிலுக்காகக் காத்திருந்து ஏமாந்து போன தலைவர்ää சற்று இறங்கி வந்துää
“தம்பி..! வாப்பா..!
இக்கட்சிகளை ஆரம்பித்தவர்களையாவது சொல்லேன்..
ப்ளீஸ்..?” என்று என்னைத் தந்திரமாக மடக்கப் பார்த்தார்.. நானா ஏமாறுவேன்..? அந்தப் பெரிய பிரேம மன்னரையும்ää சந்திரியம்மையையும் மடக்கிய மாதிரி நினைத்து விட்டாh என்ன..? பொதுவாகச் சொன்னேன்..
“கட்சி ஆரம்பிக்கிற என்ன பெரிய சீன வித்தையா ஸேர்.. நீங்க
ஆரம்பிச்சாப் போலää ரோட்டுரோட்டா மழைக்க வெயிலுக்க
அலைஞ்சி திரிஞ்சிää துவக்கு வெடிக்குத் தப்பிää காசி இல்லாம.. வாகனம் இல்லாம குடும்பத்தை இழந்துää குடியிருந்த வீட்ட இழந்து.. சட்டநுணுக்கம் பார்த்துää தற்றுணிவை வளர்த்துää மலைகளுடன் மோதி.. மலர்மாலைகள்
வாங்கி.. அதெல்லாம் உங்கட காலம் ஸேர்! இப்ப றோட்டளக்கிற பொடியனுகள் விளையாட்டுக் கழகம்
ஆரம்பிக்கிறத்துக்குப் பதிலா நேரடியா கட்சியே
ஆரம்பிக்கிறாங்க.. ;சிம்பிள்’..வேல.. தவிரவும்ää விளையாட்டுக்கழகமும் கட்சியும் ரெண்டும் ஒண்டுதானே ஸேர்.? எல்லாருமேää கட்சித் தலைவராகனும்
ண்டால்ää என்ன செய்ற..?”
“என்ன விநோதம் இது..? அப்படியானால்ää ஒட்டு மொத்த முஸ்லிம் வாக்குகளையும்
ஒரே சின்னத்தின் கீழ் பெற்று ஆட்சியைத் தீர்மானிக்கிற தனிப்பெரும் முஸ்லிம் காங்கிரஸ் எது.. யார்..?” சரிதான்..! தலைவர் விடவே மாட்டார். இனி நாமும்
சற்றுச் சூடாகப் பதில் சொல்லத்தான் வேண்டும்.
“ஐயொ..! கதய நிப்பாட்டுங்க
ஸேர்.. ஆட்சியைத் தீர்மானிக்கிறதா.? ப்ப அப்பிடி ல்லை ஸேர்.. ஆட்சியில இருக்கிறவருதான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் ஆருண்டு தீர்மானிக்கிற..
விளங்குதா ஸேர்.. இதெல்லாம் அரசியல்ல நீங்களே படிக்காத பாடங்கள்.. விளங்குதா ஸேர்..?”
“என்னவோ உளறுகிறாய்.. ஒன்றும் புரியவில்லை எனக்கு.. ஏதோ
பிழையாகி விட்டது..” என்ற தலைவர் ஒன்றும் புரியாமல்ää சற்று நேரம் மௌனமாக இருந்தார்.. முகத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் தெரிந்தன.. இதற்கெல்லாம்
பதில் சொல்லி மாளாது.. நான் தூங்;குவதற்கு ஆயத்தப்படுத்தினேன்.
மரத்தினடியில்ää ஒரு ஒதுக்கிடம் தேடினேன். எங்கே கால் வைக்க.. எங்கே தலை வைக்க..? என் பிரச்சினை புரியாத தலைவர்ää சற்றே கனைத்தார். என் கவனத்தை ஈர்த்தார்.. கெஞ்சலாக என்னைப் பார்த்தார். ஏதோ கேள்வியா
மறுபடியும்..? சுருதி குறைந்த குரலில்ää மெதுவாகக் கேட்டார்..
“சரி..சரி.. நமக்கு இப்போது எத்தனை உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்
இருக்கிறார்கள்.. அதையாவது குழப்பாமல் சொல்லேன்..”
இந்த ஆள் விட மாட்டார். ஆனால்ää கேள்வியே பிழையாயிற்றே.. எதற்கும் இதற்காவது சரியாகப் பதில் சொல்லாவிட்டால்ää பாவம் மனிதர் இடிந்து போய் விடுவார்.. எனவேää நான் விரல்களை மடித்து எண்ண ஆரம்பித்தேன். இதைக் கண்ட தலைவர் மறுபடியும்ää கோபமுற்று
“முட்டாளே.. என்ன இது.. இது கூடத் தெரியாதா.. ?” என்று பாய்ந்தார்.
“என்ன ஸேர்.. எப்படி ‘கரெக்டா’ச் சொல்ற..?
நான் சாதாரண வாக்காளன். நீங்க பெரிய தலைவரு. லோயரு.. சரி.. ஏலுமென்டால்ää நீங்களே எண்ணிப் பாருங்களேன்.. காங்கிரஸ{க்கு என்று மொத்தம் ஏழு பேரு.. அதுல ஐதேக சின்னத்துல காங்கிரஸ் கட்சிக்காரர் மூணு
பேர். இதக் கூட்டுங்க.. பத்து. காங்கிரஸ் சின்னத்துல
ஐதேக ரெண்டு பேர் இருக்கிறாங்க... அதக் கழிங்க..
நம்மட உறுப்பினரா இருந்து பொதுமுன்னணிக்குப் போனது ரெண்டு.. கழிங்க.. ஐதேக தேசியப்பட்டியல்ல
இருந்து நம்மட உறுப்பினரா வந்த ஒண்டு.. கூட்டுங்க.. நம்மட ஒரு ஆளை அவங்கட ‘லிஸ்ட்டு’ல போட்டது.. அதயும் கூட்டுங்க.. காங்கிரஸில
வெண்டும் வழக்கில தோத்து காங்கிரஸாக இல்லாதது ஒரு ஆள்.. கழிங்க.. வழக்கில வெண்டு காங்கிரஸ விட்டு மாற்றுக்குழுவில
மூண்டு.. கழிங்க.. ல்ல .. கூட்டுங்க..ச்சே..கழிங்க..”
“ச்சே மடையா.. முட்டாளே. என்ன இதெல்லாம்..ää?” தலைவர் ஆவேசமாக எழுந்தார். தனது புறங்கையால் எனக்கு ஓங்கி அறைந்தார். எனது கைகளைப்
பிடித்துää விரல்களை முறித்துவிடுவதைப்
போல நெரித்தார்.
“ச்சீ.. முட்டாளே.! என்ன கணக்கு இது..? இதெல்லாம் எப்படிச் சாத்தியம்..? நமக்கென்றொரு கட்சி யாப்பு இருக்கிறதல்லவா..?”
தன்னுடைய ஆற்றல்மிக்க மூளையை உருக்கி வார்த்த வார்த்தைகளைக் கேட்கிறார். ஓ..யாப்பு..!
கட்சி யாப்பு.. அதையா கேட்கிறார்..அதன் கதையைச் சொல்லப் போனால் என்ன செய்வாரோ..? சரி.. யாப்பையா கேட்டார்..?
“யாப்பா..? எந்த யாப்பக் கேட்கறீங்க..ஸேர்.? பழைய பாப்பா..? புது யாப்பா..? மகிந்த யாப்பா திருத்தின யாப்பா.?
உயர் பீடத்துல திருத்தின யாப்பா..? இல்ல உயர் மாடியில வெச்சு தத்தமக்கு
வாய்ப்பா திருத்தின யாப்பா..? ல்லää ‘லோயர்’ விஜித யாப்பா திருத்தித் தந்த யாப்பா..?” எனது கேள்விகளால் வாயடைத்துப்
போன தலைவர் மறுபடியும் மெனமானார். இனியும் ஏதாவது கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளாமலிருக்க
முயல்கிறாரோ.. பாவமாக இருந்தது.. எப்பேர்ப்பட்ட
இரும்பு மனிதர்.. கூனிக் குறுகிப் போய் உட்கார்ந்திருந்தார்.. என்னவோ முணுமுணுத்தார்..
“வாட் நொன்ஸன்ஸ்..!
எக்கேடாவது கெட்டுப் போங்கள்..” என்று சொன்னது போலிருந்தது..
நானும் கொஞ்ச நேரம் சாயலாம் என நினைத்து உட்கார்ந்தேன். தலைவர் உடனே எழுந்து விட்டார்.
இறுதித் தீர்மானத்துக்கு வந்தது போல முகம் பாவனை காட்டியது. என்னைப் புன்னகையுடன் பார்த்தார்..
அப்பாடா.! மெதுவாக என்னருகே வந்தார். அன்போடு
என்னை அணைத்துக் கொண்டார்.. என் காதருகே தனது சிவந்த உதடுகளை வைத்தார்.
“என்னுடைய தங்கக் கிளியே..! இறுதியாக இதைமட்டுமாவது வெட்டொன்றாய் துண்டு ரெண்டாய்ச்
சொல்வாயா ராசா..? இ;ப்ப ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு யார் தேசியத்தலைவர்..? நேராகப் பதில் சொல்.. நான் போய் விடுகிறேன்..”
என்ன கேள்வி இது..? தேசியத் தலைவரா..? இதற்கு நேரான பதிலா..? என் கனவுக்கண்ணெதிரே கொழும்பு உயர்நீதிமன்றக் கட்டிடம்
தெரிந்து மறைந்தது. என்ன சொல்ல.. எப்படிச் சொல்ல..? ஏதோ சொல்லத்தானே வேண்டும்..?
“அதூ..வந்தூஊ..
நிச்சயமா எப்பிடி ஸேர் சொல்ற..? தேசத் தலைவர்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ{க்கும் தேசியத் தலைவர்களாக இருந்தாங்க.. கொஞ்ச நாள் சந்திரிக்காவும்.. பிறகு ரணிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரா இருந்தாங்க.. இப்ப வழக்குப் போட்டு இருக்கு.. ;கோட்’தான் அதத் தீர்மானிக்கும்..
எந்த நேரத்திலும் யாரும் தலைவராகி விடும் அபாயம் இருக்குது ஸேர்.. நொட்சுவர்..”
“என்னது தலைமைத்துவத்த்pற்கே வழக்கா.?” மறுபடியும் ஆவேசப்பட ஆரம்பித்தார்
தலைவர்
“வழக்கே தலைமைத்துவத்திற்குத்தான் ஸேர்.” என்றேன் பட்டவர்த்தனமாக..
“மடையா.. எல்லா ஊர்களிலும் ;மஜ்லிஸ் ஸ{றா’ வைத்திருந்தேனே.. எல்லா ஊர்களிலும் இருந்த என்னுடைய
ஆட்கள் எல்லாம் எங்கே..?”
“எல்லோரும்தான் இருக்கிறாங்க.. உங்கட நினைவு நாள் வந்தா ஒவ்வொரு இறைச்சிக்கடையிலயும்
உங்கள சந்துசந்தா அரிஞ்சி அரிஞ்சி அறுத்து விக்கிறாங்க.. நல்லா பிஸினஸ் செய்றாங்க..
வாக்குகள் பொறுக்கிக் கொடுத்து உண்டியல் நிரப்புறாங்க..
போதுமா ? வீணா என் வாயைக் கிண்டாதீங்க ஸேர்..”
“யா ரஹ்மானே! இதெல்லாம்
என்ன..? எல்லாம் உடைந்தே விட்டதா..? கருத்து பேதமென்னும் கறையான் வந்துங்கள்
ஒற்றுமையைச் சீரழிக்கும் புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.. பொறுமையைக் கைக்கொள்ளுங்கள் என்று பாடிப் பாடிச் சொன்னேனே..?” குரல் உடைந்து போய் அழுகுரலில் பாடினார் தலைவர்..
“பாடி வெச்சிட்டு உங்கட பாட்டுக்கு நீங்க போய்ட்டீங்க..
நாங்க படுற பாட்ட இப்ப நாங்க பாடுறம்.. புது
இசையில.. புதுப்புது தாளத்துல.. இப்ப உள்ள அரசியல் தாளத்துக்கு ஏற்ற பாட்டு இது.. கேட்கறீங்களா..? ரெண்டு வரி பாடிக்காட்டவா.?”
“வேண்டாம்..வேண்டாம்..! இந்தச் சீரழிவெல்லாம் உடனேயே ஏற்பட்டதா..?”
“ஆமாம்.! உடனேயே..!
அதுவும் நீங்கதானே பாடினீங்க.. ;விக்கி அழுது வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்.. தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுதுவிட்டு அடக்குங்கள்..’ என்று நீங்க பாடல்லையா..? வரி பிசகாம அப்பிடியே செஞ்சம்.. தொழுது
விட்டு அடக்க ஆரம்பிச்சம்... வீணாக நேரத்தை ஒட்டவி;ல்லை நாங்கள்.. விரைவாகத் திரும்பி வந்து கட்சித் தலைமையகத்தைக்; கைப்பற்ற எங்கட ஆட்களை ஏவி.. மற்றவரை அடக்க ஆரம்பித்தோம்.. ஒரு இரவிலேயே சாந்தி
இல்லத்தை சமர்க்களமாக ஆக்கினோம்..’’
“ஐயயையையோ..”
தலைவரின் அலறல் சத்தத்தில் பெரு விருட்சத்தில் மீதியாயிருந்த பறவைகளும் கிறீச்சிட்டுப் பறந்தன..
திடீரென தலைவர் மறைந்து விட்டார்.. அத்துடன் நறுமணமும் மறைந்தது. நான் அண்ணார்ந்து
பார்த்தேன். மரத்தில் ஒட்டியிருந்த விஷப்பிராணிகளால் கொத்திக் குதறப்பட்ட என் முஸ்லிம்
உடம்பு மரத்தின் உச்சியில் நிர்வாணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.நியதி 2005 பெப்ரவரி ஃ மறுபிரசுரம்:- மீள்பார்வை. 2005.
நல்லதொரு துரோகம்
நல்லதொரு துரோகம்
மாஞ்சோலைக் கிராமத்தில்ää புதிதாக அமைக்கப்பட்டிருந்தது ஒரு பொலிஸ் காவலரண். அதிகம் பேரில்லை. ஒன்பது பொலிசாரும்ää நான்கு ஊர்காவற்படையினரும்தான்
அங்கு கடமை. அதற்குப் பொறுப்பாளராக இருந்;தார் நிஸ்ஸங்க என அழைக்கப்படுகிற நந்தமித்ர
முதியன்சலாகே நிஸ்ஸங்க பண்டார. மனிதர் தோள்களி;ல் இரண்டு நட்சத்திர அந்தஸ்துகளைச் சுமந்திருந்தாலும்ää ஆட்சி மாற்றத்தில் பதவியிறக்கப்பட்டு
இங்கு வந்து பாரமெடுக்க வேண்டியிருந்தது.
நிஸ்ஸங்க தனது பகுதியினரை மிகவும் சுதந்திரமாக இயங்க விட்டிருந்தார். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதி என்பதால்ää இயக்க அச்சுறுத்தல் மிகக் குறைவாக
இருந்தது ஒரு காரணம். மற்றது ஜன்ம அரச விரோதம்.
நிஸ்ஸங்கவிடம் ஒரு வழக்கமிருந்தது. ஒவ்வொரு பின்நேரமும்ää தனது மோபைக்கில்ää கிராமத்தைச் சுற்றி ஒரு உலா.
பின்னிருக்கையில்ää அவரது எஸ்எல்ஆர் துப்பாக்கியை ஏந்தியபடி ஊர்காவற்படைவீரன் அய்யுப் கம்பீரமாகக்
காட்சியளிப்பான். எஸ்எல்ஆர் துப்பாக்கியை தொட்டுப் பார்ப்பதிலேயே பேரின்பம் அடைகிற
அய்யுபுக்கு இந்த வழக்கம் பேரானந்தமாக இருந்ததில்
வியப்பில்லை.
அய்யுபை நிஸ்ஸங்க நம்பிய அளவுக்கு மற்றச் சிங்களப் பொலிசாரை நம்பவில்லை. அய்யுபிடம்
எஜமான விசுவாசம் மிக அதிகம். இதில் இன்னுமொரு வேடிக்கை என்னவென்றால்ää பாமரனான அய்யுபிடம் இருந்த துப்பாக்கி
பற்றிய அறிவுதான். எஸ்எல்ஆர் துப்பாக்கியை தனி இருட்டில் வைத்துக் கழற்றிப் பின் கச்சிதமாக
மறுபடி பூட்டித் தருவான். மூன்று செக்கன்களில் உயிரை வாங்கும் கிரேனைட்டின் ஆழியைக்
கழற்றி வலதுகைப் பெருவிரலால் அழுத்தி பத்து நிமிடங்கள் வைத்திருப்பான். நிஸ்ஸங்கவும் அய்யுபும் உரையாடுவதைக் கேட்பதே ஒரு
விநோதமான அனுபவம். தமிழும்ää சிங்களமும் ஆளாளுக்குக் கொஞ்சம் தெரியும். எனவே உரையாடல்களில் தடங்கல் இருந்ததில்லை. நிஸ்ஸங்க அய்யுபை தனது எஸ்எல்ஆர் துப்பாக்கியாலேயே
கட்டிப் போட்டிருந்தார். அய்யுப் வைத்திருக்கும் ஒற்றைக்குழாய் சொட்கண் துப்பாக்கி
மிகவும் அதரப் பழசானது. அதை அவன் கணக்கிலும் எடுப்பதில்லை. எஸ்எல்ஆரினால்ää போரிட்டு அதனால்ää செத்தாலும் பரவாயில்லை…. சரளமரளமாகச் சுட்டுப் பார்க்கவேண்டும். சில மாலைப் பொழுதுகளில்ää நிஸ்ஸங்க கேட்பார்ää
- அய்ப்! மேக்க மொனவத..? என்ன..இது.?
- அது சேர்ää எஸ்எல்ஆர்ர போஸைற் பிளேட். ஸேர்!.
- மேக்க கொஹேத பிக்ஸ் கெரளாத் தியன்னே..?
- அது ஹேன்ட் சிலிப்புக்குப் பக்கத்துல.. ஸேர்.!
- ஹரி..! இது..? என்னடா..? கியபாங்.!
- அது பட் பிளேட்டின் அடிப்பக்க ஹோர்ன். பொருத்தும் போதுää கொஞ்சம் தட்டிவிட்டுப் பொருத்தினா
பிறகு பிரச்சினை தராது.. ஹரித ஸேர்..?
- ஓவ்.. ஹொந்தய்.
- ஸேர்.. எனக்கு ஒருக்காச் சுடத் தருவீங்களா ஸேர்..?
- மோடயா.. மோடயா..
- இது பயரிங் பண்ண ஹரி ஆஸாவ ஸேர் மட்ட.
- ஙாஹா.. அடோää அய்யுப்.. கொட்டி வாரது. நான் தாரது. எத்தக்கொட்ட நீ வெடிவக்கிறது.. ஹரித.?
- ம்.. ஸேர்.
எஸ்எல்ஆரினால்ää சுட்டுப் பார்க்கவாவது ஒரு தாக்குதல் சம்பவம் நடக்காதா என்ற ஏக்கம் அய்யுபுக்கு. விபரீதம் அறியாத விருப்பு..
()
மரப்பலகையால்ää உறுதியுடன் அமைக்கப்பட்டிருந்த தனது அறைக்குள் தனது சீருடையைக் களைந்து கொண்டிருந்தார்
நிஸ்ஸங்க. அய்யுப் அவரது கட்டிலிலிருந்தான்.
எஸ்எல்ஆர் துண்டுதுண்டாகக் கழற்றப்பட்டுக் கிடந்தது. அய்யுப் அவற்றை ஒரு பூனைக் குட்டியின் இலாவகத்தோடு
தொட்டுத் தொட்டு துடைத்து மெருகேற்றிக் கொண்டிருந்தான்.
- அடோ அய்யுப். மம குளிச்சிட்டு வாரது..
தென்னம ரவுண்ட போறது. இண்டைக்கு மகே பேர்த்டே.. உம்பட்ட மம பாட்டி எக்க தாறது..
- ஹரி ஸேர்.. குளிச்சிட்டு வாங்க.. நான் இதைப் பூட்டி வக்கிறன்..
- அடோ.. புல்லட்ஸ்...
- ஹரி..ஹரி..ஸேர். கவனமாயிரிப்பன்.. புல்லட்ஸை
போடாம வெச்சிருப்பன் ஸேர்..
நிஸ்ஸங்க துவாயுடன் குளிக்கப் போனார். அய்யுப் முதலில் எயார் கூளிங் ஹோலைக் கவனமுடன்
துப்பரவு செய்து முடித்தான். அதை கவனமுடன்
பரல்லுடன் பூட்டினான். பின் மெகஸின் கேஜைத் தளர்த்தி மெகஸின் ஹவுஸ{க்குள் நுழைத்தான். கச்சிதமாகப் பொருந்தி
;க்ள்ளப்;’ என்றது. அப்படியே நிமிர்த்தி இரு தொடைகளுக்கும் நடுவில்
வைத்து இறுக்கிப் பிடித்து ஹெண்டுலை பலமாக ஒருதரம் இழுத்தான். பின் போஸைட் பிளேட்டை உயர்த்தி சு இல்ää சேப்ரிகார்ட்டை வைத்தான். இப்போது எஸ்எல்ஆர் சுடுதற்குத் தயார்.
ஆச்சரிய ரஸ்ய நிபுணத்துவம். அய்யுபுக்கு முகம் முழுக்கப் பெருமிதம் துப்பாக்கியை எடுத்து முழங்காலில் நின்று கொண்டு
போஸைட் பிளேட்டின் ஊடாகப் போஸைற் டிப்பைப் பார்த்தான். சட்டென நிஸ்ஸங்க வந்து நின்றபோதுää துப்பாக்கியின் மசல் முனை அவரது
மார்பைச் சரியாகக் குறி பார்த்தது. நிஸ்ஸங்க
வெலவெலத்துப் போனார்.
- மோடயா..ஹ{த்தோ.. மொகத்த மேக்க..?
- ஹி..ஹி.. சும்மா குறி பாத்தன் ஸேர்.. நிக்கங்..நிக்கங்..
- மோடயோ வெப்பன் எண்ட் வைப் பாடங் தெரியாது..?
- தெரியிம் ஸேர்.. ஆய்தமும் பொண்டாட்டியும்
ஒண்டு. ரெண்டயிம் வேறாள்க்கிட்ட கைமாறக் கூடாது. அது துரொகய.. ஏக்க
ஹஹரி மோட வெட ஸேர்.
- ஹொந்தய்.. பளயாங்.. மோபைக் கொண்டு வாரது..
அய்யுப் துப்பாக்கியை எடுத்துää அதன்ää கெச்சிங் ஹெண்டிலை பலமாக மூன்று தரம் இழுத்தான். மெகஸின் கேஜை அழுத்தியதும்ää மெகசின் பெட்டி இலேசாக வந்தது.
அப்படியே கட்டிலில் வைத்தான். பின் வெளியே வந்தான். நிஸ்ஸங்கவின் மோபைக்கை எடுத்தான். பெற்றோல் டாங்க்கைத் திறந்து பார்த்தான். தள்ளிக் கொண்டு வந்து காவலரண் வாசலில் வைத்தான். காவலரணில்ää கடமையிலிருந்த கான்ஸ்டபிள்கள்
பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும் இவனை மிக எரிச்சலுடன் பார்த்தார்கள். விளங்கக் கஸ்டமான நாட்டுச் சிங்களத்தில்ää பொடிமஹத்தயா இவனிடம்ää
- அடோ அய்யுப்..! கோழிக்கள்ளன் நிஸங்கவக்
கூட்டிப் போய் தங்கச்சிய கூட்டிக் குடுடா..
அய்யுபுக்கு அந்தச் சிங்களம் விளங்காவிட்டாலும் பக்கத்திலிருந்த ஜயந்த சிரித்த
சிரிப்பில் இது விளங்கியது. ஜயந்தவும்ää தன் பங்குக்கு நாக்கினால்ää இதை விளங்கப்படுத்தி தூஸணம் காட்டிää குக்குளா..குக்குளா.. என்று சொல்லிவிட்டுää கோழிக்கு தம்பிலா பொடிகாட்;.. தம்பிலாக்கு கோழி பொடிகாட்.. என்று கூறää இருவரும் சத்தமிட்டுச் சிரித்தனர்.ää உடன்
அய்யுப் கோபமுற்றுää தனது நாட்டுத்தமிழில்ää சத்தமாகää
-சீனாப்பூனா மக்களே.. புலிப்பட வந்தா குசுப்பறக்க அம்மாமாருட்ட ஓடுவீங்க. ஏலாத ;வையாச் சிங்.’.
நாய்ஹளுக்கு கத மட்டும் பெருசி.. என்றான் உஷ்ணக் குரலில்.
இந்தத் தமிழ் விளங்காத பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும் மிகக் கோபப்பட்டுää “மச்சான் மெ பற வேசி வள்ளா பொளக் காறயா அப்பிட்ட வென்னாத..?” என்று கடுகடுத்தபடியேää காவலரனை விட்டு; வெளியே வந்துää அய்யுபின் ஊர்காவற் காக்கிச்
சட்டையை நெஞ்சோடு சேர்த்து இறுக்கிப் பிடித்து
அறையக் கையோங்கää
சட்டென நிஸ்ஸங்க வெளியே வந்தார். உடனே பொடிமஹத்தயா அப்படியே அய்யுபை ஆரத் தழுவிச்
சிரித்தான். நிஸ்ஸங்கவிடம்ää
- ஸேர்.. அய்யுப் அபிட்ட ஹொந்த யாளுவா.. சேர்..
என்று சொல்லிச் சிரித்தான். ஜயந்தவும்
சிரித்து ஒவ்ஒவ் என்றான்.. நிஸ்ஸங்க புன்னகையடன்ää அய்யுபைப் பார்த்துää
- ஹரி..ஹரி.. யாளுவா தெண்ட சைக்கிளயக்..
நிஸ்ஸங்க மோபைக்கில் அரைவட்டமாகக் கால் விரித்து ஏறினார். எஸ்எல்ஆரை அய்யுபிடம் கொடுத்தார். “நகிண்ன” என்றார். அய்யுப் பின்னால் ஏறää ஒரே உதையுடன் எஞ்சின் உறுமி;ச் சத்தமிட்டுää சட்டென கிளச்சிலிருந்து விடுபட்டுää வேகமாய் நகர்ந்தது. காவலரணைக் கடந்த போதுää பொடிமஹத்தயாவும்ää ஜயந்தவும்ää நிஸ்ஸங்கவுக்கு சல்யூட் செய்து
விறைத்து விட்டுää அதே கையால்ää பின் பக்கமாக அய்யுபிடம் விரல்களர் படுமோசமாக பாலியல் சேட்டை செய்து காட்டினர்.
- சேர்ää பொடிமாத்தியாவும்ää சயந்தவும் கீள்சாதி வள்ளோ ஸேர்..
- ம்ஹ்.. மன் தெக்கா.. கண்ணாடிவளின் வெலுவா.. ஓக்க பஸ்ஸ வலமு.. அடோ அய்யுப்! தன் நிக்கங் கட்ட வஹலா எனவாத? முக்கியங் வேல ஒண்டு செய்யப் போறது..
- முக்கிய வேலயா.. என்ன ஸேர்..? புலிப்பட வெருதா?
- வஹண்ட கட்ட.. அய்யுப்.. இதிங் டெலஸ்கோப்
கெனாவத புத்தே..?
- ஒவ்..ஸேர்..
- எஹனம் ஹரி.
மோபைக் உறுமியபடி பிள்ளையார் கோயில் பிரகாரம்
ஊடாக ஓடி கிறவல் வீதியில் ஏறியது. மீண்டும்
வலப்பக்கம் ப10மரச் சந்தியால் திரும்பி ஓட.. சனங்கள்
ஒன்றிரண்டு தென்பட்டனர். மாஞ்சோலையின் சொற்பச் சனத் தொகையினர். குக்கிராமக் கடைத் தெருவைத் தாண்டியதும்ää ஒரு தனிக் கடையருகே மோபைக் இஞ்சினை
நிறுத்தாமல் நின்றது. நிஸ்ஸங்க பி;ன்னாலிருந்து பேர்ஸை எடுத்துää அதன் ஷிப்பை இழுத்துää புத்தம் புது நூறு ரூபா நோட்டை நீட்டினார்.
- சிகரட் பக்கட் எக்குய்ää பிளேன்
சோடாக்குய் கெணன்ன! இக்மன்ட..
அய்யுப் மிகுதிப் பணத்தை தானே வைத்துக் கொண்டான். கேட்கவே மாட்டார். மேலும் ஒரு
மைல் தூரம்ää உட்புற வீதிகளில் ஓடியதும்ää குடியாட்டங்கள் அதிகமற்ற இடத்தில் மோபைக் நின்றது.
இது வம்மியடி! தூரத்தே புன்னலைப் பற்றைக் காடுகள். உயர்ந்த மஞ்சோனா மரங்கள்.. வழி நெடுக முட்களுடன்
மஞ்சட்பூக்கள் காட்டும்ää முசுறுப்
பற்றைகள். வண்;டிப் பாதை வழித்தடம்.. உயர்ந்து
கிளைகள் பரப்பி பெரு விருட்சமான ஆலை மரம்.. அதில்ää அப்பிப்படர்ந்திருக்கும் ஒட்டுண்ணிக்
கொடிகள்.. பக்கத்திலிருந்து உடனடியாகத் தொடங்கிப் பரந்திருக்கும் வயற் புரண்கள்.. இங்கொன்றும்
அங்கொன்றுமாய் விவசாய வாடிகள். ஒதுக்குப் புறத்தில் பொதுக்கிணறு. அதில்ää க.தெ.பி.ச. 1982. அரை மைல் தூரத்தே வற்றிய வாய்க்காலையும்ää கிறவல் பாதையையும் இணைக்கும் ஒற்றைப் பாலம்.. சன நடமாட்டத்தைக் காணவில்லை. எனினும் இருவருக்கும்
தெரியும்.. தூரத்து வாடிகளிலிருந்து சனம் இவர்களை கவனித்துக் கொண்டிருப்பார்கள். வெளியே
வரமாட்டார்கள்.
மிக இதமாக சிலுசிலுவென்று காற்று வீசியது.. நிஸ்ஸங்க கீழே இறங்கினார்.. இடுப்பிலிருந்த
பிஸ்டலை மோபைக் சீற்றில் வைத்தார்.. பக்கப் பெட்டியைத் திறந்தார். ஒரு போத்தலை வெளியே எடுத்தார்.. ஓஹ்..! ஓல்ட் அரக்.. பொன்னிறத் திராவகம்.. கண்டதுமே
அய்யுப் உற்சாகமானான். நிஸ்ஸங்க ஒரு புன்னகையுடன் அய்யுபைப் பார்த்தார்.. பின் வெகு
சாதுர்யமாக போத்தலைத் திறந்தார். அய்யுப் விரைவாகப்
பக்கப் பெட்டியைத் திறந்து கிளாஸை எடுத்து நீட்டினான். நுரை எழா வண்ணம் சாய்த்து ஊற்றியதும்ää அய்யுப் பிளேன் சோடாவைத் திறந்து
அதனுள் ஊற்றினான்..
- அடோ.. இளந்தாரியோ.. எடு அப்பா சாராயங்..
நிஸ்ஸங்க கிளாஸை உயர்த்தி;ச் ;சியர்ஸ்’ என்றார்.. அய்யுப் சிரித்து விட்டுää போத்தலோடு அப்படியே வாயில் மளுக்கென்று
ஒரு பெரிய மிடறு விழுங்கினான். தொண்டையில்
தீப்பற்றிக் கசந்துää வெந்நீராய் வயிற்றில் இறங்கியது. அவனது
முகத்தின் அஷ்ட கோணலைக் கண்டு நிஸ்ஸங்க சிரித்தார்..
- ஹரியட்ட வூறுவாகே தமய்..
நிஸ்ஸங்க ஆறுதலாய் ஒரு தரம் குடித்து விட்டுää மறுபடி சோடாவைக் கலந்து மடக்கென விழுங்கினார்.. அய்யுப் சிகரெட்டை எடுத்து நீட்டினான்..
அதைப்பெற்று வாயில் வைத்துக் கொழுத்தி ஆழமாக இழுத்து நீளமாகப் புகை விட்டார்.. இருவரும்
நடந்து சென்று பொதுக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஏறி உட்கார்ந்தனர்.. நிஸ்ஸங்க தனது
பிறந்த நாளை ஒட்டி மிகச் சந்தோஸமாக இருந்தார்.. தன தொலைநோக்குக் கருவியினூடாகச் சுற்றிலும்
ஒரு தடவை பார்த்தார்.. திடீரென உச்சக்குரலில் பாடினார்.
- மாகே..ஏ..லஸ்ஸனே.. மல்..மல்.. கெல்லொ..ஓ...
அய்யுப் எஸ்எல்ஆரின் தடுப்புக்குதிரையை விடுவிக்காமல் சும்மா பறவைகளைக் குறிபார்த்து கற்பனையில் சுட்டுக் கொண்டிருந்தான்..
மாலைச் சூரியன் கதிர்கள் உஷ்ணமிழந்தன.. மணி
5:40 என்றது.. நிஸ்ஸங்க பாடலை நிறுத்தினார்.. அய்யுப் எஸ்எல்லாரை கிணற்றில் சாய்த்து
வைத்து விட்டுää மறுபடியும் போத்தலை எடுத்து நீட்டினான்.
- அய்யுப்.. நாம வாறது.. ஒரு மெஸேஜ் வந்தது.. கொட்டிநாயக்கா எக்கனக் மெ பத்தன் தன்
எனவா கியலா.. தேருனாத..?
- புலிப்படத் தலவரு வருவாரா ஸேர்.. எந்த மடயன்; மெஸேஜ் தந்த.. இப்பிடித்தான் கூப்பிட்டுää பண்டார மாத்தையாவையும் புலி சுட்ட..
- அதுக்கு முந்தி நீ எஸ்எல்ஆர் வெடி தாண்ட..
- ஹரி..ஸேர்..
நிஸ்ஸங்க மறுபடியும் குடித்து விட்டுத் தொலைநோக்கியூடாகக் குறித்த ஒரு இடத்தையே
அடிக்கடி பார்;த்தவாறிருந்தார்.. பாலத்தின்
அடியில் எதைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை..
அய்யுபுக்கு மெதுமெதுவாகப் போதை ஏறிக் கொண்டிருந்தது. பேசாமல்ää புதிதாகக்
காதலில் விழுந்து விட்ட தன் தங்கை பாயிஷாவைப் பற்றி யோசித்துக் கொணடிருந்தான். நாலைந்து நிமிடங்களின் பின் நிஸ்ஸங்க சற்றுப் பதட்டமானார்..
- அடோ..அய்யுப்.. மே டிக்கக் வலண்ண..
அய்யுப் தொலைக்காட்டியை வாங்கி அதனூடே அவர் பார்த்த திசையில் பார்த்தான்.. தூரத்துப் பாலம் அருகே வந்தது.. தெளிவானது.. பாலத்தின்
மீது இரண்டு சிறுவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்..
- மொக்கத்த வலண்னே..?
- ரெண்டு பெடியனுகள் ஸேர்..
- கொட்டி நெத்த..?
- ல்ல ஸேர். ஆய்தம் ஒண்டும் ல்லையே.. சும்மா சின்னப் பொடியனுகள்..
- பிஸ்ஸ_த..? கொணா.. ஹொந்தட்ட வலப்பாங்..
மறுபடியும் உற்றுத் தொலைநோக்கினான்.. இம்முறை பாலத்தின் கீழே ஒரு பருவச் சிறுமி தெரிந்தாள்.
வெறும் உடுத்தாடையுடன் தெரிந்தாள்.. பாலத்தின் மேலிருந்த இரு சிறுவர்களும்ää எதையோ தேடித்தேடிப் பொறுக்கிக்
கொண்டிருந்தனர்.. நிஸ்ஸங்க எதைப் பார்த்தார் என்று புரியவில்லை.
- அடோ..அந்தப்பொம்புளபாக்கிறதா..? தன் தெக்க வலனவாத மோடயா..?
அய்யுப் புன்னகைத்தபடியே மறுபடி கூர்மையாகப் பார்த்தான்.. சற்றே போகஸ் செய்து பார்த்தான்..
சிறுமி மிகமிக அருகில் தெரிந்தாள். ஒரேயொரு சிறிய உடுத்தாடை அணிந்திருந்தாள்.. ஒரு
சொற்பத் தண்ணீரில்ää தன் மற்றச் சட்டையை பிழிந்து கொண்டிருந்தாள்.. கறுப்பாகத் புஷ்டியாகத் தெரிந்தாள்..
தங்கை பாயிஷாவைப் போலவே இருந்தாள்.. ஆனால் கறுப்பு.. நெற்றியில் ஒரு சின்னக் கறுப்புப்
பொட்டும் தெரிந்தது.. வளர்நிலை மார்பகம் முன்நீட்டித்
தெரிந்தன.. சட்டென நிஸ்ஸங்க தொலைநோக்கியைச் சுண்டிப் பிடுங்கினார்..
- அடோ எளந்தாரி.. பொம்புள பாக்கிறது.. ஒலுவ
சூட் பண்றது..
என்ற நிஸ்ஸங்க பிஸ்டலை எடுத்து அய்யுபின் நெற்றியில் வைத்து அழுத்தினார்.. குடித்திருக்கிறார்..
பயத்துடன் சிரித்தான் அய்யுப். நிஸ்ஸங்கவும் சிரித்து விட்டு கைத்துப்;பாக்கியை இடுப்பில் சொருகி விட்டுää மறுபடி தொலைநோக்கியூடாகப் பார்த்தார்.
சிறுமி உடுத்தாடை அவிழ்ப்பதைப் பார்க்கிறாரா..?
- அய்யுப்.. சிகரெட் எக்க தீப்பாங்..
அய்யுப் ஒரு சிகரெட்டை எடுத்துக் கொளுத்தி அவரிடம் நீட்டினான். அவன் புகைப்பதில்லை.. சட்டென நிஸ்ஸங்க கைப்பிடிச் சுவரிலிருந்து குதித்தார்.. கொஞ்சம்
தீவிரமாக யோசித்தார்.. இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துää முறித்துää உள்ளே குண்டுகளைச் சரிபார்த்தார்..
பின் ;சடக்’ கெனப் ப10ட்டி ;ஸேப்டி’யில் தள்ளி இடுப்பில் சொருகினார்.. எஸ்எல்ஆரை எடுத்துää அய்யுபிடம் கொடுத்தார்.. மஹா
கர்வமுடன் அதை தோளில் அணிந்து கொண்டான்.
- மெ அய்யுப்.. மம எஹாப் பத்தங் கிஹிலா தவ பொட்டக்கிங் என்னங்.. உம்ப மெத்தனமே இண்ட.. மகே.
ஹண்ட அஹன்னக்கங் மகே பத்தட்ட என்ட எப்பா.. ஓணனங்
மங் கதாகரனவா.. தேருனாத..?
- ஹரி ஸேர்.. உங்கட சத்தம் கேட்குமட்டுக்கும் இந்த இடத்த உட்டு அசயமாட்டன்.. செரிதானே ஸேர்..?
- பொஹோம ஹரி.. ந்தா சாராயங் இரிக்கிறது. அடிச்சிட்டு சும்மா இருக்கிறது.. நான் வாரது..
|
- ஹரி ஸேர்.. குடிச்சிருக்கீங்க.. கவனம்.. நான் இருக்கன். கிஹிலா என்னங்கோ..ஸேர்..
நிஸ்ஸங்க விரைந்து சப்பாத்துகளைக் கழற்றி விட்டுää வெறுங்காலுடன் புன்னலைப் பற்றைகளுக்குள் புகுந்தார்.. மாலை மங்க்p சூரியன் செந்தணலில் தெரிந்தது.. சற்று நேரத்தில். அவர் பாலத்தை நோக்கி மறைந்து
பதுங்கிச் செல்வது கோரைப் புற்களின் அசைவில் தெரிந்தது.. பின் அசைவும் நின்றது.. மெதுவாக முன்னேறுகிறார்
போல.. நிஸ்ஸங்க நெஞ்சுறுதிமிக்கவர்.. இலேசில் பயப்படமாட்டார்.. ஆனால்ää குடித்திருக்கிறார். அய்யுப் சற்றுக் கவலையுடன் தன் எஜமானன் போன திசையைத் தொலைநோக்கியூடாகப் பார்த்து
கொண்டிருந்தான்.. பின்ää தொலைநோக்கியை வைத்துவிட்டுää பொன்னிறத் திராவகத்தை எடுத்துää மறுபடியும் ஒரு மிடறு விழுங்கினான்.. போதை ஏறத் தொடங்கியது... உற்சாக உலகின் திரைகள்
விலக ஆரம்பித்திருந்தன.. உலகின் தனிப் பெரும்
கதாநாகனாக எஸ்எல்லாருடன் அய்யுப் விளங்கினான்.. கொஞ்சம் சிரிப்பு வந்தது.. தங்கை பாயிஷாவின்; கவலை கொஞ்சம் மறைந்தது..
மறுபடி தொலைநோக்கியை எடுத்துப் பார்த்தான்.. சிறிது பதட்டமானான்.. எஸ்எல்ஆரை இறுகப்
பற்றினான். நிஸ்ஸங்கவை காணவில்லை.. அவர் போன
வழியில் காட்சியைத் தொடர்ந்தான்.. பாலம் பெரிதாக
முன் வந்தது.. சிறுவர்களைக் காணவில்லை.. கீழேää சிறுமியையும் காணவில்லை.. நெஞ்சு துணுக்குற்றுää கிணற்றின்ää கைப்பிடிச் சுவரின் மீது ஏறினான்.. தெளிவாக்கியை இழுத்துப் பார்த்....
காணக் கூடாத காட்சியைக் கண்டான்.. என்னது.. உண்மையா.. விழிகள் விறைத்தன.. உண்மைக்
காட்சியில் உறைந்து போனான்.. அந்தச் சிறுமி முழு நிர்வாணமாக மரத்தில் சாய்ந்து நின்றபடி
பீதி கக்கும் விழிகளால் எதிரே பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவள் எதைப் பார்க்கிறாள் என்று தெரியவில்லை.. அய்யுப் சட்டென கைப்பிடிச் சுவரிலிருந்து
குதித்தான். முன்னால் ஓடினான்.. சாய்ந்திருந்த
தென்னம் வேரில் பாய்ந்தேறினான்.. மறுபடி நோக்கினான்..
இப்போது எல்லாம் தெளிவாகத் தெரிந்தன.. அந்தச் சிறுமி தன் இரு கைகளையும்ää தொடைகளுக்கு மத்தியில் வைத்து மறைத்துக் கொண்டு ஏதோ சொல்லித் தலையை ஆட்டுகிறாள்.. நிஸ்ஸங்க அவளின்
எதிரே நின்று கொண்டுää கைத்துப்பாக்கியை நீட்டியபடியே அவளிடம்
ஏதோ சொல்லிக் கொண்டு நெருங்குகிறார்.. சட்டென அவளின் கையைப்பற்றி இழுக்கிறார்.. ஒரு கோழிக்குஞ்சின் பீதியுடன் அவள் அவரருகே இழுபட்டு
வரää நிஸ்ஸங்க சிறுமியின் வயிற்றில் முழங்காலால்
இடிக்கிறார்.. அவள் மானத்தை விட்டு வயிற்றைப் பொத்தியபடிää கீழே விழ.. அவர் அவசரமாக சுற்றுமுற்றும்
பார்த்துவிட்டு. சட்டெனக் குனிந்து கைத்துப்பாக்கியை அவளின் தலை மீது வைத்து அழுத்திக்
கொண்டுää மறு கையினால் அவளது கன்னத்தில் அறைகிறார்..
அய்யுப் விதிர்விதிர்த்துப் போய் தொலைநோக்கியூடாகப்
ப பார்த்துக் கொண்டே.. அடி வயிற்றிலிருந்து குரலெடுத்துக் கத்தினான்..
- ஙா..ஆஆ..எப்..பாஆஆஆ ஸே..ர்..!
‘சட்’டெனக் கீழே குதித்தான். ஒரே தாவில் புன்னலைப்
பற்றைக்குள் பாய்ந்தான். உருண்டு எழுந்தான்..
வாய் நிறையச் சுவாசித்துää மூச்சிரைக்க ஓடினான்.. பழக்கமில்லாத வழியில் பதட்டமாக ஓடித் தடுமாறி ஆயினும் ஓடி
பாலத்தின் மீது பாய்ந்தேறினான்.. அதன் இரும்புக் கைப்பிடியின் மீது வயிற்றைக் கொடுத்துச்
சாய்த்தபடி கீழே பார்த்தான்..
இப்போதுää நிஸ்ஸங்க சிறுமியை முழங்காலால் அழுத்தியபடி ஒரு கையால் தன் காற்சட்டையை கீழே இழுத்து
விட்டு மிக அவசர கதியில் அச்சிறுமி மீது வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார்..
-ஹா..ய்..ஹ{...! எப்பாஆ..ஆ.. ஸே..ர்..!
அய்யுப் ஒரு அபாயப் பாய்ச்சலில்ää கீழ்ப்புறமாக பதினைந்தடி குதித்தான். உண்டு சட்டென நிதானப்பட்டுää அவர்களை நோக்கி ஓடி வந்தான்.. அய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்கää
- அடோ..ஹ{த்திக்க புத்தோ..பளயாங்..பளயாங்.! என்று கத்தினார்.. ஆனால்ää அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில்ää வர-
சட்டென எழுந்த நிஸ்ஸங்கää கைத்துப்பாக்கியால்ää சிறுமியின் தலை மீது மிக இரக்கமின்றிச் சுட்டார்.. கூந்தல் பிய்ந்து தலை வழியாகää சிவப்புத் துண்டங்கள் வெளிப்
பறந்தன.. அதே வேகத்தில்ää திரும்பிää வெறியுடன் ஓடிவந்த அய்யுபை நோக்கி
- உம்பத் பள்ளயாங் ஹ{த்தோவ்..!
என்று கத்திக் கொண்டேää கைத்துப்பாக்கியை நீட்...டியää சரியாய் அதே கணத்தில்ää அய்யுப்ää மின்னல் வேகத்தில்ää எஸ்எல்ஆரை உயர்த்திää ஒரே குறியில்;;.. அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.
இலங்கைää பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்சங்கம்
நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கதை.கீதம். 1999
மே மாதம் முதற் ப10.
No comments:
Post a Comment